கவிதை போட்டி 2022_09

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-09

வெற்றி பெரும் கவிதைகள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.

kavithai potti

கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.


கவிதை போட்டி 2022_09 அறிவிப்பு

மகாகவி பாரதியார்
நவீன அறிவியல்
பசும்பொன்
கற்க கசடற
மேகக் கடன்காரி
மனம் கொத்திப்பறவை
“மை” விழிமொழியாள்
விரும்பிய தலைப்பு

தலைப்புகளில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2022-09. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.


சென்ற மாத போட்டி முடிவுகளுடன், வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த ஆசிரியர் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும்

You may also like...

41 Responses

 1. M.மனோஜ் குமார் says:

  ஜனநாயகம் என்றால் மக்களால் நான், மக்களுக்காகவே நான்;
  ஜனநாயகம் என்றால் மக்களால், மக்களுக்காக, மக்களுடைய, மக்களின், மக்களே;
  ஜனநாயகம் என்றால் மக்களின் பிரதிநிதிகள் மக்களால்;
  ஜனநாயகம் என்றால் மக்களுக்காக மக்களால்

  ஜனநாயகம் என்றால் மக்களாட்சி;
  நமது முக்கிய கடமை ஒரு விரல் புரட்சி;
  இதில் ஒவ்வொருவரும் தொட்டு பார்க்க வேண்டும் அவரவரின் மனசாட்சி;
  இதற்கு உலகமே அத்தாட்சி

  ஜனநாயகம் என்றால் ஒரு நாட்டிற்கான பாராளமன்ற அமைப்பு அரசாங்கம்;
  மக்கள் கடவுள் என்றால் இது கடவுளின் ராஜாங்கம்;
  இதில் முடிவெடுத்தல் மக்களின் ஒரு அங்கம்;
  மக்களின் எல்லாம் அதிகாரங்களும் இதில் அந்தரங்கம்

  ஜனநாயகம் என்பது முகப்புரையில் ஒரு முக்கிய சொல்லாகும்;
  இந்த முகப்புரையே நேருஜியின் அறிமுக உரை மற்றும் அறிக்கையாகும்;
  இது பல சிறப்பம்சங்கள் கொண்ட அறிக்கையாகும்;
  இதுவே மக்களுக்கு ஒரு காணிக்கையாகும்

 2. M.மனோஜ் குமார் says:

  இயற்கையே கடவுள்

  யார் சொன்னது கடவுள் இல்லையென்று?
  கடவுள் இருக்கிறார்;
  பகலில் ஒளி-வெளிச்சம் தரும் சூரியன் ஒரு கடவுள்;
  இரவில் ஒளி-வெளிச்சம் தரும் சந்திரன் ஒரு கடவுள்;
  சூரிய மண்டலத்தில் உள்ள ஒன்பது கோள்களும் கடவுள்;
  அதில் ராகுவும் கேதுவும் கூட ஒரு கடவுள்;
  கோவிலில் உள்ள மரத்தை சுற்றி வளம் வருகிறோமே அது ஒரு கடவுள்;
  வேப்பமரம், ஆலமரம் மட்டும் அல்ல, உலகத்தில் உள்ள எல்லாம் மரங்களும்
  கடவுள்;
  நீர், நெருப்பு, ஆகாயம், மண், காற்று ஆகிய பஞ்ச பூதங்களும் கடவுள்;
  பறவைகளில் நாம் காண்கிறோம் கடவுள்;
  மிருகங்களில் நாம் காண்கிறோம் கடவுள்;
  அன்பில், பாசத்தில், கருணையில் நாம் காண்கிறோம் கடவுள்;
  ரத்த பந்தத்தில் நாம் காண்கிறோம் கடவுள்;
  நம்மை பெற்ற அம்மா-அப்பா ஒரு கடவுள்;
  நமக்கு பள்ளி,கல்லூரிகளில் பாடம் கற்றுத்தரும் ஆசிரியர் ஒரு கடவுள்;
  நல்ல நண்பன் ஒரு கடவுள்;
  அண்ணன் மற்றும் அண்ணி ஒரு கடவுள்;
  வயதில் முதியவர்கள், மூத்தவர்கள் ஒரு கடவுள்;
  நதிகள் எல்லாம் கடவுள்;
  மலைகள் எல்லாம் கடவுள்;
  நமக்கு உணவு போடும் விவசாயி ஒரு கடவுள்;
  நமக்கு உணவளிக்கும், மருந்தளிக்கும் செடிகள் எல்லாம் கடவுள்;
  நதிகள் எல்லாம் கடலில் பொய் சங்கமிக்கும்
  அந்த கடலே ஒரு கடவுள்;
  ஆக மொத்தம் உலகத்தில் நாம் உணரும் அனைத்துமே கடவுள்;
  ஆகையால் இயற்கையே கடவுள்

 3. M.மனோஜ் குமார் says:

  கடைசி பாட்டு

  யாருக்கு தெரியும் எது யாருக்கு கடைசி பாட்டு
  இறைவனுக்கு மட்டும் தான் தெரியும் அவரவருக்கு இது தான் கடைசி பாட்டு
  காதலில் பிரிவு ஏற்பட்டால் காதலனும் காதலியும் பாடுவார்கள் கடைசி பாட்டு
  விவாகரத்து ஆனால் கணவனும் மனைவியும் பாடுவார்கள் கடைசி பாட்டு
  இறந்தவர்களுக்கு சாவு வீட்டில் பாடும் ஒப்பாரியே அவர்களின் கடைசி பாட்டு
  ஒரு சிறை கைதி இறக்கும் முன் தூக்குமேடையில் பாடுவான் கடைசி பாட்டு
  சுதந்திர போராட்ட தியாகிகள் அன்னியர்களை விரட்டி அடித்து சுதந்திரம் வாங்கி
  தந்து பாடினார்கள் கடைசி பாட்டு
  ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு விடையளிப்பு விழாவில் பாடுவார்கள் கடைசி பாட்டு
  பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு பிரியாவிடை விழாவில்
  பாடுவார்கள் கடைசி பாட்டு
  ஊழியர்கள் அலுவுலகத்தில் வேலை முடித்துவிட்டு, அந்த நாள் இறுதியில்
  பாடுவார்கள் கடைசி பாட்டு
  பள்ளி மாணவர்கள் வகுப்புகள் முடிந்து, அந்த நாள் இறுதியில் பாடுவார்கள் கடைசி
  பாட்டு
  ஒரு குழந்தை பெரிதாக வளர்ந்து முதல் முதலில் பள்ளி செல்லும்பொழுது அம்மா
  அதற்கு பாடுவாள் கடைசி பாட்டு
  “மூன்றாம் பிறை” படத்திலிருந்து “கண்ணே கலைமானே” தான் கவியரசு
  கண்ணதாசனின் கடைசி பாட்டு
  “காவிய தலைவன்” படத்திலிருந்து “அல்லி அர்ஜுனா” தான் கவிஞர் வாலியின்
  கடைசி பாட்டு

 4. Lakshmi says:

  மாம்பழம்

  எனது இலை உறவுகள்
  சலசலக்க எனது கைகளில்
  கொத்து கொத்தான
  மதலை மாம்பழங்கள்
  காற்று ஆசிரியரிடம்
  பாடம் கற்கும் வேளையிலே
  வீசியெறியப்பட்டு
  அடுத்த வீடுகளில்
  முளைப்பதற்கான நாற்றுகளாய்
  உதயம்!
  காற்று ஆசிரியர்
  அண்டைவீட்டு சண்டை
  அநாவசியம் என்கிறாரோ!
  வேலியோரத்தில் நட்டு
  வைத்த தாத்தாவின்
  வேர்களின் பாகப்பிரிவினை
  சண்டையினை வேடிக்கை
  பார்த்தே வளர்ந்தவள் நான்!
  இன்னமும் பிரிக்கப்படாத
  எனது கால்சுவடுகளை பார்த்தபடி
  நான் தினமும் பயந்தபடி
  வெட்டப்படும் நாட்களை
  எண்ணி காத்திருக்கிறேன்!
  காற்றும் மரமும்
  பாகப்பிரிவினை அறியாது

  தன் கடமை ஆற்றும்வேளையில்
  மனிதன் சுயநலமாய்
  ஏன் மாறிப்போனான்
  என்றபடி கையில்
  கல்விக்கண் காமராசர்
  பாடம் படித்த மாணவனின்
  கையில் எனது மதலை
  மாம்பழம் கள்ளமில்லா
  இனிப்பு புன்னகையால்
  இவ்வுலகை வெல்ல
  காத்திருக்கிறது!

 5. குமரி உத்ரா நாகர்கோவில் says:

  கவிதையும் காதலும்…..!!
  கவிதை கவிதைகள் இல்லா..,காதலுமில்லை..,
  காதல் இல்லாத..,கவிதைகளுமில்லை..,!!
  காதலை எழுதாத..,கவிஞனுமில்லை..,
  கவிஞனுக்கு..,காதல் தீரா தொல்லை..,!!
  மூங்கிலி்ல் காதல் கொண்டு.., தென்றல் புல்லரிக்கும்..,
  புல்லாங்குழலாய்.., கவிதை இசை படைக்கவில்லையா..,??
  இலக்கை தேடி விரையும்..,
  பறவையின் ஒற்றை சிறகு..,
  காற்றோடு கை கோர்த்து..,பரந்த வானில் பறந்து

 6. Revathi Mahes says:

  சப்தங்கள்!
  நிசப்தங்களை உடைக்கும்…
  அசந்தர்ப்ப சப்தங்கள்….
  அடங்கப் போவதில்லை!

  பல சபதங்களின்…
  பின்னணி சப்தங்கள்….
  அரங்கேறுகின்றன அளவின்றி!

  பல விவாத சப்தங்களினூடே…
  நான் எனும் எண்ணம்…
  எட்டிப்பார்த்து….
  வெற்றுச்சாதனைகளை..
  அள்ளியிறைக்கிறது!

  பேசு பொருள் மறந்து
  திசைமாறிப்போன…
  பல்வேறு சப்தங்கள்….
  கனமாய்க் குடிகொள்கின்றன..
  வீதிகளில்!

  பிறர்சொல் கேளா..
  பெருஞ்சப்தங்களில்…
  சிலருக்கு….
  தலையில் கிரீடம்…
  தோளில் இறக்கை…
  காலில் சக்கரம்….
  எனப் பலவும் முளைக்கின்றன!

  சப்தங்கள் கலைத்துப் போட்ட…
  பேசா மௌனம்…
  அமைதியாய்…
  உடைந்து போயிருக்கிறது…
  உள்ளுக்குள்!

 7. ரேவதி மகேஷ் says:

  காலம்!

  நிர்ப்பந்தங்களினூடே…
  தீப்பந்தம் ஏந்திக் கடக்கிறது…
  அதி வேகமாய்…
  காலம்!

  ஒன்றன்பின் ஒன்றாய்….
  விளைவுகள் கிளைபரப்ப…
  தலைவிரித்தாடியே….
  கடந்து போகிறது…
  காலம்!

  பின்னப்பட்ட சதிவலைகளில்…
  வெளிச்சம் மறைந்து…
  கவிகிறது காரிருள்!

  வெற்றிக் கதவருகில்….
  எப்போதும் தடுக்கப்படுவது..
  மரபாகிறது!

  இறந்தகால…
  புற்றீசல் நினைவுகளை…
  திரை மூடும் நிகழ்காலம்….
  எதிர்காலம் நோக்கி..
  இழுக்கிறது!

  கடந்து போகிறது காலம்….
  விடைகள் பலவற்றை…..
  விளக்கியும் விளக்காமலும்!

 8. ரேவதி மகேஷ் says:

  தென்றல்!

  முகர்ந்து முகம் தொட்டு
  ஸ்பரிசங்களை….
  குழைந்து கூட்டியது!

  வழித்துணை..
  நிலவு நடந்த…
  விசால வீதிகளில்….
  விலாசங்கள்…
  கேளாமல் நுழைந்து….
  வருடிப்போனது!

  பெருமரங்களின்….
  ஊஞ்சலாட்டங்களில்…
  ஊசலாடா மனங்களெங்கும்…
  ஊடுருவியிருந்தது!

  உறவுக்களிப்புகளில்…
  உடை தொட்டு…
  உரிமை கொண்டாடியது!

  கோபுரஉச்சி…..
  கார்மேகம் தீண்டி….
  மழைச்செய்தி….
  காதில் சொன்னது!

  காலக்குடுவை மணல்…
  வேகமாய்…
  விழுந்து தீர்க்க…
  தக்கவைக்க…
  முடியாத்தருணங்களை….
  தென்றலோடு…
  இழந்த மனிதன். .
  புலம்புவது….
  கைபேசிச்செய்திகளில்…
  குளிர்சாதனத்தின் தயவில்!

 9. அ.வேதகுமார் says:

  பலமடங்கு வேண்டுமம்மா ..

  எழுத்தறிவு ஏராளம்
  இருக்கும் இவ்வையத்தில்
  பகுத்தறிவு இன்னும்
  பலமடங்கு வேண்டுமம்மா ..

  எல்லாம் சக்தி என்பது எழுத்தறிவு;
  எண்ணமே சக்தி என்பது பகுத்தறிவு
  அறம் உரைப்பது எழுத்தறிவு;
  அறம் உணர்வது பகுத்தறிவு
  அருள்-பொருள் முயல்வது எழுத்தறிவு;
  மெய்பொருளாகவே திகழ்வது பகுத்தறிவு
  நிறைய அறிவது எழுத்தறிவு;
  அறிவால் நிறைவது பகுத்தறிவு
  தன்னை உயர்த்தும் எழுத்தறிவு;
  ‘தன்னையும்’ உயர்த்தும் பகுத்தறிவு

  இன்றைக்கு எழுத்தறிவு
  இன்றியமையாதது எனினும்
  என்றைக்கும் பகுத்தறிவு
  ஈடில்லாததன்றோ!

 10. Divyasridhar says:

  ஒரு இரவின் கவிதை

  என் கனவில் உன் காட்சி சில மணித்துளிகள் என்றாலும் என் இதயத்தை நினைத்தது அந்த மழைத்துளிகள்…

 11. Shanav Gunasekaran says:

  மகாகவி பாரதியார்

  எட்டுத்திக்கும் எதிரொலித்த
  எட்டயபுரத்து புரட்சிக்கவி!

  முறுக்கிய மீசையும்
  முண்டாசுக் கட்டுமாய்
  முழங்கிய நம்
  தமிழகத்தின் கொட்டுமுரசு!

  கவிதைப் புனைப்பால்
  கதர் மனங்களை இணைத்து
  வெள்ளையனை கலங்கடித்து
  சுதந்திர காற்றை
  சுந்தர வரிகள் மூலம்
  பரவச் செய்த தீ…..
  ஆம்,
  தமிழ் அன்னைக்குச் சாரதி
  நம் தமிழ் மண்ணுக்குப் பாரதி!

  அடிமைத்தனம் அறுக்க,
  சுதந்திர காற்றாய்
  சுகந்தம் வீசிய
  கவிதைகளின்
  சொந்தக்காரர்!

  மொழித் தாகம்
  மறையும் பொழுது
  தன் பேனா கொண்டு
  தமிழ் மழை பெய்த
  தமிழகத்து கவி மேகம்!

  பசி தன் உடல்
  துளைத்த போதும்
  தன் கவி கொண்டு
  வெள்ளையனை துளைத்த
  கவி பீரங்கி!

  தமிழ் என்ற
  மொழிவாள் கொண்டு
  ஏற்ற தாழ்வுகளையும்,
  ஏமாற்றுக்காரர்களையும்
  நைய புடைத்து,

  பெண்மையையும்
  பெண்ணின சுதந்திரத்தையும்
  தன் ஏட்டில் ஏற்றி,

  பாரதத்தின்
  துயர் போக்க
  தனதுயிரை துச்சமென
  மதித்து
  கவிப்போர் நிகழ்த்திய
  எட்டையபுரத்து களிறு!

  அக்கவியின் நிழல்பட்ட
  இவ்வையத்தில்
  தடம் பதிக்கும்
  ஒவ்வொரு கவிக்கும்
  அவரே முதல் படி!
  அவரது எழுத்துக்களே
  ஏணிப்படி!

  -சனவ் குணசேகரன்

 12. சா.மெஹபுப் சானியா says:

  நட்பு

  சோகத்தில் இருக்கும் போது ஆறுதல் சொல்லி
  மகிழ்ச்சியில் இருக்கும் போது சிரிப்பை பகிர்ந்து
  கள்ளும் முல்லும் இல்லாமல் பழகி
  மேடு பள்ளத்தைத் தாண்டி
  சிரிப்புடுன் வருவது நட்பு.

  சா.மெஹபுப் சானியா

  தண்ணீர்
  உணவுக்கு முன் தண்ணீர்
  உயிர்கவளுக்கும் தேவை தண்ணீர்
  மழையிலும் தண்ணீர் கடலிலும் தண்ணீர்
  சில உயிரினங்கள் வாழ்வதோ தண்ணீர்
  நாம் வாழ்வது தண்ணீரில் அல்ல
  ஆனால் நாம் வாழ்வதற்க்கு தேவை தண்ணீர்.

  சா.மெஹபுப் சானியா

  முதியோர்கள்
  அன்பையும் அறனையும் ஊட்டி
  வாழ்க்கை முழுவதும் சிரிப்பை பகிர்ந்து
  அவர்கள் கற்ற பாடத்தை நமக்கு கற்பித்து
  பல அனுபவங்களை சந்தித்து
  பல கதைகளை சொல்லி
  நம்மிடம் அன்பாய் இருக்கும் முதியோர்களை நாம் என்றும் மதிக்க வேண்டும்.

  சா.மெஹபுப் சானியா

  தோழி

  குழந்தையில் மலர்ந்தது நம் நட்பு
  இடையில் பிரிந்தோம்
  நீ என்னை மறந்தாய்
  நான் உன்னை மறந்தேன்
  பின் இருவரும் சேர்ந்தோம்
  ஆனால் உன்னை போல் ஒரு தோழி இன்று இல்லை எனக்கு
  நாம் பிரிந்தாலும் சேர்ந்தாலும்
  என்னுடைன் நீ உன்னுடன் நான்.

  சா.மெஹபுப் சானியா

  நம்பிக்கை

  மனிதனின் இயல்பு வெற்றி தோல்வி
  நம்பிக்கை கொண்டால் வெற்றி
  நம்பிக்கை இழந்தால் தோல்வி
  தன்நபிக்கையில் ஓடினால் அவன் முதல்வன்
  மூடநம்பிக்கையில் ஓடினால் அவன் இறுதியாளன்
  இரவோ பகலோ
  வெற்றியோ தோல்வியோ
  தன்நபிக்கையில் ஒடுங்கள்
  இலக்கை அடையும் வரை முயற்சிப்போம் வெற்றி நமதே.

  சா.மெஹபுப் சானியா

  அப்துல் கலாம்

  மனிதர்களிடையே ஒரு ரத்தினம்
  ஊக்கத்தின் உன்னதம்
  மாணவர்களின் உத்வேகம்
  ஒரு உறுதியான மனிதன்
  வெற்றியின் சின்னம்
  உத்வேகத்தின் பெயர் அப்துல் கலாம் அவர்கள்.

  சா.மெஹபுப் சானியா

  மலாலா

  தெரிந்த பலருக்கு
  தெரியாத சிலருக்கு
  புரிந்த பலருக்கு
  புரியாத சிலருக்கு
  அவளின் மேற்கோள்கள்
  பெண்களின் சுதந்திரம் கல்வி
  அது அவரகளுக்கு இல்லை என்றால்?…
  அதற்காக போராடினாள்
  சிறுவயதிலேயே அந்த துணிவு
  அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவள்

  உங்கள் உத்வேகத்துடன்,
  சா.மெஹபுப் சானியா

 13. சா.மெஹபுப் சானியா says:

  நட்பு

  சோகத்தில் இருக்கும் போது ஆறுதல் சொல்லி
  மகிழ்ச்சியில் இருக்கும் போது சிரிப்பை பகிர்ந்து
  கள்ளும் முல்லும் இல்லாமல் பழகி
  மேடு பள்ளத்தைத் தாண்டி
  சிரிப்புடுன் வருவது நட்பு.

  சா.மெஹபுப் சானியா

  தண்ணீர்

  உணவுக்கு முன் தண்ணீர்
  உயிர்கவளுக்கும் தேவை தண்ணீர்
  மழையிலும் தண்ணீர் கடலிலும் தண்ணீர்
  சில உயிரினங்கள் வாழ்வதோ தண்ணீர்
  நாம் வாழ்வது தண்ணீரில் அல்ல
  ஆனால் நாம் வாழ்வதற்க்கு தேவை தண்ணீர்.

  சா.மெஹபுப் சானியா

  முதியோர்கள்

  அன்பையும் அறனையும் ஊட்டி
  வாழ்க்கை முழுவதும் சிரிப்பை பகிர்ந்து
  அவர்கள் கற்ற பாடத்தை நமக்கு கற்பித்து
  பல அனுபவங்களை சந்தித்து
  பல கதைகளை சொல்லி
  நம்மிடம் அன்பாய் இருக்கும் முதியோர்களை நாம் என்றும் மதிக்க வேண்டும்.

  சா.மெஹபுப் சானியா

  தோழி

  குழந்தையில் மலர்ந்தது நம் நட்பு
  இடையில் பிரிந்தோம்
  நீ என்னை மறந்தாய்
  நான் உன்னை மறந்தேன்
  பின் இருவரும் சேர்ந்தோம்
  ஆனால் உன்னை போல் ஒரு தோழி இன்று இல்லை எனக்கு
  நாம் பிரிந்தாலும் சேர்ந்தாலும்
  என்னுடைன் நீ உன்னுடன் நான்.

  சா.மெஹபுப் சானியா

  நம்பிக்கை

  மனிதனின் இயல்பு வெற்றி தோல்வி
  நம்பிக்கை கொண்டால் வெற்றி
  நம்பிக்கை இழந்தால் தோல்வி
  தன்நபிக்கையில் ஓடினால் அவன் முதல்வன்
  மூடநம்பிக்கையில் ஓடினால் அவன் இறுதியாளன்
  இரவோ பகலோ
  வெற்றியோ தோல்வியோ
  தன்நபிக்கையில் ஒடுங்கள்
  இலக்கை அடையும் வரை முயற்சிப்போம் வெற்றி நமதே.

  சா.மெஹபுப் சானியா

  அப்துல் கலாம்

  மனிதர்களிடையே ஒரு ரத்தினம்
  ஊக்கத்தின் உன்னதம்
  மாணவர்களின் உத்வேகம்
  ஒரு உறுதியான மனிதன்
  வெற்றியின் சின்னம்
  உத்வேகத்தின் பெயர் அப்துல் கலாம் அவர்கள்.

  சா.மெஹபுப் சானியா

  மலாலா

  தெரிந்த பலருக்கு
  தெரியாத சிலருக்கு
  புரிந்த பலருக்கு
  புரியாத சிலருக்கு
  அவளின் மேற்கோள்கள்
  பெண்களின் சுதந்திரம் கல்வி
  அது அவரகளுக்கு இல்லை என்றால்?…
  அதற்காக போராடினாள்
  சிறுவயதிலேயே அந்த துணிவு
  அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவள்

  உங்கள் உத்வேகத்துடன்,
  சா.மெஹபுப் சானியா

 14. Shanav Gunasekaran says:

  மை விழி மொழியாள்

  “மை” விழி மொழியாள்,
  அவள் குறு நடையில்
  குன்றேறும் மயிலாள்!
  குறும்பாய் துள்ளி
  குதித்தோடும் முயலாள்!
  கோவைப் பழமென
  சிவக்கின்ற பொழுது
  கோபத்தால் அயலாள்!
  அன்பை அள்ளி தருவதில்
  அவள் பார்ப்பதில்லை பகை ஆள்!

  பிஞ்சுக் கை நீட்டி
  கூழ் உணவதைப் பிசைவாள்!
  குதூகல பொழுதெல்லாம்
  உடன் ஆடி மகிழ்வாள்!
  மகளென்ற உறவான அவள்
  என் மனதிற்கு
  என்றுமே இனியாள்!

  அவள் பார்வை
  பசி போக்கும்!
  அவள் மழலை மொழி
  துயர் போக்கும்!
  அவள் பிஞ்சு விரல்
  பிடித்து நடக்கையிலே
  பின்னிரவும்
  பகலாகும்!
  அவள் தூங்காத
  இரவுகளில்
  பகல் சூரியனாய்
  என் இரு கண்களாகும்!

  உயிரெழுத்தின்
  முதலெழுத்தை
  தாய்க்குத் தந்தாள்!
  உடலோடு உயிர் வந்து
  ஒன்றுவது போல்
  தந்தை உடன் ஆனாள்!
  தமையனுக்கு இணைப்புச்
  சொல்லானாள்!
  தாத்தா பாட்டிக்கு
  இனிமைப் பொழுதானாள்,!

  வாழ்வின் வரவாக
  வாழ்வதின் பொருளாக
  வசந்தத்தின் சாரலாய்
  வந்துதித்த
  அவ் மை விழி மொழியாலே
  வாழ்நாள் முழுதும்
  நான் பேசுகின்ற மொழியானாள்!

  அந்த மொழியாளின்
  மடி மீது மரணமெனும்
  நீள் துயில் கொள்ளும்
  பெரும் பேறு கிடைத்தாலே
  வாழ்நாளும் பொருளாகும்!
  நான் வீழ்ந்தாலும் அது அழகாகும்!

  -சனவ் குணசேகரன்

 15. uma kishore says:

  இடம்: பள்ளிக்கூட வாயில்
  சூழல்: பள்ளிவிடும் நேரத்தில் தாய் தன் மகனை அழைக்கக் காத்திருக்கும் பொழுது!
  ********************************************************
  எங்கே என் ரோஜா?
  ********************
  ரோஜாக் கூட்டத்திலே என் ரோஜா எங்கே?
  மொட்டுக்களாய் சில ரோஜாக்கள்!
  மோகனமாய் சில ரோஜாக்கள்!
  அடர்ச்சிவப்பாய் சில ரோஜாக்கள்!
  மயக்கும் மஞ்சளாய் சில ரோஜாக்கள்!
  தும்பைப் பூவாய் சில ரோஜாக்கள்!
  தாழம்பூவாய் சில ரோஜாக்கள்!
  வண்ண வண்ண ரோஜாக்கள், வாசலிலே தோரணங்கள்!!
  பள்ளிக்கூட சீருடையில் அணிவகுத்த சிட்டுக்கள்!
  பள்ளிவிடும் மணி ஓசை, பட்டாம்பூச்சியாய் ஆக்கியது!
  பள்ளிக்கூட கதவருகில், பரிதவித்தது அன்னை மனம்!!
  கூட்டத்திலும் தன் தாயை, இனங்கண்டது பிஞ்சு முகம்!
  கண்களிலே கதைச் சொல்லி,
  காவியம் படைத்தது பட்டு ரோஜா!!
  முகமெல்லாம் முறுவலிப்பால்,
  மாயக் கண்ணன் சிறையிட்டான்!
  குட்டிப் புத்தன் ஓடி வந்தான்!
  போதி மரமாய் மாறி நின்றான்!
  பேதை மனம் சிலிர்த்தது,
  ரோஜா மணம் நிறைந்தது!
  தாயின் சேயின் பாசத்தால்
  சரஸ்வதி தேவியே கலங்கி நின்றாள்!!
  ரோஜா எங்கும் மலரட்டும்!!

 16. Rohini says:

  மகாகவிபாரதியார்
  ____________________
  எட்டயபுரத்தில் பிறந்து
  எட்டப்பநாய்க்கரால்
  பாக்களுக்கு அதிபதி
  பாருக்கும் அதிபதி அவன்
  பாரதி என்றொரு பட்டம்
  பெற்றானே!

  சரஸ்வதி அவனைக்
  காதலித்ததால் மகாலட்சுமி
  அவனிடம் கோபம்
  கொண்டாள்…

  சொல்வாக்கிலே வள்ளல்
  அவன்!
  செல்வாக்கிலே கஞ்சன்
  அவன்!

  வறுமையில் உழன்று
  வெறுமையில் வாழ்ந்து
  பொறுமையுடன் இருந்து
  மறுமைக்கும் சேர்த்தொரு
  பெருமை தேடித்தந்தானே!

  ஜாதிகள் இல்லையடி
  பாப்பா! என்றான்
  நிறப்பேதங்கள் வேண்டாம்
  என்றும் கூறினான்…
  பெண்ணின் விடுதலைக்கும்
  பாட்டுப் பாடினான்!
  மண்ணின் விடுதலைக்கும்
  பாட்டுப் பாடினான்!

  குயிலுக்கும் பாட்டுப் பாடினான்!
  காக்கை க்கும் பாட்டுப் பாடினான்!
  தமிழைக்காற்றாய் சுவாசித்தான்!
  இயற்கையை இன்பமாய்
  நேசித்தான்!

  கவிஞனின் காயமெல்லாம்
  அவன் காலத்தின் பின் தான்
  ஆற்ற ப்படுகிறது…
  அதனால்தான் அவன்
  காலத்தை வென்றவன்
  ஆகின்றான்…

  இனியொரு பாரதி
  பிறப்பானா இப்பாரில்?
  மகாகவி பாரதியின்
  மெகா புகழை நம் அடுத்த
  தலைமுறைக்கு எடுத்துச்
  சொல்வோம் நாம்.. .

  ல்

 17. நா.மாரியப்பன் says:

  தலைப்பு: மை விழி மொழியாள்

  கருமை
  எதிர்ப்பின் நிறமென்று
  யார் சொன்னது?
  எண்ணத்தை மாற்றுங்கள்

  கருமை
  ஈர்ப்பின் நிறம்
  அவள் மை விழி பாருங்கள்…!

  விழிகளுக்கு
  மை இடுகிறாள்
  இமைகளை
  எப்படி பெயரிட்டு அழைப்பது?
  மை இறகா..?
  மயிலிறகா…?

  வெளிச்சம் வந்தும்
  விடிய மறுக்கிறது
  அவள் விழிகளில் வரைந்த
  வில்லம்பு மை இரவு

  விழி
  ஒளி உணரும்
  அவள் விழி மட்டும்
  மொழி உணரும்

  ஒலிகளற்ற
  குறியீடுகளற்ற
  வார்த்தைகளற்ற
  ஆதிகாலத்து பூமி வாசியின்
  தனிமை நதிக்குள் தள்ளுகிறது
  அவளுடனான
  கருவிழி கலப்பு

  நான் வாசிக்க மறந்ததே இல்லை
  அவள் இல்லாத நேரங்களில்
  புத்தகங்களையும்
  அவள் இருக்கின்ற நேரங்களில்
  கண்களையும்

  பேசிக்கொள்ள
  மை விழிகள் இருக்கையில்
  பாவம்….
  மொழியின் கனம் தாளாமல்
  சினந்து சிவக்கிறது
  அவள் உதடு

  இடை மறைக்க சேலை
  இமைகளுக்கு
  கண் மை ஆடை என
  அவள் மட்டும் பூணுகிறாள்
  ஓருடல் ஈருடை

  வெட்கியும்
  கொஞ்சியும்
  சிணுங்கியும்
  கோபித்தும்
  கண்களால் கதைப்பாள்
  மை விழி மொழியால்…!

  இல்லையில்லை…

  என் கண்களோடு கலப்பாள்
  மை விழி மொழியாள்…!

  – நா.மாரியப்பன்

 18. வருண் ஷாந்த் says:

  ஏக்கம்…..

  காலங்கள் கடந்ததடி உன் நினைவால்
  வாடும் இந்த உயிருக்கு…
  அந்த காலங்களும்
  யுகங்களாக ஏங்குகிறேன்…
  அழகிய இந்த யுகங்களையும்
  உன் நினைவால்
  மரணம் அற்றவனாக ஏங்குகிறேன்…
  ஏனென்றால்…
  மரணத்திற்கு அச்சமில்லை…
  நான் மரணித்தால்
  உன் நினைவுகளும்
  என்னோடு மரணித்து
  விடும் என்ற அச்சம்….
  இன்றும்….
  ஒவ்வொரு இரவின் மடியிலும்
  உன் நினைவுகளோடு
  ஏக்கத்தில் உண்ணவன்….

 19. நா.மாரியப்பன் says:

  தலைப்பு: *மை விழி மொழியாள்*

  கருமை
  எதிர்ப்பின் நிறமென்று
  யார் சொன்னது?
  எண்ணத்தை மாற்றுங்கள்

  கருமை
  ஈர்ப்பின் நிறம்
  *அவள் மை விழி பாருங்கள்…!*

  விழிகளுக்கு
  மை இடுகிறாள்
  இமைகளை
  எப்படி பெயரிட்டு அழைப்பது?
  *மை இறகா..?*
  *மயிலிறகா…?*

  வெளிச்சம் வந்தும்
  விடிய மறுக்கிறது
  அவள் விழிகளில் வரைந்த
  *வில்லம்பு மை இரவு*

  விழி
  ஒளி உணரும்
  அவள் விழி மட்டும்
  *மொழி உணரும்*

  ஒலிகளற்ற
  குறியீடுகளற்ற
  வார்த்தைகளற்ற
  ஆதிகாலத்து பூமி வாசியின்
  தனிமை நதிக்குள் தள்ளுகிறது
  அவளுடனான
  *கருவிழி கலப்பு*

  நான் வாசிக்க மறந்ததே இல்லை
  அவள் இல்லாத நேரங்களில்
  புத்தகங்களையும்
  அவள் இருக்கின்ற நேரங்களில்
  *கண்களையும்*

  பேசிக்கொள்ள
  மை விழிகள் இருக்கையில்
  பாவம்….
  மொழியின் கனம் தாளாமல்
  சினந்து சிவக்கிறது
  *அவள் உதடு*

  இடை மறைக்க சேலை
  இமைகளுக்கு
  கண் மை ஆடை என
  அவள் மட்டும் பூணுகிறாள்
  *ஓருடல் ஈருடை*

  வெட்கியும்
  கொஞ்சியும்
  சிணுங்கியும்
  கோபித்தும்
  கண்களால் கதைப்பாள்
  மை விழி மொழியால்…!

  இல்லையில்லை…

  என் கண்களோடு கலப்பாள்
  *மை விழி மொழியாள்…!*

  – நா.மாரியப்பன்

 20. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  தலைப்ப-மகாகவி பாரதியார். எட்டாயாப்புரத்தின்!எழில்!பாட்டையா! காலத்தில் கவி! களஞ்சியமாய்! கவிதை! எழுதிய மகாகவி! பாரதியாலே!. சிந்துக்குத்! தந்தை! உரிமை! உந்துக்கு! சிந்தை!. மகிழ்ச்சியில் உணர்வைத்! தூண்டியது எந்தை! கவியின்! நிலமை எறிந்தது வெள்ளையனின் அடிமைப் பந்தை!.பாட்டுக்கொரு! புலவன்! நாட்டுக்கொரு! கவிதை! நாட்டரசன்!. முண்டாசுக்! கவிஞன்! ஆங்கிலேயரை பிண்டமாக்க மன குண்டாறு! மறவன்!. சாதியை! ஒழிக்க !ஒப்பற்ற! ஓதுவார்! பாப்பா! நாட்டின்! ஆலோசனை திறப்பான்! மகாகவிப்! பாரதியார்.

 21. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  தலைப்பு-மேகக் கடன்காரி. வான வீட்டில் வாழும் வாடகை கொடுக்க இயலா! தாரகை! மேகக் கடன்காரியே!.கதிரவனின்! முயற்சியில்! நீர்! ஆவியானதைக்! குளிர்ந்தக்! காற்றைக் !கடன் வாங்கி மழையாகப்!பொழிய! வைப்பவளே!.பொறாமையின் உச்சத்தில் பொலிவு! நிலவின்! அழகை! மறைப்பவளே!.வெள்ளை! நிற உடையில்! விதவைகள்! கோலம்! பூண்டவளே! மறுமணம்! முடிக்க என் கவிதைகள்! காற்றில்! கடிதம் அணுப்புகிறதது.

 22. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  தலைப்பு-கற்க கசடற. கற்க!கசடற! ‌. ஏற்க! நலமுட! வியர்க்க!விறுவிறுக்க! உழைக்க! உறுதியுட! திகைக்க! பகைமை இமையுட! வாழ்க! வளமுட!

 23. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  தலைப்பு+மை விழி மொழியாள். கண் மை இமை! சிமிட்டி பெண் பதுமை! விண் கண்டிட! மண் மண்டிட! தன் மொழி! சைகையில்! மழை! பொழிந்திட! மண்ணீர்! ஊற்றிட! போதிலும், கண்ணீர்!மல்கிறாள்! கலப்பிட தமிழ்! மொழி! கண்டு! செந்தமிழவள்!. செம்மொழி! சிறப்பிட! பொன்மொழி! உரைக்கின்றாள்!. மை! விழி! மொழியாள்!..கேளீர்!தமிழ்!மொழி! மேன்மையடைய!

 24. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  தலைப்பு-மனம் கொத்திப் பறவை. மரம் கொத்திப் பறவையல்ல அவள்அரம் !அவள் தீமைதனை அறுக்கும் அவள். சிரம்!சிகை! அலங்காரம்! கொண்ட பதுமைப்!பெண்! அல்ல அவள்.முரம்!அவள் பிரச்சினைகளை அள்ளி போட்டு தூக்கியெறியும் புதுமைப்! பெண்!அவள்.நிறம்!அழகு! கொண்ட அமராவதி!அல்ல அவள். அறம்! அவள் தர்மம் செய்யும் தர்மபத்தினி! அவள்.புறம்! ஒன்று வைத்து அகம்!ஒன்று வைத்து பேசுபவள் அல்ல அவள்..மறம்! அவள் தீரம்! நிறைந்த மறத்தியவள்!. வரம்!அவள் என் மனதில் ஆசையை வளர்த்திட்ட உரம்!அவள். என் மனதை கொள்ளையடித்த மனம்!கொத்திப்! பறவை!அவள்.

 25. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  அந்த நாள்! நினைவு! இந்த நாள்!மறைவு!.வந்த நாள்!உறவு!சென்ற நாள்!துக்க இரவு!. அந்த மாதம்! பாசத்தை அள்ளித் தந்த வானம்! இந்த மாதம் அழுகை கோசத்தை குமுற வைத்த கவலை பானம்!.அந்த வருடம் வசந்தத்தை வாசல் வழியே வரவேற்ற காலம்! இந்த வருடம் துக்கத்தை மீளா சூழல் சுருள வைத்த காலம்!.பசும்பொன் என் தந்தையின் நினைவுகளில் இந்த கவிஞன்.

 26. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  தலைப்பப-கடல் கண்டு காதல்.

  கடல்! அலை! பாயும் வேளையில். மடல்! எழுத ஆசை! சத்தமில்லா வேளையில் உன்னை முத்தமிட ஆசை உண்மை! நிறமில்லா! நீலச் சாயம் காணும் மாலை! வேளையில கண்மை! கருமை ! விழி கொண்ட உன்னிடம்
  பதுமை! புதுமை !காதல் புரிந்திட ஆசை! கப்பல் பயணம் கடல் நடுவே செல்லும் வேளையில்! விக்கல்!எடுத்திட ஆசை! உன் தும்மல்! நீர் படவே! தாகம் தீர்ந்திட!ஆசை! கடல் ஆழம் அறியா!உன் மன ஆழம் அறிந்திட ஆசை! பரந்த கடல் நீரின் அளவில் உனக்கு கரந்தகவிதை எழுத ஆசை!

 27. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  தலைப்ப-திராட்சை. கொடியிடையாள்! நடைபவனி கொடியுடையாள்! திராட்சியை பறிக்க! கவிதையும் நயம்! பாடும்! இக்கனியின் சுவைதனிலே! பெண்ணவள்! மணப்பந்தலில்! குளிர் பானங்கள் வருகைத்தந்தவர்களுக்கு சவையுணர்வு கொடிப்பந்தல் பழம் பழப்பதினிலே! பெண் அலங்காரம் ! அழகுதன்னை! ஏற்றம்! படைக்கும்! பழவியாபாரம் விலைதன்னை ஏற்றம்! படைக்கும்!.

 28. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  தலைப்பு-முயற்சி விடா.
  கதிரவன் தோன்றும் காலை பொழுது,மறையும் மாலை பொழுது.எனக்கு மட்டும் இரண்டு பொழுதும் போகவில்லை ஏனோ? காலைதென்றல்,மாலை தென்றல் வீசிகின்றது.எனக்கு மட்டும் வெறுமை புயல் வீசுவது ஏனோ? இரவு நிலவு ஒளி வீசிகின்றத எனக்கு மட்டும் உறவு உலவு பிரிவது ஏனோ? கருமை வானம் உலகமெல்லாம் நிறைந்திருகின்றது. எனக்கு மட்டும் வறுமை காலம் சூழ்ந்திருப்பது ஏனோ?இரை கிடைக்க புலி பதுங்கி இருப்பது போல் வாழும் வழிகளை பெற முயற்சி! விடா!காத்திருப்பில் இருக்கின்றேள.

 29. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  தலைப்பு-வாழ்ந்தால் உன்னோடு. பிறந்து முதல் எனக்கென பிறந்து விட்ட பெண்ணே! இனி பிரிவு என்பது நமக்கில்லை கண்ணே! நாம் இருவரும் வேறிடம் பெண்ணே! நம் இரு மணமும் ஓரிடம் கண்ணே! இன்னும் எத்தனை நாட்கள் பேசாமல் இருப்பதடி பெண்ணே!இதைச் சொல்ல என் நாவு கூசுதடி கண்ணே! உன்னை முத்தமிட ஆசை! பெண்ணே! அது உன்னைத் திருமணம் முடித்துவிட்ட பின்னே! என் கண்ணே! வாழ்ந்தால் உன்னோடு பெண்ணே!இல்லாவிட்டால் இந்த மண்ணோடு கண்ணே!.

 30. சா.மெஹபூப் சானியா says:

  சுகம் 

  இன்பத்தின் சிரிப்பு சுகம் 

  துன்பத்தின் அழுகை சுகம் 

  நாவில் ருசிப்பதுவும் சுகம் 

  இயற்கையை ரசிப்பதுவும் சுகம் 

  உணர்ந்து ஒரு சுகம் 

  உயர்த்துவது ஒரு சுகம் 

  வண்ணத்தின் அழகு சுகம் 

  வாழ்க்கையின் வடிவமே ஒரு சுகம்.

  சா. மெஹபூப் சானியா 

 31. சா.மெஹபூப் சானியா says:

  கல்வி 

  வானிற்க்கு அழகு தீட்டுவது மேகம் 

  மரத்திற்க்கு அழகு தீட்டுவது கிளைகள் 

  செடிக்கு அழகு தீட்டுவது பூக்கள் 

  முகத்திற்க்கு அழகு தீட்டுவது புன்னகை 

  மனிதனுக்கு அழகும் அறிவும் தீட்டுவது கல்வி.

  சா.மெஹபூப் சானியா 

 32. சா.மெஹபூப் சானியா says:

  பெண்கள் 

  நாங்கள் நடப்பதற்கு பிறந்தவர்கள் அல்ல

  பறப்பதற்க்கு பிறந்தவர்கள்!

  நாங்கள் பதுங்குவதற்க்கு பிறந்தவர்கள் அல்ல 

  பாய்வதற்கு பிறந்தவர்கள்!

  நாங்கள் அடைப்பிற்கு அடிமை அல்ல!

  சிந்திக்க பிறந்தவர்களும் 

  சாதிக்க பிறந்தவர்களும் நாங்களே!

  பெண்களின் வீரமே நமது நாட்டின் பெருமை.

  சா.மெஹபூப் சானியா 

 33. சா.மெஹபூப் சானியா says:

  முயற்சி

  தோல்வியை கண்டு அஞ்சாதே
  வெற்றியை குறைவாக இடை போடாதே
  ஏனென்றால், முயற்சி என்னும் திராசில் தான் வெற்றியும் தோல்வியும் அடங்கியுள்ளது.

  சா.மெஹபூப் சானியா

 34. Rohini says:

  மைவிழி மொழியாள்
  __________________________
  அஞ்சனம் தீட்டிய விழிகளால்
  வஞசக மொழிகள் வீசிச்சென்றாள்

  சஞ்சலம் தந்தது பெண் மனம்
  சங்கடம் அடைந்தது என் மனம்…

  மை தீட்டிய விழிகளால்
  என்னிடம் கதைகள் பேசினாள்
  பல மொழிகளால்…

  விழிகள் பேசிய கதைகளை
  எழுதிவிட்டேன் கவிதைகளாய்!
  எழுதிவிட்ட கவிதைகளை
  தூது விட்டேன் அம்புகளாய்!

  ஏற்றுக்கொண்டால், அவள்
  இதயமேடையில் நானும்
  என் கவிதைகளும் என்றென்றும்….

  இல்லையென்றால்,
  என் நாட்குறிப்பில் அவளுக்கான
  ஓராயிரம் கவிதைகளும்
  என் இதயமேடையில்
  அவளின் இரு மைவிழிகளும்….

 35. Rohini says:

  மேகக் கடன்காரி
  ___________________
  ஓடும் நதிவிடும் மூச்சும்
  உன்னால் தான்…

  ஆடும் அலைவிடும் மூச்சும்
  உன்னால்தான்….
  கழனி செழிப்பதும்
  உன்னால்தான்….
  கதிர்கள் வாழ்வதும்
  உன்னால்தான்….

  உன் ஒரு துளி
  பெருமழையென்றாகி
  உண்டிக் கொடுத்து
  உயிர் கொடுத்து
  உலகை வாழ செய்கிறது!

  நீ அழுதால் விடும் கண்ணீரானது
  எங்கள் தாகம் தீர்க்கும்
  தண்ணீராகிறது….

  மார்கழியில் சூல் கொண்டு
  ஐப்பசியில் கொட்டித்தீர்க்கிறாய்
  உண்டியலை உடைத்துக் கொட்டும்
  சில்லறை யென மழையை!

  மேகத்தாயே! நீ கடன்காரி
  நாங்களெல்லாம் உனக்குக்
  கடன்பட்டவர்கள்தான்….

  உன் கடனுக்கு
  வட்டிக் கட்டத் தேவையில்லை
  வம்பு வழக்குகளும் இல்லை
  வாய்தாவும் தேவையில்லை

  நீ யிட்ட மழையால் நாங்கள்
  பட்ட கடன் தீர்வது எப்போது?
  நன்றி சொல்ல வார்த்தையின் றி
  நெஞ்சம் துடிக்குது இப்போது…
  .

 36. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  தலைப்பு- குறட்டை. இருட்டு இமைகளில் திருட்டு உறக்கம் உருட்டும் சத்தம் குறட்டை.

 37. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  தலைப்பு- திண்ணை பேச்சாளர்கள். திண்ணை மேடையில் விண்ணை வியப்படைய அரட்டை அடித்திடும் அன்னை என்ற அடையாள சின்னங்கள் திண்ணைப் பேச்சாளர்கள்.

 38. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  தலைப்பு-திண்ணைப் பேச்சாளர்கள். திண்ணை மேடையில் விண்ணை வியப்படைய அரட்டை அடித்திடும் அன்னை ஈன்ற அடையாளச் சின்னங்கள் திண்ணைப் பேச்சாளர்கள்.

 39. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  தலைப்பு-ரசனையின் வம்சம். என்கவிதையின சிந்தனை ஊற்று! படிப்பவர்களின் ரசனையின் தாகத்தை தணிக்கவே! காகத்தின் கரைதல மொழி இரை உண்டு உண்பதற்கு வாரியிர்! என்று அழைக்கும் நிமிஷம்! என் உரை கவிதையும் உங்களிடம் அரங்கேறும்! மன அம்சம்! திகழும்! கவிதையில் மகிழும்! ரசனையின் வம்சம்!.

 40. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  தலைப்ப-தீ. தீயவள் தீயில் இறங்கினாள்.தீ அவள் என்று சீதையைச் சொன்னேன். கற்புத்தீ எறித்தது களங்கத்தை கண்ணியத்தை நிலைநாட்டவே! அபாய சிகப்புத்தீ நெருங்கவிடவில்லை இராவணனை. உபாய ஆஞ்சி வால்த்தீ எறிவாசம் செய்தது இலங்கையை. தீயரசி எறித்தாள் மதுரையை. தீ அரசி என்று நான் சொன்னது கற்புக்கரசி கண்ணகி. சிலம்பின் சிக்கலில் மாண்டவனை மாமன்றத்தில ‌நியதிதீயில் நிருபித்து சினகடுங்தீயில் தீக்கரையாக்கினாள் கண்ணகி.

 41. நா.மாரியப்பன் says:

  தலைப்பு: மை விழி மொழியாள்

  கருமை
  எதிர்ப்பின் நிறமென்று
  யார் சொன்னது?
  எண்ணத்தை மாற்றுங்கள்

  கருமை
  ஈர்ப்பின் நிறம்
  அவள் மை விழி பாருங்கள்…!

  விழிகளுக்கு
  மை இடுகிறாள்
  இமைகளை
  எப்படி பெயரிட்டு அழைப்பது?
  மை இறகா..?
  மயிலிறகா…?

  வெளிச்சம் வந்தும்
  விடிய மறுக்கிறது
  அவள் விழிகளில் வரைந்த
  வில்லம்பு மை இரவு

  விழி
  ஒளி உணரும்
  அவள் விழி மட்டும்
  மொழி உணரும்

  ஒலிகளற்ற
  குறியீடுகளற்ற
  வார்த்தைகளற்ற
  ஆதிகாலத்து பூமி வாசியின்
  தனிமை நதிக்குள் தள்ளுகிறது
  அவளுடனான
  கருவிழி கலப்பு

  நான் வாசிக்க மறந்ததே இல்லை
  அவள் இல்லாத நேரங்களில்
  புத்தகங்களையும்
  அவள் இருக்கின்ற நேரங்களில்
  கண்களையும்

  பேசிக்கொள்ள
  மை விழிகள் இருக்கையில்
  பாவம்….
  மொழியின் கனம் தாளாமல்
  சினந்து சிவக்கிறது
  அவள் உதடு

  இடை மறைக்க சேலை
  இமைகளுக்கு
  கண் மை ஆடை என
  அவள் மட்டும் பூணுகிறாள்
  ஓருடல் ஈருடை

  வெட்கியும்
  கொஞ்சியும்
  சிணுங்கியும்
  கோபித்தும்
  கண்களால் கதைப்பாள்
  மை விழி மொழியால்…!

  இல்லையில்லை…

  என் கண்களோடு கலப்பாள்
  மை விழி மொழியாள்…!

  – நா.மாரியப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *