என் மின்மினி (கதை பாகம் – 49)

சென்ற வாரம் அவளை தன் பைக்கில் ஏற்றி கொண்டு கடையினை நோக்கி பயணம் தொடர்ந்தான் – en minmini thodar kadhai-49

Neerodai YouTube Channel

en minmini kathai paagam serial

பயணங்கள் இனிதே தொடர எதிர்வரும் காற்று பிரஜினது தலைமுடிகளின் இடையினில் புகுந்து ஏதோ ஒரு வாசனையை கலந்து அவள் முகத்தில் பட்டுத்தெளிக்க மயக்கத்தில் திளைத்தவாறே மெல்லியதான குரலில் பாட்டு ஒன்றை பாடிக்கிட்டே கனவுலகத்தில் மகிழ்ச்சியுடன் பயணித்தாள் ஏஞ்சலின்…

ஹே நாம ரெண்டு பேரும் பேசாம இருக்கும் போது ஒரு மெசேஜ் அனுப்பினேன் .பதிலுக்கு ஒரு ரிப்ளை கூட நீ பண்ணல… நான் கூட அப்போவே கேட்கணும் நெனச்சேன்.,மறந்தே போயிட்டேன்.இப்போதான் நினைவுக்கு வந்தது என்று இடையே குறுக்கிட்டு அவள் கனவை பாதியிலே கலைத்தான் பிரஜின்…

ம்ம்ம் யோசித்தவாறே அப்படியா என்ன மெசேஜ் என்று பதிலுக்கு வினவினாள் ஏஞ்சலின்.

அப்படியே ஒன்னும் தெரியாது போலே நடிச்சு தள்ளுறுவீயே, Good nit sweet drனு ஒரு மெசேஜ்., உன்னோட போன் எடுத்துப்பாரு என்று அதட்டலுடன் அவன் சொல்ல, ஓகோ அது நீதானா, புது நம்பராக இருந்துச்சா படிச்ச உடனே அப்போவே அழிச்சுட்டேன்… ஆமா என்கூட தான் பேசமாட்டீயே.அப்போ ஏன் என்ன பாத்து sweet dearனு சொன்னே..,என் மேலே அவ்வளவு பாசமா என்று கேட்டாள் ஏஞ்சலின்..

இதை கேட்ட பிரஜின் ஐய்யய்யோ swt drனு நான் உன்னை சொல்லவேயில்லை…sweet dreamsனு தானே நான் சொன்னேன் என்று பயங்கரமாக சிரித்தவாறே வண்டியினை டீ கடையின் முன்னே கொண்டு நிறுத்தினான்….

முதலில் லூசு மாதிரி சிரிக்குறத நிறுத்து.ச்சே இந்த முறையும் நான் தான் பல்ப் வாங்குனேனா என்று சலித்தவாறே கோபமாக வண்டியினை விட்டு இறங்கினாள் ஏஞ்சலின்… – en minmini thodar kadhai-49

– அ.மு.பெருமாள்

பாகம் 50-ல் தொடரும்

You may also like...