கவிதைப் போட்டி 2021_8

நீரோடை கவிதைப் போட்டி ஏழு , நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, சமீபத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன – kavithai potti 8

kavithai potti 8

பொது தலைப்புகள்

 1. வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்
 2. சுதந்திர இந்திய 75
 3. பெண்ணியம் போற்றுவோம்
 4. பல்லாங்குழி
 5. பனையோலை
 6. தங்களுக்கு விருப்பமான ஒரு தலைப்பு

இலக்கியம் சார்ந்த தலைப்புகள்

 1. எத்திசை செலினும் அத்திசை சோறே
 2. யாதும் ஊரே யாவரும் கேளிர்
 3. இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க அதன் இயல்பு உணர்ந்தோரே
 4. தீதும் நன்றும் பிறர் தர வாரா
 5. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
 6. பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

மேலே குறிப்பிட்ட தலைப்பில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.

எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வெற்றி பெரும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 8. போட்டி ஆகஸ்ட் 31 வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். ஒரு கவிதைக்கும் இரண்டாம் கவிதைக்கும் ஓரிரு நாட்களாவது இடைவெளி இருக்க வேண்டும். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

நமது நீரோடை வலையொளிக்கு (YouTube Channel) கவிதை வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் – வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

You may also like...

49 Responses

 1. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

  வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும் !
  பாவலர் கருமலைத்தமிழாழன்

  வாழ்வதுவும் பிழைப்பதுவும் வேறு என்னும்
  —வகைதெரியா திருப்பவரே பலபே ரின்று
  வாழ்வதாகப் பிழைப்பதினை எண்ணிக் கொண்டு
  —வாழ்க்கையதன் பொருள்தெரியா திருக்கின் றார்கள்
  வாழ்வென்றால் அறவழியில் பொருளை யீட்டி
  —வளரன்பில் பிறர்க்கீந்து நிறைந்த நெஞ்சால்
  வாழ்த்துகின்ற வாழ்த்துடனே இன்பத் தோடு
  —வாழ்கின்ற வாழ்க்கைதான் வாழ்த லாகும்!

  நெறிமுறைகள் ஏதுமின்றி வயிற்றை மட்டும்
  —நிரப்பியிங்கே பிழைப்பதுவே வாழ்க்கை யென்று
  தறிகெட்டுப் போய்விட்ட இந்த நாளில்
  —தவறான மதிப்பீட்டில் வாழு கின்றார்
  குறிக்கோளே இல்லாமல் பணத்தை மட்டும்
  —குளிக்கோளாய்க் கொண்டிங்கே பகலும் அல்லும்
  வெறியோடு சேர்ப்பதுவே வாழ்க்கை யென்று
  —வெறுமையிலே அனைத்தையுமே இழக்கின் றார்கள்!

  நேர்மையாக வாழ்வதற்கு விரும்பு வோனை
  —நேர்த்தியாகப் பிழைப்பதற்குத் தெரியான் என்றும்
  நேர்மாறாய் ஏமாற்றிச் சுரண்டு வோனை
  —நெஞ்சுவந்து பிழைப்பதற்குக் கற்றோன் என்றும்
  பார்க்கின்ற பார்வையிலே வேறு பட்டுப்
  —பழுதாகப் பிழைப்பதினை வாழ்க்கை என்றே
  வேர்வெட்டிச் சாய்த்துவி¢ட்டுப் போலி யான
  —வேடத்தை உண்மையென்றே மயங்கு கின்றார் !

  கண்ணெதிரே நடக்கின்ற தவற்றைக் கண்டு
  —கண்மூடிச் செல்லாமல் தட்டிக் கேட்டும்
  உண்மைக்கு நடக்கின்ற ஊறு கண்டு
  —ஊர்க்கஞ்சி ஒதுங்காமல் எதிர்த்துக் கேட்டும்
  எண்ணத்தில் யாவருமே கேளிர் என்றும்
  —எதிர்நிற்கும் மனிதருள்ளும் மனத்தைக் கண்டும்
  மண்மீதில் அனைவருமே மதிக்கும் வண்ணம்
  —மனிதத்தில் வாழ்வதுதான் வாழ்க்கை யாகும் !

 2. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

  பனையோலை
  பாவலர் கருமலைத்தமிழாழன்

  எழுத்தாணி கைகொண்டே ஓலை தன்னில்
  —எந்தமிழர் கருத்தன்று பதித்து வைக்கப்
  பழுதின்றி நம்தமிழ்தான் வாழ்வ தாலே
  —பாரெல்லாம் செம்மொழியாய்ப் போற்று தின்று !
  பழுதாகிப் போகாமல் காலந் தோறும்
  —படித்ததனை முன்னோர்கள் காத்த தாலே
  விழுதாக நமைதாங்கி நடப்ப தற்கு
  —விழியாக வழிகாட்டி நிற்கு தின்றும் !

  கடல்கோள்கள் பொங்கிவந்து அழித்த போதும்
  —களப்பிரர்கள் ஆட்சியிலே அழித்த போதும்
  விடவாயால் கரையான்கள் அழித்த போதும்
  —வீசியாற்றில் தலைமுழுகி அழித்த போதும்
  திடமாக நின்றிருந்த ஓலை தம்மை
  —தினந்தோறும் ஊர்ஊராய்த் தேடி உவேசா
  புடம்போட்ட தங்கமென நூல்க ளாக்கிப்
  —புவிக்களித்த தாலேநாம் பெருமை பெற்றோம் !

  காப்பியர்தம் இலக்கணத்தை ; சங்க நூலை
  —காப்பியங்கள் ; எட்டுத்தொதை பத்துப் பாட்டை
  கூப்பிக்கை உலகுதொழும் குறளை நாதாம்
  —கூறுதற்குத் தந்ததிந்த ஓலை தாமே !
  ஏப்பமிட்டு விழுங்குதற்கே ஆங்கி லந்தான்
  —எதிர்ப்பார்த்து காத்துளது உணர்ந்தோ மில்லை
  நாப்பேசல் விட்டொன்றாய் செயல்க ளாற்றி
  —நற்றமிழைக் காத்திடுவோம் புதுமை சேர்த்தே !

 3. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

  பெண்ணியம் போற்றுவோம்
  பாவலர் கருமலைத்தமிழாழன்

  பண்பாட்டின் அடையாளம் நம்மின் பெண்கள்
  —பழகுதமிழ் அடையாளம் நம்மின் பெண்கள்
  எண்ணத்தில் தமிழினத்தின் குறியீ டாக
  —எழுதிவைத்த வரைபடந்தான் நம்மின் பெண்கள்
  கண்ணியத்தைக் குடும்பத்தின் பெருமை தன்னைக்
  —கட்டிகாத்து துலங்கவைப்போர் நம்மின் பெண்கள்
  மண்பிறந்த ஒழுக்கத்தைப் பாலில் சேர்த்து
  —மழலையர்க்கே ஊட்டுபவர் நம்மின் பெண்கள் !

  அடக்கத்தின் அடையாளம் ! பொறுமை என்னும்
  —அணியினுக்கும் அடையாளம் நம்மின் பெண்கள்
  நடமாடும் தெய்வமாக நம்மைக் காத்து
  —நம்பிக்கை தருபவர்கள் நம்மின் பெண்கள்
  நடமாடும் பண்பாட்டுக் கலாச்சா ரத்தின்
  —நற்சொத்தாய் சந்ததியர்க் களிப்போர் பெண்கள்
  முடமாக்கி மூலையிலே முடக்கி டாமல்
  —முழுவுரிமை கொடுத்தவரைப் போற்று வோமே !

  சேலைதனை உடுத்திஉடல் முழுக்க மூடிச்
  —செம்முகத்தில் மஞ்சளொடு குங்கு மத்தை
  மாலைவரும் பிறைநுதலில் ஒளிர வைத்து
  —மல்லிகையில் கார்குழலை மணக்க வைத்துக்
  காலைவரும் கதிரைப்போல் ஒளிரும் பெண்ணைக்
  —கரம்கூப்பி நாம்வணங்கிப் போற்ற வேண்டும்
  நூலைப்போல் நமக்கறிவை ஊட்டு கின்ற
  —நுண்ணறிவுப் பெண்களினை மதிப்போம் போற்றி !

 4. எஸ் வீ ராகவன் says:

  *இன்றைய சுதந்திரம்?*

  விதவிதமான உடை
  அதற்கு இல்லை தடை
  வரையறை தாண்ட கூடாது
  *பண்பாடு காக்க வேண்டும்*

  கேள்வி கேட்டு தொல்லை
  அதற்கு இல்லை எல்லை
  அவமான படுத்த கூடாது
  *வார்த்தையை காக்க வேண்டும்*

  இயற்கையை ரசிக்க பழகு
  அழிக்க நினைப்பது தவறு
  அடைய நினைக்க கூடாது
  *கவனமாக காக்க வேண்டும்*

  பண்டைய கல்வெட்டு அருமை
  கோயில் சிற்பங்கள் பெருமை
  கிறுக்க உடைக்க கூடாது
  *பொக்கிஷமாய் காக்க வேண்டும்*

  பெற்றோரை மதிப்பது அவசியம்
  தேவையில்லை அலட்சியம்
  கடமையை மறக்க கூடாது
  *கண்ணியம் காக்க வேண்டும்*

  சுதந்திரம் இருபக்க கூரிய வாள்
  சிறிதாய் வெட்டினால் காயம்
  பெரிதாய் வெட்டினாவ் மரணம்
  *வரம்பு வரையறை தாண்ட கூடாது*

  எஸ் வீ ராகவன் சென்னை

 5. எஸ் வீ ராகவன் says:

  *யாதும் ஊரே யாவரும் கேளிர்*

  ஆயிரம் வருடங்கள் முன்பு
  கணியன் பூங்குன்றன் சொன்னது
  கடல் கடந்த தமிழ் கலாச்சாரம்
  வியாபாரத்தில் பறைசாற்றும்

  வீரமறவர் பாராம்பரியம்
  சிற்பங்கள் ஓவியங்கள் பொக்கிஷம்
  உணவு தானியங்கள் ஏற்றுமதி
  விருந்தினர் கடற்கரை இறக்குமதி

  விண்ணை முட்டும் கோயில் கோபுரம்
  செல்வ செழிப்பு மகிழ்ச்சி தாண்டவம்

  இலக்கியம் இலக்கணம் வரலாறு அன்று
  இணையவழி தொடர்பு வருவது இன்று

  தமிழ் கலாச்சாரம் சிறப்புக்கள் என்றும்
  தலைமை என்பது பெருமை

  எஸ் வீ ராகவன் சென்னை

 6. வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி. says:

  “பல்லாங்குழி”

  குழி வெட்டி ஆடும் ஆட்டமே
  வாழ பாடம் சொல்லிக்கொடுக்குமே

  கை மூடியே நீ இருந்தாலே
  நம்பிறப்பு‌‌ பயனற்றுப்போகுமே

  கொடுத்துக்கொண்டே நீ இருந்தாலே
  ஒன்றும் இல்லாது போகுமே நம்கையிலே

  கையை விரித்து நீ கொடு
  அதற்காக தினம் உழைத்திடு

  கொடுப்பதற்காகவே நீ புதையலைத் தேடு
  இல்லாதவர்க்கு அதை பகிர்ந்தே கொடு

  பல்லாங்குழி ஆட்டமே நீ ஆடு
  வாழும் பாடமென்றே தினம் பாடு!!!

  – வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
  ************************************

 7. அ.கலையரசன் says:

  பரிகாசம்

  எக்கச்சக்கமான
  உணவு வகைகள்
  சமைத்து
  அழகாக
  அலங்கரிக்க
  வைத்து
  எப்போதும்
  சாப்பிட்டவர்களுக்கே
  மீண்டும்
  சாப்பாடு பரிமாறினர்…
  எங்கேயும்
  கையேந்தி கால் வாயிற்றுக்காக கால்கடுக்க
  நிற்பவர்களைத் தவிர!

 8. அ.கலையரசன் says:

  *பகுத்துண்டு*

  குப்பைத் தொட்டியின்
  மிச்சங்கள்
  உச்சத்திலிருக்கிறது
  ஊருக்களிப்பதில்…
  நகரத்தார்
  பகிறாததை
  நாங்கள்
  பந்தி வைக்கிறோமென்று!

 9. Poiyamozhi says:

  கருப்பை தொலைத்து
  உயிர் துடிக்கும் ஆறுகள்;
  தலை துவட்டும் முன்
  கைம்பெண்ணான ஓடைகள்;
  ஒன்றாய் சிலாகித்து
  உயிரூற்று மறந்த
  குளம் குட்டைகள்;
  வறியவன் உடலாய்
  தினம் தேயும்
  என் இந்தியா- 75.

  எத்தனை சாடல்;
  அகழ்வாய்வாய் மேழெழும்
  வயிறு கிழிந்த
  முதுமக்கள் தாழியில்;
  நல்வழி புகட்டும்
  ஆயத்த வழிகளை
  ஆராய்ந்தே தொடங்கியது
  என் இந்தியா -75.

  மேலாடை அணிந்தும்
  தோலாடை தீண்டும்
  கள்ளப்பார்வையினை ஒப்ப
  அரசியலாளர்கள்;
  வாழ்வின்
  அடிவரை தொட்டு
  உருளும் கடுகு கூட்ட
  மக்களை
  நசுக்கும் யானையின் பாதங்களாய்
  கார்ப்பரேட்கள்;
  ஆம் நினைவுபடுத்துகிறேன்
  என் இந்தியா- 75ஐ.

  பிரித்து இடைமறித்த
  ஆங்கில துரைகளுக்கு
  வனத்தை சுருட்டும்
  வல்லமை கிட்டவில்லை;
  ஆனால்
  இல்லறத்திற்கு சம்மதித்த
  மணமகனின்
  நடுவகிடை பிடுங்குவதுபோல்
  உயிர் பறிக்கும்
  வனத்திருட்டு
  என் இந்தியா-75ல் தான்.

  பிறந்த கன்று
  முதல் மிடறு அருந்த
  நாவை நீட்ட
  தாய்மடி அறுந்த கதையாக
  ஆஷிபாக்களை அழிப்பதும்
  நினைவு கூறும்
  என் இந்தியா-75ல் தான்.

  கழிமுகங்களை
  கால்வாய் திறந்து
  தினம் கூரிட்டு பிரித்து பிரித்து
  விலைபொருளாக்கியதும்
  என் இந்தியா-75ல் தான்.

  ஏன் இத்தனை வெறி
  இவ்வளவு வன்மம்
  75ல் கால் பதிக்கும்
  இந்தியாவில்
  உன்னதங்கள் இல்லையா என்போருக்கு..

  அங்கொன்றும் இங்கொன்றுமாக
  கூண்டுக்குள் அடைபட்டு
  பேசவியலாத சிங்கங்களின்(சிலைகள்) ஒட்டுமொத்த வருத்தமாய் என் வரியும்
  உன்னதங்களை பாடும் வரிகளாய் பிறர் வரியும்
  ஆகக்கடவுக.

  உலக மேடை ஏறும்
  பொருளாதார பெரியவர்களுக்கு மத்தியில்
  ஓரமாய் விளையாடும்
  பொருளாதார குழந்தையாக்கியதில்
  உன்னதங்களை எங்கே தேடுவேன்.

  மலர்ச்சிகொள்
  புரட்சி செய்
  நாட்டை நேசி
  என இனிப்புகளை கற்றுத்தந்து
  கசப்புகளை வளர்த்தெடுக்கும் சுதந்திரம் வேண்டாம்.

  ஒற்றைக்கொம்பு யானைக்கும்
  வான் முட்டும் அளவு
  கறைபடிந்த கடவுள்
  கோட்பாட்டு கொண்ட
  சுதந்திர இந்தியா வேண்டாம்.

  எத்தனை 75லும்
  வேண்டுவது ஒன்றுதான்;
  மதத்தோற்றம் துறந்து
  மொழி ஏற்பு நடந்து
  பிணிப் பயங்கள் தொலைந்து
  அவை சிறக்கும்
  ஆட்சியதிகாரம் கொடுத்து
  உயிர் வாழ ஒரே ஒரு
  உன்னத “சுதந்திரம்” மட்டுமே.

  – பொய்யாமொழி

 10. Dhamotharan.S says:

  வாழ்தலும் வாழ்தலின் நிமித்தமும்

  மனித இனம் மட்டுமல்ல
  எல்லா உயிருக்கும்
  உலகில் வாழ உரிமை
  இருக்கிறது

  இருந்தும்
  வாழ்க்கை என்னவோ
  சலிப்பாக போகிறது
  இப்படி நினைப்பவன்
  மனிதன் மட்டுமே

  மற்றவைகள் எல்லாம்
  வாழ்க்கையின் நிமித்தமாகவே
  வாழ்ந்து கொண்டிருக்கின்றன

  ஒரு வேளை !
  சுய நலம் மட்டுமே
  கொள்கை என்று
  வாழ்வதால் இருக்கலாம்

  புல் கூட
  தன்னை உண்டு
  வாழும் மிருகங்களுக்காக
  வாழ்கிறது

  அதை உண்டு
  உடலை வளர்ப்பவைகள்
  பிற உயிர்கள் புசித்து
  வாழத்தான் வாழ்கின்றன

  மனிதன் மட்டுமே
  வாழ்தலின் நிமித்தம்
  தனக்காக

  என்னும் எண்ணத்தில்
  மற்றவைகளை
  வாழ விடாமல்
  வாட்டி

  வாழ்ந்து விட்ட
  சாதனையாய் மண்ணாய்
  சாம்பலாய் மறைந்து
  கொண்டிருக்கிறான்.

  ஒரு வேளை
  தன் வாழ்தலின் நிமித்தமே
  தன் உடலை
  மண் மட்டுமே
  உண்ண வேண்டுமென்று
  வைராக்கியத்திலிருக்கிறானோ ?

 11. Dhamotharan.S says:

  சுதந்திரம் 75

  வருடங்கள்
  கடந்துதான் போய்விட்டது

  வெற்று வசனங்கள்
  மட்டை பந்து
  விளையாட்டு
  கை தட்டி மகிழும்
  கூட்டமாகி விட்டோம்

  நம்மை நாமே
  ஆள்வது
  நம்மால் தேர்ந்து
  எடுப்பது

  இத்தனை உரிமை
  கிடைக்க
  போராடி போராடி
  வாழ்க்கை தொலைத்த
  வாழ்ந்து மறைந்த
  மனிதர்கள்

  மறந்துதான்
  போயிருக்கிறோம்
  எழுபது வருடங்கள்
  மேல்
  கடந்துதான்
  சென்று விட்டது

 12. பெண்ணியம் போற்றுவோம்
  பெண்மை வாழ்கவென போற்றிடுவீர் வெளியில்…வீட்டினிலே பெண்ணடிமை
  செய்திடுவீர்…கல்வி யிலோ,காதலிலோ தன் உரிமை இல்லையாம்..
  திருமணமத்திலோ கைநீட்டும் ஆடவர்க்கே
  கழுத்துத்தினை நீட்டி டுவோம்…
  மழலை சொல்ல ஆனந்திப்போம்
  ஆண் மழலை பெண் மழலை என
  கேட்டு கண்ணீர் வடித்து
  வாழ்நாள் கரம் பிடித்து
  வறுமையுடன் தோள் கொடுத்து
  உள்ளே அழுதாளும்
  வெளியே புன்னகையுடன்
  சமத்துவம் காத்திட பெண் தெய்வ
  வழிபாடு போதாது மானிடனே…
  பெண்ணியம் காத்திடுவோமே….

 13. ஹேமபாரதி says:

  பெண்ணியம் காப்போம்

 14. பெண்ணியம் போற்றுவோம்’!.

 15. - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி. says:

  “பனை ஓலை”

  வளரும் போதே வளம் சேர்க்கும்
  வீடு கட்ட ஓலையாகும்
  விசிறி விடும் விசிறியாகும்
  விதைப்பார் இன்றி வளரும்

  பழுத்த பழம் விழும்
  விழுந்த பழம் முளைக்கும்
  முளைக்கும் மரம் தானே வளரும்
  வளர்ந்த பின்பும் பலன் தரும்

  வளர பல வருடம் ஆகும்
  வானை முட்டச் செல்லும்
  வறட்சியிலும் வாடாதிருக்கும்
  வாடிவிட்டால்‌ பாலைவனமாகும்

  வேலி போட்டு வளர்க்க தேவையில்லை
  உதவி கேட்டு வாடி நின்ற தில்லை
  உயர்ந்து வளர்ந்திருந்த போதும்
  ஒருநாளும் கர்வங்கொண்டதில்லை

  இளைப்பாற பருக பதநீர் தரும்
  ஓய்வெடுக்க நிழல் தருவதில்லை
  ஓலையிலே பல வேலை வரும்
  அதனாலே உயரும் வாழ்வாதாரம்

  நீர் செல்லும் வரை வேர் செல்லும்
  வேர் மழைநீரை சேகரிக்கும்
  மண்ணரிப்பையும் தடுத்து நிற்கும்
  கற்பகத்தரு போல கொடுத்திருக்கும்

  பழந்தமிழை காத்து தந்த பனை ஓலை
  பதிலுக்கு நாம் செய்ய இணை ஈடில்லை
  பனை மரத்தால் வறுமை வந்ததில்லை
  பனைமரமிருந்தால் நீருக்கே பஞ்சமில்லை

  பழமை வாய்ந்த பழந்தமிழை தந்த
  பனை ஓலைக்கு தலை வணங்குவோம்
  பனைமரமே தமிழர்களின் அடையாளமென
  தமிழர்கள் அனைவரும் நன்றி சொல்லுவோம்!

  – வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
  ****************

 16. ஜெயபாலா முருகன் says:

  இதுவும் காதலின் வெளிப்பாடுதானோ!

  வெளிச்சம் வந்து தன்னை
  காண்கின்ற வேளைதனில் மட்டுமே
  காட்சிகளைக் காண்கின்ற இந்தக் கண்கள்!

  ஒலிஅலைகள் வந்து தன்னை
  சேருகின்ற வேளைதனில் மட்டுமே
  சத்தங்களைக் கேட்கின்ற இந்தச் செவிகள்!

  காற்று வந்து தன்னை
  தொடுகின்ற வேளைதனில் மட்டுமே
  சுவாசத்தை ஏற்கின்ற இந்த நாசி!

  நாபிக்கமலம் இங்கு நாதம்
  தாங்குகின்ற வேளைதனில் மட்டுமே
  ராகங்களை வெளிப்படுத்துகின்ற இந்த வாய்!

  உயிர் இங்கு உறங்காது உறையாது
  உள்ளிருக்கும் வேளைதனில் மட்டுமே
  குருதிக்கு மாரத்தான் நடத்தும் இந்த இதயம்!

  தென்றல் வந்து தன்னை
  வருடுகின்ற வேளைதனில் மட்டுமே
  தானாக எட்டிப் பார்க்கின்ற இந்தக் கூந்தல்!

  காலத்தின் பதிவுகளை உயிரது உடலில்
  உள்ளிருக்கும் வேளைதனில் மட்டுமே
  நினைவுகளாய் புதிவுசெய்கின்ற இந்த மூளை!

  தண்ணீர் வந்து தன்னை
  தாண்டிச் செல்கின்ற வேளைதனில் மட்டுமே
  தணிந்து போகின்ற இந்தத் தாகம்!

  மூளை இங்குத் தன்னை
  நினைக்கின்ற வேளைதனில் மட்டுமே
  நினைத்ததைச் செய்கின்ற இந்தத் தேகம்!

  இவையெல்லாம் ஒப்பந்தக் கட்டுப்பாடா
  இல்லை கொண்ட காதலின் வெளிப்பாடா!

 17. D.luvia vincy. says:

  பனையோலை!!

  உன்னிலிருந்து வந்ததை ரசித்து உண்ண:

  பச்சை ஓலையின் மணத்தை நுகர்ந்து,
  ஓலையின், ஓரங்களில் ஒட்டியுள்ள பூவை,
  தூசி என நினைத்து தட்டிய தருணமதில்,
  பச்சை ஓலையான உன்னை,
  படகென பட்டை பிடித்து,

  காய்ந்த ஓலையின் ஓசை என்னில் இசையாக,
  காற்றில் உன் கரபுர சத்தம்…
  மனம் கொள்ளை கொள்ளும் மணலிலே,
  ஓலையாலான ஒரு வீடு…
  வீட்டின் முற்றமதில்,
  மரத்தடியின் நிழலில்,

  பச்சை ஓலையின் மணத்தோடு,
  படகென பிடித்த பட்டையில்,
  நல்மனத்தோடு காய்த்த,
  பெண்ணின் கைவண்ணம், கலைவண்ணமாக மாறிய,
  பதநீரை பருகும் போது,
  உன் பந்தத்தை நிழலாக அறியாமல்,
  நிஜமாய் அறிந்து, அனுபவித்த தருணங்கள் தவிர்க்க இயலாததாக விழி விமர்சிக்கிறது!!!

  பனையோலை, மட்டுமா??
  பனையே பணபலம் தானே!!
  விதையை விதைத்தால் மரம்….
  இல்லையேல் அது உண்ணும் பணங்காய்…

  விதை வடலியாகி,
  வடலி வானை விஞ்சும் அளவுக்கு,
  அண்ணார்ந்து பார்க்கும் பனையாகிறது!!!
  பனையிலோ, பல வித பயன்….
  பனைமரக்கட்டை பகிரங்கமான தூணாகிறது….
  உடலுக்குகந்த உண்ணும்பொருளாக பெயர் பெறுகிறது…..
  விறகடுப்பின் எரிப்பானாக,
  அளவரை அருள்செய்கிறது….
  பனையின் ஒரு பகுதியான அளவரை,
  பல பாகத்தை பயனுள்ளதாக கொடுக்கிறது!!

  பனை பல பயனைக் கொடுக்கிறது…
  நாம் பனையின் பயனை பெறுவதற்காகவாவது பாரமரிப்போம்!!
  பயனுள்ளதாய் வாழ்வோம்!!!
  – லூவியா.

 18. வீ.ராஜ்குமார் says:

  கவிதைப் போட்டி 2021 _ 8

  சுதந்திர இந்தியா 75

  ‘நாய்களும் இந்தியரும் நுழையக் கூடாது! என்று
  பேய்களாம் வெள்ளையன் எழுதிப் போட்டான்!

  இருநூறு ஆண்டுகள் இந்த மண்ணில்
  இருந்திட்டாள் அன்னையும் அடிமையாக!

  தடியடிபட்டும் குண்டடிபட்டும் தம்முதிரந்தான் சிந்தினரே! நம்முன்னோர்
  அடிமைவிலங்கை அன்றேயறுத்து ஆகாசத்தில் வீசினரே!

  ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! இன்று
  ஆனந்தக் காற்றைச் சுவாசிக்கிறோம்!

  உயிரைத் தியாகம் செய்தோரையும் போரில்
  ஒப்பற்ற தியாகத் தலைவர்களையும்

  உரிய முறையில் மகிழ்விப்போம் பல
  உதவிகள் செய்தே கவுரவிப்போம்!

  பெருந்தொற்று எதிர்ப்பில் போராடும் நம்
  மருத்துவர் முன்களப் பணியாளரை

  பெருமையுடன் போற்றிப் புகழ்வோமே! நாம்
  அருமையுடன் ஆற்றல்பெற்றுத் திகழ்வோமே!

  கொரானா காலம் என்பதால் நாம்
  கோலாகல மாகக் கொண்டாட இயலாது!

  தேசியக் கொடியை ஏற்றிடுவோம்!
  தேசிய கீதம் பாடிடுவோம்!

  மின்விளக்குகள் வண்ண மலர்களால்
  அணிசெய்வோம் நாம் பணிசெய்யுமிடத்தை!

  வீட்டில் இருந்தபடி வாழ்த்து கூறியபடி
  மட்டில்லா மகிழ்வை வெளிப்படுத்துவோம்!

  இந்தியர் நாம் அனைவருக்கும்
  இனிய சுதந்திர வாழ்த்துக்கள்!

  வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!
  வந்தே மாதரம்!!!

  ***

 19. Dhamotharan.S says:

  வேட்டிக்கு மரியாதை

  தேய்த்து மடித்து
  வைத்த வேட்டி
  விரித்து கட்டி
  வெளியே செல்கையில்
  வீதியில் இருப்போர்
  கையில் ஒரு
  விண்ணப்பத்துடன்
  கோரிக்கை வைக்கின்றனர்

  சாராய கடை
  வைப்பது முதல்
  சாமி கோயிலில்
  கடை வைப்பது வரை
  சிபாரிசு செய்ய சொல்லி

  இவனுக்கு சொல்லி
  மாளவில்லை
  வேட்டியை வெட்டியாக
  கட்டி சுற்றுகிறேன்
  என்று

  மனிதனுக்கு மரியாதை
  இருக்கிறதோ தெரியவில்லை
  வெளுத்த வேட்டிக்கு
  மரியாதை இருக்கத்தான்
  செய்கிறது

  இந்த அரசியல்வாதிகளின்
  புண்ணியத்தில்

 20. லோகநாயகி.சு says:

  கவிதை போட்டி: 8

  பெண்ணியம் போற்றுவோம்…..

  மீட்ட மறந்த வீணை
  பாட மறந்த ராகம்
  பேச மறந்த இதழ்கள்
  பார்க்க மறந்த விழிகள்….!
  பஞ்சு பொதி மேகங்களோ
  பண் பாடவில்லை கொஞ்சிப்
  பேசும் பறவைகளோ இங்கு
  குரல் எழுப்பி இசை பரப்பவில்லை
  நிரோட்டம் கூட நின்றுவிட்டது பெண்களின்
  போராட்டமே மண்ணில் வென்றுவிட்டது….!
  தாலாட்டும் ஆகாயம்கூட தரைமீது
  தடுக்கி வீழ்ந்து விட்டது,
  தவறாக சில பெண்கள் எடுத்த முடிவுகளால்
  தடம் மாறிப்போன சுவடுகளால்
  விலை பேச வந்த கயவர்களால்
  விலை போகத்துணிந்தது பெண்மனம்.
  இருளான பாதை தான் தெரிகிறது
  பொருள் புரியாத வாழ்க்கை இது
  எல்லாமே எனக்குப்புரிகிறது
  வறுமையை உண்டு உண்டு வாழும் பெண்கள் எத்தனையோ…!
  தவறு செய்யாதவர் யாருமே இல்லைய்யா
  கை தூக்கி விடவும் யாருமில்லை
  சீ போவென்று சொல்லப்பலர் உண்டு
  கண்ணியம் பேசமட்டும் கோடிபேர் உண்டு….!
  பெண்ணியம் பேசும் பெரியோரே
  பெண்ணை பெண்ணாக வாழ விடுங்கள்…..!

  லோகநாயகிசுரேஷ்…

 21. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

  ஆனந்த சுதந்திரம் 75
  பாவலர் கருமலைத்தமிழாழன்

  பொறுமையெனும் ஆயுதத்தால் இங்கி லாந்தைப்
  பொருதிரவில் ஓடவைத்தே அண்ணல் காந்தி
  நறுமணமாய்ச் சுதந்திரத்தைப் பெற்று நாட்டை
  நலம்செய்ய நேருவின்கை ஒப்ப டைத்தார் !
  எறும்புகளின் சுறுசுறுப்பில் பகலும் அல்லும்
  ஏற்றமிகு நாடாக உயர்த்து தற்குப்
  பொறுப்புடனே ஐந்தாண்டு திட்டம் தீட்டிப்
  பொலியவைத்தார் தன்னிறைவில் வளர வைத்தார் !

  ஊர்தோறும் தொழிற்சாலை வந்த தாலே
  உரியதொரு தொழிற்புரட்சி நடந்து நன்றாய்
  பார்தன்னில் வளர்கின்ற நாடாய் மாறப்
  படிப்படியாய் வளர்ந்ததுவே பொருளா தாரம் !
  நீர்தேக்க ஆறெல்லாம் அணைகள் கட்டி
  நிலங்களினை வயல்களாக்கிப் பயிர்வ ளர்க்க
  மார்தட்டும் பசும்புரட்சி நடந்து நன்றாய்
  மணிவயிறு பசியடங்கி நிறைந்த தின்று !

  கால்நடைகள் வளர்ப்பதற்கத் தொகைகொ டுத்துக்
  கருத்தாகக் கிராமமெல்லாம் வளர வைத்துப்
  பால்பெருக்கி வெண்புரட்சி செய்த தாலே
  பணப்புழக்கம் பெருகிற்று பட்டி தொட்டி !
  நூல்படிக்கக் கல்லூரி பள்ளிக் கூடம்
  நுவல்கின்ற படியெங்கும் திறந்த தாலே
  சால்பாக எல்லோரும் கல்வி கற்றுச்
  சாதனைகள் புரிகின்றார் அறிவி லோங்கி !

  வாக்களிக்கும் உரிமையாலே ஆட்சி தன்னை
  வழங்குகின்றார் தாம்விரும்பும் தலைவ ருக்கே
  வாக்குரிமை எழுத்துரிமை பெற்ற தாலே
  வழங்குகின்றார் துணிவோடு தம்க ருத்தை !
  தாக்குகின்ற பகைநாட்டை எதிர்ப்ப தற்குத்
  தமரராகச் சேர்கின்றார் மொழிம றந்து
  பூக்கலிட்டு முன்னேற்றம் கண்டோ மென்று
  பூரித்துப் பேணிடுவோம் சுதந்தி ரத்தை !

 22. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

  நற்பெயர் தருவது நற்பண்பே
  பாவலர் கருமலைத்தமிழாழன்

  நற்பெயரோ படிப்பிருந்தால் வந்தி டாது
  நான்குவகை அறிவுதரும் கல்வி கற்றோன்
  தற்பெருமை தலைகனம்தான் கொண்டி டாமல்
  தான்பெற்ற அறிவினாலே உயரும் போது
  மற்றவரை மதிப்பதுடன் உதவு கின்ற
  மனமில்லை என்றாலோ மதியார் யாரும்
  உற்றநல்ல பண்புடனே அணைக்கும் போதே
  ஊரெல்லாம் புகழ்ந்தவனின் பெயரைச் சொல்லும் !

  ஆட்சியினைச் செய்கின்ற அமைச்ச ரென்னும்
  அரும்பதவி நற்பெயரைக் கொடுத்தி டாது
  ஆட்சிக்குத் துணைநின்று வழிந டத்தும்
  அலுவலர்க்கும் பதவியாலே பெயர்வ ராது
  காட்சிக்கே எளியவராய்க் கடமை தன்னைக்
  கையூட்டும் ஊழலின்றி நேர்மைப் பண்பில்
  மாட்சிதரும் வகையினிலே செய்யும் போதே
  மக்களெல்லாம் பெயர்சொல்லிப் போற்று வார்கள் !

  பணந்தன்னைக் கட்டுகட்டாய் வைத்தி ருக்கும்
  பணக்காரன் என்பதாலே பெயர்வ ராது
  கணவானாய் அடியாட்கள் நால்வ ரோடே
  காட்சிதரும் தோரணத்தால் பெயர்வ ராது
  மணம்வீசி அழைத்தளிக்கும் பழம ரங்கள்
  மண்ணூற்றை எடுத்தளிக்கும் ஊர்க்கு ளங்கள்
  குணம்போல ஊர்க்குதவும் பண்பி ருந்தால்
  கும்பிட்டே வாழ்த்திடுவர் வள்ளல் என்றே !

 23. லோகநாயகி.சு says:

  பல்லாங்குழி:

  ஐந்தந்துப் பரலாக பதினான்கு குழியிலிட்டு..
  ஓரைந்தில் ஆரம்பித்து ஒவ்வொன்றாய் பகிர்ந்துயிட்டு
  வெற்றுக்குழி வந்தால் துடைத்தடுத்த செல்வம்சேர்த்து….!
  நான்குபரல் சேர பசுவென்றே தனதாக்கி
  நாளும் பொழுதும்நம் மண்ணிலாடிய விளையாட்டு
  பண்டைய காலம்தொட்டு தொழில்நுட்பம் வராதவரை
  பெண்டுகள் ஆடியது மதிவளர உதவியது
  இன்றெங்கே போனதுவோ எனதன்பு பல்லாங்குழி????
  தேடுகிறேன் தேடுகிறேன் ஊரெல்லாம் தேடுகிறேன்👀👀👀
  எகிப்தின் கல்வெட்டில் உந்தன் உருவமுண்டு
  பழங்கால சிற்பங்களில் உன்வடிவம் தானுண்டு
  தாய்வீட்டு சீதனமாய் அன்று வாழ்ந்திருந்தாய்
  இன்றோ எங்குபோனாய் இத்தலைமுறை பிடிக்கலையோ???
  மீண்டு வருவாயோ உன்மூச்சைப் பெறுவாயோ
  வேண்டி நிற்கிறேனே எங்களோட சாமிக்கிட்ட…..

  லோகநாயகிசுரேஷ்

 24. - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி. says:

  “பெண்ணியம் போற்றுவோம்”
  *************************************

  சுமக்கும் பெண்ணை சூறையாட வா
  காக்கும் கடவுளை களவாட வா
  கண்ணியம் இல்லா காலமா
  கடவுளுக்கே கலங்கமா.!

  பெண்ணே நமக்கு முக்காலம்
  எக்காலம் அவளே சிறந்தவள்
  காக்கும் கடவுளும் அவளே
  அவளுக்கே வா இந்த அவலம்.!

  பெண்தானே என்று தள்ளி வைக்காதே
  பெண் என்பவள் உயிகளை சுமப்பவள்
  பெண்ணினமே இல்லை என்றாலே
  பூமி ஒன்று நமக்கு இல்லையே.!

  புரிந்து கொள் மனித இனமே
  பெண்ணியமே இந்த மண்ணியம்
  பொறுமையானது மண்ணும் பெண்ணும்
  அதனாலே கொடுமை செய்யதே.!

  நற்பயிர் விளையும் நிலமல்லவா
  உயிரை காக்கும் புனிதத்தலம் அல்லவா
  அதில் பாவத்தை விளைவிக்கலாமா
  புனிதத்தை காப்பது நமது கடமை அல்லவா.!

  கொடூரக் காமுகனை களை எடுக்கணும்
  கற்பை கைதொழும் கடவுளாக்கணும்
  கண்ணியத்தை படிக்கும் பாடமாக்கணும்
  கட்டுபாடாய் வாழ்ந்து காலத்தோடு சேரனும்!!!

  -வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
  ***********************************

 25. இரா. தமயந்தி says:

  புதைந்த தேடல்…

  தவறேன்ன செய்ததுவே..!
  நலஞ்செய்ய துடிக்கும் வாழ்வினிலே..
  வேதனைகள்தான் பாலமாகி போகுமா..?
  வழி தெரிந்த பாதையிலும் ஒளி விலக்கும் வேலிகள் எதற்கு ?
  உள்ளத்தின் அழுக்குறல் உணர்வுகளின் விழுச்சத்ததோடு போராட்ட நிலை,
  புரியவைக்க முயற்சித்தால் கேலி செய்யும் சுற்றம்..
  அறிய வைக்க வழிச்செய்தால் பைத்தியக்கார பட்டம்..
  வீழ்ச்சி என்ற கல்லறைக்குள் மனம் ஒளிக்கப்பட்டது..
  வளர்ச்சி என்ற கூட்டுக்குள் நிஜம் மறக்கப்பட்டது..

  தாண்டவமாடும் கண்ணீருக்கும் துயரத்துக்கும் ஆதியும் அந்தமும் இல்லையா ?
  சிந்தனை சிறகுகள் விரியும் வரை தெரியவில்லை, வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் வலி என்று..
  உருவமில்லா சோகம் உதிரத்தில் ஊடுறுவும் இந்நிலை இனி வேண்டாம்!
  கல் மீதிலே ஒரு நதி போலவே பல வலிகள் தந்தது அவமானம்,
  தமிழ் மீதிலே ஒரு விதி போலவே பல மாற்றங்கள் தந்தது இச்சமுதாயம் !

  உழைப்பும் உண்மையும் மூச்சாக்கு…
  சில வினாடிகள் உனதாகும்… பல வினாடிகள் உன்னை தூற்றுபவரின் உரமாகும். !
  முயன்றால் முழு நிலவின் ஒளிக்கதிரைக் கூட கீற்றாய் கையில் சிறை வைக்கலாம்..!
  உன்னையே நீ ஏளனப்படுத்தும் உன் எண்ணத்தைத் தீயால் எரி.!
  ஔவியம் கொள்ளாதே , துணிந்து நில், துயர் களை, நிலை கொள்..!
  சோகச் சுருக்கம் தேவையில்லை…
  உடைகின்ற நேரத்திலும் உறுதியாய் நில் ..!
  வழி தெரியா பாதையில் ஒளி கிடைக்கும்..!
  நிலைக்கப்பட்டது இன்று மறக்கப்பட்டது,
  மறக்கப்பட்டது இனி புதைக்கப்படாது …!
  தமிழன் வெல்வான், தமிழ் வெல்லும்…!

 26. கா.வினோத் says:

  கொரோனா கால கதாநாயகர்கள்:

  எங்கள் விஞ்ஞான வளர்ச்சியில் விரும்பத்
  தகாத விருந்தாளியே!
  மனித குலத்தை அழிக்க வந்த கொடிய
  நுண்தோற்றே இக்கொரோனா!

  குங்ஃபு கலையின் பிறப்பிடமே சீனா-அச்
  சீனாவில் பிறந்தது கொரோனா!
  அலைகள் ஓய்வதில்லை போல கொரோனாவிலும் பல அலைகள் உண்டு!
  முதல் அலை (கொரோனா 1.O)
  இரண்டாம் அலை (கொரோனா 2.O)
  மூன்றாம் அலை (கொரோனா 3.O)……..

  மனிதகுல அறிவையும் பொருளாதார
  பேரழிவையும் ஏற்படுத்திய
  இக்கொரோனா காலமே கலியுகத்தின்
  தொடக்கம்!

  இச்சூழலில் கடவுளே இன்று என்னை
  கொரோனா தாக்க கூடாது
  அனுதினமும் தொடங்கியது என்னை
  அறியாதபிரார்த்தனைகளுடன்…….. இருப்பினும் இதுவரை பயந்ததில்லை
  என் அன்பினும் மேலான என்
  நோயாளிகளின் அருகில் செல்ல!
  அச்சம் என்பது மடமையடா!
  உயிரைக் காப்பது என் கடமையடா!
  என்பதை மெய்ப்படுத்தி…….
  மக்களின் உயிரைக் காக்க தன் குடும்பத்தை விட்டு அல்லும் பகலும்
  அயராது உழைத்தவர்கள் ‘மருத்துவர்கள்’!
  நம் உயிரைக் காக்க தம் உயிரை பணயம்
  வைத்தவர்கள்!
  கொரோனாவைத் தடுக்க இவர்கள்
  ஆற்றிய பணி அளப்பறியது……

  ஊருக்கு ஊர் உண்டு ஓர் எல்லைச்சாமி!
  கொரோனா காலத்தில் எங்களைக் காத்த ஒரு எல்லைச்சாமி ‘காவல்துறையினரே’….
  ஊரடங்கு போட்டாலும் உயிரைக் காக்கும்!ஊரை காக்கும்! உடமைகளை காக்கும்!உன்னத பணியில் காவல்துறை……..
  மக்களிடம் கடுமையாக நடந்து
  கொண்டாலும்
  மக்கள் நலனுக்காக 24 மணி நேரமும்
  பாடுபட்டவர்களே!
  கடமை தவறாத காவல் துறையினர்….

  சேவைகளின் இருப்பிடம்! தாய்மையின்
  பிறப்பிடம்!
  மனிதம் தோய்ந்த புனிதம் காக்கும்
  கரங்கள்!
  இன்னலில் உழன்று கரம் எதிர்பார்த்து
  காத்திருக்கும் மக்களும்……. அன்புக் கரம் ஈட்டிய கருணை தேவதைகள்
  ‘செவிலியர்களே’! இவர்களே வாழும் அன்னை தெரசாக்கள்…

  தெருவுக்குத் தெரு குப்பை இருக்கும்!
  தெளிவாய் பெருக்க ‘துப்புரவு பணியாளர்’
  இருப்பர்!
  தூசு நுகர்ந்தால் உடலுக்கு கேடு!
  இவர்களால் தூய்மையாகும் இந்தியநாடு!
  சுத்தமாக வைத்தால் உன் வீட்டுக்கு சுகம்!
  சுற்றுச்சூழலை தூய்மையாக்கினால்
  நாட்டிற்கே சுகம்! தன்சுத்தம் முன் சமுதாய சுகாதாரம்! என
  மக்களின் நலனுக்காக பணியாற்றிய
  அந்த மனசுதான் கடவுள்!
  அந்த மனிதம் தான் புனிதம்…

  மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்கள்!காக்கும் கரத்துக்கு சொந்தக்காரர்கள்!கற்றாரை கற்றாரே காமுறுவர்கள்
  இவர்களைக் கண்டு
  கருணையின் பிறப்பிடம் இவர்கள்!
  யார் அவர்கள்?
  சுயநலஉலகில் பொதுநலம் கொண்ட
  ‘சமூகஆர்வலர்களே’ மனிதஉருக்கடவுள்…..
  மேற் கூறியவர்கள் கடமையை சேவையாக
  கொண்டவர்கள்!
  சமூகஆர்வலர்களே சேவையைக்
  கடமையாய் கொண்டவர்கள்!

  இக் கொரோனா காலத்தில் அறிய
  பணியாற்றிய இவர்களை
  “கொரோனா கால கதாநாயகர்கள்” எனில்
  மிகையாகாது.

  -கா.வினோத்

 27. - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி. says:

  “தீதும் நன்றும் பிறர் தர வாரா”
  *************************************

  நான் விட்டதை தொடரவந்தேன்
  தொடர்வேன் நான் விட்டதை
  வாங்கியதை கொடுக்க வந்தேன்
  கொடுத்திடுவேன் நான் வாங்கியதை!

  உன்னாலே ஏதும் இல்லை தொல்லை
  என்னாலே தான் எனக்குத் தொல்லை
  உனக்கு உள்ளது தான் உனக்கு
  எனக்கு என்பதுதான் எனக்கு!

  அன்று கொடுத்து வைத்திருந்தேன்
  இன்று வாங்கிக் கொண்டிருக்கிறேன்
  இன்று கொடுத்து விட்டுச் செல்வேன்
  இதை வாங்க நான் பிறந்து வருவேன்!

  விட்ட குறை தொட்ட குறை
  இருந்தால் தான் வாழ முடியும்
  பயணம் உள்ளவரை
  வாழ்க்கை முடிவதில்லை!

  தீயதை நீ செய்தாலும்
  நல்லதை நான் செய்தாலும்
  நீ செய்வது உனக்குத்தானே
  நான் செய்வது எனக்குத்தானே!

  நீ சாப்பிடுவது யாருக்காக
  அது உனக்காக தானே
  நீ நடந்தால் கூட வருவது யாரு
  கூட வருவது உன் உடம்பு தானே!

  “தீதும் நன்றும் பிறர் தர வாரா”
  நீ செய்யும் செயல் உனக்கானது
  நான் செய்யும் செயல் எனக்கானது
  என்றே சொன்னார் பூங்குன்றனார்!

  கணித்துச் சொன்னார் அன்றே
  காலத்தை அளந்து சொன்னாரே
  கருத்தை நாம் ஏற்றுவாழ்ந்தாலே
  காலம் நம்மைக்கண்டு கைதொழுமே!!!

  -வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
  ************************************

 28. D.luvia vincy. says:

  தங்களுக்கு விருப்பமான ஒரு தலைப்பு:

  வலிகளே வழிகளாகும்!!

  குழந்தையில், முதல் வகுப்பைச் சந்தித்த போது,
  எனைச் சந்தித்த கண்ணீரின் வலி,
  வழியாய் மாறியது!!

  பள்ளிப் படிப்பைத் தொடர,
  விடுதிப்பயணத்தில் தவழ,
  வீடென்ற வீதியின் தடத்தில்
  விடைபெற,
  விடை கிடைத்ததோ,
  கண்ணீரின் வலி….
  ஆனால், அது வழியானது!!
  வாழ்வின் ஒளியானது!!

  யார் உலகில் பதித்ததோ,
  யாரின் செயல் தூண்டியதோ,
  தூண்டிலாய் எனை நீ சிறைபிடிக்க…..
  வலியாய் நினைத்த சிறை,
  வழியானது வாழ்க்கைப் பாடமாக!!!

  கைகுலுக்களைக் கொடுத்து,
  கையை தனதாக்கிய காலம் போக,
  கையேந்தி, கைபிடிக்க,
  வைத்தியர்கள் வழி செய்யும்,
  காலம் வந்தது…
  காதல் காலை வாரியது….
  ஆள் மாறிப்போனது…..

  வலியானது திருமணமே!!
  ஆனால், அது வழியாகுமா?? என்ற வளர்ச்சியை நோக்கி….
  திருமணத்தில் இணைந்த ஒருமனமானது!!!!

  காலம் பேசும் காதலை….
  காதலைப்பேச ஜெயித்தவன் இலரோ!!!
  – லூவியா.

 29. கா.வினோத் says:

  சுதந்திர இந்தியா 75:

  இதம் தரும் வாழ்வை இன்று நாம் காண
  சுதந்திரம்அடைந்தோம்!மதம் பலவோடு மகிழ்ச்சியும் பொங்க
  சுதந்திரம் பெற்றோம்!இணையான நம்மை காப்பதற்காக
  சுதந்திரம் பெற்றோம்! இமயமும் குமரியும் இணைந்திடும்
  வண்ணம் சுதந்திரம் அடைந்தோம்!படை பலத்தோடு பாரதம் மிளிர்ந்திட
  சுதந்திரம் பெற்றோம்!
  மடை திறந்தாற்போல் மனம் நிதம் மகிழ
  சுதந்திரம் பெற்றோம்! பரந்த வானிலே தடங்களை வகுக்க
  சுதந்திரம் அடைந்தோம்!சிறந்த நம் தேசியகொடி சிறகடித்து பறக்க
  சுதந்திரம் அடைந்தோம்!

  இத்தருணத்திற்காக…..
  அடிமை வாழ்விலிருந்து மீள அண்ணல் காந்தி தலைமையில் கொடியை ஏந்தி மக்கள் உரிமைக் குரலை உயர்த்தி
  முழங்கினர்!
  சகிப்பு குணமும் துணிவும் அறிவும்
  சரித்திரத்தை மாற்றின! அகிம்சை முன்பு ஆயுதங்கள் அனைத்தும்
  தோற்றுப் போயின! தோல்வியை கொண்ட உள்ளத்தோடு துன்பமெல்லாம் தாங்கியே வாய்மை நேர்மை வழியில் நின்று
  வாங்கித்தந்தார் விடுதலை! நாட்டிற்காக தியாகம் செய்த நல்லோர்
  தம்மை போற்றுவோம்! கோட்டை தொடங்கி வீடுதோறும்
  கொடியை ஏற்றி மகிழுவோம்! பெற்றுத் தந்த சுதந்திரத்தை பேணிக் காக்கும் பாடத்தை கற்றுக் கொடுத்து இளைஞர் தம்மை கடமையாற்ற
  செய்யுவோம்! நாட்டை மொழியை உயிரைப் போன்று நாளும் எண்ணிப்பார்ப்பதே காட்டும்
  நன்றி….
  விழாக்கள் மூலம் கருத்தில் கொண்டு
  வாழ்வோம்!

  பாரத நாடு! பழம்பெரும் நாடு!
  பல்கலை மிகுந்த இந்திய நாடு!
  சாதிகள் நிறைந்த சமத்துவ நாடு!
  சகோதர நட்புள நடுநிலை நாடு!
  நீதி நேர்மை கொண்ட நாடு!
  நீண்ட சரித்திரம் படைத்த நாடு!
  பண்பாடுடைய பண்டைய நாடு!
  பாரில் இதுபோல் உண்டா சொல்லு! மண்ணில் வாழும் சந்தன மரம் போல் மக்கள் வாழும் மானுட நாடு! அதுவே நம்
  இந்திய நாடு…
  சுதந்திரம் பெற்று தந்தவர் அண்ணல் உத்தமர் காந்தியை வணங்குவோம்! இதம் தரும் நமது விடுதலை நாளில் தேசிய கொடியை ஏற்றுவோம்!
  நாளும் நாட்டை வணங்குவோம்……….

 30. இர. தமயந்தி says:

  ஊரடங்கில் இயற்கையை உணர்ந்த மனிதன் !

  ஊடகத்தைப் பார்த்துப்பார்த்து விழிகள் பச்சை வண்ண திரைகளை ஏங்கி, கண்ணீர் சிந்தும் நொடி !
  அறிந்தே சீரழித்த காற்று இன்று சிறைப்பட்டுக் கிடக்கும் என்னை, நலமறிய வீட்டின் கதவைத் தட்டும் ஓசை !
  கடல் அலை உரசி சென்றது போல் கனவில் உறங்கியிருந்த பாதங்கள், வெளியே கூடு திரும்பும் பறவைகளின் இசை கேட்டு சென்றது ஒரு நடை !

  மேகம் சுமந்துக் கொண்டிருந்த நீரை, வீசிய காற்றோடு உதறி மேனியில் உரசுகையில்., எண்ணற்ற இன்பம் மனதில் விசிறியது அக்கணம் !
  விலையுயர்ந்த வாசனை திரவியங்களே தோற்றுப்போகும் வகையில்
  மழைத்தூறலில் விட்ட மண்ணின் வாசனை !

  புற்களின் புருவங்களுக்கிடையில் பொட்டு வைத்து, சில நொடிகள் மட்டுமே வாழப்போகும் மழைத்துளிகளில்,
  அடைப்பட்ட துன்பங்கள் கூட மகிழ்ச்சியாய் மாறும் உணர்வு !
  பூமியைக் குளிக்க வைத்த களைப்பில் வானம் ஓய்வெடுக்க,
  மேகம் தன்னை மறைத்தாலும் அதனைச் சுடாமல், சூரியன் எட்டிப் பார்த்து, தங்க ஒளியில் தந்தது ஒரு புன்னகை !

  இயற்கை தன்னை அணைத்தாலும் அதனைப் பலி கொடுக்கும் என்னை, அக்கதிரொளியால் அறைந்தது போல் ஒரு நிலை !
  எண்ணிலடங்கா மரங்கள், அழகிய மலை, அமுதசுரபியாகிய அருவி அனைத்தும் விழிகள் காணத் துடிக்கும் ஏக்கம் !
  தேய்ந்து போகும் இயற்கையைத் தொலைக்கும் காலத்தில் நுழைந்து, இன்று தன்னையே தொலைத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வேடிக்கை காணும் காலம் !

  இயற்கையைச் சிதைத்ததற்கே இச்சிறைவாசமோ.. எனவோ !
  துன்பம் நிறைந்த உலகில், துவண்டிருக்கும் மனித மனதிற்கு..
  எழில் நிறைந்த இயற்கையினாலே காண இயலும் மிகுந்த இன்பம் !
  ஊரடங்கில் மனிதன் வடித்த கண்ணீரில் ஒளிந்திருக்கும் உதிரத்திற்கு இயற்கையே உயிர் ! இனி நேசிப்போம் இயற்கையை!

 31. இர. தமயந்தி says:

  ஊரடங்கில் இயற்கையை உணர்ந்த மனிதன் !

  ஊடகத்தைப் பார்த்துப்பார்த்து விழிகள் பச்சை வண்ண திரைகளை ஏங்கி, கண்ணீர் சிந்தும் நொடி !
  அறிந்தே சீரழித்த காற்று இன்று சிறைப்பட்டுக் கிடக்கும் என்னை, நலமறிய வீட்டின் கதவைத் தட்டும் ஓசை !
  கடல் அலை உரசி சென்றது போல் கனவில் உறங்கியிருந்த பாதங்கள், வெளியே கூடு திரும்பும் பறவைகளின் இசை கேட்டு சென்றது ஒரு நடை !

  மேகம் சுமந்துக் கொண்டிருந்த நீரை, வீசிய காற்றோடு உதறி மேனியில் உரசுகையில்., எண்ணற்ற இன்பம் மனதில் விசிறியது அக்கணம் !
  விலையுயர்ந்த வாசனை திரவியங்களே தோற்றுப்போகும் வகையில்
  மழைத்தூறலில் விட்ட மண்ணின் வாசனை !

  புற்களின் புருவங்களுக்கிடையில் பொட்டு வைத்து, சில நொடிகள் மட்டுமே வாழப்போகும் மழைத்துளிகளில்,
  அடைப்பட்ட துன்பங்கள் கூட மகிழ்ச்சியாய் மாறும் உணர்வு !
  பூமியைக் குளிக்க வைத்த களைப்பில் வானம் ஓய்வெடுக்க,
  மேகம் தன்னை மறைத்தாலும் அதனைச் சுடாமல், சூரியன் எட்டிப் பார்த்து, தங்க ஒளியில் தந்தது ஒரு புன்னகை !

  இயற்கை தன்னை அணைத்தாலும் அதனைப் பலி கொடுக்கும் என்னை, அக்கதிரொளியால் அறைந்தது போல் ஒரு நிலை !
  எண்ணிலடங்கா மரங்கள், அழகிய மலை, அமுதசுரபியாகிய அருவி அனைத்தும் விழிகள் காணத் துடிக்கும் ஏக்கம் !
  தேய்ந்து போகும் இயற்கையைத் தொலைக்கும் காலத்தில் நுழைந்து, இன்று தன்னையே தொலைத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வேடிக்கை காணும் காலம் !

  இயற்கையைச் சிதைத்ததற்கே இச்சிறைவாசமோ.. எனவோ !
  துன்பம் நிறைந்த உலகில், துவண்டிருக்கும் மனித மனதிற்கு..
  எழில் நிறைந்த இயற்கையினாலே காண இயலும் மிகுந்த இன்பம் !
  ஊரடங்கில் மனிதன் வடித்த கண்ணீரில் ஒளிந்திருக்கும் உதிரத்திற்கு இயற்கையே உயிர் ! இனி நேசிப்போம் இயற்கையை!

 32. லோகநாயகி.சு says:

  கவிதை போட்டி 8:

  *பனைமரம்*

  பனையே முது பெரும் பனையே
  உன்னை நீர் ஊற்றி வளர்க்கவில்லை
  நிலத்திற்கு பசளை இட்டதில்லை
  நிரை நிரையாய் வளர்வதற்கு
  உன் விதையை ஊன்றி விட்டனர் மக்கள்
  அதுவும் தங்கள் வயலின்
  எல்லையைக் காப்பதற்கு
  மக்கள் எதிலும் சுயநலம்…..

  ஆனால் சுயநலமே இல்லாத
  பனைமரம் நீ உன்னால்
  நாங்கள் அடையும் பயன்
  எண்ணற்றவை பனை என்றாலும்
  பனை காடு என்றால் இழிவாகவும்
  எளிமையாகவும் நினைப்பதுண்டு
  ஏன்/ எல்லாம் உன்னிடம் இருந்தும்
  உன்னிடம் கிளைகள் இல்லையே
  உன்னிழலில் தங்க இடம் இல்லையே ,

  நெடு நெடுவென்று வளர்ந்து
  உச்சியிலே ஒரு முடியைப் போல்
  அழகான குருத்தோலை காவோலை
  குண்டு குண்டு பழங்கள் எல்லாமே
  அத்தனையும் மக்கள் தேவைக்கு
  ஏற்றாப் போல் தலையாலே சுமக்கின்றாய்….

  அண்ணார்ந்து பார்த்தால் ஆச்சரியம்தான்,
  எவ்வளவு உயரம் கன்னங் கரேலென்று
  எதற்கும் அச்சமின்றி வளர்ந்து நிற்கின்றாய்
  உன்னால் மக்கள் அடையும் பயன்கள் நிறைய
  கற்பகம் எனும் அழகிய பெயர்
  உனக்கு மிகவும் பொருத்தமே
  எத்தனை புயல் அடித்தும் பனை வீழ்ந்ததாக
  சரித்திரமே இல்லை…

  உன் ஓலையை பயன்படுத்தாத வம்சமே இல்லை… உன்னால் வாழ்ந்தவர்கள் எத்தனையோ!

  அத்துணை உறுதி உன்னிடம்
  நீ நிலைத்தாலும் ஆயிரம் பொன்
  உன்னை வெட்டி வீழ்த்தினாலும் ஆயிரமே……

  லோகநாயகிசுரேஷ்..

 33. எம். இலட்சுமி பாரதி says:

  பெண்ணியம் போற்றுவோம்
  பெண்ணடிமை தான் கொண்ட நாடு
  தாழ்வுறுமே அதன் மக்கள்
  ஒருபோதும் நல்லோராகார்
  நல்லோரிலா நாடென்றும்
  இவ்வுலகில் மேன்மை யுறுமோ?
  மாதர் கண்ணீர் சிந்தும்
  நாட்டுளே கேடும் ஏழ்மைபும் சூழுமே
  என்றாரறிஞர் அஞ்சுமந்நிலை
  நமக்கே வாராமல் நமைக்காக்க
  பெண்ணியத்தையுவந்தே போற்றுவமே
  பெண்கள் வாழத்தகா நாடு
  உலகிலுண்டு அஃதிந்திந்திநயா
  என றுலகோர் சொலக்கேட்கும் ப
  இழிவு நீங்கி த்தீதிலா
  நலமெய்தி வாழவே பெண்ணியம்
  போற்றுவோம்’
  பெண்கள் நலங்காணா மாந்தர்
  கண்ணிருந்துங் காணாதொழிவார்
  மண்ணிலவர் தீதுறாமற்
  காக்கவே பெண்ணியம் போற்றுவோம்!
  பெண்கள் உயர் நிலை காணாமல்
  மண்ணில் நமக்கேஉயர்வேது
  பெண்கனை யர்த்திய நாடகளே
  வல்லமை கொண்டு சிறந்தோங்கும்
  அந்நிலை நாமும் காணவே என்றும்
  அறிவிபலாம் பெண்ணியம் போற்றுவோம்!!

 34. வீ.ராஜ்குமார் says:

  கவிதைப் போட்டி 2021 _ 8

  #பெண்ணியம்_போற்றுவோம்!

  ‘பெண்ணியம் என்பது
  பெண்க ளனைவரும்
  மண்ணில் சமவுரிமை
  மலர்ந்திடப் போராடுவது!

  ஆண்பெண் ணிருவரும்
  சமத்துவமென்றே உரிமை
  அன்புடன் இணைந்து
  நிலை நாட்டுவது!

  விரும்பிய பணிசெய்து
  விரும்பிய வாழ்வமைத்து
  அரும்பும் உள்ளத்துடன்
  அழகாய் வாழ்வது!

  ஓட்டளிக்கவும் தேர்தலில்
  போட்டி யிடவும்
  ஒருகாலத்தில் பெண்களுக்கு
  உரிமை யில்லையே!

  இன்றும்கூட,

  அனைத்துப் பெண்ணுக்கும்
  ஆண்போல் உரிமை
  ஆஸ்தியில் கூட
  கிடைப்ப தில்லையே!

  ஆண்களுக்கு நிகராக
  நல்ல ஊதியமும்
  ஆசைப்படும் மகவைப்பெறும்
  அவ்வுரிமையும் இல்லை!

  குடும்பம் அலுவலகச்
  சமூக வலைதளத்தில்
  ஒடுக்கப் படுகின்றனரே
  இன்றளவும் பெண்கள்!

  ஆணியத்திற்கு எதிரானது
  அல்ல பெண்ணியம்!
  ஆடையுடல் ரீதியாகவும்
  அழகுவுள்ள ரீதியாகவும்

  அடக்கப் படுவதைத்
  தடுத்துக் காத்து
  அவர்சமூகப் பாதுகாப்பு
  அளிப்பதே பெண்ணியம்!

  பெண்களின் நலனை
  பாரினில் அடைவோம்!
  பெருமையுடன் காத்திடுவோம்!!
  பேருவகையுடன் போற்றிடுவோம்!!!’

 35. - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி. says:

  “வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்”

  வாழ்க்கை சமுத்திரத்தில் நீ நீந்து
  வாழ்வியலை அது கற்றுக்கொடுக்கும்
  வாழ்க்கை பாடத்தை தினமும் படி
  வாழ்க்கையை படிக்கும் மாணவன் நீ!

  உலகம் என்ற பள்ளிக்கூடத்தில்
  உனக்கு வேண்டிய பாடத்தை தேர்வு செய்
  உண்மை என்ற பாடத்தை நீ‌ படி
  அடங்கிவிடும் அனைத்தும் அதிலே!

  நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்
  நமக்கு கற்பிக்கும் ஆசிரியரை பொருத்து
  நமது வாழ்க்கை அவ்வாறே அமையும்
  நம் வாழ்க்கையை மாற்றுவது ஆசிரியர்களே!

  அன்பை போதிக்கும் ஆசிரியர் மாதா
  அன்போடு அறிவை சொல்லும் ‌பிதா
  அறிவோடு ஒழுக்கத்தை கற்பிக்கும் குரு
  அனைத்தும் அருளும் ஆசிரியர் தெய்வமே!

  வாழ்தல் என்பது பிறத்தலில் தொடங்கி
  இறத்தலில்‌ முடியும் ஒரு நிகழ்வே
  நிமித்தம் என்பது இடைப்பட்ட காலத்தில்
  நாம் வாழ்ந்து ‌விட்டு செல்லும் அடையாளமே!

  -வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
  ************************************

 36. JeyabalaMurugan says:

  தலைப்பு: அது ஓர் கார் காலம்!

  ஆதவனுக்கும் இன்று அலுப்புக் காய்ச்சலோ!
  அதனால்தான் இன்னும் வரவில்லையோ!
  எந்திரித்து வந்து மெல்ல எட்டிப் பார்க்க!

  இடிகள் இடித்துக் கொள்ளும்
  இரைச்சல் எதுவும் இல்லை!
  ஒளிவாள் கொண்டு வானைப்
  பிளக்கும் மின்னல்கள் இல்லை!

  அழகிய மேகங்களின் வேகத் தேரோட்டம்
  அதன்பின் பூமிநோக்கி வந்தடையும் மாலையாய்
  தொடுக்க முடியாத தண்ணீர் பூக்களின் அர்ச்சனை!

  இனம்புரியா ஈர்ப்புவிசை ஒன்று உள்ளிருந்து
  வீட்டின்வாசல் நோக்கித் தள்ளிட, எதிர்வீட்டு
  மாடியில் நனைந்தபடி மெல்லிய நாட்டியம்
  காட்டும் அழகிய புறாக்களின் தரிசனம்!

  மேகம் தான்கொண்டிருந்த வார்த்தைகள்
  யாவையும் கொட்டித் தீர்த்திட, அதன்பின்
  மௌன மொழியில் குளிர்ந்த காற்று வந்து
  இதமாய் தலைக்கோத, கடிகாரத்தில் மணியோ
  நண்பகலைக் காட்ட, ஆதவனின் அமைதிப் பிரவேசம்!

  மெல்ல மெல்ல எழுந்து ஒளிப்பார்வை பூமியெங்கும்
  பரவி படர்ந்து வர, மாலை பொழுதுக்குமுன்
  அங்கு ஓர் அழகிய போர் ஒப்பந்தம்!

  மேகக்க்கூட்டங்களின் அசுர அணிவகுப்பு
  அதன்பின் நடந்தேறும் ஒளியும் ஒலியும்
  இம்முறை மேகத்திடம் இருந்து கொஞ்சம்
  வன்மையான வார்த்தைகளும் வந்து விழுகின்றன!

  காற்று கொஞ்சம் கத்தி பேசினால்
  காதை கொஞ்சம் கட்டிக் கொள்ளலாம்!
  ஆனால் ஆர்பரிக்கும் அர்த்தம்புரியா வேகஇசைக்கு
  ஆடுகிறது வீட்டின் மேற்கூரையும் நிலைகுலைந்தபடி!

  Ø வீசிய சூறாவளியும் காணாது அடங்கி விட்டது!
  Ø பெய்த மழையும் இங்கு தணிந்து விட்டது!
  Ø வீதியில் குடைகள் எல்லாம் மடங்கி விட்டது!
  Ø சுட்ட வெயிலும் பனியால் குளிர்ந்து விட்டது!
  Ø சூரியனும் மேற்கில் போய் மறைந்து விட்டது!
  Ø அந்தியும் இரவின் வருகைக்காக ஒதுங்கி விட்டது!
  Ø வானமும் தன்மேல் கருப்பு போர்வை விரித்து விட்டது!
  Ø அம்புலியும் அதன்மேல் அழகாய் ஒட்டி விட்டது!
  Ø ஆறுவால் மின்மினியும் விட்டு விட்டு ஒளிர்ந்து விட்டது!
  Ø போன மின்சாரம் மட்டும் எங்கோ போய் நின்று விட்டது!

 37. ஜெயபாலா முருகன் says:

  தலைப்பு: அது ஓர் கார் காலம்!
   
  ஆதவனுக்கும்  இன்று  அலுப்புக்  காய்ச்சலோ!
  அதனால்தான்  இன்னும் வரவில்லையோ!
  எந்திரித்து  வந்து  மெல்ல எட்டிப்  பார்க்க!

  இடிகள் இடித்துக் கொள்ளும்
  இரைச்சல் எதுவும் இல்லை!
  ஒளிவாள் கொண்டு வானைப்
  பிளக்கும் மின்னல்கள் இல்லை!

  அழகிய மேகங்களின் வேகத் தேரோட்டம்
  அதன்பின் பூமிநோக்கி வந்தடையும் மாலையாய்
  தொடுக்க முடியாத தண்ணீர் பூக்களின் அர்ச்சனை!

  இனம்புரியா ஈர்ப்புவிசை ஒன்று உள்ளிருந்து
  வீட்டின்வாசல் நோக்கித் தள்ளிட, எதிர்வீட்டு
  மாடியில் நனைந்தபடி மெல்லிய நாட்டியம்
  காட்டும் அழகிய புறாக்களின் தரிசனம்!

  மேகம் தான்கொண்டிருந்த வார்த்தைகள்
  யாவையும் கொட்டித் தீர்த்திட, அதன்பின்
  மௌன மொழியில் குளிர்ந்த காற்று வந்து
  இதமாய் தலைக்கோத, கடிகாரத்தில் மணியோ
  நண்பகலைக் காட்ட, ஆதவனின் அமைதிப் பிரவேசம்!

  மெல்ல மெல்ல எழுந்து ஒளிப்பார்வை பூமியெங்கும்
  பரவி படர்ந்து வர, மாலை பொழுதுக்குமுன்
  அங்கு ஓர் அழகிய போர் ஒப்பந்தம்!

  மேகக்க்கூட்டங்களின் அசுர அணிவகுப்பு
  அதன்பின் நடந்தேறும் ஒளியும் ஒலியும்
  இம்முறை மேகத்திடம் இருந்து கொஞ்சம்
  வன்மையான வார்த்தைகளும் வந்து விழுகின்றன!

  காற்று  கொஞ்சம்  கத்தி  பேசினால்
  காதை  கொஞ்சம்  கட்டிக் கொள்ளலாம்!
  ஆனால்  ஆர்பரிக்கும் அர்த்தம்புரியா  வேகஇசைக்கு
  ஆடுகிறது  வீட்டின்  மேற்கூரையும் நிலைகுலைந்தபடி!

  வீசிய சூறாவளியும் காணாது அடங்கி விட்டது!
  பெய்த மழையும் இங்கு தணிந்து விட்டது!
  வீதியில் குடைகள் எல்லாம் மடங்கி விட்டது!
  சுட்ட வெயிலும் பனியால் குளிர்ந்து விட்டது!
  சூரியனும் மேற்கில் போய் மறைந்து விட்டது!
  அந்தியும் இரவின் வருகைக்காக ஒதுங்கி விட்டது!
  வானமும் தன்மேல் கருப்பு போர்வை விரித்து விட்டது!
  அம்புலியும் அதன்மேல் அழகாய் ஒட்டி விட்டது!
  ஆறுவால் மின்மினியும் விட்டு விட்டு ஒளிர்ந்து விட்டது!
  போன மின்சாரம் மட்டும் எங்கோ போய் நின்று விட்டது!

 38. தமயந்தி த/பெ இரத்தினம் says:

  ஊரடங்கில் இயற்கையை உணர்ந்த மனிதன் !

  ஊடகத்தைப் பார்த்துப்பார்த்து விழிகள் பச்சை வண்ண திரைகளை ஏங்கி, கண்ணீர் சிந்தும் நொடி !
  அறிந்தே சீரழித்த காற்று இன்று சிறைப்பட்டுக் கிடக்கும் என்னை, நலமறிய வீட்டின் கதவைத் தட்டும் ஓசை !
  கடல் அலை உரசி சென்றது போல் கனவில் உறங்கியிருந்த பாதங்கள், வெளியே கூடு திரும்பும் பறவைகளின் இசை கேட்டு சென்றது ஒரு நடை !

  மேகம் சுமந்துக் கொண்டிருந்த நீரை, வீசிய காற்றோடு உதறி மேனியில் உரசுகையில்., எண்ணற்ற இன்பம் மனதில் விசிறியது அக்கணம் !
  விலையுயர்ந்த வாசனை திரவியங்களே தோற்றுப்போகும் வகையில்
  மழைத்தூறலில் விட்ட மண்ணின் வாசனை !

  புற்களின் புருவங்களுக்கிடையில் பொட்டு வைத்து, சில நொடிகள் மட்டுமே வாழப்போகும் மழைத்துளிகளில்,
  அடைப்பட்ட துன்பங்கள் கூட மகிழ்ச்சியாய் மாறும் உணர்வு !
  பூமியைக் குளிக்க வைத்த களைப்பில் வானம் ஓய்வெடுக்க,
  மேகம் தன்னை மறைத்தாலும் அதனைச் சுடாமல், சூரியன் எட்டிப் பார்த்து, தங்க ஒளியில் தந்தது ஒரு புன்னகை !

  இயற்கை தன்னை அணைத்தாலும் அதனைப் பலி கொடுக்கும் என்னை, அக்கதிரொளியால் அறைந்தது போல் ஒரு நிலை !
  எண்ணிலடங்கா மரங்கள், அழகிய மலை, அமுதசுரபியாகிய அருவி அனைத்தும் விழிகள் காணத் துடிக்கும் ஏக்கம் !
  தேய்ந்து போகும் இயற்கையைத் தொலைக்கும் காலத்தில் நுழைந்து, இன்று தன்னையே தொலைத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வேடிக்கை காணும் காலம் !

  இயற்கையைச் சிதைத்ததற்கே இச்சிறைவாசமோ.. எனவோ !
  துன்பம் நிறைந்த உலகில், துவண்டிருக்கும் மனித மனதிற்கு..
  எழில் நிறைந்த இயற்கையினாலே காண இயலும் மிகுந்த இன்பம் !
  ஊரடங்கில் மனிதன் வடித்த கண்ணீரில் ஒளிந்திருக்கும் உதிரத்திற்கு இயற்கையே உயிர் ! இனி நேசிப்போம் இயற்கையை!

 39. கா.வினோத் says:

  பெண்ணியம் போற்றுவோம்:

  பெண் என்பவள் மலையைப் போன்று
  உறுதியானவள்!
  பெண் என்பவள் மலரைப் போன்று
  மனம் பரப்புவாள்!
  பெண் என்பவள் நதியைப் போன்று
  இலக்கையடைய ஓடிக்கொண்டிருப்பாள்!
  பெண் என்பவள் மெழுகுவர்த்தி போன்று
  தன் குடும்பத்திற்கு ஒளி கொடுப்பாள்!
  பெண் என்பவள் வேரைப் போன்று
  தன் குடும்பம் நிலைத்திருக்க உதவுவாள்!
  ஆனால் அவேர்கள் இச்சமூககத்திற்கு
  தன்னை வெளிக்காட்டமாட்டாள்!
  இச்சமயத்தில் சில பெண்கள் கொரோனா
  போல் புதுப்புதுவடிவில் வெளிவந்தாள்!
  மாவாட்டிய பெண்கள் மாவட்ட ஆட்சியர்
  ஆயினர்!
  இரவானாலே வெளியேறாதவர்கள்
  இராணுவத்தினர் ஆயினர்!
  காய் நறுக்கியவர்கள் காவல் துறையினர்
  ஆயினர்!
  மட்டம் தட்டப்பட்டவர்கள் மருத்துவர்கள்
  ஆயினர்!
  இரசம் வைத்தவர்கள் நவரச நாயகிகள்
  ஆயினர் பொரியல் வைத்தவர்கள்
  பொறியியலாளர் ஆயினர்!
  பாத்திரம் துளக்கியவர்கள் பாராளும்
  தலைவர்கள் ஆயினர்!
  வீட்டிலேயே இருந்தவர்கள் விமானஓட்டுநர்
  ஆயினர்! உலக்கையால் நெல்லு குத்தியவர்கள்
  வழக்கறிஞர் ஆயினர்!
  வீட்டுவேலை செய்தவர்கள் விஞ்ஞானி
  ஆயினர்!
  கள்ளிப்பாலால் கொல்லவேண்டும் என்றவர்கள் பெண்களை கடவுளாகப்
  போற்றினர்!
  வீட்டுப் பணியை மட்டுமே செய்த்தவர்கள்
  நாட்டுப்பணியில் ஈடுபட்டு நற்பணி
  செய்தனர்!
  வாழ்க பெண்கள்! வளர்க பெண்ணியம்!!!!!

  -கா.வினோத்

 40. தமயந்தி says:

  பெண்ணியம் போற்றுவோம்

  கருவில் அரும்பி
  உருவம் தரித்து
  பருவம் அடையுமுன்
  பலப்பல பக்குவங்கள்
  பதறாமல் பெறும் உள்ளம்..!

  அரும்பும் மலராய்
  அழகாய் மணம்வீசி
  அன்பின் ஆழத்தை
  அனைவரிடமும் காட்டி
  வலம் வருகின்ற அதிசயம்..!

  எதையும் இயன்றவரை
  எடுத்துச் செய்திடும்
  உறுதியான உள்ளத்துடன்
  உலகை வலம் வரும்
  உன்னத சிகரம்…!

  அகத்தில் அன்புடனும்
  புறத்தில் பண்புடனும்
  பெண்மைக்கு உண்மையுடனும்
  பிரமிக்கும் திறமையுடனும்
  பிரகாசிக்கும் வண்ணம்…!

  பொறுமைக்கு இலக்கணமாய்
  புனிதத்திற்கு பொருத்தமாய்
  அடக்கம் அறிந்தவளாய்
  அகங்காரம் தொலைத்தவளாய்
  அன்பிற்கு பணியும் பெண்ணியம்…!

 41. இரா. தமயந்தி says:

  பெண்ணியம் போற்றுவோம்

  கருவில் அரும்பி
  உருவம் தரித்து
  பருவம் அடையுமுன்
  பலப்பல பக்குவங்கள்…
  பதறாமல் பெறும் உள்ளம் பெண்மை!

  அரும்பும் மலராய்
  அழகாய் மணம்வீசி
  அன்பின் ஆழத்தை
  அனைவரிடமும் காட்டி
  வலம் வருகின்ற ஓர் அதிசயம் பெண்மை!

  எதையும் இயன்றவரை
  எடுத்துச் செய்திடும்
  உறுதியான உள்ளத்துடன்
  உலகை வலம் வரும்
  உன்னத சிகரம் பெண்மை!

  அகத்தில் அன்புடனும்
  புறத்தில் பண்புடனும்
  பெண்மைக்கு உண்மையுடனும்
  பிரமிக்கும் திறமையுடனும்
  பிரகாசிக்கும் வண்ணம் பெண்மை!

  பொறுமைக்கு இலக்கணமாய்
  புனிதத்திற்கு பொருத்தமாய்
  அடக்கம் அறிந்தவளாய்
  அகங்காரம் தொலைத்தவளாய்
  அன்பிற்கு பணியும் பெண்ணியம் போற்றுவோம்..!

 42. MaheswaranGovindan says:

  கற்பனைகள் ஊற்றெடுக்க
  கற்பனைகள் ஊற்றெடுக்க
  காகிதங்கள் நிரம்பியதடி
  நம் காதல் வரிகளால்…

  கற்பனையில் மட்டுமே
  களித்திட்ட காதல் அது
  கண்நிறைத்து கொல்லுதடி
  நிஜத்தில்…

  காதல் கொண்ட இதயம்
  அது இப்போது ரணமாய் ஆனதடி
  கைகூடா காதல் தந்த
  வலிகளால்….

  இவன்
  மகேஸ்வரன்.கோ(மகோ)

 43. MaheswaranGovindan says:

  நீயில்லாத நாட்களில்
  நீயில்லாத நாட்களில்
  நீளும் காலங்கள் எல்லாம்
  நீங்கா உன் நினைவுகளுடன் …

  நினைவுகளாய் நிறைந்து என்
  நிகழ்காலத்தை கடத்தி
  கடந்த காலத்திற்கு அழைத்து
  செல்கின்றன உன்னுடனான
  என் நினைவுகள் எல்லாம்…

  நீ என்னுடன் இருந்து நான்
  பயணித்த காலங்கள் மட்டுமே
  இன்றும் பசுமையாய் என்
  நினைவுகளில் …

  இவன்
  மகேஸ்வரன் கோவிந்தன் ( மகோ)

 44. வீ.ராஜ்குமார் says:

  கவிதைப் போட்டி 2021 _ 8

  #பனையோலை

  ‘மாதமொரு ஓலைதரும் கற்பகத் தருவாம்
  பனையிலை பாரம்பரிய மூலப்பொருளாம்!

  இளமஞ்சள் நிறங்கொண்ட குருத்து
  கரும்பச்சை நிறமாக விரிந்து
  காய்ந்துமண் நிறமாகும் முதிர்ந்து!

  கடவுளுக்குப் படைக்கப்படும் குருத்தோலை,
  சாரோலை, ஈளவோலை, அடியோலை
  காய்ந்தகா வோலை யெனவே
  ஓலைகளும் ஐந்துவகைப் படுமே!

  மாட்டுக்கு உணவாகும் பச்சையோலை
  வீட்டுவேலியடைத்து மண்ணுக்கு உரமாகும்
  காய்ந்த ஓலை!

  கூரைவேயப் பயன்படும் பதவோலை
  குளிர்ச்சி தந்துக் கோடையிலும்
  காத்திடுமே நம் பனையோலை!

  அடுப்பெரிக்கும் இலையிலே அந்தக்கால
  ஓலைச்சுவடி சிவகாசி ஓலைவெடி
  அழகழகாய் ஓலைப்பெட்டி ஓலைப்பாய்
  அமர்வதற்குத் தடுக்கு,விசிறி பூசைக்கூடை,
  பதநீரருந்தும் பனந் தொன்னையென
  பலவிதப் பயனாகும் பதவோலை!

  சித்திரந்தீட்டிக் கண்ணாடிச் சட்டமிட்டால்
  முத்திரையாய் நானூறு ஆண்டுகள்
  நம்புகழ் பேசுமே பனையோலை!

  மாநில மரமாம் பனைகாத்து
  நலிந்திட்ட பரம்பரைத் தொழில்பார்த்து
  அழியாது காத்திடுவோமே நாம் ஆதரித்துப் போற்றிடு வோமே!!’

 45. லோகநாயகி.சு says:

  கவிதை போட்டி:8

  இயற்கை

  மழை குழந்தை இடி தாயின் தாலாட்டை கேட்டுவுடன் அழுகையை நிறுத்தி விடுகிறதோ…?
  காலையில் வீரமாக எழுந்து மாலையில் ஏனோ சந்திரன் காலடியில் போய் சரணாகதியாகிறது அந்த சூரியன்….💥
  தளர்ச்சி களைப்பு எதுவுமின்றி தொடர்ந்து கடக்கும் விண்பயணி….! வெல்ல முடியாத வெள்ளை பேரழகி…! குறைந்து நிறையும் பூரண பால் குடத்தாள்…! நிலா!🌙🌜
  இங்கே யாருக்காக குடை பிடிக்கிறது இந்த வானம்?
  ஆர்பரிக்கும் கடல் அலை வந்து எதை அடித்து சென்றதோ தெரியவில்லை!.. என் கண்ணீரையும், மனக்கவலையையும் அடித்து சென்றது…
  கடற்கரையில்…🌊
  வண்டுகள் உரையாற்றுவதற்காக… செடிகள் தோறும் மலர் 🌸🌹🌼மைக்குகள்..!
  நீர்வீழ்ச்சியாக பிறந்து நதியாக நடை பழகுகிறது மழை….🌧️🌧️
  மேகம் கருத்திருச்சு! நல்ல மழைபொழிந்திருச்சு! நாடும் செழித்திருச்சு! நல்ல நேரம் வந்திருச்சு!
  கோடிக்கணக்கான வெள்ளிகளின் நடுவில் ஒரு வட்டமான ஒற்றை நாணயம்… நிலா!🌚
  நட்சத்திர ஈட்டியின் காவலில் நடமாடும் ராணி நிலா…!!
  எல்லோரது வீட்டு வாசலிலும் தண்ணீர் விநியோகம் செய்தது காசு வாங்காமலே மழை..
  காலையில் சூரிய கோயிலின் கதவுகளை திறப்பது யார்? மாலையில் நடையை சாத்துவது யார்?
  ஏழையின் குடிசையில் அழைக்காத விருந்தாளி மழை நீர்.
  ஆறுகள் கடல் அன்னையை தேடி ஓடுகிறது….
  யாரை விரட்டி பிடிக்க ஆக்ரோஷமாக கரைக்கு ஓடி வருகிறது அந்த அலைகள்…..!
  இரவென்னும் போர்வையில் அங்கங்கே சிறிய சிறிய ஓட்டைகள் தெரிகிறதே! நட்சத்திரங்கள்….
  பகலில் பூத்தால் பரிக்கலாம் ஆனால், அது இரவில் பூக்கிறதே!
  விண்மீன்களை புள்ளியாக வைத்தது போதும்! கோலமிட நிலாமகளை தேடுகிறது வானம்..! அமாவாசையன்று….🌑
  பசுமையின் வீட்டில் விடியும் வரை படுத்து உறங்குகிறது பனிகளின் கூட்டம்…..☃️⛄
  உரசி சென்றால் தென்றல்! உறுமி சென்றால் புயல்!
  மழையில் குளித்த இலைகள் இன்னும் தலை துவட்டிக் கொள்ளவில்லை..!
  நிலவும் சிறகடித்து பறக்கட்டுமே! பூமியும் சக்கரம் கட்டி சுத்தட்டுமே!
  உனக்கும் ஒரு கால் கட்டு போட்டால் தான் காதலனை தேடி கரைக்கு ஓட மாட்டாய் அலை மகளே..!
  அதிகாலை நேரத்தில் ஆண்டவனை விட ஆதவனே கண்ணுக்கு தெரிகிறான்….
  கொட்டித்தீர்த்த கோடை மழை குடை பிடிக்கும் காளான்கள்….
  வானம் கருமேக காகிதத்தில் விடிய விடிய எழுதி தூக்கி போட்ட மழை கவிதைகளை படித்து விட்டு பூமியே குளிர்ந்து போனது…..

  இன்னும் சொல்ல ஆசைதான் ஏனோ வார்த்தைகள்தான் வரவில்லை இயற்கை அழகை வர்ணிக்க….

  லோகநாயகிசுரேஷ்…

 46. - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி. says:

  “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”
  **********************************************

  சோம்பேறிக்கு இல்லை சோறு
  உண்மையான உழைப்புக்கு
  எத்திசைச் செலினும்
  அத்திசைச் சோறே!

  உழைத்துக் கொண்டே நீ இருந்தால்
  ஒருத்தருக்கும் பயப்பட வேண்டாம்
  நம்பிக்கை உனக்கு இருந்தால்
  நாலுபக்கமும் வழியிருக்குமே!

  முயற்சி உனக்கு இருந்தால்
  முடியும் என்பது உனக்கிருக்கும்
  முடியாது என்பதெல்லாம்
  அடங்கி கிடக்கும் உன்னிடமே!

  உழைப்பவன் நீயென்றாலே
  உலகில் உள்ளது உனக்கே
  உனக்காகவே‌ உலகம் சுற்றுகிறது
  உலகம் உனக்கே உரிமையானது!

  உலகம் ஒருவருக்கானதல்லவே
  உழைக்கும் ஒவ்வொருவருக்குமானதே
  உலகம் விடாமுயற்சி உள்ளவனுக்கே
  உழைப்புக்காகவே உலகம் உருவானதே!

  உழைப்பது மட்டும் உன் வேலை
  உயர்த்துவது உலகின் வேலை
  இத்திசை மட்டுமல்ல உனக்கு
  எத்திசையும் உன் திறமைக்கு சொந்தமே!!!

  – வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
  *********************************

 47. - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி. says:

  “யாதும் ஊரே யாவரும் கேளிர்”
  *********************************

  ஒரு ஊரிலே நாம் பிறந்தோம்
  தாய் தந்தை பிறந்த ஊரோ வேறு
  உடன்பிறப்பு வாழும் ஊரோ வேறு
  அத்தனை ஊரும் நம் சொந்த ஊரே!

  உலகில் நாம் மட்டுமா பிறந்தோம்
  சிந்தித்துப் பார்த்தாலே தெரியும்
  உலகம் முழுவதும் நம் சொந்தமே
  ஆன்றோர் அன்றே சிந்தித்தாரே!

  அன்று உயர்ந்தவரெல்லாம்
  இன்று தாழ்ந்திருக்கலாம்
  இன்று தாழ்ந்தவரெல்லாம்
  நாளை உயர்ந்திருக்கலாம்!

  வாழ்க்கை ஒரு வட்டம்
  முன் பின் என்று சுற்றும்
  உனக்கு எனக்கு உலகம்
  எல்லோரும் நம் சுற்றமே!

  நல்லதை ஒன்று செய்தாலும்
  தீயதை ஒன்று நாம் செய்தாலும்
  நம் சொந்தத்துக்கே அது சேரும்
  சிந்தித்தால் நமக்கே புரியும்!

  எதையும்‌ சிந்திக்காது
  சொல்லவில்லை‌ அன்று
  “யாதும் ஊரே யாவரும் கேளிர்”
  அனுபவித்து அறிந்து சொன்னாரே!!!

  -.வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
  ********************************

 48. வீ.ராஜ்குமார் says:

  கவிதைப் போட்டி 2021 _ 8

  #பல்லாங்குழி

  _ ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
  ஒற்றை நாணயம்’

  ‘பாவையர் ஆடிடும் விளையாட்டு! இது
  பாண்டி ஆட்டமெனும் விளையாட்டு!

  பதினான்கு குழியே பன்னாங் குழியாகி
  பல்லாங் குழியானது பாதியிலே!

  புளியங் கொட்டையோ முத்துச் சோளியோ
  பலகைக் கட்டையில் ஆடுபொரு ளாகுமே!

  பூப்படைந்த பூவையர் பதினாறுனா ளாடியே
  மணப் பெண்ணும் கருவுற்ற பெண்ணும்
  மனம் தழைக்க ஆடுவது மரபு!

  சீர்வரிசைப் பொருளாக பல்லாங்குழி கொடுப்பது
  ஊரறியும் தமிழர் பண்பாட்டு மரபு!

  விரலுக்கும் கைகளுக்கும் வலு சேர்த்து
  சிக்கனமும் சேமிப்பும் போதித்து _ பணம்
  பொருளீட்டும் புரிதலைத் தரும் வித்து!

  வாழ்க்கைக் கலையை கற்பிக்கும் விளையாட்டு!
  காலப்போக்கில் தொலைப்பது நம் விளையாட்டு!

  இழப்பையும் துன்பத்தையும் எளிதில் படிப்பித்து
  இடரை மறந்து தொடர்ந்து முயன்றால்
  செல்வத்தை ஈட்டலாம் என்பதைச் சொல்லிடும்
  சிந்தை வளர்த்திடும் சிறப்பான விளையாட்டு!’

 49. தே.லூவியாவின்சி. says:

  பெண்ணியம் போற்றுவோம்!!

  இலை மேல் விழும் துளி,
  மழையோடு வீசும் காற்று….
  தென்றல் காற்றில்,
  கானல் நீராக அனல் பறக்கும் ஆவி,
  ஆண்டவன் அனுப்பிய அந்த நேரம்,
  நெஞ்சம் சிலிர்க்க,
  மேனி குளிர…
  மழையோடு கூடிய மன்மதக் காற்று!!
  மங்கையின் கையில் தவழும் மணமணக்கும் அனல் பறக்கும் தேநீர்!!
  தேவையான நீராய் ஆனது….
  தேவதை போட்ட தேநீர்!!!

  இயற்கையின் மெல்லிசைகளை
  போற்றும் நாம்!!
  மெல்லிசையாய் மலர்ந்த மங்கையை தூற்றும் தூண்டிலாக மாறியது எதற்காக????

  ஏனோ?உலகின் உளி உள்ளிறங்கி,
  மனதை பதம் பார்த்தாலும்…
  பாகு எனும் பாட்டின் சூது அறியா,
  அன்னையாகிறாள்…..
  பல குழந்தைகளின் கொஞ்சல் மனதில்,
  மறைந்து போகிறாள்….
  தான், தாய் என்ற தத்ரூவச்சொல்லை மறந்து!!!
  குழந்தைக்கோ, குறுகிய நிமிடமதில்,
  அன்னை அற்புத பிரபஞ்சமாகிறாள்!!!

  இதானே! பெண்ணின் மனமரம்!!
  பணமரம் அதாவது பணத்தாலான
  மனம் தேவை….
  தேவதையின் மனமரத்தையோ மாயையாக காணுகிறது…..
  இக்கானல்உலகம்!!!

  இன்னும் என் செய்யவேண்டுமோ??
  பெண்ணறம் புரிந்து,
  பெண்ணியம் போற்ற….
  – தே.லூவியா.