குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020

guru payarchi palangal 2019 2020
aries mesam

மேஷம் (Aries):

இந்த வருடம் ராசிக்கு ஒன்பதாம் இடமான தனுசு ராசியில் இருந்து பல நன்மைகளை செய்ய உள்ளார். கணவன்-மனைவி உறவு மேம்பாடு அடையும். வீட்டில் குழந்தைபாக்கியம் உருவாக வாய்ப்புள்ளது. உறவினர்களிடம் கவனமாக செயல்படவும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். பணியாளர்கள் சக ஊழியர்கள் ஆதரவைப் பெறுவார்கள். தொழில் வியாபாரம் நல்ல உயர்வை கொடுக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். கலைஞர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். கலைஞர்களின் தொழில் சிறப்படையும். விவசாயிகள் விவசாயத்தில் நவீன முறையில் வளர்ச்சி காண்பார்கள். இந்த குரு பெயர்ச்சி மகிழ்ச்சி பொங்கும் வருடத்தை தேடித்தரும்.


taurus rishabam

ரிஷபம் (Taurus):

இந்த வருடம் ராசிக்கு எட்டாமிடத்தில் அமர்கிறார். இது சிறப்பான நிலை என்று கருதமுடியாது. குடும்பத்தில் அனைவரும் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. புதிய மனை வாங்கும் முயற்சியில் விடாமுயற்சி தேவை. பணியாளர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்துப் போகவும். தொழில் வியாபாரத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டு முன்னேற்றம் காணலாம். கலைஞர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க நேரிடலாம். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். விவசாயம் சிறப்படையும். விவசாயத்தில் வழக்கு விவகாரம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். மொத்தத்தில் பணவரவு எதிர்பார்ப்பு நிறைவேறும்.


gemini mithunam

மிதுனம் (GEMINI):

இந்த வருடம் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு செல்கிறார், இது ஒரு உயர்வான நிலை ஆகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்க வாய்ப்பு உள்ளது. பகைவர்கள் தங்களிடம் சரண் அடைவார்கள். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பணி எளிதாக உயரும். தொழில் வியாபாரத்தில் கவனமுடன் செயல்பட்டு முன்னேற்றம் காணலாம் மற்றும் தங்களின் வரவு செலவை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். கலைஞர்களுக்கு பணமழை பொழியும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு வெளிநாட்டு யோகம் கிடைக்க வாய்ப்புள்ளது. விவசாயத்தில் அதிக முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். மொத்தத்தில் இது ஏற்றம் தரும் வருடமாக இருக்கும்.


கடகம்

கடகம் (Cancer):

தங்களுக்கு இந்த வருடம் குரு பகவான் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார், இவை சுமாரான பலனையே தேடித்தரும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து போவது நல்லது. பொது நிறுவனம் சார்ந்த தொழிலில் மக்கள் மத்தியில் அமைதி காக்கவும். பணியாளர்களுக்கு கடின உழைப்பு தேவை. தொழில் வியாபாரத்தில் சற்று சிரமப்பட்டே முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். கலைஞர்கள் சராசரி வரவே பெறுவார்கள். மாணவர்கள் சற்று சிரமப்பட்டே முன்னேற்றம் காணலாம். விவசாயத்தில் கடின உழைப்பு இருப்பின் சராசரி பலன்களை பெறமுடியும். மொத்தத்தில் கடின உழைப்புடன் சராசரி வெற்றி பெறும் வருடமாக இருக்கும்.


சிம்மம்

சிம்மம் (LEO):

இந்த வருடம் தங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார், இது சிறப்பான இடம் ஆகும். குடும்பத்தில் பொருளாதாரம் பெருகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் ஆடம்பரப் பொருட்களும், பொன் பொருளும் வாங்கும் யோகமுண்டு. பணியாளர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கலைஞர்கள் எதிர்பார்த்த பதவியைப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் உச்சத்தை எட்டும். விவசாயத்தில் விளைச்சல் நன்றாக இருக்கும். மொத்தத்தில் நன்மைகள் தேடித் தரும் வருடமாக இது அமைகின்றது.


கன்னி

கன்னி (Virgo):

இந்த வருடம் ராசிக்கு 4ஆம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார், இது நடுத்தர பலனையே தேடித்தரும். உறவினர் மத்தியில் பகை வளர வாய்ப்பு உள்ளதால் கவனமாக செயல்படவும். குடும்பத்தில் பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது இருப்பினும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தடங்கல் இருக்காது. பணியாளர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது முன்னேற்றத்தை தேடித்தரும். தொழில் வியாபாரத்தில் மறைமுக தொல்லைகள் அதிகமாக இருப்பதால் கவனமாக செயல்பட்டு வெற்றி காணலாம். கலைஞர்கள் கடின உழைப்பை மேற்கொண்டு முன்னேற வேண்டியிருக்கும். விவசாயத்தில் கடின உழைப்பு தேவை. மொத்தத்தில் இந்த ஆண்டு லாப நஷ்டம் கலந்த பலனை தரும்.


துலாம்

துலாம் (Libra):

இந்த வருடம் தங்கள் ராசிக்கு குரு பகவான் மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். நன்மையும் தீமையும் கலந்து வரும் பெயர்ச்சியாகும், இருப்பினும் தங்களுக்கு குருவின் பார்வை நன்றாக உள்ளது. குடும்பம் மேன்மை அடைய சுப நிகழ்ச்சி நடக்க வாய்ப்புள்ளது. பணியாளர்கள் தங்களின் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் அரசாங்க உதவி கிடைக்க பெறும். கலைஞர்கள் எதிர்பார்த்த ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.  விவசாயத்தில் அதிக முதலீடு தவிர்ப்பது நல்லது. மொத்தத்தில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும், மற்றும் மற்றவர்களின் உதவியை நாட வேண்டியிருக்கும் வருடமாகும்.


விருச்சிகம்

விருச்சிகம் (Scorpio):

இந்த வருடம் ராசிக்கு இரண்டாமிடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார், இது ஒரு சிறப்பான நிலையாகும் பகைவர்கள் சரண் அடைவார்கள். பணவரவு நன்றாக இருக்கும். மனதில் நீடித்து வந்த குழப்பங்கள் தெளிவடையும். புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. பணியாளர்கள் சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். பணியாளர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். தொழில் வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் அடைவார்கள். விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த வருடம் சிறப்பான வருடமாக இருக்கும்.


தனுசு

தனுசு (Sagittarius):

இந்த வருடம் சொந்த ராசியில் குருபகவான் குடி கொண்டுள்ளார். இசை சிறப்பு எனக் கூற முடியாது, இருப்பினும் குருவின் பார்வை பலத்தால் குடும்ப உறுப்பினர்கள் மூலமாக நன்மை அடைய வாய்ப்புள்ளது. பணம் வரவு செலவு சமமாக இருக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். பணியாளர்கள் வேலைப்பளு கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது. தொழில் வியாபாரம் லாபம் நஷ்டம் கலந்து இருக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு சிறு தடைகள் வர வாய்ப்புள்ளது. மாணவர்கள் போட்டியில் வெற்றி அடைவார்கள். விவசாயம் நேரடிப் பார்வையில் நடந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மொத்தத்தில் வெளிவட்டாரத்தில் பாராட்டை தேடித் தரும் வருடமாக இருக்கும்.


மகரம்

மகரம் (Capricorn):

இந்த வருடம் குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் உள்ளார். இது சுமாரான இடம் ஆகும். விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, கவனம் தேவை, விட்டுக் கொடுத்து போவது நல்லது, பொறுமையை கடைபிடித்து வெற்றி காணலாம். பணியாளர்கள் அதிக உழைப்பை முதலீடாக போட வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் கவனம் தேவை. கலைஞர்கள் விடா முயற்சி செய்ய வேண்டியிருக்கும். மாணவர்கள் கவனமாக செயல்பட்டு வெற்றி காண வேண்டியிருக்கும். விவசாயத்தில் உழைப்புக்கு ஏற்ற வரவு கிடைக்கும். மொத்தத்தில் பொறுமையாக இருந்து வெற்றி காண வேண்டிய தருணமாகும்.


கும்பம்

கும்பம் (Aquarius):

இந்த வருடம் உங்கள் ராசிக்கு குரு பகவான் 11-ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார், இது சிறப்பான நிலை ஆகும். சுபநிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. புதிய வீடு வாங்க யோகமுண்டு. பணியாளர்கள் சக ஊழியர்களுடன் ஒன்றுபட்டு முன்னேறுவார்கள். தொழில் வியாபாரம் புதிய தொழில் தொடங்க தக்கதாகும். கலைஞர்கள் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபடுவார்கள். கலைஞர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மாணவர்கள் கொஞ்சம் கடின உழைப்புடன் மிகச் சிறந்த வெற்றி அடைவார்கள். விவசாயத்தில் தேக்கம் நீங்கி முன்னேற்றம் காணப்படும். மொத்தத்தில் கும்பம் ராசியினர் ஒளிவிளக்காக செயல்படுவார்கள்.


மீனம்

மீனம் (Pisces):

இந்த வருடம் தங்கள் இராசிக்கு குரு பகவான் 10ம் இடத்தில் சஞ்சரிக்கிறார், இது சுமாரான நிலையாக இருந்தாலும், குருவின் பார்வை நன்றாக இருப்பதால் நன்மை  கிடைக்கும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து போவது நல்லது. பணியாளர்கள் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் வியாபாரம் கடின உழைப்பு தேவை. கலைஞர்கள் திறம்பட செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் புதிய சொத்து வாங்க சற்று யோசித்து செயல்படவும். மொத்தத்தில் குரு இருக்கும் இடத்தில் ஏற்றம் கிடைப்பதில் குறை இருக்காது.

Guru Payarchi Palangal 2020

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares