கவிதை போட்டி 2023_11 , 2023_12

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2023-11

kavithai potti

வெற்றி பெரும் கவிஞர்களின் பெயர்கள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.

கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.

கவிதை போட்டி அறிவிப்பு

 • தீபாவளி
 • அண்ணல் அம்பேத்கார்
 • கந்த சஷ்டி
 • திருக்கார்த்திகை தீபம்
 • இன்னா செய்தாரை ஒறுத்தல்
 • திருவண்ணாமலை
 • மகாத்மா
 • அண்ணாமலை
 • விரும்பிய தலைப்பு

கல்விக்கண் திறந்த மகான் பிறந்தநாள் சிறப்பாக இந்த மாத போட்டி அறிவிக்கப்படுகிறது

மேற்கண்ட தலைப்புகளில் 15 வரிகளுக்குள் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வாட்சாப் அல்லது மின்னஞ்சலில் நேரடியாக அனுப்பப்படும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2023-11. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அடுத்த மாத மாத மின்னிதழில்) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

9 Responses

 1. Punitha S says:

  அகிம்சையின் அண்ணல் … மனிதருள் மாணிக்கம்

  போர்பந்தரின் நாயகனாம்! உண்மையின் உத்தமராம்!
  அகிம்சையின் வித்தகராம்! கஸ்தூரிபாயின் புத்திராம்!!
  ஆயுதத்தால் என்றுமே வெல்ல முடியாததை
  அகிம்சையால் வென்ற வெற்றி வீரராம்
  மூவரிக் கோடுகளோ அவர் நெற்றியில்
  பல மைகளோ இவர் வாழ்க்கையில்
  மனதிலோ வலிமை உள்ளத்திலோ தூய்மை
  சொல்லிலோ உண்மை செயலிலோ நேர்மை
  உவகையால் உலகை வென்ற கைத்தடிமனிதர்
  பாற்கடலில் கடைந்து எடுத்த அமுதம்
  பாரதத்தாய் கண்டு எடுத்த முத்து
  விடுதலை பெற்று தந்த வைரம்
  இதயத்தில் விதைத்தார் எளிமையின் வித்தை
  ஈன்றன்னை உளம்மகிழ படைத்தார் சத்தியசோதனை
  தீயிட்டு ஒழித்தார் களையெனும் தீண்டாமையை
  ஏழ்மையை போக்க களைந்தார் ஆங்கிலேயஆடையை
  உப்பு சத்யாகிரகம் செய்து அணிந்தார் சத்தியத்தை
  உள்ளங்கையால் சுழற்றினார் கதர் இராட்டினத்தை
  ஒன்றுபட அமைத்தார் இந்து-முஸ்லீம் சமத்துவத்தை
  அனைவரும் படிக்கனும் அவரின் சுயசரிதை
  நேர்மையும் நேரமும் தவறக்கூடாது என்றார்
  நேர்த்தியாய் அரும் பெரும் அண்ணலார்
  காந்தி குடித்ததோ ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பாலு
  நிலக்கடலையே அவரின் தினச்சோறு
  கடமையை உடைமை ஆக்கினார் காந்தி
  இன்று எண்ணற்ற இதயங்களில் காந்தி
  ஏழை மக்களுக்கு பெற்று தந்தார் சாந்தி
  உலகம் முழுவதும் கிடைத்தது மனஅமைதி
  அண்ணல் காந்தி அணையா விளக்கு
  இல்லம்தோறும் காந்தியின் கொள்கை
  ஐயமின்றி சொல் அண்ணல் காந்திக்கு அஞ்சலி
  ஓளடதம் போன்றது அவரின் பொன்மொழி
  மனிதருள் மாணிக்கமாம் தேசப்பிதாவினது
  தபால்தலையை வெளியிட்டு உலக நாடுகள் கௌரவித்தது

  ஆக்கமும் எழுத்தும் புனிதா

 2. கவிஞர். வினோ says:

  நீயின்றி அமையாது உலகு..!.

  *பாட்டி

  நளனின் பெண் வடிவமோ
  ஆட்டுக்கல் சட்னியில் உருண்டைச் சோறு சுவையாய்..!

  அவ்வப்போது நீ கொடுத்த
  ஒற்றை ரூபாய்கள்
  எத்தனை கோடிகளுக்கு சமம்..?!

  *அம்மா

  வீரம் என்னில் விதைத்துவிட்டு
  என்றும் தோற்றுப் போகும்
  முதலானவள் நீ..!

  நீயும் ஒருவகையில் புத்தன்தான்
  உன் ஆசை துறந்து
  பலர் ஆசையில் வாழ்கிறாயே..!

  *தமக்கை

  பாலமாகவும் இருக்கிறாய்
  பாரமாகவும் இருக்கிறாய்
  விட்டுக்கொடுக்க முடியா
  பரமபதம் நீ..!

  மறுவீட்டுக்கு சென்றாலும்
  நாற்காலிச் சண்டைகள் பேசும்
  தமக்கையின் வாசம்..!

  *தோழி

  கன மனதை கலமாக்குகிற
  களம் நீ..! கரம் நீ..!
  கவனம் நீ..!

  ஊக்குவிக்கிற
  உதாசினப்படுத்தாத
  ஏணி நீ..! நலம் பேணி நீ..!

  *காதலி

  ரோஜாக்கள் பேசும்
  நீ பேசுகையில் அறிந்தேன்
  இதழின் அர்த்தம்
  உதடுகளுக்கும் உண்டாம்..!

  நீ காதலியா
  இல்லை காதல் ஈ யா?
  இதயத்தை இனிப்பாக்கி
  மொய்ப்பவள் நீ..!

  *மனைவி

  என் நலமே
  உன் நலமாய் போற்றுகிற
  மறு தாய் நீயன்றோ..?!

  அணிகிறாயே பல வண்ணப்பூச்சு
  அழிவதைப் பார்க்கிறேன்
  ஆவதை மறந்து..!

  *மகள்

  என் மார்பை சாலையாக்கி
  உதைத்து ஓடிப் பார்த்த
  முதலானவள் ..!

  பிறந்தபோது
  நீர்க் குடம் உடைத்தாய்
  நிரம்பிப் போனது
  என் கண்ணீர் குளம்
  தாயுமானவனாய் நான் ..!

  பெண்ணே பெண்ணே
  மொத்தத்தில் நீரின்றி மட்டுமல்ல
  நீயின்றியும் அமையாது உலகு..!

 3. Gayathri says:

  தேன் சிந்தும்
  குரல் நாவில்
  நடனமாட இசையால் இவ்வுலகை ஈர்த்தவரே

  மூச்சு விடா
  பாடலிலும் பெயர்
  பெற்றவரே மடியும்
  வரையிலும் சிறகடித்தவரை

  கூவும் குயிலும்
  மெய் சிலிர்த்ததே
  பல்லாயிரக்காலம் ஆயினும் இவ்வுலகையாளும் இசையே

 4. Gayathri says:

  கலைமகள்
  பிரம்மன் நாவில்
  உதித்த அன்னையே
  நவராத்திரியின் நாயகியே
  இசைக்கருவியை ஏந்தியவளே

  வெண்தாமரையில் பூத்தவளே
  அன்ன வாகன
  சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளே அம்சவல்லியே அலங்காரியே

  கற்பிக்க வைத்தவளே
  அறிவுக்கு வழிவகுத்தவளே
  கலை மகளே
  கல்வியின் கடவுளே

 5. ஜெய பிரகாஷ். த says:

  கண்ணிமைக்கும் கவிதை பூ

  மனதில் நின்ற மனம் குறையாத வாசம்
  அந்த மழலை தரும் புன்னகையின்
  இறுக்கமான விழியசைவு

  ஒருதலை காதல் உலகிற்கு வருவது
  இவளுடன் உரையாட துடிக்கும் நிகழ்வின் தொடக்கத்தில் தான்

  யாரென்று தெரியாத சமயம் கூட
  ஒரு சலனமில்லாத சங்கீதம் அவள் வியந்த பார்வையின் விருப்பத்தில்……

  அவளுக்கோ பார்ப்பதெல்லாம் வியப்பு…
  நமக்கோ அவர்கள் நம்மை பார்ப்பதே சிறப்பு….

  இறைவனின் இயக்கத்தில் ஒரு முக்கியமான அற்புதம்…. மழலை

 6. Layanika says:

  *திரளான நினைவின் தீர்ந்த காதல்*

  ” பிரிவின் மையமாக நீ கடந்த
  பின்பும்,,,,,,,
  உன்னை மையமாக கொண்ட
  நான் ஓரத்திலே உலர்ந்து கிடக்கிறேன் ”

  ஒரு பக்கத்தின் கடைசி எழுத்தை
  மெதுவாக மடக்கி வைக்கும்
  காகிதத்தின் முனைப் பகுதி மறைத்து
  விடுவது போல்””””””””””

  நான் யாரென்று அறிவதற்கு முன்னே
  என் இதயத்தின் நினைவுகளை இந்த
  ஜென்மம் முழுவதும்
  உபயோகமில்லாமல் செய்தது தான்!!!
  நீ எனக்கு செய்த
  உபசாரமா??????

  இல்லை என் காதலும் முதிர்ச்சியுற்ற நினைவுகளில் முக்தி பெறாத விபச்சாரமா????

  ********தீராத காதல் எல்லாம் பார்த்தாகிவிட்டது மற்றவர் மூலம் பொது இடங்களில் கண்காட்சியாய் 😒….ஆனால் எனக்கு நீ இல்லை , இனி எனக்கு வேறு காதலும் இல்லையென்பதன் சான்றே என்னுடைய இந்த தீர்ந்த காதல்…..****

 7. அங்கயற்கண்ணி ஸ்ரீனிவாசன் says:

  திருநங்கையின் தாய்மை*

  அர்த்தநாரீஸ்வரனாய் அலைகின்றேன்!!

  அங்கீகாரத்திற்கு அப்பாற்பட்டவளாய் விளங்குகின்றேன்!!

  தாய்மை என்னும் பேரு பெற்றேன்!!

  சமூக வலிதனை இறக்கி வைத்தேன்!!

  படைத்தவனின் திருவருளால்
  முழுமை என்னில் உணரப்பட்டேன்!!

  அவ மானம் என்னும் அழுக்கை நீக்கி!!

  பெண்மையின் தூய்மை உணரப்பட்டேன்!!

  தத்தளித்த கப்பலாய் தினம் தவித்தேன்!!

  தங்கமே நீ வந்த ஒரு நொடியில் – கரை சேரும்

  கலங்கரையை நான் கண்டு கொண்டேன்!!

  தாயாக மாறிவிட்டேன்
  நல் தந்தை போல காத்திடுவேன்!!

  என் இறுதி வரை உன்னை ரசிக்க
  என் இரு விழிகள் போதாது!!

  இதயத்திலே கோட்டை கட்டி
  இளவரசி போல நான் ரசிப்பேன்!!

  சமுதாயத்தின் சரித்திரத்தில்
  சாதித்த ஓர் நிகழ்வு!!

  திரு தாய்மையை உணர்ந்திடும்
  தர்மத்தின் ஓர் நிகழ்வு!!!!!

 8. சிறுவாச்சூர் பெ.தங்கதுரை says:

  “கவிதை”

  வரையப்படாத ஓவியம்

  ஓரிரு வரி காவியம்

  எளிமையின் உருவாய் வரும்

  எழுத்திற்கும் உருவம் தரும்

  தவறுகளைச் சுட்டிக் காட்டும்

  நீதியை கட்டி காக்கும்

  பண்பாட்டை கருவாய் கொள்ளும்

  காதலுக்கு தூதாய் செல்லும்

  கலாச்சாரத்தை விளக்கிச் சொல்லும்

  என்றும் காலத்தை வெல்லும்

  இலக்கிய உலகின் நிலவாக

  படித்துப் பார்த்தால் மெதுவாக

  இதயம் கவரும் அழகாக!

 9. சிறுவாச்சூர் பெ.தங்கதுரை says:

  ” கவிதை ”
  வரையப்படாத ஓவியம்

  ஓரிரு வரி காவியம்

  எளிமையின் உருவாய் வரும்

  எழுத்திற்கும் உருவம் தரும்

  தவறுகளைச் சுட்டிக் காட்டும்

  நீதியை கட்டி காக்கும்

  பண்பாட்டை கருவாய் கொள்ளும்

  காதலுக்கு தூதாய் செல்லும்

  கலாச்சாரத்தை விளக்கிச் சொல்லும்

  என்றும் காலத்தை வெல்லும்

  இலக்கிய உலகின் நிலவாக

  படித்துப் பார்த்தால் மெதுவாக

  இதயம் கவரும் அழகாக