Comments on: கவிதைப் போட்டி 2021_9

By: Loganayagi mohan kumar
விநாயகனே போற்றி

தரணி காக்கும் தரணிதரனே….

கஷ்டங்கள் தீர்க்கும் கௌரி மைந்தனே…..

கணங்களுக்கு அதிபதியே….

எங்கள் இனிய கணபதியே..

அன்பெனும் அகத்தின் அங்குசபாணியே….

வினைகளை தீர்க்கும் விநாயகனே….

வேண்டும் வரம் தரும் வேழ முகத்தானே…..

பாச உள்ளம் கொண்ட பிள்ளையாரே….

காணும் இடமெங்கும் காட்சி தரும் கணேசனே….

எலி வாகனம் கொண்ட ஏரம்பனே….

மூத்தோனாய் பிறந்த மோதகப் பிரியனே….

நிஜக் கடவுளாம் கஜமுகனே….

நெஞ்சத்தில் நம்பிக்கை தரும்

தும்பிக்கையானே…..

பூ மாலை தேவையில்லை

புல் மாலை போதுமுனக்கு….

தேட உன்னை அவசியமில்லை….

தெருவிற்கோர் கோயில் உனக்கு….

எதிலும் முதல் நீ….

ஞானத்தின் கடல் நீ….

கார்த்திகேயன் அண்ணன் நீ…..

காத்தருளும் தேவன் நீ….

சிவனின் வித்தே….

பார்வதியின் முத்தே….

பிடி மண்ணிலும் நீ இருப்பாய்…..

பிடித்தோர் உள்ளத்தில் நீ வசிப்பாய்…..

முழு முதற் கடவுளே போற்றி!!!!

ஐங்கரனே போற்றி….

சித்தி புத்தி பதியே போற்றி…போற்றி…

-loganayagi .N

By: Loganayagi mohan kumar
தோல்வியில் கலங்கேல்

வெற்றி கண்டோன்

எல்லாம் வீரனல்ல…..

வீழ்ந்தவன் எல்லாம்

கோழையும் அல்ல…..

வீழ்வதாலே விதையும்

விருட்சமானதோ….

தேய்வதாலே தங்கம் என்ன

தரம் குறையுமோ….

உளியிடம் தோற்ற

கல் தானே சிலையாகிறது…..

மோதித் தோற்ற

மேகங்கள் தானே மழையாகிறது….

கலப்பையிடம் தோற்ற

நிலம் தானே உணவாகிறது…..

ஆணிடம்  தோற்ற

பெண்மை தானே தாய்மையாகிறது……

தோற்றும் போகும்

முயற்சிகள் தானே

வெற்றிக்கான விளக்காகும்….

தோல்வி என்பது வலிகள் என்றாலும்

வெற்றிக்கான வழியாகும்…..

மனமே!!!!

“தோல்வியில் கலங்காதே”

-loganayagi.N

By: Loganayagi mohan kumar
திருக்குறள் கவிதை

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்”

உற்ற துயரதனை

உன் இதழ்கள் மொழிகளாக்கி…

வார்தைகள் வந்து என்

செவி தீண்டும் முன்னே….

கலங்கிய நின் கண்கள் கண்டு

கன்னம் கடக்குமே

என் கண்ணீர்த் துளிகள்….

மோதிய மேகங்கள்

பொழியும் மாரி போல்…

இமை அணைகளைத் தகர்த்தே

பெருக்கெடுக்கும் கண்ணீர் வெள்ளமதில்

உருகுதே உனக்கான உயிர் ஒன்று….

வாடிய உன் முகம் கண்டு

ஓடிவரும் என் கண்ணீரை

அடைக்கும் தாழ்ப்பாளும் உண்டோ????

அன்பை சொல்ல மொழி எதற்கு???

கண்ணீரும் பேசுமே

யுகங்கள் கடந்த  நம் அன்பை…

-loganayagi. N

By: ஜெயபாலமுருகன்
தலைப்பு: அமைதி!

	அதிகாலைப் பொழுதின் வருகைக்கு பின்பு

மனம் விரும்பி கேட்கின்ற பக்தி

இசையிலும் மெல்லிசை மெட்டுக்களிலும்

உள்ளிருக்கின்ற வார்த்தை அது!

	வகுப்பறையில் மாணவர்கள் எழுப்பும்

இரைச்சலை எதிர்க்கொள்ள மேசையைத்

தட்டி ஆசிரியர்களால் சற்று கோபத்தோடு

சொல்லப்படுகின்ற வார்த்தை அது!

	நூலகங்களில் எதிரில் படும்

எல்லா பக்கங்களிலும் கனிவோடு

காக்கப்பட வேண்டிய ஒன்றாக

எழுதப்படுகின்ற வார்த்தை அது!

	கொட்டித்தீர்த்த பெரு மழைக்கு பின்

பெய்கின்ற அழகான தூறலுக்கு பின்

காற்று வந்து கண்களைக்

குளிர்வித்து இதமாய் காதோறும்

உணர்த்துகின்ற வார்த்தை அது!

	இயந்திர உலகின் இடைவிடாத

இரைச்சலுக்கு மத்தியில் வேலை

பளுவின் இடையில் இதயம்

விரும்புகின்ற வார்த்தை அது!

	போரினால் நிகழ்ந்த இழப்புகள்

கண்டு உள்ளம் கலங்கி புரியாது

தெரியாது செய்த செய்கைகளுக்கு பின்பு

ஞானப்பொருளாகின்ற வார்த்தை அது!

	கோபத்தீயிலிருந்து அறியாது வெளிவந்த

வார்த்தைகளுக்கு பின்பு இழைத்த

தவறுக்காக மனம் நொந்து தனிமையில்

தேடுகின்ற வார்த்தை அது!

	வாய் இங்கு பேசாமல் தயங்கும்

தருணங்களிலும் அன்பையும் ஆறுதலையும்

வெளிப்படுத்தி கண்கள் மேலும்

பேசுகின்ற வார்த்தை அது!

	எல்லையில் எல்லைமீறிய தாக்குதலிலும்

வெடிகுண்டு சண்டைகளிலும் மாட்டிக்கொள்ளும்

ஏதும் அறியாத அப்பாவி மக்களின் உள்ளம்

ஏங்கி கெஞ்சுகின்ற வார்த்தை அது!

அமைதி… அமைதி… அமைதி…

-நா. பாலா  சரவணாதேவி

By: லோகநாயகி.சு
கவிதை போட்டி:9

விரும்பிய தலைப்பு *கவிதை*

வறண்ட மனதை நனைக்கும் மழை….

இருண்ட கணத்தில் ஒரு மின்மினி பூச்சி

நினைவுகளை புதையல்களாக மாற்றும் மந்திரம்!!!

வாழ்வின் நிஜங்கள் கசக்கும் போது

ஒளிந்து கொள்ள ஒரு ரகசிய குகை!!!

வயது துரத்தும் போது

ஆசுவாசம் தரும் ஒரு ஆறுதலின் கரம்…..

வளைவுகள் கொண்ட வாலிப பெண்ணின் வனப்பும்,

நரைமுடி கொண்ட முதியவளின் அனுபவமும்,

நிரந்தரமற்ற நடுத்தர வயதின் எண்ணங்களும்

கண்ணுக்குள் வந்து போகும் கனவே கவிதைகள் !!!!!!

லோகநாயகிசுரேஷ்..

By: - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
தங்களுக்கு விருப்பமான தலைப்பு

“நாலடி நமக்கு சொல்லும் பாடம்”

திமிரான செல்வந்தர் செயலால் மானமுடையார்/

காற்றிலே பற்றியெரியும் தீபோல இருப்பார்/

பசிப்பிணியால் உடல்வற்றி எலும்புகூடாகி அழிவர்/

ஆனால் தகுதில்லாரிடத்து துன்பம் உரையார்.

வறுமையுடையவரை உள்ளழைத்து மனைவியை அறிமுகப்படுத்துவர்/

செல்வரோ மனைவிகற்புக்கெடுமென புறத்தே

உட்காரவைப்பார்/

இப்பிறப்பில் நன்மையுண்டாக்கி இறந்தபின் புகழுண்டாக்கி/

மறுபிறப்புக்கும் ஒழுக்கநெறி கெடாது புண்ணியம்செய்வார்.

சாவு என்பதொருநொடி பாவமென்பது

உயிருள்ளவரை/

சாவேநேர்ந்தாலும் சான்றோர் பாவம் செய்யார்/

உலகசெல்வந்தர் உதவுபவராயினும் அவர் வறியவரே/

வறுமையுற்றாலும் செல்வந்தரை நாடாதவரே பெருஞ்செல்வந்தர்.

பசிக்கஞ்சுபவர் கீழ்மக்கள் துன்பத்துக்கஞ்சுபவர் இடைப்பட்டவர்/

தமக்கு வரும் பழிக்கு அஞ்சுபவர் மேன்மக்கள்/

நல்லவர் அன்றுஅருளுடையார் வறுமையுடையாரின்று என்றிகழ்வது/

நல்லோருள்ளம் கொல்லன்

உலையூதுந்தீபோல் கொதிக்கும்.

விரும்பியவருக்கு கொடுக்காதிருத்தல் தீமைக்கஞ்சாதிருத்தல் நாணமன்று/

நமக்குசெய்த அவமரியாதையை பிறருக்கு சொல்லாதிருத்தல் நாணம்/

வீழ்த்தியப்பசு இடப்பக்கம் விழுந்தால் உண்ணாதிறக்கும்புலி/

விண்ணுலகு கிடைத்தாலும் மானங்கெடவாழார் விழுமியோர்.

-வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.

By: ஜெயபாலமுருகன்
4. தங்களுக்கு விருப்பமான ஒரு தலைப்பு

தலைப்பு: அமைதி!

	அதிகாலைப் பொழுதின் வருகைக்கு பின்பு

மனம் விரும்பி கேட்கின்ற பக்தி

இசையிலும் மெல்லிசை மெட்டுக்களிலும்

உள்ளிருக்கின்ற வார்த்தை அது!

	வகுப்பறையில் மாணவர்கள் எழுப்பும்

இரைச்சலை எதிர்க்கொள்ள மேசையைத்

தட்டி ஆசிரியர்களால் சற்று கோபத்தோடு

சொல்லப்படுகின்ற வார்த்தை அது!

	நூலகங்களில் எதிரில் படும்

எல்லா பக்கங்களிலும் கனிவோடு

காக்கப்பட வேண்டிய ஒன்றாக

எழுதப்படுகின்ற வார்த்தை அது!

	கொட்டித்தீர்த்த பெரு மழைக்கு பின்

பெய்கின்ற அழகான தூறலுக்கு பின்

காற்று வந்து கண்களைக்

குளிர்வித்து இதமாய் காதோறும்

உணர்த்துகின்ற வார்த்தை அது!

	இயந்திர உலகின் இடைவிடாத

இரைச்சலுக்கு மத்தியில் வேலை

பளுவின் இடையில் இதயம்

விரும்புகின்ற வார்த்தை அது!

	போரினால் நிகழ்ந்த இழப்புகள்

கண்டு உள்ளம் கலங்கி புரியாது

தெரியாது செய்த செய்கைகளுக்கு பின்பு

ஞானப்பொருளாகின்ற வார்த்தை அது!

	கோபத்தீயிலிருந்து அறியாது வெளிவந்த

வார்த்தைகளுக்கு பின்பு இழைத்த

தவறுக்காக மனம் நொந்து தனிமையில்

தேடுகின்ற வார்த்தை அது!

	வாய் இங்கு பேசாமல் தயங்கும்

தருணங்களிலும் அன்பையும் ஆறுதலையும்

வெளிப்படுத்தி கண்கள் மேலும்

பேசுகின்ற வார்த்தை அது!

	எல்லையில் எல்லைமீறிய தாக்குதலிலும்

வெடிகுண்டு சண்டைகளிலும் மாட்டிக்கொள்ளும்

ஏதும் அறியாத அப்பாவி மக்களின் உள்ளம்

ஏங்கி கெஞ்சுகின்ற வார்த்தை அது!

அமைதி… அமைதி… அமைதி…

-நா. பாலா  சரவணாதேவி

By: D.luvia vincy.
கண்ணதாசனை போற்றுவோம்!!

ஜனனமோ சிறுகூடல்பட்டி,

மரணமோ சிகாகோவில்

சாதனைகளோ சரித்திரத்தில்

கணக்கிட முடியாதது…..

பின்னர், உம் புகழ் பாரின் காதலாக அல்லாமல்,

கானலாகவா காணப்படும்!!

முடியாதென்று நினைத்ததில்லை…

முயலாமல் ஒருபோதும் இருந்ததில்லை….

ஆதலாலே, அக்கால உம் நிகழ்வு,

இக்காலத்திலும் இதயத்தில் இடம்பெறுகிறதோ???

உம் அறிவில் வழிந்த வாய்ச்சொற்கள்

ஒவ்வோர் அனுபவத்திலும் இடம்பெறுகிறதே???

அவ்விடத்தை இடிக்க முடியுமோ??

இவ்வுலகிலிருந்து எடுக்கத் தான் முடியுமோ??

உம் படைப்புக்களால்,

இப்பாரில்,

புகழைப் பார்த்தோர் ஆயிரம்…..

ஆனந்தத்தில் திளைத்தோர் ஆயிரம்….

அறிவில் உயர்ந்தோர் ஆயிரம்…

அன்பை இயற்றும் இதயம் கிடைத்தோர் ஆயிரம்….

நான்காயிரம் கவி இயற்றிய,

கண்ணதாசனின் கவிவரிகள்…..

வான் நோக்கி பறக்காமல்,

வீழ்ந்துபோகுமோ???

வாழ்ந்துகொண்டே இருக்கும்,

வாழ்க்கையான உம் வரலாறு….

ஒருபோதும் வீழாது!!

வீழாது!! வீழாது!!!!

– தே.லூவியா.

By: லோகநாயகி.சு
கவிதை போட்டி: 9

*அச்சம் தவிர்:*

அச்சமென்ன மிச்சமாடா?

அச்சன் தந்த சொத்தாடா?

துச்சமென தூக்கிப் போட்டா

உச்சம் உந்தன் பக்கமடா!

அச்சம் உன்னை வெல்லுமடா!

அடிமை யாக்கிக் கொல்லுமடா!

அச்சம் விட்டால் சாவுமுன்னை

அண்ட அது அஞ்சுமடா!

அச்சம் கொடும் பாவமடா!

ஆக்கம் கெடுக்கும் சாபமடா!

அஞ்சும் உள்ளம் பள்ளமடா!

அமைதியில்லா இல்லமடா!

பாழடைஞ்ச கல்லறையடா!

பழகும் நெஞ்சம் இல்லையடா!

சுற்றம் வந்து சேராதடா!!

சொந்தம் உன்னை தேற்றாதடா!

அச்சம் ஒரு அவதியடா!

அறியாமைக் கைதியடா!

தன்னை நம்பும் ஞானமடா!

உன்னை விடும் அச்சமடா!!!!

லோகநாயகிசுரேஷ்….

By: ஜெயபாலமுருகன்
1.	தாங்கள் விரும்பும் திருக்குறள் பற்றி ஒரு கவிதை

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

	நீர்ப்பூக்கங்களின் தண்டின்  நீளமானது

அந்த நீர்க்குளத்தின் நீர்மட்டம்

மேலும் மேலும் செல்ல நீள்கிறது!

	மரங்கள் தருகின்ற இனிய நிழலின்

நீளமானது மரங்களின் வளர்ச்சி

மேலும் மேலும் செல்ல நீள்கிறது!

	கடல் காட்டும் நீர்மட்ட அளவானது

மேகங்கள் பொழிகின்ற மழை அளவு

மேலும் மேலும் செல்ல நீள்கிறது!

	காற்றைப் பிடித்துப் பறக்கும் பட்டத்தின்

உயரமானது காற்றின் வேகம்

மேலும் மேலும் செல்ல நீள்கிறது!

	மனிதனுக்கு ஒரு செயலில் கிடைக்கும்

புகழ் உயர்வானது மனிதன் அதில்

காட்டும் சிரத்தை முயற்சியின் அளவு

மேலும் மேலும் செல்ல நீள்கிறது!

By: Maheswaran govindan
காதல் தரும் வலி

கண்டதும் ஆயிரம் பட்டாம்பூச்சி

பறந்து பரவசம் கொள்ள செய்யும்

காதல்…

கண்வழி நுழைந்து ,

கனவாய் நிறைந்து

நினைவுகள் எல்லாம் நீடித்து

நித்திரை தொலைக்க செய்யும்

காதல்…

யுகங்களையும் கணமாய் மாற்றி

களித்து இருக்க செய்து , ஈருடல்

ஓருயிராய் நிலைகொள்ளும்

காதல்…

கனவுகள் கண்முழித்து கொள்ள

கை நழுவி போகும் காதல் அது

கண்நிறைத்து களித்திருந்த

காலங்களை கயிறு கட்டி

இழுத்து செல்ல…

கோர்த்திருந்த கை அதுவே

குரல்வளை நெரித்து குழி தள்ளி

மண்மூடும் மணித்துளி தரும் வலி …

இதயம் எல்லாம் இன்பமாய்

இருக்க செய்திட்ட காதலே

இதயம் இறுக்கி இனிமேலும்

துடித்திடாதபடி முடக்கி செல்லும் வலி…

இணைந்தே இருந்திடுவோம்

என இறுமாப்பாய் இருந்திட்ட

இரு உயிரும், இரு வேறாய் விலகிச்செல்ல

விழி நிறைக்கும் தருணம் தரும் வலி,

அது விலகாது வாழ்க்கை முடியும் வரை

தொடரும் வலி…

கைகூடாது கலைந்துப்போன

காதல் தரும் வலி அது மூச்சிருக்கும்

ஒவ்வொரு நொடியும் மரணம் அதை

உணரச்செய்யும் வலியே…

இவன்

மகேஸ்வரன் கோவிந்தன் (மகோ)

By: - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
“கண்ணதாசனை போற்றுவோம்”

கருத்துக்கினியபாடல்களை கொடுத்த//

கண்ணதாசனை போற்றுவேன்//

கருத்தில்பதிந்த என்வார்த்தைகளை//

கவிதைமாலையாக சாற்றுவேன்.

தத்தெடுத்த பிள்ளை இவரு//

தத்துவப்பாடல்களை எழுதியவர்//

முத்தையாயென்பது அவர்பெயரு//

முத்தானதமிழில் பாட்டெழுதியவர்.

எட்டாவது வரை படித்தவரு//

எட்டாத உயரத்தில் நின்றவர்//

எழுத்தை பாட்டாக்கி தந்தவரு//

எண்ணத்தில் என்றும் அழியாதவர்/

கடமையை செய்தால் வெற்றியென்றாரு// கடமைக்கு செய்தால் தோல்வியென்றார்//

கருத்தாக பொழியும் மழையானாரு//

கவிதை சுரக்கும் ஊற்றானார்.

பலரை உயர்த்தியும் பாடியவரு//

சிலரை தூற்றியும் பாடியவர்//

தன் தவறை பற்றியும் சொல்லுவாரு//

அத்தவறை செய்யாதே என்பார்.

என்னை பார்த்து வாழாதே என்றவரு//

என் எழுத்தைப் படித்து வாழு என்றார்//

எப்படி வாழணும்னு சொன்னவரு//

எப்படி வாழக் கூடாதுன்னு சொன்னவர்.

வார்த்தையினுள் நுழைந்து//

வாழ்வுக்கேற்ற வார்த்தைகளை//

வாரியெடுத்து தொடுத்த மாலையை//

வாழும் மனங்களுக்கு சூடிசென்றவர்.

-வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.