Comments on: கவிதைப் போட்டி 2021_11

By: இராம வேல்முருகன்
டாக்டர் அம்பேத்கர்

எண்சீர் விருத்தம்

காய் காய் மா தேமா

1

தேன்சுரக்கும் மலரெடுத்துச் சூடி நாட்டின்

திருவுயர்த்திக் காசினியை மகிழச் செய்து

கூன்விழுந்து குடைசாய்ந்த சமுதா யத்தை

கொழுகொம்பை இழந்துவிட்ட இனமா னத்தை

வான்முகட்டைத் தொட்டுவிடச் செய்த அண்ணல்

வளமனைத்தும் சமமென்றே உரைத்த செம்மல்

ஏன்பிறந்தோம் எனநொந்து வாழ்ந்த மக்கள்

இனம்காக்கக் கதிரவனாய் உதித்தார் வாழி!

2

தன்மக்கள் வாழ்வுமட்டும் உயர்ந்தால் போதும்

தரக்குறைவாய் மாற்றினத்தை நினைப்போம் என்ற

வன்மக்கள் கயமையினை உடைத்தெ றிந்து

வறுமையுற்றோர் தரமுயர்த்த வழிகள் கண்டே

என்மக்கள் என்நாடு  இதுவென் சட்டம்

எனவாய்ந்து புதுச்சட்டம்  வரைந்த வேந்தன்

நன்மக்கள்  வாழுகின்ற நாட்டிற் றாமும்

நற்றலைவ னாயுர்ந்த செம்மல் வாழி!

3

உழைக்கின்ற வருக்கமெலாம் தாழ்ந்தோ ரென்றே

உருப்படாத கொள்கையினை வகுத்தோ ரோடத்

தழைத்தவொரு மாமரமாய்த் திகழ்ந்த தென்றல்

தன்னினத்தின் தலைநிமிரச் செய்தார் வாழி

பழுத்தபழம் தமிழகத்தில் செய்த தற்போல்

பாரதத்தில் தடம்பதித்த அம்பேத் காரைத்

தொழுதுநாமும் வணங்கிடுவோம் எந்த நாளும்

தொண்டாற்றி அவர்போலச்  சிறந்தே வாழ்வோம்.

4

சாக்கடையாய் நினைத்தோரின் எண்ணப் பூச்சைச்

சமத்துவத்தின் வழியினிலே மங்கச் செய்து

போக்கி்டங்கள் இல்லாது மாய்ந்து போனோர்

பொழுதெல்லாம் நற்பொழுதாய் மாற்றி வாழ்வைப்

பூக்கடையாய் மணம்வீசச் செய்து சட்டப்

புன்னகையால் புதுயுகத்தைக் கொணர்ந்த கோவை

நாக்கமழப் பாவெடுத்து நானும் பாடி

நற்றமிழாள் துணையோடு வாழ்த்து வேனே!

5

ஏருழுது செருப்புதைத்து சமுதா யத்தில்

இரந்துவாழ்ந்தோர் வாழ்வினிலே மாற்றம் காணப்

பாருழுது பயன்விளைத்தார், கீழே தள்ளிப்

பரிகாசம் செய்தோரைப் படிப்பால் வென்றார்

சீருலகில் தமக்கென்று பாதை கண்டு

சிங்கார மகனாக திகழ்ந்தார் இந்த

ஊருலகம் போற்றுகின்ற அம்பேத் காரை

உவகையுடன்  நானுமிங்கே வாழ்த்து வேனே!

6

கற்கவழி எண்ணற்ற தடையைக் கண்டும்

கற்றாரே  தடையெல்லாம் அகற்றித் தள்ளி

உற்றதொரு மாமேதை யாக வாழ்ந்த

உத்தமரை ஊழ்வினையை விரட்டிச் சென்றே

அற்பர்களின் சூழ்ச்சிதனை வென்றே நாட்டின்

அமைச்சரென ஆனவரை அம்பேத் காரை

எற்றிசையும் போற்றவல்ல தமிழைக் கோண்டே

எந்நாளும் பாடிடுவேன் அண்ணல் வாழி !

பாவலர்மணி இராம வேல்முருகன்

வலங்கைமான்

By: சௌந்தர்ய தமிழ்
திருமணம்

இசையோடு இனிதே தொடங்கும் நாள்…

இமைகள் திறந்து இதய புன்னகையுடன் பாவை பாதம் பதிப்பாள்..

மணியோசை சினுங்க சினுங்க,

மல்லிகை வாசம்  மண்ணில் வீச,

மங்கை முகம் நிலவொலி ஆனதே…

என்னவளின் தேகம் நோகுமோ என

பனிப்பூக்கள் மாலையாக..

செம்பருத்தி சிரித்துக்கொண்டே செவ்விதழிழ் சேர்ந்துவிட்டாள்…

மருதாணி நிறம் வெட்கம் என்னும் போர்வையில் மறைந்துகொண்டது..

மையிட்ட விழிகள் மாமனை தேட,

கண்ணிமைக்கும் நொடியில் கரம் பிடித்தான்..

மெட்டிஒலியில் புதிய வழியில்  கரம் கோர்த்து இனிய பயணம்..

மழைச்சாரல் போல கண்ணீர் ஊற்றெடுக்க தலையனை நனைந்தது..

கண்ணீர் துடைக்க கரம் இருப்பின் அது வரமே… திருமணம் என்னும் அன்பில்…

– சகா…

By: சௌந்தர்ய தமிழ்
உன் காதலில் உயிர் ஓவியம்

மார்கழி சாரல் நீயே..

மார்பிலே தோற்றம் நீயே..

மல்லிகை பாவை நீயே..

உலா வரும் நேரம் இன்று..

விரல்களில் ஏக்கம் கொண்டு…

தீண்டினால் காதல் நன்று..

மண்ணிலே காயம் இன்று..

உன்னிலே மயக்கம் கொண்டு..

உன் பார்வையில் காதல் நன்று..

இரு விரல் இணைந்து..

இதயங்கள் நனைந்து..

பேசும் மொழி மௌனம் ஆனேதே..

கவிமொழி பேசும் காதலுமே..

கடல் நுரை என கரைந்தது ஏனடி..

இதயதுடிப்பில் துடிக்கும் இசையில்

இணைந்தே தொடர சம்மதம்

சொல்லடி…

– சகா…

By: காந்திமதி கண்ணன்
சீரழியும் உலகத்தில் சிக்கிக்கொண்டேனோ…?

வெறியன் முகமென

தெளிவாய் தெரிந்தால்

துஷ்டன் இவனென

தூரம் செல்லலாம்…

வேறு முகங்கொண்டு

வேட்டையாடத் துடிக்கும்

காமக் கொடூரர்களை எப்படி

கண்டுகொ(ல்)ள்வது..?

சதைத் தேடும் சாத்தான்களை

பிணவறையில் அடையுங்கள்.

உயிரும் மனமும் உடலைப் பிரிந்தபின்

பிண்டங்கள் வெறும் பையென புரிந்து மடியட்டும்.

எளிதில் நம்பாதே

ஏமாளி நீயென

பெண்மைக்கு பாடம் புகட்டும்

பேதை சமூகமே…

அடக்கமும் ஒழுக்கமும்

ஆண்மைக்கும் ஊட்டுங்கள்.

காந்திமதி கண்ணன்

By: Srikanth Lawrence
மழலையில் வறுமை:

பெற்றோரின் துயர நோய்

தாயின் கற்பத்திலே வளர்ந்து

வறுமையின் சிசுவாய் ஆங்காங்கே ஜனித்திடும்

மழலை பிறந்ததும்

புது வறுமை பிறந்திடும்

அதன் முகத்திலே சிரிக்கும் கவலை பிறந்திடும்

வயதை மீறி பிறந்திடும் கவலை

மழலையின் கவலையா

பிறப்பின் கவலையா

மழலையின் வயிற்றிலே மறைந்திருக்கும் பஞ்சம்

மிச்சம் மீதி உணவையும் அமிர்தமாய் காட்டிடும்

கொடுக்க ஏதுமில்லா குழந்தையிடம்

தன்மானத்தை வாங்கி‌ சோறு போடும்  இந்த வறுமை

மழலைக்கும் உண்டு சிறு மானம்

சிறு மானத்தை மறைப்பதிலே பெரும் பஞ்சமா

எங்கே கிழிந்த ஆடை

கிழிந்த ஆடையை புத்தம் புதியதாய் சலவை செய்திடுமே இந்த வறுமை

வண்ண தொலைகாட்சியில் கார்டூன் பார்க்க ஆசையா உனக்கு

வறுமை உன்னை பார்க்க விடுமா

சின்னஞ் சிறு கைப்பேசியை திரையரங்கமாக மாற்றி கொடுப்பதுதான் இந்த வறுமை

வீதிகளிலே ஓடி விளையாடுது வறுமை

இதை கண்டு களிக்கிறது சமூகம்

பிஞ்சு விரல்களை பிச்சை பாத்திரமாய் ஆக்குவதோ இந்த வறுமை

மாட மாளிகையின் நிழலில் நிற்க மட்டுமே உதவும் இந்த வறுமை

குடிசை வீட்டையும் கோபுரமாய் மாற்ற உதவிடுமா

குடிசையும் இங்கே கோபுரமாவது

மழலையின் குழையும் சிரிப்பினால்

வறுமையின் ருசி வெறுமையே

மழலையே வெறுமையை ருசிக்காதே

வெறுமையை உன் பெருமையான புன்னகையால் விற்றுவிடு

ஆடம்பரம் தெரியாத வயது உனக்கு

ஆடம்பரத்தை பார்த்து ஏன் ஏங்குகிறாய்

உழைப்பு என்னும் சொத்தை சேர்த்து கொள்கொள்

வரும்நாளில் ஒருநாள்

வறுமையே பெருமை கொள்ளும் உன்னை கண்டு

– Written By Srikanth Lawrence

By: S. V. Rangarajan
பெண் கொடுமை.                          நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்கள் அடிமைப் பட்டே வாழ்ந்தனர் என்பது வெளிப்படை உண்மை பால்ய விவாகம் கணவன் சிறுவயதிலேயே காலமானால் மொட்டை அடித்த தலை வெளியே வர தடை யார் முன்னாலும் வந்து நிற்க கூட தடை பெண்கள் பள்ளி அதிகம் படித்தவை பத்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்னர் மாற்றங்கள் கல்லூரி படிப்பு பொறியியல் படிப்பை கூட பெண்கள் இப்போது படிக்க அனுமதி ஆனாலும் சில சூப்பர் மார்க்கெட் களில் மகளிர் காலணி அணிய கூடத் தடை என்பது வெட்கப் பட வேண்டிய விஷயம்.

By: ரொ.அந்தோணி
தமிழ் கடவுள் முருகன்

குறிஞ்சித் திணையின் முதலானவன் சிறுகுடி சேயோன்

மலைநெல் கஞ்சி குடித்து

மயிலேறி செல்லும்

மலை வேந்தனே!

மலைகாத்த ஆறுபடை கொண்ட ஆறுமுகன் அகிலத்தை காக்கும்

ஓம் சரவணபவ !!உம் மந்திரமே

அப்ப நீ ஈசனுக்கு

மந்திரத்தை உபதேசம்

செய்த சாமிநாதா!!

சைவ சித்தாந்தத்தின் சித்தனே!!

சஷ்டி நட்சத்திரங்களின்

வைகாசி விசாகனே!!

முருகா அரோகரா!! அரோகரா!!

சிவன் நெற்றியில் அக்கினிப் பிழம்பு கருவாய் தோன்றி

சரவணபொய்கை குளத்தில்

தாமரை மலரின் கந்தகத்தில் உருவெடுத்து

கார்த்திகைப் பெண்களின்

மடியில் கொஞ்சி விளையாடி

அன்னை பராசக்தி ஆறுமுகனை ஒருவனாக படைத்த

திருமகனே!! சண்முக நாதா

சர்வ வல்லமையும் படைத்த சுப்பிரமணியனே!!

அகத்தியர் அருணகிரிநாதர்

அவ்வையார் நக்கீரர் உமது தமிழ்

அன்பால் ஈர்த்த வனே!!

உந்தன் அருள் அருளாலே

அருள் புரிவாய் முருகா!

அன்பை நாடி

அண்டி சேர்ந்தேன் முருகா!

எட்டுக்குடி வேலவனே!

குன்றின் குமரனே!

சூரபத்மனை அழித்த

செந்தில்நாதா!!

வெற்றி வேல் தாங்கிய வடிவேலவா ஆதிகுடி தமிழ் கடவுளே!!

ஓம் ஓம் முருகா!!

ஒ. டி. ஆர் .  ரொ.அந்தோணி

By: - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
“ஔவையார்”

பெண்ணின் பெருமையவள்/

பேரண்டத்தின் அறிவுமவள்/

சொல்லின் வலிமையவள்/

சொர்க்கத்தின் வழியவள்.

அகிலம்‌ வாழவே/

அழகை துறந்தவள்/

அறம் ‌காக்கவே/

அறிவை திறந்தவள்.

அரசனுக்கு மட்டுமல்ல/

ஆண்டவனுகே புத்திசொன்னவள்/ அழகுத்தமிழில் அறிவு/

பாட்டும் சொன்னவள்.

நியாயம் சொல்வதில்/

நீதியின் தராசவள்/

நலம் காப்பதில்/

நன்மைக்கு தாயவள்.

அன்பின் அழகவள்/

ஆசைக்கு பகையவள்/

அறத்தின் சேயவள்/

அறிவுக்கே ஆசானவள்.

பாரதத்தாயின் புதல்வியவள்/

பெண்ணினத்தின் மூத்தவள்/

தமிழ்தாயின் தங்கையவள்/

முத்தமிழின் மூதாட்டியவள்.

ஔவை தந்ததமிழை/

அறிவாய் படிப்போம்/

அதன் வழியே/

அனைவரும் நடப்போம்.

-வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.

By: Kovai Subha
தீபாவளி வந்தாச்சு

வந்தாச்சு வந்தாச்சு

தீப ஒளியை கையில்

ஏந்தி கொண்டு

தீபாவளி வந்தாச்சு…!!

நரகாசுரனின் வீழ்ச்சியை

நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக

தீபாவளி பண்டிகையென்று

கொண்டாடி மகிழ்கின்றோம்…!!

அந்த காலத்தில் என்று ஆரம்பித்து

தாங்கள் கொண்டாடி மகிழ்ந்த

தீபாவளி திருநாளை எண்ணி

பலரும் மனதுக்குள் மகிழ்ந்து

அந்த காலத்து நினைவுகளை

இந்த காலத்து இளைய பட்டாளத்துடன்

மகிழ்ச்சியோடு சுவை மாறாமல்

சொல்லி மகிழ்ச்சி கொள்கிறார்கள்…!!

இளைய சமுதாயமே

நாம் பண்டிகை கொண்டாடுவதின்

அருமை பெருமைகளை

புரிந்து கொண்டு கொண்டாடுங்கள்…!!

பாரம்பரிய பழக்க வழக்கங்களை

நன்கு அறிந்து கொண்டு

வருங்கால சமுதாயத்துக்கு

தீப ஒளிப்போல்

வழிகாட்டியாக இருந்து

பாரம்பரியத்தை பேணிக்காத்து

மகிழ்ச்சியோடு வாழுங்கள்….!!

தீபாவளியின் தீப ஒளியில்

இருண்டு கிடக்கும்

நமது பாரம்பரியத்துக்கு

ஒளியேற்றி

புதிய பாதை அமைத்து

இனிய பயணங்களை

மகிழ்ச்சியோடு தொடருங்கள்…!!

பட்டாச்சுகள் வெடித்து

சிதறுவதைப்போல்

இந்த தீபாவளி நன்னாளில்

சமுதாய சீர்கேடுகளும்

வெடித்து சிதறட்டும்…!!

எல்லோருக்கும் இனிய

தீபாவளி நல்வாழ்த்துக்கள்…!!

–கோவை சுபா

By: - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
“பெண் கொடுமை”

உயிர்களை உருவாக்கும்/

பெண்ணே பேரண்டம்/

அவளின்றி அணுவும்/

அசைவதில்லை அகிலத்தில்.

அவளாலே இயங்குகிறது/

அவளே சக்தி/

அவளாலே கிடைக்கும்/

அனைவருக்கும் முக்தி.

அதை உணராத/

அற்பபிறவிகள் சிலர்/

அடிமைப்படுத்தி அவளை/

அழவைத்து மகிழ்கிறார்கள்.

மண்ணும் பெண்ணும்/

இரண்டும் ஒன்றே/

மிதித்தாலும் அடித்தாலும்/

பொறுமையாக இருப்பார்கள்.

பெண்கள் பணிந்துபோவதால்/

பயப்படுவதில்லை ஆண்கள்/

அடங்கிப்போகும் பெண்களை/

அடக்குகிறார்கள்‌ ஆண்கள்.

எத்துன்பம் என்றாலும்/

தாங்கிக் கொள்கிறாள்/

பயப்படுவதில்லை அவள்/

பணிவதை விரும்புகிறாள்.

எத்தனையோ உள்ளது/

பெண் கொடுமை/

கொடுமையிலும் கொடுமை/

பாலியல் வன்கொடுமை.

காற்று இன்றி/

உயிர்கள் இல்லை/

பெண்கள் இன்றி/

உலகே இல்லை.

-வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.

By: suganiya
மறக்க முடியாத நிகழ்வு!

கனத்த வயிறும், கனவுகளின் தோரணங்களுமாக

வலி மறந்து, வலிமை நிறைந்து

உள்நுழைந்த அறையில் பார்த்தறியா

முகங்களுக்கு நடுவில், ஓர் முகத்தை

எதிர்பார்த்து உதிரத்தை உதிர்த்து

உற்றவனை திரும்ப சென்று காண்பேனா?

என்ற கேள்விக்கு பதிலை மறந்து

உன்னை என் கைகளில் ஏந்திய

அந்த நொடி… என் வாழ்வின்…

மறக்க முடியாத நிகழ்வு!!!

By: Himeshwaran
” தனிமை”

உனக்கும் எனக்குமான கதைகள் ஏராளம் ……….

தனிமைப்படுத்தப்பட்ட கதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட கனவுகளும் அறுவடைக்காகவே காத்திருக்கிறது…….

கிழவியிடம் வாங்கிய நவாப்பழம்,

கடைவீதியில் தேய்ந்த ரப்பர் செருப்பு,

பின்னொரு நாளில் பெய்த மழையில் விரல்களுக்கிடையே மின்னலலை பார்த்த கணங்கள் எல்லாம் நிந்தையில் பறக்கும் சிறகுகள்………..

சதுரங்களில் போடப்பட்ட நாற்காலியில் நீ இல்லாமல் என் நினைவுகளில் ஓடும் கதைகள் காற்று தொடாத மழைத்துளிகள்………..

நான் உன்னிடம் கேட்பதெல்லாம் வனத்தில் சுற்றித்திரியும் பட்டாம்பூச்சி பூக்களில் இளைப்பாறும் நேரம் மட்டுமே………..

நேற்று முடிவடைந்த இரவுகள் வரை நானும் என் நாற்காலியும் அந்நியப்பட்டே நகர்கிறோம்……………