வலையோடை பதிவு 6

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 6

valaiyodai part 1

புத்தகம் மட்டுமே
போதையாயினும்
போதியாயினும்
வாழ்வுக்கு வெளிச்சம் தரும்
@maheskanna


ஒருவர் வேண்டாம் என்று தூக்கி எறிந்த பொருள் வேறொருவர்  கையில் மதிப்புடையதாகிறது..மதிப்பு பொருளில் அல்ல. கிடைக்கும் கைகளில்….!!!!!!
@sankariofficial – valaiyodai part 6


இத்தனை கவலைகளுக்கு மத்தியிலும், பூ பூத்துக்கொண்டே தான் இருக்கிறது.
@THARZIKA


மொத்த பிடிவாதத்தையும்
உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்திற்கு உண்டு…..
@TRAMESH21548526


நிமிடத்திற்கு ஒரு முகமூடி தேவைப்படுகிறது
நிமிடத்திற்கு ஒரு மனிதனை கடப்பதால்..
@SaranyaaaRaj


நமக்கேற்றபடி எல்லாரும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை..
நாம் அப்படி இருக்கிறோமோ என்பதை எண்ணுவதேயில்லை என்பது தான் தவறு…!!!
@sankariofficial


தன்னைத்தானே பார்ப்பதாலேயே
விகாரங்கள் மறைந்துகொள்கின்றன
கண்ணாடிக்கு முன்..
@Lakshmivva1


பேரன்பு என்பது
தேடிச் செல்வதில் இல்லை.
தேடி வருபவர்களுக்கு
மறுக்காமல்…
அடைக்கலம் தருவதில்
இருக்கிறது.
@sumi_sumiprem


அமைதியாய் வாழ
வேண்டுமென்றால்
நீ கண்டதையும் கேட்டதையும்
பிறரிடம் கூறாதே..
@Vanaja_twitz


எட்டா கனிக்கு ஆசைபடாதே…
கனி மரத்தையே உன் உழைப்பால் உடமையாக்கு…
@karuneelamalar


You may also like...