வார ராசிபலன் ஆடி 25 – ஆடி 31

ஆடி மாத மின்னிதழ் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். ஆடி சிறப்பு மற்றும் ஆடிப்பூரம், ஆண்டாள் ஜெயந்தி பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். – rasi palangal aug 09 – aug 15

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் ராகு பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். சகோதர சகோதரிகள் உறவு நன்றாக அமையும். குடும்பத்தில் பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் சொத்து பிரச்சனை சம்பந்தமாக தீர்வு கிடைக்கும். பணியாளர்கள் நல்ல உயர்வைப் பெறுவார்கள். வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும். கலைஞர்கள் தேவை எளிதாக பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் நல்ல வெற்றி காண்பார்கள். விவசாயம் நஷ்டத்தை எதிர்கொள்ளும்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்து வருவார். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. பணவரவு நன்றாக அமையும், குடும்பத்தின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகை நன்மை பயக்கும். பணியாளர்கள் சிரமப்பட்டே முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். விவசாயம் நல்ல லாபம் அடைய வாய்ப்புகள் உள்ளது.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்து வருவார். குடும்பத்தில் சுப செய்தி ஒன்று தேடி வரும். குடும்ப ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர் வருகை நன்மையில் முடியும். வீட்டில் குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பணியாளர்கள் தன் பணியில் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரம் நல்ல லாபத்தில் முடியும். கலைஞர்கள் புது புது ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நன்மதிப்பைப் பெறுவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்து வருவார். பணவரவு நன்றாகவே இருக்கும், அண்டை வீட்டார் மத்தியில் எதிர்ப்புகள் வரலாம் கவனம் தேவை, குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும், செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. பணியாளர்கள் பதவி உயர்வை பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல ஒற்றுமை நிலவும். கலைஞர்கள் விரயத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் நல்ல மகசூல் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் குருபகவானே நன்மைகள் செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். பழைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்வு கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். பணியாளர்கள் நல்ல திறமையை வெளிக்காட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்கள் அரசாங்க உதவியை பெறுவார்கள். மாணவர்கள் தோல்வியே சந்திப்பார்கள். விவசாயத்தில் சுமாரான பலனை எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: சிவ வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்து செய்வார். எதிர்பார்ப்புகள் அனைத்தும் வெற்றிபெறும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து போகவும். குடும்பம் நல்ல ஒற்றுமையுடன் காணப்படும், குடும்ப ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணியாளர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருமானம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் புதிய உச்சத்தைத் தொடுவார்கள். விவசாயம் குடும்ப தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

துலாம் இந்த வாரம் சுக்கிர பகவானே நன்மைகள் செய்வார். புதிய மனை வாங்க யோகம் உள்ளது. குடும்பத்தில் சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வர வாய்ப்புகள் உள்ளன. ஆடை ஆபரணங்கள் வாங்க யோகம் உள்ளது, அண்டை வீட்டார் மத்தியில் ஒற்றுமை நிலவும். பணியாளர்கள் பணியில் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட வியாபாரம் சிறப்பாக அமையும். கலைஞர்கள் செல்வாக்கு பெறுவார்கள். மாணவர்களுக்கு சமநிலை நீடிக்கும். விவசாயிகள் சுமாரான பலனை எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நிலவ வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் திருமணம் முடிவு செய்யும் போது பொறுமையாக செயல்படவும். வீட்டில் குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். வியாபாரம் பூஜை பொருள் சம்மந்தமான வியாபாரம் சிறப்பாக இருக்கும். கலைஞர்கள் விரயத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் நல்ல பாக்கியசாலியாக திகழ்வார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல லாபம் அடையலாம்.
வழிபாடு: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவானே நன்மைகள் செய்வார். ஆயுள் பலம் நல்ல சிறப்பாக இருக்கும். ராசிக்காரர்கள் இந்த வாரம் செவ்வாய் தோஷத்தை எதிர்கொள்வார்கள். பணவரவு பழைய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்யப்படும். குடும்பம் நல்ல சிறப்பை பெறும். பணியாளர்கள் பணியில் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் கடன் ஏதும் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் நல்ல வெற்றியை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் தோல்வியே அடைவார்கள். விவசாயம் மதில்மேல் பூனையாக இருக்கும்.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் சூரிய பகவான் பல நன்மைகளை செய்வார். உடல் ஆரோக்கியம் நன்மையாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. எதையும் தாங்கும் இதயம் இருக்கும். பணவரவு திருப்திகரமாக அமையும். பணியாளர்கள் நல்ல உயர்வைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் மத்தியில் பகை உணர்வு இருக்கும். மாணவர்கள் நல்ல வெற்றி காண்பார்கள். விவசாயம் சுமாரான லாபமே எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: செவ்வாய் தோறும் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். வீட்டில் பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்ப ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். ஆண் குழந்தை வாரிசு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் தீர்வுகள் ஏற்படலாம். பணியாளர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள். கலைஞர்கள் நல்ல வருவாய் பெறுவார்கள். மாணவர்கள் சுமாரான வெற்றியே காண்பார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும்.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் குரு பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில் பணவரவு நன்றாகவே இருக்கும், குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்புகள் உள்ளன. குடும்ப ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். பணியாளர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் சுமாரான வருமானம் பெறுவார்கள். மாணவர்கள் மதிப்பெண் பெறுவார்கள். விவசாயம் உச்சகட்டத்தை அடையும்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வருவது நலம் பெறும் – rasi palangal aug 09 – aug 15.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

3 Responses

  1. R. Brinda says:

    இதில் சொல்லியபடி வழிபாடுகள் செய்து நலம் பெறுவோம்!!

  2. Rajakumari says:

    நல்லதே நடக்கட்டும்

  3. தி.வள்ளி says:

    நாளும் கோளும் நன்மை செய்ய ஆண்டவன் அருளட்டும்