வார ராசிபலன் ஆனி 21 – ஆனி 27

இந்த வார ராசி பலன் பற்றி நமது வலையொளி (YouTube) சானலில் காண சொடுக்கவும் – rasi palangal july 05 – july 11.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் ராகு மற்றும் புதன் பகவான்களே நன்மை செய்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தை தள்ளிப்போகும், பணவரவு நன்றாக அமையும். பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் அரசு உதவி கிடைக்கும். கலைஞர்கள் தேவைகள் ஏதாவது ஒரு வகையில் பூர்த்தியாகும். மாணவர்கள் நல்ல வெற்றி பெறுவார்கள். விவசாயத்தில் சுமாரான பலனையே தரும்.
வழிபாடு: தக்ஷணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மைகள் செய்வார். குடும்பத்தில் உற்சாகம் நிலவும், பணவரவு சிறப்பாக  இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியாளர்கள் கவனத்துடன் செயல்படவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் தேவைகள் பூர்த்திஆகும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். விவசாயத்தில் லாபம் அதிகரிக்கும்.
வழிபாடு: சிவ வழிபாடு செய்யவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம்செவ்வாய் பகவானே நன்மை செய்வார். குடும்பத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் விலகும். கணவன் மனைவி வாக்குவாதத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தள்ளிப்போகும். பணியாளர்கள் முன்னேற்றம் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் அதிக முதலீடு தவிர்க்கவும். கலைஞர்கள் வருவாய் இழப்பை சந்திப்பார்கள். மாணவர்கள் ஆரோக்கியமாக காணப்படுவார்கள். விவசாயம் நல்ல வருமானம் ஈட்டித்தரும்.
வழிபாடு: முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.



கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வரம் சுக்கிர பகவான் நன்மை செய்வார். குடும்ப பண வரவு செலவு சமமாக இருக்கும். நிதானமாக பேசவும். சுப நிகழ்ச்சி முடிவாக வாய்ப்புள்ளது. உறவினர் வருகை நன்மையில் முடியும். பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். தொழில் வியாபாரம் நல்ல லாபம்கிடைக்கும். கலைஞர்கள் தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும். விவசாயத்தில் நல்ல வருமானம்கிடைக்கும்.
வழிபாடு: பைரவர் வழிபாடு செய்யவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மை செய்வார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பேச்சில் கவனம் தேவை.  குடும்பத்தில் பணப்புழக்கம் நன்றாக அமையும். பெண்களுக்கு மதிப்பு கூடும். பணியாளர்கள் இடமாற்றம் பெறுவார்கள்.  தொழில் வியாபாரம் லாபம் ஈட்டித்தரும்.  கலைஞர்கள் நல்ல வருவாய் கிடைக்கும். மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயத்தில் நஷ்டம் அடைய வாய்ப்புள்ளது.
வழிபாடு: விநாயகர் வழிபாடு செய்யவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் புதன் பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில் பணவரவு நன்றாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும், முயற்சி வெற்றியாகும், கருத்து வேறுபாடு தீர்வுகிடைக்கும். பணியாளர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரம் மறைமுக போட்டி வரலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும்.. விவசாயத்தில் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
வழிபாடு: அம்மன் வழிபாடு செய்யவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சனி மற்றும் கேது பகவான்களே நன்மையே செய்வார்கள். குடும்பத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பணியாளர்கள் பணியில் சிரமப்பட வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். கலைஞர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும். மாணவர்கள் பாக்கியசாலிகளாவார்கள். விவசாயத்தில் இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வழிபாடு: சனிக்கிழமை சனிபகவான் வழிபாடு செய்யவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில்  தேவைகள் பூர்த்தியடையும், குடும்ப ஆரோக்கியம் நன்றாக இருக்கும், அரசு உதவி கிடைக்கும். பணியாளர்கள் கவனத்துடன் செயல்படவும். தொழில் வியாபாரத்தில் பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்களுக்கு சுமாரான வாரமாகும். விவசாயத்தில் கால்நடை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குரு பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு நீங்கும். சொத்து தொடர்பாக அவசர முடிவு எடுக்க வேண்டாம். சுப நிகழ்ச்சி முடிவாகும். பணியாளர்கள் பணியில் முன்னேற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரம் – பூஜை பொருள் தொடர்பான வியாபாரம் வளர்ச்சி அடையும். கலைஞர்கள் விட்டுக்கொடுத்து போகவும். மாணவர்கள் நன்மதிப்பை பெறுவார்கள். விவசாயம் வளர்ச்சி தரும்.
வழிபாடு: ஆஞ்சநேய பகவான் வழிபாடு செய்யவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும், நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள், பணவரவு சுமாராக இருக்கும். பணியாளர்கள் வாகன யோகம் பெறுவார்கள். தொழில் வியாபாரம் லாபம் ஈட்டித்தரும். கலைஞர்கள் அரசு உதவி பெறுவார்கள். மாணவர்கள் ஆரோக்கியமாக காணப்படுவார்கள். விவசாயத்தில் வருமானம் உயரும்.
வழிபாடு: குலதெய்வ வழிபாடு செய்யவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் குரு பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில்  நல்ல மகிழ்ச்சி இருக்கும், திட்டமிட்ட செயல்கள் வெற்றி பெரும். சுப நிகழ்ச்சி முடிவாகும். பணியாளர்கள் குழப்பம் நீங்கும். தொழில் வியாபாரம் லாபம் கிடைக்கும். கலைஞர்கள் தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விவசாயத்தில் சுமாரான வருவாயை எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: நவகிரக வழிபாடு செய்யவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் ஆரோக்கியம் நிலவும், பராமரிப்பு செலவு அதிகரிக்கும். உறவினர் வகையில் சங்கடங்கள் உருவாகலாம். பணியாளர்கள் சக ஊழியர்களின் பாராட்டை பெறுவார்கள். தொழில் வியாபாரம் பழைய பாக்கி வசூல் ஆகும். கலைஞர்கள் புதிய யுக்தியை கையாளுவார்கள். மாணவர்கள் இரட்டிப்பு வெற்றி பெறுவார்கள். விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்கும்.
வழிபாடு: விநாயகர் வழிபாடு செய்யவும் – rasi palangal july 05 – july 11.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

2 Responses

  1. தி.வள்ளி says:

    சுருக்கமாகவும்,, தெளிவாகவும்., தருவது.மிகச் சிறப்பு..நன்றிகள் பல

  2. Rasipalan always correct