கதை சொல்லி போட்டி 2

நிமிடக்கட்டுப்பாடு கட்டாயமில்லை. கதை 15 நிமிடங்கள் வரை இருக்கலாம். இயன்றவரை காணொளியாக பகிர முயற்சி செய்யவும். போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. தாங்கள் விரும்பிய தங்கள் சொந்தக் கதையை சொல்லி காணொளியாக பதிவு செய்து அனுப்ப வேண்டுகிறோம். 

போட்டிக்கான கதையை கீழே குறிப்பிட்டுள்ள Telegram அல்லது WhatsApp எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்.

வாசகர்கள் மற்றும் போட்டியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கதை சொல்லி போட்டி II  இல் கலந்துகொள்ள கடைசி தேதி 2024 மே 25 க்கு மாற்றப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முடிவுகள் வெளியாகும். 

நீரோடை முதல் இலக்கிய விழா அவிநாசியில் பிப்ரவரி 17 அன்று நடைபெற்றது, அந்த விழாவில் கதை சொல்லி போட்டி-I இன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வெற்றியாளருக்கு தங்க நாணயம் மேலும் ஒருவருக்கு வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது. மேலும் பத்து போட்டியாளர்களுக்கு “கதை சொல்லி” விருது வழங்கப்பட்டது.

அதுபோல இந்த முறை மூன்று வெற்றியாளருக்கு வெள்ளி நாணயம் மற்றும் விருதுகள் வழங்கப்படும். நேரில் கலந்துகொள்ள இயலாத வெற்றியாளருக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு மேலே உள்ள வாட்ஸாப் அல்லது டெலிக்ராம் எண்னை தொடர்புகொள்ளவும்.

குறிப்பு: பெரிய file ஆக இருக்கும்பட்சத்தில் Telegram இல் அனுப்புவது உகந்தது.
அதிக likes மற்றும் comments பெறும் காணொளிக்கும், காணொளியாக (video) பகிர்ந்த கதைகளுக்கு நடுவர்கள் முக்கியத்துவம் தருவார்கள்.