வார ராசிபலன் ஆவணி 28 – புரட்டாசி 03

ராகு கேது பெயர்ச்சி பலன்களை 2020 வாசிக்க இங்கே சொடுக்கவும்.. – rasi palangal sep 13 to 19.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சூரிய பகவானே நன்மைகள் செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும், எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும், குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும், விருந்து விழா என செல்ல வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் வேலைப்பளு அதிகமாகும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாக இருக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல வளர்ச்சி அடைவார்கள். விவசாயத்தில் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சுக்கிர பகவானே நன்மைகள் செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பம் மகிழ்ச்சிகரமாக காணப்படும், முன்பு பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். வீட்டில் குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்து வந்த இடர்பாடுகள் மறையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நன்கு முயற்சி எடுத்து படிக்க நேரிடும். விவசாயத்தில் புதிய சொத்து வாங்கும் எண்ணம் தாமதமாகலாம்.
வழிபாடு: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும், வீடு மனை வாங்க யோகம் கைகூடும், குடும்பம் நன்மதிப்பை அடையும், உறவினர் வருகையால் நன்மைகள் அடையும். பணியாளர்கள் திறமையை நன்கு வெளிப்படுத்துவார்கள். வியாபாரத்தில் அரசாங்க சலுகை கிடைக்கும். கலைஞர்கள் சிறப்பான வளர்ச்சி அடைவார்கள். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி அடைவார்கள். விவசாயத்தில் புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
வழிபாடு: பைரவரை வழிபாடு செய்வது சாலச்சிறந்தது.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்ப ஆயுள் பலம் கூடும். தேவையற்ற பண விரயம் இருக்காது, எதையும் முடிக்கும் மனப்பான்மை ஏற்படும், அண்டை வீட்டார் தொல்லைகள் மறையும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத வரவு இருக்கும். கலைஞர்கள் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெறுவார்கள். மாணவர்கள் பொறுமை காக்க வேண்டும். விவசாயம் காய்கறி வியாபாரம் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்யவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பொருள் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, கவனம் தேவை. முக்கிய பொறுப்புகளை பெண்கள் வசம் ஒப்படைக்கவும். பெண்கள் மூலம் நன்மை கிடைக்கும், தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பணியாளர்கள் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் புதிய உத்தியின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் விரையத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் சிரத்தை எடுத்து முன்னேற்றம் காணலாம். விவசாயத்தில் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்தவாரம் கேதுபகவான் நன்மையே செய்வார். எதையும் நல்ல முயற்சி எடுத்து செயல்பட வேண்டும். அனைத்து பிரச்சனைகளும் தீரும். பணவரவு நன்றாக அமையும், சொந்தபந்தங்கள் மூலம் நன்மை உண்டாகும். பணியாளர்கள் நன்மையை அடைவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் தொல்லைகள் வரலாம், கவனம் தேவை. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் அவப்பெயரை சந்திப்பார்கள், கவனம் தேவை. விவசாயத்தில் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று அனுமன் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார சிறப்பாக நன்கு அமையும். எடுத்த செயல்கள் அனைத்தும் அனுகூலமாகும். பணியாளர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். கலைஞர்கள் அவப்பெயரை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் விடா முயற்சி செய்ய வேண்டும். விவசாயிகள் மானாவாரி பயிர்கள் மூலம் வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: நரசிம்மர் வழிபாடு செய்வது சிறந்தது.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சூரிய பகவானே நன்மைகள் செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும், எதையும் முடிக்கும் வல்லமை பிறக்கும். பணியாளர்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். கலைஞர்கள் நல்ல வருவாய் கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி அடைவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: பெருமாள் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பலவகையான நற்பலன்கள் கிடைக்கும். தடைபட்ட இடையூறுகள் அனைத்தும் மறையும். சமூகத்தில் நல்ல மதிப்பு உயரும். பணியாளர்கள் சிறப்படைவார்கள். வியாபாரத்தில் எதிரிகள் சரண் அடைவார்கள். கலைஞர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி அடைவார்கள். விவசாயத்தில் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.
வழிபாடு: தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்தவாரம் கேதுபகவான் நன்மையே செய்வார். எடுத்த முயற்சிகள் வெற்றியடையும். பணவரவு நன்றாகவே இருக்கும். சகோதர சகோதரிகள் ஆதரவு உறுதுணையாக அமையும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத வரவு இருக்கும். கலைஞர்கள் தோல்வியையே எதிர்கொள்வார்கள். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். விவசாயிகள் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருவாய் ஈட்டுவார்கள்.
வழிபாடு: செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி காணலாம். வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் நன்றாக அமையும். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் மரியாதையாக நடத்தப்படுவார்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். கலைஞர்கள் சுதந்திரமாக செயல்படுவார்கள். மாணவர்கள் திருப்திகரமாக இருப்பார்கள். விவசாயத்தில் கீரை வகைகள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
வழிபாடு: ஞாயிற்றுக்கிழமை தினத்தில் சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். ஆடம்பரப் பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. பணவரவு நன்றாக இருக்கும். குடும்பம் புதிய உற்சாகம். அடையும் வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வியாபாரிகள் அரசாங்க சலுகை பெறுவார்கள். கலைஞர்கள் வெற்றி அடைவார்கள். மாணவர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும். விவசாயத்தில் அமோக  மகசூல் கிடைக்கும்.
வழிபாடு: விநாயகர் வழிபாடு செய்து வரவும் – rasi palangal sep 13 to 19

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

2 Responses

  1. தி.வள்ளி says:

    இராசி பலன்களுடன்..அந்தந்த ராசிக்குரிய வணங்க வேண்டிய தெய்வங்களையும் அறியத் தருவது கூடுதல் சிறப்பு

  2. Rajakumari says:

    ராசி பலன்கள் நல்லதே நடக்கின்றது நன்றி