கவிதை போட்டி 2022_02 | மற்றும் போட்டி 2022_01 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-02

kavithai potti

கவிதை போட்டி 2022-01 முடிவுகள்

இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,
சௌடீஸ்வரி
எஸ் வீ ராகவன்

அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை பகிரவும்.


கவிதை போட்டி 02 அறிவிப்பு

 • காதலர் தினம்
 • பௌர்ணமி நிலவு
 • வன்கொடுமை
 • மாசி மகம்
 • திருவள்ளுவர் ஒரு சகாப்தம்
 • பேரறிஞர் அண்ணாதுரை
 • சிவராத்திரி
 • விரும்பிய தலைப்பு

தலைப்பில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.
எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2022-02. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். ஒரு கவிதைக்கும் இரண்டாம் கவிதைக்கும் ஓரிரு நாட்களாவது இடைவெளி இருக்க வேண்டும். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

33 Responses

 1. தாரா says:

  தலைப்பு – காதலர் தினம்

  என் இதயத்தை அவளிடம் கொடுத்து

  விட்டேன்

  காதலின் அர்த்தத்தை கண்டுவிட்டேன்

  காதலினால் வரும் இன்பம் லேசான

  கோபம் அதை மறக்க சிறிய மன்னிப்பு

  அதனுடன் ஒரு கிப்ட் அதை அவளிடம்

  கொடுத்து அவள் புன்னகை நான்

  ரசித்து சிறு சிறு சண்டைகளை

  கடந்து அவள் முதல் பார்வையில்லே

  நான் காதலில் விழுந்தது என் இதயம்

  என்னிடம் அவளை நேசிக்காக

  சொன்னது அத்தனையும் கனவா

  அல்லது நிஜமா என நானே யோசித்து

  அவளிடம் பேச வார்த்தை வரமால்

  நான் தவித்தாது பல பிரச்சனைகளை

  தாண்டி வந்தது காதல் என்னும்

  அழகான வார்த்தை அவளிடம்

  சொன்னேன் அவள் மனதில் நான்

  நுழைந்தேன் காதல் என்ற

  வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தேன்

  காதல் இல்லை என்றால் வாழ

  முடியாது என புரிந்தேன்

 2. நித்யாநரேஷ் says:

  தலைப்பு:மாசி மகம்

  வெண்ணிற அழகன் மகநட்சத்திரத்தில்
  சிங்க ராசியில் சஞ்சரிக்கும் நாளாம்!
  புண்ணிய தீர்த்தங்கள் பாவம் போக்கி புண்ணியம் தரும் கடலாடு நாளாம்!
  வருணன் கடலடியில் இருந்து மீண்டு சிவனின் வரம்பெற்ற நாளாம்!
  அழகன் முருகன் அய்யன் ஈஷனுக்கு
  மந்திரம் உபதேசித்த திருநாளாம்!
  விரதங்கள் இருந்து பூஜை செய்தால்
  வலகாப்பு நடக்கும் என்பது ஐதீகமாம்!
  பார்வதி அம்மை பாவம் போக்கிட
  தாமரை நடுவில் வலம்புரிச் சங்கானாளாம்!
  தட்சன் தொட்டதும் குழந்தையாய் தாட்சாயணி அவதரித்தாளாம்!
  மாசிக்கயிறு பாசிபடறும் என்பது
  பழமொழியாம்!
  அம்பிகைக்கு குங்கும அபிஷேகம்
  விசேசமாம்!
  பிரம்மன் கும்பகலசத்தை வெள்ளத்தில்
  மிதக்கவிட்டதால் பூமி மீண்டதாம்!
  கும்பம் ஒதுங்கிய இடம்
  கும்பகோணம் என்றானதாம்!
  கும்பேஸ்வரர் கோயில் மாசிமகம் தெற்கில் சிறப்பாம்!
  காசி கும்பமேளா வடக்கில் சிறப்பாம்!
  பிருத்துதேவனுக்கு முதல் மரியாதை
  செய்து வழிபாடு தொடங்க தொட்ட
  காரியம் ஜெயமாம்!
  புண்ணிய தலங்கள் பலவிருக்க
  புராணக் கதைகள் எடுத்துரைக்க
  பாவம் சுமை நமக்கெதுக்கு!
  பாவம் கழித்து புண்ணியம் சேர்க்க
  மாசி மகம் கடவுள் தந்த வாய்ப்பு!

 3. மு.இளங்கோவன் says:

  உருவங்கள்
  வெவ்வேறு
  உருவானதும்
  வெவ்வேறு
  உணர்வுகள்
  வெவ்வேறு
  உறவுகளும்
  வெவ்வேறு
  உதடுகள்
  வெவ்வேறு
  உச்சரிப்புகளும்
  வெவ்வேறு
  ஊர்களும்
  வெவ்வேறு
  உள்ளங்கள்
  இணைந்து
  உண்மைக்கு
  உறைவிடமாய்
  உயிர்கள்
  கலந்து
  விடை பெறும்
  கடைசி நிமிடம் வரை
  மடை திறந்த
  வெள்ளமாய்
  பெருக்கெடுத்து
  இரு கை கோர்த்து
  பெருமை சேர்ப்பதே
  உண்மை காதலே!,,,

 4. மு.இளங்கோவன் says:

  காதலர் தினம்
  கவிதைப்போட்டி

 5. சிவராஜ் மணிவண்ணன் says:

  விருப்ப தலைப்பு

  ஆம்மாவின் கால்கள்……….

  கடல் அலைகளும் அந்த கால்களும் ஒரு கரை நின்று நான் கண்டதில்லை……!
  இதயம் கூட சில நொடிகள் இளைப்பாறும் போல…! இந்த கால்கள் கலைப்பறியாது……!
  காலை கதிருக்கு முன் கண் விளிக்கும்…! முதல் ஆள் இது தான்….! நிலவே நித்திரை அடைந்தாலும் நிற்காமல் நகர்ந்து கொண்டே இருக்கம்…..!
  எந்திரம் கூட தோற்று ஓடும் அந்த கால்களின் பணிகளை கண்டு…..!
  ஓடி..ஓடி…! தேய்ந்தாலும் ஒரு குறை சொல்லியதில்லை…..!
  கால் கொளுசின் ஓசை கேட்ட நம் காதுகளுக்கு தெறியாது…! அது அக்கால்களின் வலியோசை என்று….!
  வலியையும் வாத்யமாய் மாற்ற வள்ள கால்கள்…! அதன் பதையில் மென்மை என்ற வார்த்தைக்கே இடமில்லை மாற்றாய் கடின படிக்கட்டுகலையே கடக்கிறது….!
  அடுப்படி அடித்தளத்திற்க்கு மட்டுமே புரியும் அக்கால்களின் சோகங்கள்…..!
  வாழ்நாள் முழுவதும்….வாடியதில்லை அது….! காயம் பட்டாலும்…. கவலை கொல்வதில்லை அது….!
  அந்த கால்களுக்கும் பல கனவுகள் உண்டு…!
  பறக்க ஆசைகள் உண்டு….!
  இருந்தும்.!
  குடும்பம் என்ற கதம்பம் காக்க அது அனைத்தையம் துறந்து… இல்லத்திலே முடங்கிவிடும்…!
  கண்ணியமிக்க அக்கால்களை கண்டால் கைகளால் தொழுது… கண்ணீரை காணிக்கையாக்குங்கள்…!

  சிவராஜ் மணிவண்ணன், வேலூர்

 6. *காதலர் தினம்*

  மனதுக்குள் தோன்றும் ஆசைகள்
  கனவுக்குள் மிதக்கும் மிதவைகள்
  வாழ்க்கையில் நீங்காத நினைவுகள்
  தேனில் உருவாகும் கவிதைகள்
  இதயத்தில் மலரும் புதுமைகள்

  காதலை சொல்ல தவிப்பு
  அடிக்கடி பார்க்க துடிப்பு
  பார்த்ததும் பேச மறப்பு
  வானத்தின் மீது பறப்பு
  எண்ணங்கள் மலைப்பு

  தினந்தோறும் வளர்ச்சி
  மனதுக்குள் கிளர்ச்சி
  காதல் கதை மலர்ச்சி
  பரிசுகள் தரும் புரட்சி
  கை சேரும் முயற்சி

  பூங்காவில் ஆரம்பம்
  கடற்கரையில் தொடரும்
  பேருந்தில் பயணம்
  நூலகத்தில் பரிமாறும்
  வாழ்க்கையின் பொக்கிஷம்

  பூக்கள் பூக்கும் மென்மை
  கவிதை தரும் இனிமை
  காதல் மிக கொடுமை
  பசி தாகம் இல்லாமை
  திருமண நாளே பெருமை

  எஸ் வீ ராகவன் சென்னை

 7. *மாசி மகம் 16/2/22*

  மாசி மாதத்தில்
  பௌர்ணமி அன்று
  மக நட்சத்திர நாளே
  சிறப்பான மாசி மகம்
  ஜகத்தை ஆளும்
  மாசி மகம் பிறந்தவர்கள்
  மிகுந்த சக்தியும்
  திறமை உள்ளவர்கள்
  மற்றவர்களுக்கு உதவும் குணம்
  இளகிய மனம்
  மூதோதையார் கடன்
  கழிக்கும் தினம்

  திருமால் பூமியை மீட்க
  வராக அவதாரம்
  எடுத்த சிறப்பு தினம்
  சிவ பெருமான்
  கும்பகோணம்
  மகாமக குளத்தில்
  நவ நதிகளுக்கு
  பாவ விமோசனம்
  தந்த தினத்தில்
  புனித நீராடினால்
  கங்கை நீராடிய பலன்
  பாவங்கள் தீர்க்கும்
  தோஷங்கள் விலகும்
  திருமண தடை நீங்கும்
  உமாதேவி தாட்சாயணியாக
  உதித்த தினமாகும்
  முருகன் தந்தைக்கு
  பிரவண உபதேசம்
  செய்த நாளாகும்
  அருமையான இந்நாளில்
  புனித நீராடி
  இறைவனை வணங்கி
  நற்பலன்கள் பெறுவோம்

  எஸ் வீ ராகவன் சென்னை

 8. *பிறைசூடன் அகவை தினம கவிதை*

  திருவாரூர் மாவட்ட மற்றொரு கலைஞர்
  நன்னிலம் தந்த பொன் நிலம்
  ஜெருசலேம் மருத்துவர் விருது
  கலைமாமணி விருது
  கவிநியாணி விருது
  ஆட்டமா தேரோட்டமா.. உச்சம் தொட்டது
  மீனம்மா மீனம்மா. உயரம் அடைந்தது
  இதயமே இதயமே.. மனதை மயக்கியது
  சோலை பசுங்கிளி. உருக்கியது
  காதல் கவிதைகள்.. கலக்கியது
  கலகலக்கும் மணியோசை.. இசைக்கும்
  தென்றல் தான்.. தாலாட்டும்
  அழகு நிலவு.. பாராட்டும்
  வெத்தலை போட்ட.. கானா விருந்து
  பட்டு வச்ச ரோஜா.. கவலைக்கு மருந்து
  பல படங்களில் உரையாடல் சிறப்பு
  சில படங்களில் நடிகர் செழிப்பு
  தொலைக்காட்சியில் கால் பதிப்பு
  காலத்தை வென்ற
  பாடல்கள் தந்த கவிஞர்
  பிறைசூடன்
  அனைவர் மனதில் வாழ்வார்

  எஸ் வீ ராகவன் சென்னை

 9. தாரா says:

  தலைப்பு – காதலர் தினம்

  அழகான காதல் காதலை சொல்வதை

  விட உணர்ந்தால் தான் தெரியும் அது

  சுகமானது மிக அழகானது அன்பு

  என்றும் குறையாது நாம்

  வாழ்க்கையில் எத்தனை பேர் வந்து

  சென்றாலும் நாம் மனதிற்கு பிடித்த

  அவளை கண்டு விட்டால் அந்த நொடி

  வரும் மாற்றம் இனம் புரியாத

  சந்தோசம் ‌காதல் ரோஜா கடந்து

  செல்லும் நேரம் கண் இமைக்காமல்

  பார்க்கும் தருணம் காதல் பூக்கள்

  பூக்கும் இதயம் அவளை நேசிக்கும்

 10. கவிஞன் க.தனபால் மதுரை says:

  வன்கொடுமை
  …………………………….

  காமக் கண் கொண்டு பார்க்கும் கயவர்கள்..

  கைது செய்யப்பட வேண்டியவர்கள் அல்ல..

  கருவறுக்க பட வேண்டியவர்கள்…

  இனியும் எங்கள் கைகளில் அடிமை விளங்கு பூட்ட வேண்டாம்..

  பெண்ணடிமைத்தனத்தை உடைத்தெறிந்து

  பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வலம் வருவோம்..

  ஆண்மகனே அன்பால் என்னை ஆள நினைத்தால்
  அடிபணிவேன்..

  அதிகாரத்தால் ஆள நினைத்தால் அழித்துவிடுவேன்.

  பெண் என்பவள் இந்த பூமியில் வாழ பிறந்தவள் அல்ல..

  இந்த பூமியை ஆளப்பிறந்தவள்

 11. தாரா says:

  தலைப்பு – காதலர் தினம்

  அழகான காதல் காதலை சொல்வதை

  விட உணர்ந்தால் தான் தெரியும் அது

  சுகமானது மிக அழகானது அன்பு

  என்றும் குறையாது நாம்

  வாழ்க்கையில் எத்தனை பேர் வந்து

  சென்றாலும் நாம் மனதிற்கு பிடித்த

  அவளை கண்டு விட்டால் அந்த நொடி

  வரும் மாற்றம் இனம் புரியாத

  சந்தோசம் ‌காதல் ரோஜா கடந்து

  செல்லும் நேரம் கண் இமைக்காமல்

  பார்க்கும் தருணம் காதல் பூக்கள்

  பூக்கும் இதயம் அவளை நேசிக்கும்

  உலகமே அழகாகும் காதலே அதிசயம்

  ஆகும் காதல் வந்தால் வாழ்க்கையே

  மிக அழகாகும்

 12. Shivaraj says:

  பௌர்ணமி நிலா

  இரவேல்லாம் வாடுதே…..
  தனிமையை சாடுதே…..
  இனையொன்றை தேடுதே….
  இளங்காற்றை வறுடுதே…..
  மேக ஊடலில் கூடுதே…..
  கடல் அலைகளில் தவழுதே….
  வின் மீனிடம் வருந்துதே…
  தூக்கத்தை மறந்ததே….
  தினந்தோறும் கரையுதே….
  பொழுதோடு போகுதே….
  தனிமையால் மறுகுதே….
  இருந்தும்…!
  வெண்முகில் பொழியுதே….
  எனக்காக தினம் வருகுதே….
  இனிமையால் இதயத்தை உருக்குதே…..
  விடியும் வரை என்னோடு இருக்குதே……
  நான் ரசிக்கும்…… “பௌர்ணமி நிலா”..!

  சிவராஜ் மணிவண்ணன்.வேலூர்

 13. சிவராஜ் மணிவண்ணன் says:

  காதலர் தினம்……

  என்… எழுத்து…!
  உன்னால்… வடிவமாகி….!
  ஊமையாய் நான் கொற்த்த வார்த்தைகள்…
  உவமையாய்….!
  உன்னிடத்தில் வந்தால்……!
  என் செய்வேன்….! பெண்ணே….
  எண்ணமெல்லாம் நீ இருக்க….
  எழுத்திலும் நீயாகி போனாய்…..!
  வார்த்தைகள் வற்றி…. மௌனமே….! காதலாய்….!
  உன்னிடத்தில் நான் கொடுக்க….!
  பார்வை பரிமாற்றத்தில் பார் மறந்து….!
  இருவர் கலந்து ஓர் இதயமாய்….!
  ஒரு கூட்டில் இரு உயிராய்….
  இவ்வுலகம் இருக்கும் வரை நாம் காதல்….வாழுமே….!
  இன்று போல் என்றும்……!

  சிவராஜ் மணிவண்ணன் வேலூர்

 14. நித்யாநரேஷ் says:

  தலைப்பு: பௌர்ணமி நிலவு

  விண்ணில் விளையாடும்
  வெண்ணிற பந்தே!
  மக்களின் மனம் கவர்ந்த
  மன்னவனே!
  அழகால் ஆட்சி செய்யும்
  அபூர்வ அரசே!
  தனித்தவனை தோழனாக்கிடும் வித்தகனே!
  தன்னிலை மாறியும் மாறாத புகழுனதே!
  பூமி மகளின் இணைபிரியா சகோதரனே!
  காலமெல்லாம் உழைத்து களைத்தும்
  வருத்தம் இல்லாத வாலிபனே!
  கவிதையில் கருவாய் நீ இருந்தால்
  கவிஞர் கைகளில் வரிகள் ஊற்றெடுக்காதோ!

 15. M.Elangovan says:

  தென்றல் சுகம்
  ————————
  உச்சி வெயிலுலே
  பிச்சிப் போட்ட
  பச்சை புல்லுல
  குத்த வச்சப்போ
  உடம்பெல்லாம்
  பச்சை மிளகா
  அரைச்சி
  பூசினதாட்டம்
  அத்தனை எரிச்சல்
  அம்மம்மா

  பொழுதெறங்கும்
  நேரம்
  களை பிடிங்கி
  பெத்த பிள்ளையா
  காத்து
  மழை தண்ணி
  பேஞ்சி
  குல தெய்வ
  அருளால
  தலை தூக்கும்
  விதை
  கவலைகளை
  கடன்களையும்
  குறைச்சிடுமோ
  கண்ணுத்தண்ணி
  காலில் விழ

  இளைப்பாற
  அந்த ஒத்த பனை
  மரத்தடியிலே
  சில நொடி
  உட்காரையிலே

  சிலு சிலுன்னு
  முகம் துடைக்கும்
  அந்த மலை காத்து
  மனசுக்குள்ளே
  தென்றலா சுகம் ஏத்த
  பட்ட பாடெல்லாம்
  பறந்து போகுதே
  பசுவும் ஆடும்
  மேயும் இடம்
  மறந்து போகுதே
  நேற்றல்ல
  இன்றல்ல
  என்றுமே
  சேற்றிலே
  காலுன்றி
  சோர்ந்து போய்
  பொழுது போகும்
  நேரத்தில
  பொலியில காலை
  வெச்சு
  மண் வெட்டிய
  தோளில் போட
  மாலை நேரத்து
  தென்றல் சுகமே
  சுகமே
  சுகமே!,,

  கவிஞர்.இரட்டைக்கரடு மு.இளங்கோவன்
  அந்தியூர்

 16. மு.இளங்கோவன் says:

  நாங்கள் கண்ட காதல்!,,,
  ————————————-

  திருவிழா கூட்டத்து
  ஒரு விழிப் பார்வை

  கருவேலாங்காட்டு
  காத்திருப்பில் வேர்வை

  சந்திக்க
  இலை மறைக்காயாய்
  சமிக்கைககள்

  சமூக இடைவெளிகள்
  சத்தியம் உண்டு

  எதிர் பாராமல்
  எங்கோ பார்க்கையில்

  எழும் எங்களின்
  உதறல்கள் உன்னதமே

  அலைபேசி
  கடவு சொல்
  இல்லை

  தொலை தூர
  தகவல் இல்லை

  தொடுதிரையில்
  முகம் பதிக்கவில்லை

  தொட்டு பேசும்
  பழக்கமுமில்லை

  பட்டும் படாமலே
  கட்டி காத்தோம்
  அன்றைய
  காதலை

  விட்டால் போதும்
  சிட்டாய் பறந்து
  கெட்டு திரும்பும்
  இன்றைய
  இன்டர் நெட்
  காதல் !,,,

  கவிஞர்.இரட்டைக்கரடு மு.இளங்கோவன்
  அந்தியூர்!,,,

 17. தாரா says:

  தலைப்பு – காதல் தினம்

  காகிதாத்தில் எழுதினேன் அதுவே

  அழகானது கண்களுக்கு புது

  விருந்தானது வார்த்தைகள் ஏதோ

  புரிகின்றது அதை மனம் கவிதை

  என சொல்கின்றது காதலின்

  அறிகுறி என ‌தெரிகின்றது அவளை

  நினைத்தாலே கவிதை தோன்றுகிறது

  கடல் அலை போல் வார்த்தை

  வருகிறது பேனாவே எழுத துடிக்கிறது

  பெண்ணே நீ வந்த பின்பு அலை

  பாயும் மனது அழகான பொழுது

  பெண்ணே நீ என் வாழ்வில் புதுநிலவு

 18. ர.நந்தினி தர்பேஸ்வரன் says:

  விரும்பிய தலைப்பு: குமுறும் பட்டாம்பூச்சி

  அறியாமல் தானே முட்டையிட்டேன்

  இலையின் அடியில் ,

  மனிதர்கள் எனும் கொலைஞர்கள்

  கண்கள் அறியாமல் தானே

  முட்டையிட்டேன் இலையின் அடியில்….

  புழுவாய் மாறியபோது

  புலன்கள் இல்லை,

  ஒதுக்கி வைத்தது உலகம்

  அருவருப்பாய்….

  அதிலும் தொட்டால்

  எதிர்ப்பை காட்டினேன் அரிப்பாய்….

  கண்ணில் பட்டால் கசக்கி விடுவர்

  என்றே கூட்டுக்குள்

  சிறைச்சாலை கண்டேன் ….

  பட்டாம்பூச்சி பெண்ணாய்

  சிறகடித்து திரிய ஆசைதான் எனக்கு

  குமுறுகிறேன் சமுதாய கூட்டுக்குள்

  சுதந்திரம் எனும் சிறகை விரிக்க…..

  சிறகுகள் முளைத்தன

  சிங்காரமாய் புறப்பட்டேன்

  மலர்மகள் தேன் விருந்து வைத்தாள்…..

  மண்ணின் மகன் ஓடோடி

  விரட்டினான், ஓடினேன்,,

  காற்றைக் கிழிக்க முடியவில்லை.

  சிறகுகள் கழிந்தன

  மேட்டுவ மக்களின் கைகளால்

  கீழே விழுந்து விட்டேன்

  விடவில்லை சமுதாயம்

  மண்ணின் மகன்

  என் உடலில்

  கயிறு கட்டி இஷ்டப்படி இழுக்கின்றான் ….

  சுதந்திர இறக்கை உண்டு எனக்கு

  ஆனால் கைதியாய் கிடக்கின்றேன்

  அவனிட்ட நூலில்

  ஆம்

  பட்டாம்பூச்சி பெண்ணாய்

  அவன் இட்ட கயிறில்

  பட்டிதொட்டி மீனாட்சிக்கு

  டாட் காம் சிட்டியில்

  என்ன வேலை

  தாலி கட்டிக்கிட்டு

  கிடப்பில் கிடக்கும்

  புத்தகங்களை

  தூசி தட்டி

  அடுக்கி வை போதும்….

  கண்ணில் ஈரம்

  கையில் கனவு

  சிலையாகத் தான் தெரிந்தேன் அவனுக்கு

  என்னில் வாழும் கலை தெரியவில்லை,,,

  சிலையை கையெடுத்து

  வணங்கும் மக்கள்

  பெண்ணை சிலையாய்

  நிற்க வைத்து விடுகின்றனர்

  கலாச்சார உளியின் நுனியில்…

  வாழும் பெண்ணின் இலட்சியம்

  சாகும்வரை கனவா? கணவா?

  குமுறுகிறேன் கூட்டுக்குள்

  பட்டாம்பூச்சியாய்……………

 19. ர.நந்தினி தர்பேஸ்வரன் says:

  விரும்பிய தலைப்பு:

  குமுறும் பட்டாம்பூச்சி

  அறியாமல் தானே முட்டையிட்டேன்

  இலையின் அடியில் ,

  மனிதர்கள் எனும் கொலைஞர்கள்

  கண்கள் அறியாமல் தானே

  முட்டையிட்டேன் இலையின் அடியில்….

  புழுவாய் மாறியபோது

  புலன்கள் இல்லை,

  ஒதுக்கி வைத்தது உலகம்

  அருவருப்பாய்….

  அதிலும் தொட்டால்

  எதிர்ப்பை காட்டினேன் அரிப்பாய்….

  கண்ணில் பட்டால் கசக்கி விடுவர்

  என்றே கூட்டுக்குள்

  சிறைச்சாலை கண்டேன் ….

  பட்டாம்பூச்சி பெண்ணாய்

  சிறகடித்து திரிய ஆசைதான் எனக்கு

  குமுறுகிறேன் சமுதாய கூட்டுக்குள்

  சுதந்திரம் எனும் சிறகை விரிக்க…..

  சிறகுகள் முளைத்தன

  சிங்காரமாய் புறப்பட்டேன்

  மலர்மகள் தேன் விருந்து வைத்தாள்…..

  மண்ணின் மகன் ஓடோடி

  விரட்டினான், ஓடினேன்,,

  காற்றைக் கிழிக்க முடியவில்லை.

  சிறகுகள் கழிந்தன

  மேட்டுவ மக்களின் கைகளால்

  கீழே விழுந்து விட்டேன்

  விடவில்லை சமுதாயம்

  மண்ணின் மகன்

  என் உடலில்

  கயிறு கட்டி இஷ்டப்படி இழுக்கின்றான் ….

  சுதந்திர இறக்கை உண்டு எனக்கு

  ஆனால் கைதியாய் கிடக்கின்றேன்

  அவனிட்ட நூலில்

  ஆம்

  பட்டாம்பூச்சி பெண்ணாய்

  அவன் இட்ட கயிறில்

  பட்டிதொட்டி மீனாட்சிக்கு

  டாட் காம் சிட்டியில்

  என்ன வேலை

  தாலி கட்டிக்கிட்டு

  கிடப்பில் கிடக்கும்

  புத்தகங்களை

  தூசி தட்டி

  அடுக்கி வை போதும்….

  கண்ணில் ஈரம்

  கையில் கனவு

  சிலையாகத் தான் தெரிந்தேன் அவனுக்கு

  என்னில் வாழும் கலை தெரியவில்லை,,,

  சிலையை கையெடுத்து

  வணங்கும் மக்கள்

  பெண்ணை சிலையாய்

  நிற்க வைத்து விடுகின்றனர்

  கலாச்சார உளியின் நுனியில்…

  வாழும் பெண்ணின் இலட்சியம்

  சாகும்வரை கனவா? கணவா?

  குமுறுகிறேன் கூட்டுக்குள்

  பட்டாம்பூச்சியாய்……………

 20. மு. முருகேஸ்வரி says:

  மு. முருகேஸ்வரி

  தலைப்பு: விரும்பிய தலைப்பு
  (யாம் அறியோமே…)

  சாலையோரக் காதல்
  சாளரம் வரை
  பயணிக்க..

  விழியோர மொழிகள்
  வீடு வரை
  பாடம் படிக்க…

  கரங்கள் இரண்டும்
  சமரசம் பேசியது…

  ஆனால்,
  கண்ணே!
  சாதியெனும் சாயத்தை
  நம் காதலுக்கும்
  பூசிடுவரோ?
  யாம் அறியோமே…!

 21. மு.இளங்கோவன் says:

  சுண்டியிழுத்த
  சுவையெங்கே?
  ———————

  வீதியோரம்
  கல் கூட்டி
  விறகடுப்பில்
  சுள்ளியிட்டு
  ஊதுகுழலும்
  ஊற்றி தந்த
  உன்னத சுவைதனை
  விரல் சூப்பி உண்டதொரு காலம்

  பாதி வெந்தும்
  வேகாததுமாய்

  விரைவு உணவில்
  வயிறு புண்ணாகி

  வெறுத்துப்போய்
  வீசி
  விணாக்கி
  விரைவது இந்த காலம்!,,,

 22. கார்டிலியா மோகன்பாபு says:

  பாறையோடு பல நாள்
  போராடி முட்டி மோதி
  வெளி வரும்
  சிறு செடியின் வெற்றி
  ஆச்சரியத்துக்குரியதே!!
  பாராட்டப்படவேண்டியதே!!

  எனினும்!!!

  தன் இயல்புத் தன்மையை
  கொஞ்சம் இளக்கிக் கொண்டு
  செடியின் வெற்றிக்கு காரணமான
  அந்த பாறையின் ஒத்துழைப்பும்
  கவனத்துக்குரியதே!!
  பாராட்டுதலுக்குரியதே!!!

  ——— கவனிக்கப்படவேண்டிய
  மறுப்பக்கம் !!!!

 23. M.அர்ச்சனாதேவி says:

  விரும்பிய தலைப்பு : தீது தரும் போதை

  போதை உன்னைப் பேதையாக்கும்
  பேதை நீ செல்லும் பாதை மாற்றும் – அப்
  பாதை உன்னை வாதைக்குள்ளாக்கும்….
  போதையைத் தள்ளிவிடு – தாயின் போதகத்தைத் தள்ளிவிடாதே….
  நீ எடுத்துக் கொள்ளும் போதை – ஒருநாள்
  உன்னையே எடுத்துக் கொள்ளும்….
  போதைப் பலத் தீமையைத் தரும் – அது
  விட்டில் பெரும் சுமையாய் வந்து விழும்….
  போதை அருந்தி நடப்பாய் தள்ளாடி – உன்
  குடும்பமோ போகும் வீதியில் அள்ளாடி….
  போதையால் உன் உடல் கெட்டு – அதனால்
  நீ ஆவாய் உன் மதிக்கெட்டு – பின்
  நடப்பாய் உன் மானங்கெட்டு – எனவே
  நீ அதைக் கைவிட்டு
  திருந்திடு உன் மனம்விட்டு….
  இனியும் போதைப் தருவதைத் தொடாதே – அதை
  அருந்த உன் மனதை அதனிடம் விடாதே….
  உன் மனதை நல்வழியில் செலுத்து – அதுவே
  உன்னைக் கொண்டுச் சேர்க்கும் நல் இடத்து….

  ‌‌‌

 24. தாரா says:

  தலைப்பு: பௌர்ணமி நிலவு

  இரவு என்ற வார்த்தைக்கு

  நிலவுதான் அழகு என் வாசல் வந்த

  பௌர்ணமி நிலவு நீ பேரழாகு பாதி

  நாள் தேய்பிறையாக மறைந்து பின்

  வளர்பிறையாக நீ வளர்ந்து

  வானிலே நீ மலர்ந்து வலம் வரும்

  வெண்ணிலாவு வெளிச்சம் தரும்

  பௌர்ணமி நிலவு இரவில் பிறந்து

  விடியும் வரை விழித்து வானம்

  எனும் போர்வையில் வாழும்

  வெள்ளி நிலவு உன் அழகை கண்டு

  ரசித்தேன் பல இரவு உன்னை

  வர்ணிக்காக வார்த்தை இல்லை

  வண்ணநிலவு

 25. Cordeliya Mohanbabu says:

  நீயாய் மாறிவிட்டேன்
  முழுவதுமாய் நான்!!
  உணர்கிறேன் உன்னை
  அணுஅணுவாய் இப்போது!!!

  எல்லோர்க்கும்
  எளிதாய் கிடைத்துவிட்ட
  பொக்கிஷம் நீ!!!

  தூக்கம் தொலைத்தேன்…
  உன் ஞாபகம்!!
  உண்ண மறந்தேன்…
  உன் ஞாபகம்!!
  பிடித்ததெல்லாம் புதைத்தேன்…
  உன் ஞாபகம்!!
  வலி மறைத்தேன்…
  உன் ஞாபகம்!!

  உணர்ந்தேன்…
  நீயாய் இருப்பது
  அவ்வளவு எளிதல்ல
  என்று!!!

  இருந்தும்
  உன்னை உணரும்
  ஒவ்வொருத் தருணமும்
  சுகம் எனக்கு!!!

  கவிதையின் பெயர்: அம்மாவாக மகள்
  பெயர்: கார்டிலியா மோகன்பாபு

 26. கோவை சுபா says:

  காதலர் தினம்

  ❤❤
  முள்ளில் பூத்த “ரோஜா”
  என் நெஞ்சில் பூத்தது
  முள்ளில்லாமல்
  காதல் ரோஜாவாக… 💕💕

  காதல் உள்ளங்களுக்கு
  காதலர் தினத்தின்
  அன்பான வாழ்த்துக்கள்.. ♥♥
  –கோவை சுபா

 27. வேல் says:

  காதலர் தினம் :

  அமைதியின் சிகரமாக வாழ்ந்த
  என்னை
  அன்பின் மூலம் கட்டி இழுத்தாயே !

  பூமியின் அழகை பார்த்து நடந்த நீ
  பாதை மறந்து என்னை நடக்க
  வைத்தாயே !

  வாசத்திற்கே உனை பிடித்திடும் என்
  வாழ்க்கைக்கு சொந்தக்காரி நீ
  மட்டும் தானே !

  வாய்ப்பு எனும் பொக்கிஷம் எனக்கு
  கிடைத்ததே
  வளமான எதிர்காலம் நீ வந்ததனால்
  மட்டுமே !

  எத்தனை அழகுக்கு மயங்காத நான்
  உன் அழகான குணத்தை பார்த்து
  மயங்கினேனே !

  உன்னை கண்ட நாள் முதல் நான்
  என்னையே மறந்து முகவரியையும்
  தொலைத்தேனே !

  இரவில் கூட உனை பற்றிய
  நினைப்பு
  இசையின் வழியில் நடனமாடும்
  கனவினிலே !

  அன்பின் இலக்கணமான உன்னை
  மணமுடித்து இன்பமான உன் அன்புக்கு நான்
  அடிமையே !

  உனை பார்த்து மயங்கி போன
  நாளை தான்
  நம்முடைய காதலர் தினமான நாள் !

  என்றுமே …!!!

  வேல் …

 28. தாரா says:

  தலைப்பு : சிவராத்திரி

  ஆதியும் இல்லாத, அந்தமும் இல்லாத

  அருட்பெரும் ஜோதியனாய், லிங்க

  வடிவெடுத்து நாளே மகாசிவராத்திரி.

  சிந்தையில் சிவனை நினைத்து

  நான்கு கால பூஜை செய்து

  இறைவனின் பாதம் பணிந்து நாம்

  பாவம் தொலைத்து விடிய விடிய

  கண் விழித்து சிவபெருமானின்

  பெயரை பூஜிக்க வாழ்வில் எல்லாம்

  வளமும் கிடைக்கும் சிவராத்திரி

  சிறப்பானது ‌சிந்தையில் சிவன்

  வாழ்வது

 29. ஸ்ரீதர் செழியன் says:

  கவிதைப் போட்டி 2022 – 02

  திருவள்ளுவர் ஒரு சகாப்தம்

  மூன்றடியில் அளந்தான்
  உலகை வாமனன்
  ஒன்றே முக்கால் அடியில்
  அதை முடித்தான் வள்ளுவன்
  நூற்று முப்பத்து மூன்று
  அதிகாரங்களில்
  ஆயிரத்து முந்நூற்று முப்பது
  குறட்பாக்களில்
  அறத்தின் சாற்றை அழகாய்
  பிழிந்து
  முப்பால் என வகையாய்
  பிரித்து
  எக்காலத்திற்கும் பொருந்த
  தொகுத்து
  அனைவருக்கும் உகந்த
  அமுதாய் மாற்றி
  பருகுக எனவே
  பகர்ந்தான் புலவன்
  உலகத்துக்கு முந்திய
  முதல் அறநூலாம்
  தமிழில் வந்திட்ட
  எங்கள் திருக்குறளாம்
  இதை எழுதிட்ட ஐயன்
  திருவள்ளுவர்
  எப்போதும் இங்கே
  ஒரு சகாப்தமாவார்

 30. ஸ்ரீதர் செழியன் says:

  கவிதைப் போட்டி 2022 -02

  தலைப்பு

  பௌர்ணமி நிலவு

  முடிவிலா வானில்
  மேகக் கடலில்
  மெல்ல நீந்துது
  முழுவட்ட நிலா

  இரவின் மடியில்
  இதம் தரும் குளிரில்
  அரவம் இன்றி
  வான்வழி வீதியில்

  மௌன மொழியில்
  வெளிச்சம் பரப்பி
  யெளன அழகை
  காட்சிகள் ஆக்கி

  பௌர்ணமி நிலவது
  நகர்வதைக் காணீர்

 31. இரட்டைக்கரடு மு.இளங்கோவன் says:

  தலைப்பு;கைப்பேசி
  ————————————
  ஐந்தங்குல பெட்டிக்குள்ளே
  உலகம் அடங்குது

  குதித்தாடும்
  பிள்ளைகளும்
  அதிலே முடங்குது

  நல்லது கெட்டது
  நாளும் சுமக்குது

  வையகமே
  தலை கவிழ்ந்து
  கிடக்குது

  கையடக்கத்தில்
  தினம்
  வருடி மகிழுது

  ஐயகோ அச்சம்
  வந்து வாட்டுது!,,,

  இரட்டைக்கரடு மு.இளங்கோவன்
  அந்தியூர்.

 32. அபி says:

  தலைப்பு : வன்கொடுமை

  மீண்டும்
  மறைவாயோ
  என் பௌர்ணமியே!

  பார்வைகொண்டு தாக்க,
  பேதையாகி நின்றாயோ?

  விரல்கொண்டு தீண்ட
  சிலையாகிப் போனாயோ?

  உள்ளொன்று கொண்டு
  புறமொன்று பிதற்ற
  ஊமையாய் ஆனாயோ?

  உணர்வுகளுடன் விளையாட
  பொம்மையாய் போனாயோ?

  என்
  மீசையில்லா பாரதியே!

  வெட்டிவீச கத்தி வேண்டாம்
  உன் பார்வை போதும்;

  தொடவரும் அரக்கர்களை தடுக்க
  உன் கைகள் போதும்;

  கேட்கவே பிறந்தாய் நீ!
  கேள்வி கேட்கவே பிறந்தாய் நீ

  என்
  மீசையில்லா பாரதியே!
  உணர்வுகளால் தேயாதே
  அண்ணாந்து பார்க்க,
  உயர்ந்தே நில்
  என்(றும்) பௌர்ணமியாய்!

 33. அபி says:

  அபி
  தலைப்பு – என்னவனே
  ———————————–

  கண்கள் காண்பதும் உனையே,
  நீயில்லா நொடியில்
  கலங்கி நிற்பதும் உனக்காகவே,
  வெட்கத்தில் நாணி நிற்பதும்
  உன்னருகிலே,
  கண்கள் தேடித்திரிவதும்
  உன்னையே,
  சிலநேரம்
  அழுதுவடிவதும் உன்னாலே,
  என் கடைசி நிமிடத்தில்
  நான் தேடுவதும்
  உன் முகமே…