கவிதை போட்டி 2021_4

கவிதை போட்டிகள் (ஒன்று, இரண்டு மற்றும் மூன்று) மிக சிறப்பாக முகநூல் பக்கத்தில் நடைபெற்று முடிந்தது – kavithai potti 2021_4

kavithai potti 2021 4

முந்தைய போட்டிகளை பற்றிய பதிவுகள் மற்றும் முடிவுகளை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

போட்டி எண் 1 பற்றியும் அதன் முடிவுகள் பற்றியும் வாசிக்க https://www.facebook.com/172435339471651/posts/3661192543929229/

போட்டி எண் 2, 3 பற்றியும் அதன் முடிவுகள் பற்றியும் வாசிக்க
https://m.facebook.com/story.php?story_fbid=3835522076496274&id=172435339471651


தங்கள் வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவத்தை பற்றி கவிதையாக 20 வரிகளுக்குள் எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். [Comment your Tamil poems to participate] Admin ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வெற்றி பெரும் ஒன்று அல்லது இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் – kavithai potti 2021_4

தனி நபரையோ, இயக்கத்தையே, அரசியலையே சாடாமல் கவிதை இருத்தல் அவசியம்.

போட்டி மே 10 வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து மே 15 க்குள் அறிவிக்கப்படும்.


போட்டிக்காக அல்லாமல் நேரடியாக கவிதை, கட்டுரை, கதைகள் எழுத நினைப்பவர்கள் info@neerodai.com அல்லது neerodaimahes@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

குறிப்பு: 1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் 99XXXXX@neerodai.com என்று தங்களின் கைபேசி (mobile) எண்ணை குறிப்பிட்டு மின்னஞ்சல் பகுதியை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 அல்லது neerodaimahes@gmail.com / info@neerodai.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும்.

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

You may also like...

38 Responses

  1. விஸ்வநாதன் says:

    நம் காதல் உன்
    நெஞ்சிலா!!
    என் கவிதை உன்
    வாசிப்பிலா!!!
    அதன் அர்த்தங்கள்
    உன் பார்வையிலா!!!
    என் பார்வை உன்
    மீதிலா!! அதனால்
    நாணங்கள் உன்
    கண்ணத்திலா!!!
    இனிமை அதனை நான்
    ரசிப்பதிலா!!!!
    அழகு என்
    கவிதையிலா!!இல்லை உன்
    நடையிலா!!
    முத்தெடுப்பது கடல்
    சிப்பியிலா!!! இல்லை
    உன் சிரிப்பிலா!!!
    ராகங்கள் இசையிலா!!
    உன் மௌனத்திலா!!!!!
    என் வாழ்க்கை இதய
    துடிப்பிலா!!!! இல்லை
    உன் அன்பிலா!!!!
    ❤️விசு❤️

  2. விஸ்வநாதன் says:

    மூடித்திறக்கும்
    இமைகளுக்கிடையே
    விழிமூடாமல் ரசித்த
    உன் பிம்பம்
    சிக்கித்தவிக்குதடி!!!
    ❤️ விசு❤️

  3. தே.எட்வின் தனசிங் says:

    கீழ்ப்பாக்கம்

    மன நோய் கொண்ட
    மானுடம் எல்லாம்
    அமைதியாய் அதன்
    கூண்டில் இருக்க!

    பண நோய்கொண்டு பறந்து திரிந்து
    நாட்டைக் கெடுத்த
    கூட்டமெல்லாம்

    இன்று வரிசை கட்டி
    காத்துக்கிடக்கின்றன
    ஒற்றை மருந்துக்காய்
    கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில்!!!

  4. Hemanathan K says:

    சுட்டெரிக்கும் சூரியன்
    தொலை தூர ரயில் பயணம்
    தூக்கம் தொலைத்த கண்கள்
    மொழி தெரியா அவலம்
    நினைவுகளில் கிராமம்
    துளிர்க்கும் கண்ணீரில் குடும்பம்
    கையில் பணியின் கணம்
    மனதில் எதிர்கால கனவுகள்
    பசிக்கு குருவியின் உணவு
    மனச்சோர்வில் யானையின் அளவு
    அங்கும் இங்கும் ஊர்ந்து நகர்த்தும்
    கையேந்தும் கடவுளின் குழந்தைகள்
    கை தட்டும் ஓசையில் பதற வைக்கும்
    இன்னொரு மனித இனம்

    அனைத்தும் மறைந்தது
    வண்ணம் கலைந்த ஓவியமாய்
    அங்கு ஒரு குழந்தையின்
    நகைப்பில்…

  5. Loganayagi Mohan says:

    அம்மா….
    பணம் , காசு வேணுமுன்னு…
    foreign க்கு அனுப்பி வெச்ச…
    பண மெல்லாம் சேர்த்துபுட்டேன்…
    அம்மா…உன் பாசத்தை
    மட்டும் விட்டுபுட்டேன்..

    கோட்டுசூட்டு போட்டுக்கிட்டு…
    கோட்டையெல்லாம் சுத்தி வரேன்…
    அம்மா…உன் கைய புடிச்சி நடந்த சுகம்
    நெஞ்சுக்குள்ளே குத்துதடி…

    லட்சத்துல மெத்தை வாங்கி
    லட்சணமா படுத்திருக்கேன்…
    அம்மா…
    உன் மடியில தலைவெச்சி
    படுத்த சுகம் காணலியே…

    குளுகுளு ஏசியில
    குளிச்சியா நானிருக்கேன்….
    அம்மா…
    என் வேர்வ தண்ணிய தொடச்சிவிட்ட
    உன் முந்தாணை வாசம் நீங்கலியே…

    “அப்பா” என்ற சொல்ல வெறும்
    வார்த்தையின்னு நெனச்சிருந்தேன்….
    இப்போ …நா அப்பாவா ஆகிபுட்டேன்…
    அவர் பட்டபாட்ட புரிஞ்சிகிட்டேன்…

    ஆயிரம் தான் வீடியோகால்ல
    சிரிச்சி.. சிரிச்சி நீ பேசினாலும்…
    அழுகுற உன் மனச
    படம் புடிச்சி காட்டுது என் மனசுக்குள்ள…

    மழை பெஞ்சா தான்
    மண்ணுக்கு கூட வாசம்….
    அதையெல்லாம் மிஞ்சி நிக்குதடி
    என் மேல நீ வெச்ச பாசம்…

    ஆயிரம் கவிதைகள்
    அம்மாவுக்கு எழுதினாலும்….
    அவ மொத்த அன்பையும்
    அதுல சொல்ல முடியலியே…..
    “அம்மா”
    – லோகநாயகி

  6. கரிகாலன் says:

    நான் கவிதை எழுத உள்ளேன். அனுப்பும் முகவர் தெரிவிக்கவும்

  7. Loganayagi Mohan says:

    பறிக்காத மலர்களால்
    பறிபோய்க்கொண்டிருக்கிறது
    பூந்தோட்டக்காரர்களின் வாழ்வு….

    ஆயிரம் பானைகள் அடுக்கி இருந்தும்
    ஆக்கிக் சாப்பிட அரிசி இல்லாமல்
    அல்லோலப்படுகிறது
    மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வு….

    விற்காத பட்டாசுகளால்
    வெடித்துச் சிதறுகிறது…
    பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வு…

    இப்படி விற்காத பொருட்களால்
    அமோகமாய் விலை போய்க் கொண்டிருக்கிறது
    இவர்களின் வாழ்வாதாரம்…

    இதில் கொடும் பசியும்…
    கொலைகார கொரோனாவும்
    பேரம் பேசிக் கொண்டிருக்கின்றன…

    யார் முதலில் இவர்களின் உயிரை வாங்குவதென்று….

    -லோகநாயகி

  8. Loganayagi mohan says:

    யாரையும் தொலைத்து விட்டு
    இப்படி இரவும் பகலும்
    தேடித் திரிகிறாய்????

    உன்
    பொறுமைத் தேடலில்
    “தென்றலாகவும்”…

    தீவிரத் தேடலில்
    “புயலாகவும்”…

    எங்களை புரட்டிப் போட்டு
    போரிடுகிறாயே…

    “காற்று”

    -லோகநாயகி

  9. Rohini says:

    அக்னிப்பிழம்புகள்
    _____________________
    சமூக கண் சாளரத்தை
    திறந்து பார்க்கிறேன்
    சாக்கடைப்புழுக்களாய்
    தீண்டாமை, சாதி வேற்றுமை
    வரதட்சணை, வன்கொடுமை…

    ஆயிரம் கண் கொண்டவளே
    இத்தனை அவலம் பார்த்தும்
    நீசும்மாயிருப்பதேன்? நீ கல்!
    உன்கல்மனம் கரையும் போது
    கரையட்டும்…

    என் உள்மனம் பேசுவதை
    கேட்டாகவேண்டும் நான்

    சாளரத்தை மூடிவிட்டு
    இதய நோட்டில் இச்சைமை
    கொண்டுஎழுத ஆரம்பித்தேன்…
    வெடித்துச் சிதறின என்
    வேள்வித் தீகவிதைகள்
    அவலங்கள் எரிக்க
    அக்னிப்பிழம்புகளாய்!

    _______________________

  10. Rohini says:

    நான் ரசித்த மழை இரவு🌹🌹

    ___________________________________

    வானுக்கும் நிலவுக்கும்
    கல்யாணமாம்…
    கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்
    தோரணங்களாக…

    உரசலில் உருவான இடி
    மேளதாளங்களாக…
    கண் பறிக்கும் மின்னல்கள்
    கேமிராவாக….

    மேகம் வாழ்த்து சொல்ல
    பன்னீர்ப்பூக்களை போல்
    தண்ணீர் பூக்களை
    பூச்சொரியஆரம்பிக்கும்போது

    விருப்பமின்றி நிச்சயம்
    செய்த பெண் திருமணத்தன்று
    காணாமல் போவது போல்
    காணாமல் போயிற்று நிலவு!

  11. Rohini says:

    அக்னிப்பிழம்புகள்
    _________________
    சமூக கண் சாளரத்தை
    திறந்து பார்க்கிறேன்
    சாக்கடைப்புழுக்களாய்
    தீண்டாமை, வரதட்சிணை
    வன்கொடுமை…

    ஆயிரம் கண் கொண்டவளே!
    இத்தனை அவலம் கண்டும்
    நீ சும்மாஇருப்பதேன்? நீ கல்!
    உன்கல்மனம் கரையும் போது
    கரையட்டும்…

    என்உள்மனம் பேசுவதை
    நான் கேட்டாகவேண்டும்
    சாளரத்தை மூடிவிட்டு
    இதய நோட்டில் இச்சைமை
    கொண்டுஎழுத ஆரம்பித்தேன்…

    வெடித்துச் சிதறின என்
    வேள்வித் தீகவிதைகளின்
    அக்னிப்பிழம்புகள்
    அவலங்களை எரிக்க… ♥♥

    ________________________

  12. Rohini says:

    கர்வம்
    _______
    பெற்றவள் தான் பெற்ற
    கருமுத்தை, கண்மணியைத்
    தூளியிலிட்டு ஆட்டுகிறாள்…
    துயில் துஞ்சப் போன
    குழந்தை துள்ளி எழுந்து
    அழுதது…

    அழுகையின் அர்த்தம்
    புரியாமல் ஆட்டுகிறாள் அம்மா!
    அருவியாக அழுத குழந்தை
    திடீரென்று ஆழ்கடல்
    அமைதி யானது…

    அதன் ரத்தம் குடித்தக்
    காட்டேரி கொசுவொன்று
    மெதுவாய் பறந்து
    மேலே சென்றது
    அழும் குழந்தையை
    தூங்கவைத்த கர்வத்தோடு!
    ____________________________

  13. வேல் says:

    அன்பின் நிதர்சனம்

    ஒரு தாய் ஈன்றெடுத்த நாளின் முதல்
    அறிமுகம் அன்பு !
    இரவலாக பெற முடியாத ஒன்று
    அன்பு !
    மூச்சில் கலந்த வண்ணமாய் இருப்பது
    அன்பு !
    நாட்டில் கலந்து உரையாடுவது அன்பு !
    ஐயத்தின் வெளிபாட்டை போக்குவது
    அன்பு !
    ஆசையில் மறைமுகமாக தெரிவது
    அன்பு !
    ஏழை வீட்டில் நிறைந்து இருப்பது அன்பு!
    என்றும் நான் இருக்கிறேன் என்று
    சொல்லுவது அன்பு !
    ஒற்றுமையின் பேரானந்தம் அன்பு !
    பக்தியின் அடையாளமாக திகழ்வது
    அன்பு !

    பாரபட்சம் பாராமல் பழகுவது அன்பு !
    இறுதி வரை தொடர்ந்து வருவது அன்பு
    மட்டுமே…!!!

    வேல்…

  14. வேல் says:

    தாலத்தின் ரசனை :

    கைகளால் தட்டிக் கொள்ளும்
    தாலத்தின் எதிரொலி நம்
    பாரம்பரியம் !

    தமிழக பெண்ணின் கலையம்சம்
    தங்கத்தினால் அலங்கரித்திடுமே!

    நெத்திசுட்டி பேசும் வார்த்தைகள்
    நதிகளின் ஆனந்த சங்கீதமே !

    தாலத்தினால் ராகம் பாடுது ! தங்க
    காதணி புகட்டுவது அழகான இசை
    வெள்ளத்திலே

    அடுக்கடுக்கான ஆபரணங்கள்
    அகிலமெல்லாம் கவர்ந்திடும்
    தமிழ் மொழிகளில்

    சலங்கையின் ஒளியை வைத்து
    சகலமும் அறிந்திடலாம் எளிதிலே

    தாலத்தின் ரசனை அறிந்திருந்தால்
    விமர்சனத்தின் வழியில்
    உயர்ந்திடலாம்!

    வேல்…

  15. சுவேதன் says:

    பெண்களுக்கு அழகு சேர்ப்பது என்றும் புடவைதான்!

    என்னை ஒரு நிமிடம் ஆசிரியராக்கி அழகு! பார்த்ததும் இந்த புடவைதான்…

    பள்ளியில் தீபாவளிக்கு மறுநாள்
    குழந்தைகள் அனைவரையும் தீபாவளி உடை அணிந்து வரச்சொல்லியிருந்தார்கள் ஆசிரியர்கள்.

    நானும் என் குழந்தையை விட பள்ளிக்கு சென்றிருந்தேன்.

    என் குழந்தையின் வகுப்பறை பள்ளியின் முதல் மாடியில் உள்ளது.

    நானோ குழந்தையைவிட்டு விட்டு படியில் இறங்கி வந்து கொண்டிருந்தேன்.

    என் எதிரில் ஒரு குழந்தையை அவங்க அம்மா பள்ளிச்சீருடையில் கூட்டிவந்து கொண்டிருந்தார்கள்.

    என்னைப் பார்த்தவுடன், சாரி
    மேடம் தீபாவளி உடை அணிவிக்க மறந்து பள்ளி சீருடையில் கூட்டி வந்துவிட்டேன் என்றார்.

    நானும் இவளின் சக மாணவியோட அம்மாதான் என்று கூறினேன்.

    இருவரும் சிரித்துக்கொண்டோம்.

    இருந்தாலும் பருத்தி புடவையில் என்னை பார்த்தவுடன் ;அந்த பெண் கூறியது
    என்னால் மறக்க முடியாது.

    நானோ! அளவில்லா மகிழ்ச்சியில் இருந்தேன்.

    உங்களிடம் பகிர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சி!

  16. வேல் says:

    திகட்டாத அன்பு கிடைத்திடும் உந்தன்
    சுவாசத்தினாலே!
    தித்திக்க செய்திடுவாய் உன் அன்பு
    மொழியினாலே!
    அன்னையவள் அன்பான உள்ளத்தில் !
    ஆனந்த கீதத்தை விதைத்தாய் உன்
    உச்சரிப்பினாலே!
    புன்னகை சிந்தும் உன் கன்னத்தின்
    அழகோடு !
    புல்லாங்குழலும் பெருமிதம்
    கொள்ளும்!
    உன் வாசிப்பின் ரகசியத்தை
    அறிந்ததும் !
    ஆயிரம் முறை காணும் அழகினில்
    அதிசயம் நிகழ்ந்திடும் !
    அவதரித்திடும் கிருஷ்ண பரமாத்மா …!

    வேல்…

  17. வேல் says:

    என் வாழ்வில் நடந்த மனதில் உள்ள வலிகள் பின்பு சுவாரசியமான நிகழ்வு வரிகளில் இக்கவிதை :

    சொல்ல துடிக்கும் வார்த்தைகளை
    பகிர்ந்து கொள்ள முடியவில்லை
    வார்த்தையால் …

    நான் பிறந்த நாளில் மகிழ்ச்சி மலர்ந்த புன்னகை முகத்தோடு !

    நான் பிரவசித்த தருணத்தில் மலர்ந்த புன்னகை
    புகைபடத்தோடு !

    என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத தந்தையின் பிரிவு!

    இது வரை தாங்கி கொள்ள முடியாத ஏக்கத்துடன் மனது!

    மே 2 உலக சிரிப்பு தினம் அன்று !
    என் சிரிப்பை மறந்து வெறுத்த தருணம் அன்றைய தினம் தான்!

    அடுத்த வாரம் அதே கிழமை அதே நேரம்!

    அழகான ஆண் குழந்தை என் கையில் !

    என் குழந்தையின் முதல் அழுகுரலின் !
    வேதனை கலந்த ஆறுதலை உணர்ந்த மகளாக நான் …

    எனது வாழ்வின் சுவாரசியம் :

    உன்னை அன்பாக வளர்த்த எனக்கு !
    மீண்டும் பாக்கியம் கிடைத்தது மறுபிறவி எடுக்க !

    பத்து வருடங்கள் ஆகியும் என்றும் !

    பாசத்திற்கு குறைவு வராதுஎத்தனை வருடங்கள் ஆனாலும்…!

    இந்த நிமிடம் வரை என் தந்தையின் மீது உள்ள அன்பை முழுவதும் காட்டுகின்றேன் என் குழந்தையிடம் …!

    தவமிருந்தாலும் கிடைக்காத பாக்கியம்
    தனக்கு கிடைத்தது என்று மனதை தேற்றிய படி நான்…

    அன்பிற்கு இணையான என் துணைவர் பிறந்த நாள்!

    எனக்கு தாய்மை எனும் புகழை தந்த!
    செல்வந்தன் பிறந்த நாளின் அடுத்த நாள் !

    வேல்…

  18. வேல் says:

    அச்சமின்றி வாழ்வது செயலின்
    நடைமுறையில்!
    ஆசையின்றி நடப்பது உந்தன்
    பெருந்தன்மையில்!
    இசையினை ரசிப்பது உள்ளத்தின்
    ரசனையில்!
    ஈடு இணையற்ற நம்பிக்கை உந்தன்
    எண்ணத்தின் வெளிப்பாட்டில்!
    உழைப்பை வெல்லும் சக்தி உன்
    திறமையால்!
    ஊர்கோல புகழை பெற்றிட உன்னை
    மேம்படுத்திடு!
    எல்லையில்லா மகிழ்ச்சி உன்னை
    பின்தொடர்ந்திட !
    ஏக்கம் இல்லா சொத்து அன்பு எனும்
    மூலதனம் மட்டுமே!
    ஐம்பொருளும் உன்னை நாடி வரும்
    தங்க செந்தமிழே !
    ஒட்டு மொத்த மனதான இளநெஞ்சில்
    நீங்கா வண்ணம்!
    ஓர் மனமாய் இணைந்து வெற்றியை
    நிலைநாட்டிடு !
    ஔடதம் போற்றும் தமிழ் பெண்ணே !
    அஃதே உன் குணத்தின் தனிச் சிறப்பே !

    வேல்…

  19. S. Nithyalakshmi says:

    அன்புக்கு எல்லை இல்லை
    உன் பார்வையில்
    ஆயிரம் அர்த்தம் உண்டு
    ஆனாலும் naan செய்யும்
    தவறுகளை மன்னிக்கவும்
    செய்ய்கிறாய் ஒரு ஆசிரியராய்
    உன் ஆசையை மறைத்தாய் எனக்காக
    என்னுள் விதையாய்
    விருட்சமாய் வளர்கிறாய்
    அன்புள்ள அம்மாவாக !!!
    கருவறையில் பாதுகாப்பாய்
    சுமந்த ennai
    கல்லறையில் மட்டும்
    தனியாய் விட்டுச் சென்ற
    மாயம் என்ன ??????
    என்றென்றும் என் நினைவுகளில்
    என் அன்பு அம்மாவாக !!!!

  20. S. Nithyalakshmi says:

    அன்புக்கு எல்லை இல்லை
    உன் பார்வையில்
    ஆயிரம் அர்த்தம் உண்டு
    ஆனாலும் நான் செய்யும்
    தவறுகளை மன்னிக்கவும் செய்ய்கிறாய் ஒரு ஆசிரியராய்
    உன் ஆசையை மறைத்தாய் எனக்காக என்னுள் விதையாய்
    விருட்சமாய் வளர்கிறாய்
    அன்புள்ள அம்மாவாக !!!
    கருவறையில் பாதுகாப்பாய்
    சுமந்த என்னை
    கல்லறையில் மட்டும்
    தனியாய் விட்டுச் சென்ற
    மாயம் என்ன ??????
    என்றென்றும் என் நினைவுகளில்
    என் அன்பு அம்மாவாக !!!!

  21. Ravikumar says:

    கருவிற்குள் நீ

    என் உயிரான உறவே

    பிறக்கும்முன் உறவான உயிரே

    கருவிலிருக்கும் அழகே

    உனக்கான உன் தாயின் கடிதம்

    முதல் மூன்று மாதம் தலை சுற்ற வைத்தாய்

    இரு மூன்று மாதம் முகம் மலர செய்தாய்

    மும்மூன்று மாதம் கனம் ஏற வளர்ந்தாய்

    இத்தனையும் உன் அதிசய முகத்தை பார்ப்பதற்கோ!!

    என்னுள்ளே எப்பொழுதும் துள்ளுகிறாயே

    என்னைகஂ காண ஏங்குகிறாயோ ?

    அல்லது என்னுடன் பேசுகிறாயோ ?

    இல்லை நிம்மதியாக விளையாடிகஂ கொண்டிருகிறாயோ?

    மகனே என் தந்தை போல் சிரிப்பாயோ

    உன் தந்தை போல் நடப்பாயோ

    என்னை சிலிர்க்க வைப்பாயோ, சிந்திக்க வைப்பாயோ

    இப்பொழுது ஏங்க வைக்கிறாயே!!

    என் வயிற்றிற்க்குள் வலம் வருகிறாயே ,நீ பிறந்தபின்

    நான் உன்னை வளம் வரவேண்டும் என்பதற்கோ!!

    என்னை நித்தமும் உதைக்கிறாயே , நீ பிறந்தபின்

    நான் உன்னை உதைக்க கூடம் என்பதற்கோ

    நாற்பது வாரம் நெருங்கும் தருணம்

    என் மனதை நான் எழுதலானேன்

    நாற்பது வருடம் காத்திருந்தாலும்

    உன் நாற்பது வாரத்தை நான் அரியலாகுமா?

    நீ என்றுமே அதிசயம் தானடா!!

    Written by ரவிக்குமார்

  22. பால்யமும் எங்கள் பாட்டி வீடும்:
    பால்யத்தில் பாட்டி வீட்டை
    சுற்றித்திரிந்த பட்டாம்பூச்சி நாங்கள்
    எங்கள் உலகம் அன்று மிகச்சிறிது
    நாள்முழுதும் நொடியில் விளையாடி தீர்த்தோம்
    பழைய நாளிதழுக்கு போட்டி அதிகம்
    அவை வானில் வரிசைக்கட்டி பறக்கும்
    சிறகற்ற பறவை எங்கள் பட்டம்
    ஓடிய ஓட்டத்தில் பசித்துவிட
    பாட்டியோ எங்களை தேடிவர
    வீடு சென்று விருந்து உண்டு மகிழ்ந்தோம்
    இலையுதிர்க்கால இலையெல்லாம் சரிந்தாலும்
    வெறும் மரம் மட்டும் நின்றாலும்
    ஊஞ்சல் கட்டி உல்லாசமாய் ஆடுகையில்
    முளைக்கா இலையும் கொஞ்சம்
    எட்டிப்பார்க்கும் ஆசையோடு
    வீடெல்லாம் வசதியாய் இடமிருந்தும்
    தாத்தாவின் தலை கோதலுக்கு
    அடித்து கொள்வோம்
    சொந்தங்கள் சொத்துகள்
    என சேர்த்து செல்வோம்…

  23. Loganayagi Mohan says:

    யாரோ ஒருவரின்
    அந்தப் பசிக்கு
    அவள் உணவாகிப் போக…

    தாய்க்கும் தெரியாமல்
    உன்னைப் பெற்றதால்
    அவளுக்கு நீ கழிவாகிப்போக….

    வீசி எறிந்தாள்
    என்னுள் உன்னை….

    பச்சிளம் உன் அழுகுரலில்
    பதபதைத்த என் மனதால்…

    பெறாமலே உனக்கு
    தாயாகிப் போனேன் நான்….

    தூக்கி எடுத்து
    பாலூட்ட நினைக்கிறேன்….

    கண்ணே!!!
    நான் ஒரு குப்பைத் தொட்டி
    என்பதையும் மறந்து…..

    -லோகநாயகி

  24. Rohini says:

    மகனின் விண்கலம்
    ____________________
    கோள்களின் வட்டச் சிறைக்குள்
    அடைபட்ட சூரியனும்…
    நட்சத்திரங்களின் பார்வை விலங்கில்
    கைதான சந்திரனும்….
    இருக்கும் அண்டவெளிக்கு…

    முதலெது, முடிவெது என்று
    தெரியாத பிரபஞ்சத்திற்கு…
    காண்டீப வில்லின் அம்பு
    போல பாயத் தயாராகிறது
    அந்த விண்கலம்…

    தொலைக்காட்சிபெட்டியிலிருந்து
    உரக்கக்கூவுகிறது,
    ஒன்று, இரண்டு, மூன்று,
    என்று, எண்ணிக்கை…

    பெருமையுடன் திசை
    திருப்பிய பார்வையில்,
    கண்ணான மகனின்
    கையிலிருந்து மேலேபோய்
    கீழேவிழுகிறது, அதன் விஞ்ஞானம்
    புரியாத காகித விண்கலம்…

    _________________________

  25. தலைப்பு: நினைவுகள்
    நினைவுகளின் சிற்றோடை
    ஒன்றை ஒன்று
    மோதிக் கொள்கையில்
    எவ்வாறு நீரிலே
    மின்ஆற்றால் உருவாகிறதோ
    அவ்வாறே நினைவுகளிலே
    நீங்கா வலியும் சுகமும் பிறக்கிறது
    தவழ்ந்து வரும் மேகமென
    சில நினைவுகள்
    அலையை விழுங்கும் கடலாய்
    சில நினைவுகள்
    நீண்ட நெடுஞ்சாலையாய்
    நினைவுகள் பயணித்து கொண்டிருக்கையில்
    ஓர் வழிப்போக்கனென
    வழித் தெரியா பாதையில்
    தொடர்ந்து கொண்டிருக்கின்றன
    என் இனிய பயணங்கள்…

  26. ”ஒரு கல்லூரி பூ”கரிகாலன்.கு says:

    மனிதனே
    கூரை முட்டும் என்று
    குனிந்து வெளி வந்தாய்
    அதை வழக்கமாக்காதே
    வெளியில் வந்த நீ
    நமிர்ந்து நில்!

    கை கட்டி நின்று
    பாடம் கற்றது போய்!
    ஆசிரியர் நண்பர்களோடு
    கை கோர்த்து
    கல்வி கற்கும் காலம்இது!
    நீ மட்டும் ஏன்
    இடுப்பினில் துண்டோடு
    உதறி தோளினில் போடு!
    நீயும்
    மனிதன் தான்

    மாளிகையை கண்டு
    மிரண்டு விடாதே!
    உன் முதுகு
    இமயத்தையும்
    பொறி மூட்டையாய்
    தூக்கி எறியும் திறன் கொண்டது!

    நெருப்பில் பிறந்தவன் தானே நீ!
    விறகு கட்டையைத் தொட ஏன்?
    விரல் நடுக்கம்!
    உன் விழி உயர்ந்தால்
    இவ்வுலகம்
    சாம்பல் தானே!
    தலையை உயர்த்து
    உன் குரலும்
    உலகை
    ஒரு நாள் ஆளும்!.

  27. ”ஒரு கல்லூரி பூ”கரிகாலன்.கு says:

    மனிதனே
    கூரை முட்டும் என்று
    குனிந்து வெளி வந்தாய்
    அதை வழக்கமாக்காதே
    வெளியில் வந்த நீ
    நமிர்ந்து நில்!

    கை கட்டி நின்று
    பாடம் கற்றது போய்!
    ஆசிரியர் நண்பர்களோடு
    கை கோர்த்து
    கல்வி கற்கும் காலம்இது!
    நீ மட்டும் ஏன்
    இடுப்பினில் துண்டோடு
    உதறி தோளினில் போடு!
    நீயும்
    மனிதன் தான்

    மாளிகையை கண்டு
    மிரண்டு விடாதே!
    உன் முதுகு
    இமயத்தையும்
    பொறி மூட்டையாய்
    தூக்கி எறியும் திறன் கொண்டது!

    நெருப்பில் பிறந்தவன் தானே நீ!
    விறகு கட்டையைத் தொட ஏன்?
    விரல் நடுக்கம்!
    உன் விழி உயர்ந்தால்
    இவ்வுலகம்
    சாம்பல் தானே!
    தலையை உயர்த்து
    உன் குரலும்
    உலகை
    ஒரு நாள் ஆளும்!.

  28. Shanthi Marimuthu says:

    அன்று போல் இன்றில்லை !

    கல்வெட்டாய் என்னில் பதிந்திருப்பது -அந்த

    கள்ளமில்லா உள்ளந்தாங்கிய பிள்ளைப் பருவமே !

    பழத்தின் ருசியை விட மகிழ்ச்சியாய் மரமேறி

    பங்கிட்டுச் சுவைத்த நிமிடங்களே சுவை !

    சாமிக்குக் காத்திருக்கும் பக்தன் போல் -அன்று

    சந்தையிலிருந்து அம்மா வர தவமிருந்ததை

    ஆயிரம் அங்காடிகள் சேர்ந்தாலும் இன்று -அந்த

    ஆனந்தத்தை திருப்பித்தர முடியுமா ?

    “ராணி” புத்தகத்தை முதலில் படிக்க

    ரகளை செய்த அந்த நாள்களை -வாழ்க்கை

    ஏணியில் உயர்ந்தாலும் நாளும்

    ;எண்ணிப் பார்க்கிறது மனது .

    தெய்வத்தை விரதமிருந்து சிரமப்படுத்தாது

    தோழமையோடு உறவாடு என்றேன் .

    கோபுரம் வடித்த சிற்பிக்கு கவிதைமடல்

    கொடுக்கும் வரத்தைத் தந்து

    இதை ஏற்றுக்கொண்டது போலவே

    இனிய நிகழ்வை நடத்தினாள் அன்னை .

    கடவுள் சந்நிதியில் கிடைத்த

    கவிஞன் என்ற அங்கீகாரம் —

    உறவுகளின் முன்னிலையில்

    உன்னதமென்று பெயரெடுப்பதை விட

    உயர்ந்ததல்லவா ?

    கல்லூரிக் காலத்தில் கவியுலக அரசனாம் மேத்தாவின்

    கவியரங்கில் வாசித்த கசிவுகளும் என்னுள் .

    உதிர “மை” கொண்டு என்னை இந்த

    உலகிற்கு ஈந்து -என்

    சின்னஞ் சிறு ஆசைகளுக்கும்

    சிறகு கட்டிப் பார்த்த

    தியாக நீரில் தினமும் குளித்த

    தாயானவளின் அன்பிற்கு இணையேது ?

    இறைவனால் அளிக்கப்பட்ட இனிய கொடை

    இதுவென்று இன்று உணரும் போதுதான்

    தாயானவுடனே தன் ஆசைகளுக்கு – உள்

    தாழிட்டுக் கொண்ட என் தாயை

    தலை வணங்குகிறேன் .

    —- சாந்தி மாரிமுத்து

  29. சாந்தி மாரிமுத்து says:

    அன்று போல் இன்றில்லை !
    கல்வெட்டாய்  என்னில் பதிந்திருப்பது -அந்த 
    கள்ளமில்லா உள்ளந்தாங்கிய பிள்ளைப் பருவமே !
    பழத்தின் ருசியை விட மகிழ்ச்சியாய் மரமேறி
    பங்கிட்டுச் சுவைத்த நிமிடங்களே சுவை !
    சாமிக்குக் காத்திருக்கும் பக்தன் போல் -அன்று 
    சந்தையிலிருந்து  அம்மா வர தவமிருந்ததை
    ஆயிரம் அங்காடிகள் சேர்ந்தாலும் இன்று -அந்த 
    ஆனந்தத்தை திருப்பித்தர முடியுமா ?
    "ராணி" புத்தகத்தை முதலில் படிக்க
    ரகளை  செய்த அந்த நாள்களை -வாழ்க்கை 
    ஏணியில் உயர்ந்தாலும் நாளும் 
    ;எண்ணிப் பார்க்கிறது மனது .
    தெய்வத்தை விரதமிருந்து சிரமப்படுத்தாது 
    தோழமையோடு உறவாடு என்றேன் .
    கோபுரம் வடித்த சிற்பிக்கு கவிதைமடல் 
    கொடுக்கும் வரத்தைத் தந்து 
    இதை ஏற்றுக்கொண்டது போலவே 
    இனிய நிகழ்வை நடத்தினாள்  அன்னை .
    கடவுள் சந்நிதியில் கிடைத்த 
    கவிஞன்  என்ற  அங்கீகாரம் —
    உறவுகளின் முன்னிலையில் 
    உன்னதமென்று பெயரெடுப்பதை விட 
    உயர்ந்ததல்லவா ?
    கல்லூரிக் காலத்தில் கவியுலக அரசனாம் மேத்தாவின் 
    கவியரங்கில் வாசித்த கசிவுகளும் என்னுள் .

    உதிர "மை" கொண்டு என்னை  இந்த 
    உலகிற்கு ஈந்து -என் 
    சின்னஞ் சிறு ஆசைகளுக்கும் சிறகு கட்டிப்  பார்த்த 
    தியாக நீரில்  தினமும் குளித்த 
    தாயானவளின் அன்பிற்கு  இணையேது ?
    இறைவனால் அளிக்கப்பட்ட இனிய கொடை 
    இதுவென்று இன்று  உணரும் போதுதான் 
    தாயானவுடனே தன்ஆசைகளுக்கு – உள்
    தாழிட்டுக்  கொண்ட என் தாயை  தலைவணங்குகிறேன் .

  30. நீரோடை குழு says:

    கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி

  31. Rohini says:

    நீரோடைகவிதைப்போட்டி_5
    ____________________________
    அன்னையர் தினம்
    ___________________
    ஆர்டிக்கின் பனிப்பாறை போல்
    இறுகிய கருங்கல் பாறைகள்
    அங்கொன்றும் இங்கொன்றுமாக…

    இரும்புக்கடை சம்மட்டியாய்
    ஓய்வில்லாமல் ஓசையெழுப்பும்
    உளியின் சத்தம்…..

    முழுமையடையாத செதுக்கல்களோடு
    காலில் சலங்கையில்லாமல்
    ஆடும் நடனமாது சிற்பம்…
    எழுதுகோலில்லாமல் எழுதிக்
    கொண்டிருக்கும் எழுத்தாளன்
    சிற்பம், இன்னும் எவ்வளவோ,
    உயிரும் உணர்வும் இல்லாமல்…

    இறந்துபோன தன்தாய்க்கான
    சிற்பத்தை அவன் செதுக்கும் போது
    மகனே! சாப்பிட்டாயா?
    சிறிது ஓய்வெடுத்துக்கொள்,
    என்ற அசரீரி குரல் அவனைத்
    தாலாட்டத்தொடங்கியது மெதுவாக
    தாய் சிற்பத்திற்க்கு மட்டும்
    உயிரும் உணர்வும் உண்டு போல!
    ___________________________________
    ___________________________________

  32. D.luvia vincy. says:

    தாய்மொழி!!
    தாயின் கருவில் படைத்தபோதே,
    எனை தமிழச்சியாய் படைத்த
    தமிழன்னையே!!!
    தமிழை தரணியெங்கும்,
    தளரவிடாமல் வளர்க்க….
    தாயின் கருவில் தொப்புள்கொடி
    உறவிலிருந்தே,
    தமிழனாய், தமிழச்சியாய்
    உருவாக்க தமிழன்னையை வேண்டி,
    என் தாய் மொழியை தரிசிக்கிறேன்!!!!

    தமிழ் என்றாலே,
    தேன் கொட்டும் இனிமை தான்
    என்னவோ??
    உதடொட்டி, உள்ளந்தொட்டு
    உயிருரவாடி ஊட்டிய உணவே
    தமிழாகிறது!!!
    தமிழில் உலகமே உச்சரிக்கும்
    உன்னத தொடக்கம் “அம்மா”
    எனும் அமுதன்னை மொழியே!!!
    “அம்மா” எனும் உறவைப்போலே,
    மொழியும் மொட்டிடுகிறது!!!
    ஆதலாலே, தமிழ், சர்வதேச
    “தாய்மொழி தினம்” என்றாகிறது….
    சர்வதேச தந்தை மொழி தினம்,
    என எங்கெனும் உண்டல்லோ??
    – லூவியா.

  33. விருதை சசி says:

    அன்னையர் தினம்
    ************************

    ஈரைந்து திங்கள் தவக்கரு சுமந்து

    கூரைவேயா இல்லில் அரணாய் நின்று

    புரையொன்றை கடிந்தே விளக்கி நானொளிர

    அரை உயிராய் தானுருகும் மெழுகவள்…

    உற்றதோர் துணையை இழந்த பின்பும்

    பெற்றதோர் பிள்ளையின் துன்பம்எண்ணி

    அற்றே கலங்காது அகங்காத்து தரங்குறையா

    பொற்றொத்து மங்காது மிளிரும் மெய்மையவள்…

    நடை பயின்ற நாட்களிலே நேர்ந்த

    தடையொன்றால் தவறி நான் விழுந்தால்

    படையெடுத்து தரைப்போர் புரிந்து வெற்றி

    நடையோடு திரும்பிடும் வீர மங்கையவள்…

    அழுக்குடையோடு அரைவயிறு கூழுண்ட போதிலும்
    அழுதொன்று கேட்டு நின்றால் அப்பொருள்
    பொழுது சாயும்முன் விழிகாட்டி மகிழ்வூட்டும்
    தொழுகின்ற தெய்வ வம்சத்தின் வரமவள்…

    விதி தந்திட்ட வினைகளை துமியாக்கி

    அதிகாலை வேளையில் ஆகாரம் செயவித்து

    மதிமுகம் பெற்றிட கல்விச் சாலையனுப்பி

    சதியழித்து சாதித்த சரித்திர நாயகியவள்…

    பாரமென எண்ணும் தன்மை உணர்ந்தென்

    தாரமவள் தருகின்ற இன்னல் மறைத்து

    சாராப் பண்போடு என்னலமோங்க இக்கணம்

    ஓரமாய் ஒதுங்கி வாழ்த்தும் தாய்மையவள்.

  34. விருதை சசி says:

    அன்னையர் தினம்
    ************************

    ஈரைந்து திங்கள் தவக்கரு சுமந்து

    கூரைவேயா இல்லில் அரணாய் நின்று

    புரையொன்றை கடிந்தே விளக்கி நானொளிர

    அரை உயிராய் தானுருகும் மெழுகவள்…

    உற்றதோர் துணையை இழந்த பின்பும்

    பெற்றதோர் பிள்ளையின் துன்பம்எண்ணி

    அற்றே கலங்காது அகங்காத்து தரங்குறையா

    பொற்றொத்து மங்காது மிளிரும் மெய்மையவள்…

    நடை பயின்ற நாட்களிலே நேர்ந்த

    தடையொன்றால் தவறி நான் விழுந்தால்

    படையெடுத்து தரைப்போர் புரிந்து வெற்றி

    நடையோடு திரும்பிடும் வீர மங்கையவள்…

    அழுக்குடையோடு அரைவயிறு கூழுண்ட போதிலும்
    அழுதொன்று கேட்டு நின்றால் அப்பொருள்
    பொழுது சாயும்முன் விழிகாட்டி மகிழ்வூட்டும்
    தொழுகின்ற தெய்வ வம்சத்தின் வரமவள்…

    விதி தந்திட்ட வினைகளை துமியாக்கி

    அதிகாலை வேளையில் ஆகாரம் செயவித்து

    மதிமுகம் பெற்றிட கல்விச் சாலையனுப்பி

    சதியழித்து சாதித்த சரித்திர நாயகியவள்…

    பாரமென எண்ணும் தன்மை உணர்ந்தென்

    தாரமவள் தருகின்ற இன்னல் மறைத்து

    சாராப் பண்போடு என்னலமோங்க இக்கணம்

    ஓரமாய் ஒதுங்கி வாழ்த்தும் தாய்மையவள்.

    -விருதை சசி
    விருதுநகர்

  35. திருக்குறள்

    வள்ளுவரே!
    எழுத்து வேலையின் எடுத்துக்காட்டே…..

    ஆம் என்றோ,
    பதிவு செய்து விட்டீர்!
    வாழ்வின் சாரத்தை…
    உம் பேனா மையின் ஈரத்தில்!

    என்ன இல்லை உம் குரல் ஒலியில்….
    எல்லாம் அடக்கம் ,உம் குறள் ஒளியில்!

    நீரின்றி அமையாது உலகு…
    கனியிருப்பக் காய்கவராதே…
    காலத்தினால செய்த உதவி…
    காமத்தின் கனிவு…
    அரசியலின் அணிஇலக்கணம்….

    ஆம் ஞான்,
    கற்றது உம் குறளிலிருந்நது கையளவு,
    கல்லாதது என் இதய அளவு!

    ம்ம்ம்……
    என் மகனுக்கும் அவன் மகனுக்கும்
    புவியில்….
    கற்றுணர ஆயிரமுண்டு உம் குரலில்….
    என்றும் எழுத்தாய் வலம்வரும் உம் குறளில்!

    இப்படிக்கு,
    கல்பு@கற்பக லட்சுமி மோகன்.

  36. Rohini says:

    நீரோடை கவிதைப்போட்டி_4, 5போட்டிகளில் நான் பரிசுப் பெற்றது
    கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
    மிக்க நன்றி! நான் எழுதிய கவிதைகளில்
    பரிசு க்கான கவிதை எது என்று
    தெரியவில்லை.

  37. மரம்
    ___________

    நிழலைத்தரும் மரங்கள்
    சூரியனின் சுட்டெரிப்பபை தாங்குவதும் மனிதனின் மகிழ்ச்சிக்காக!

    மரங்களின் வேதிவினையால்
    மேகங்கள் அழுவதும் கூட மனிதனின் மகிழ்சிக்காக!

    பறைவைகளின் அரண்மனையாய் இருப்பதற்காக மரங்கள் மகிழ்ச்சியடைகின்றன!

    விலங்குகளின் உணவுக்காக மரங்களின் பங்கு பெரிதாயிருக்கின்றன!

    உலக உயிரினத்தின் பாதுகாவலனாயிருப்பதென்னவோ மரங்கள்தான்!

    ஆனால் மக்காயிருக்கிற மனிதனை பார்த்து
    ஏன்டா மரம் மாறி நிற்கிறாயென்பது வேடிக்கையாயிருக்கிறது!!