என் மின்மினி (கதை பாகம் – 33)

சென்ற வாரம் சரி போகலாம் வா என்றபடி அவளது சுண்டுவிரலை பிடித்தபடி மெதுவாக நடந்து சென்றான் பிரஜின் ஹே என்ன பண்றே நமக்கு கல்யாணம் ஆகி மணவறையினை சுற்றி வருவதாக நினைப்போ – en minmini thodar kadhai-33.

en minmini kathai paagam serial

என்ன ரொம்ப அமைதியாக உக்கார்ந்துகிட்டு இருக்கே.எதாவது பேசு என்றான் பிரஜின்.

சும்மாதான் நான் உன்கிட்டே என்னை பத்தி எல்லாமே சொல்லிட்டேன்.ஆனாலும் ஒரு விஷயம் இருக்கு என்று ஏஞ்சலின் கூற ஐய்யோ….நீ இவ்வளவு நேரம் சொன்ன மொக்கையான கதையால என் காதில் ரத்தம் வந்துடுச்சு.இதுல இன்னும் மிச்சம் இருக்கா அப்படினு கிண்டல் செய்தவாறே வண்டியினை ஓட்டியபடி அவளது கோபமான முகத்தை ரசித்தான் பிரஜின்.

ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்து.எனக்கு ரொம்ப அவசரமாக பாத்ரூம் போகணும் என்றாள் ஏஞ்சலின்…

ஹே முன்னாடியே சொல்ல மாட்டே.இவ்வளவு நேரம் அங்கே ஹோட்டலில் தானே இருந்தோம். அப்போதே சொல்லியிருக்கலாமில்லையா என்றான் பிரஜின்.

அதெல்லாம் அப்போ தோணல. இப்போ வண்டியை நிப்பாட்ட முடியுமா இல்லை என்னை நீ கடத்திகொண்டு போறேனு சத்தம் போடட்டுமா என்று மிரட்டினாள் ஏஞ்சலின்… எம்மா நீ செய்தாலும் செய்வே.வேணா வேணா நானே நிப்பாட்டுறே என்றபடி ஒரு கஃபே வாசலில் கொண்டு வண்டியை நிறுத்திவிட்டு சரி சீக்கிரம் போயிட்டு வா.,நான் இங்கேயே வெயிட் பண்றே என்றபடி அங்கேயே நின்றான் பிரஜின்…

அதெல்லாம் முடியாது.நீயும் வா., நீ டீ சாப்பிட்டு உள்ளே உட்கார்ந்து வெயிட் பண்ணு.நான் வந்துருவேன் என்றபடி அவன் கையினை பிடித்து இழுத்தவாறே உள்ளே போனாள்…
நீ இங்கேயே டீ,காஃபி எதாவது சாப்பிட்டு இங்கேயே இரு நான் இப்போ வந்துருவேன் என்று அவனை அங்கே உக்கார வைத்தபடி உள்ளே ஓடினாள் ஏஞ்சலின். நேரம் செல்ல செல்ல அவள் வெளியே வரவே இல்லை – en minmini thodar kadhai-33.

– அ.மு.பெருமாள்

பாகம் 34-ல் தொடரும்

You may also like...

2 Responses

  1. தி.வள்ளி says:

    புதிய திருப்பத்துடன் கதை …இளமை துள்ளும் அருமையான நடை …ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

  2. Kavi devika says:

    மனமார்ந்த பாராட்டுகள்