கவிதைப் போட்டி 2021_9

சென்றமாத போட்டி நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, சமீபத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன – kavithai potti 9

பொது தலைப்புகள்

 1. கண்ணதாசனை போற்றுவோம்
 2. விநாயகனே போற்றி
 3. பாரதியார் நூற்றாண்டு
 4. தங்களுக்கு விருப்பமான ஒரு தலைப்பு
 5. செப்டம்பர் பூக்கள்

இலக்கியம் சார்ந்த தலைப்புகள்

 1. தங்கள் விரும்பும் திருக்குறள் பற்றி ஒரு கவிதை
 2. நீரோடையில் பதிவிட்ட புதிய ஆத்திசூடி பாடல் விளக்கத்தை வாசித்து அதில் ஒரு பாடலை தேர்ந்தெடுத்து கவிதை எழுதவும்
 3. யாதும் ஊரே யாவரும் கேளிர்

மேலே குறிப்பிட்ட தலைப்பில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.

எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வெற்றி பெரும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 8. போட்டி ஆகஸ்ட் 31 வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். ஒரு கவிதைக்கும் இரண்டாம் கவிதைக்கும் ஓரிரு நாட்களாவது இடைவெளி இருக்க வேண்டும். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

27 Responses

 1. அ.கலையரசன் says:

  [பனையோலை]

  01.
  வானவன் விடும் அம்பு
  மழையிலிருந்து
  உழவன் வீட்டை தெம்பாய்
  கவச படை கட்டி
  காப்பது
  பனையோலை!!

  2.
  சங்கத்தமிழை
  சுரங்கமாய்
  சுரக்க வைத்ததோடு

  தங்கத்தமிழாய்
  பந்தம் வைத்து
  காத்து நின்றதும்

  கண்ணித்தமிழை
  மண்ணிலெங்கும்
  கணினித்தமிழன் பார்க்க வைத்தததும்

  செந்தமிழரின் வாழ்க்கையை
  பைந்தமிழ் புலவரின்
  கையினால் சுமந்துக் கொண்டது
  பனையோலை!

  3.
  தசையெல்லாம் சிதைந்தும்
  நரம்புகள் சுருங்கியும்
  எலும்புகள் வலுவிழந்தும்
  பண்ணீர் ஊறும் வயலில்
  தண்ணீரில்லாததை கண்டு
  கண்ணீர் விட்டும்
  அரசியல்வாதிகளின்
  அலைகழிப்பால்
  உருக்குழையும் உழவருக்கு
  அன்னையாய் விசிறிவிடுவது
  பனையோலையே!!

 2. தமயந்தி இரத்தினம் says:

  விநாயகனே போற்றி

  தங்குத் தடை எவை நெருங்கினாலும் சுற்றி../
  பொங்கும் கருணையிலே, அவை அனைத்தும் நீக்கிடுவாயே அகற்றி./

  பக்தியின் நிழலிலே தொடங்கும் செயல்களுக்கு , நித்தம் அருள்வாய் வெற்றி./
  சக்தியின் ஒளியாய் விளங்கும் புதல்வனுக்குச், சிரம் பணியும் மாலை சாற்றி./

  சதுர்த்தி திதியில் கொண்டாடவே நாழும் தீபம் ஏற்றி./
  விருத்தி காணுமே வாழ்வு உயர்வின் உயர்வால் ஊற்றி./

  உனையென்றும் வணங்கவே துடிக்கும் இரு கரம் பற்றி.
  வினைத் தீர்க்கும் விநாயகனே போற்றி போற்றி./

 3. Jeyabala Murugan says:

  6. தங்களுக்கு விருப்பமான ஒரு தலைப்பு

  தலைப்பு: நான்(நீ) உ(எ)ன் கண்ணாடி!

  Ø என்னையே பார்த்து பார்த்து
  உன்முகம் மறந்து நான்தான்
  நீ என நினைத்து கொள்கிறாய்!

  Ø எனக்கு பிடித்த யாவையும் நான்
  கண்டு அறியும் முன்னே உனக்கும்
  பிடித்ததாய் மாற்றிக் கொள்கிறாய்!

  Ø என் கண்கள் பார்த்தே என்
  மனதில் உள்ள விருப்புகளை
  வெறுப்புகளை படித்து விடுகிறாய்!

  Ø என்னுடைய முகம் பார்த்தே நான்
  பேச வந்த வார்த்தைகள்
  யாவையும் பேசி விடுகிறாய்!

  Ø நான் தோற்று விட்டதாய் இந்த
  உலகம் சொன்ன போதெல்லாம்
  உன் தோளில் என் முகம் சாத்தி
  புதுசக்தியை என்னுள் தருகிறாய்!

  Ø வருத்தத்துடன் உன் அருகில் வந்த
  போதெல்லாம் உன் புடவை வாசனையால்
  இந்த மனதுக்கு வசந்தம் தருகிறாய்!

  Ø தாயே! நீ கொடுத்த முத்தத்தில்
  இருந்த எச்சிலின் ஈரம் இன்றும் உள்
  நின்று உயிரைத் தொட்டு வருவதால்தான்
  இன்னும் நல்ல மனிதனாக வாழ்கிறேன்!

 4. Viswanathan says:

  பூமியில் மங்கையராக
  பிறந்து
  மாங்கல்ய பந்தத்தில்
  மனைவியாக வாழ்த்து
  தாம்பத்ய உறவில்
  அன்னையாக
  மறு ஜென்மம் எடுத்த..
  பெண்ணினமே போற்றி
  வணங்குகிறேன்.!!
  ….விசு….

 5. லோகநாயகி.சு says:

  கவிதை போட்டி: 9

  பெண்ணியம் போற்றுவோம்::

  பீடி கட்டிற்க்கும்,
  மது குடுவைக்கும்,
  மகுடி வாசித்து மூடத்தனமாய் முடங்கிக் கிடந்த காலங்கள் கரையட்டும்…!

  உடலிர்க்கும்,
  உணர்விர்க்கும்
  பசி எடுத்தால்
  பா(வை)வப்பெண்ணாக
  பரிணமித்தது போதும்…
  இனியாவது
  அக்னிச்சிறகாய்
  அவதரி…!

  புகைப்படலம் சூடிய அடுப்படி உன் அரண்மனை இல்லை…!
  ஊது குழல் உன் செங்கோல் இல்லை…!

  மடையர்களுக்கு
  மந்திரியாய்
  மாறடித்தது போதும்
  சீறிட்டு சிங்கப்பெண்
  என்று சீருடை உடுத்து…!

  அடையாளம் தேடித்தேடி
  நீ அனாதையாய் மாறி விடாதே
  அடையாளம் நீ என அந்நியரை தேடவை…!

  உன்னைக் கேளி கிண்டல் செய்வோரை கோடிட்டு ஒதுக்கி
  நீ கேளிச்சித்திரமாக்கிக் கொள்…!

  ஆணிற்கு பெண் சமம் என்ற சலுகையை மாற்றி
  பெண்ணிற்கு ஆண் சமம் என்ற சரித்திரம் இயற்றி
  வா இனி ஒரு புதிய உலகம் செய்வோம்…! பெண்ணே…..

  லோகநாயகிசுரேஷ்….

 6. D.luvia vincy. says:

  யாதும் ஊரே யாவரும் கேளிர்!!

  “அ” ன்பே அடிப்படை.. அதற்கு,
  “ஆ” தாரம் ஆணிவேரான அன்பே…
  “இ” ன்பத்தை இயற்றுவதும் அன்பே…
  “ஈ” தலை சூட்டுவதும் அன்பே…
  “உ” ள்ளத்தை உருக்குவதும் அன்பே…
  “ஊ” சலாய் நிழலாடுவதும் அன்பே…(இவ்வுலகில்)
  “எ” ல்லா ஊரினரும் நம்ஊரினரே…
  எனக் கணித்தவரும் அன்பின் கணியனே!!
  “ஏ” துவாய் ஏடுகளில் எழுதி
  வைத்தாயே…அன்பே ஆதாரமென்று!!
  “ஐ” யம் அகன்று போகுமே..அன்புப்
  பாடலில்!!
  “ஒ” தினாயே உம் பாடலில், அன்பு
  வாழ்க்கையின் ஆயிரமர்த்தங்களை!!
  “ஓ” யவே இல்லையே உம் எழுதுகோலின்
  முனை….
  “ஔ” வையைப் போல் ஆயிரமாண்டு வாழ
  வாழ்க்கையின் சுவையை பாடல் வரி
  மூலம் வாழ வைத்தாயே!!

  “அஃதே”, கணியனின் கனிவான அன்பு
  வரிகள்!!
  – தே‌.லூவியா வின்சி.

 7. *விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்*
  விக்னங்கள் தீர்ப்பதால் விக்னேஷ்வரன்
  மூல முதல்வன் விநாயகர்

  யானை முகத்துடன் இருப்பதால் கஜமுகன்
  யானை காது கொண்ட
  கஜகர்ணர்

  கணங்களின் அதிபதி கணபதி
  ஒற்றை கொம்பு உள்ள எகதந்தர்

  பெரிய வயிறு கொண்ட லம்போதரர்
  புத்தி கூர்மையுள்ள‌ விகட கணபதி

  வளைந்த துதிக்கை உள்ள வக்ரதுண்டர்
  வாதாபி கொன்றதால் வாதாபி கணபதி

  மனைவியுடன் அருளும் சித்தி புத்தி கணபதி
  ஐந்து கரமுள்ளதால் ஐங்கரன்.

  ஐந்து முகமுள்ள ஹேரம்பர்
  கந்தனுக்கு மூத்தவன் ஸ்கந்த பூர்வஜர்

  பாற்கடல் நுரையில் தோன்றிய சுவேத கணபதி
  நடமாடும் நர்த்தன கணபதி

  அனைத்து காரியங்களும் சிறப்பாக வெற்றி பெற தோஷங்கள் நீங்க விநாயகரை வணங்கி மகிழ்வோம்

  எஸ் வீ ராகவன் சென்னை

 8. தமயந்தி இரத்தினம் says:

  விநாயகனே போற்றி

  தங்குத் தடை எவை நெருங்கினாலும் சுற்றி../
  பொங்கும் கருணையிலே, அவை அனைத்தும் நீக்கிடுவாயே அகற்றி./

  பக்தியின் நிழலிலே தொடங்கும் செயல்களுக்கு , நித்தம் அருள்வாய் வெற்றி./
  சக்தியின் ஒளியாய் விளங்கும் புதல்வனுக்குச், சிரம் பணியும் மாலை சாற்றி./

  சதுர்த்தி திதியில் கொண்டாடவே நாழும் தீபம் ஏற்றி./
  விருத்தி காணுமே வாழ்வு உயர்வின் உயர்வால் ஊற்றி./

  உனையென்றும் வணங்கவே துடிக்கும் இரு கரம் பற்றி./
  வினைத் தீர்க்கும் விநாயகனே போற்றி போற்றி./

 9. தமயந்தி இரத்தினம் says:

  *நெருப்பாய் ஒரு நிலவு*

  கடலில் முகம் காணும் செந்நிலா../
  காட்சியில் உருகியே மனம் கரைகிறது./

  பெண்ணிலே காணும் பொழிவு போல../
  வெண்ணிலா நிறமாறி ஒளிரும் அழகு./

  இரத்தத்தின் சாயலை உடுத்தியது போல../
  இந்திரன் உருமாறி உலாவும் உணர்வு./

  இருளுக்குத் திலகம் இட்டது போல../
  ஈர்ப்பின் நெருப்பாய் ஒரு நிலவு./

 10. லோகநாயகி.சு says:

  கவிதை போட்டி:9

  செல்ல பிள்ளையார்

  அன்பின் சொருபமே !
  அன்பின் சொருபமே !
  ஆணை முகத்தோனே !
  அன்னை பார்வதியின்
  அருந்தவ புதல்வா !
  ஆடல் நாயகனின்
  ஆசை பாலகா!
  அன்னையும் பிதாவும்
  அகில மென்று
  அனைவருக்கும் உணர்த்தியவனே!
  அற்புதம் புரிவோனே !
  எங்கும் இருப்போனே !
  எதிலும் முதல்வனே
  ஏகாந்தமானவனே!
  எளிய வடிவோனே!
  நவ கிரகங்களின்
  உச்சியில் அமர்ந்து
  நன்மை புரிந்திடுவாய்!
  நா வன்மை கொடுத்திடுவாய்!
  சின்னக் குழந்தைகளின்
  செல்லத் தோழனே !
  செல்லப் பிள்ளையாரே!
  சிறப்பைத் தந்திடுவாய்
  செல்வ வளத்தினைத் தந்திடுவாய்!
  அறம் பொருள் இன்பம்
  அனைத்தும் தருவாய்!
  சோகங்கள் நீக்கி
  சுகம்தனை தருவாய்!
  அன்பின் சொருபமே !
  அன்பின் சொருபமே !
  ஆணை முகத்தோனே !
  என் செல்ல பிள்ளையாரே….

  லோகநாயகிசுரேஷ்….

 11. - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி. says:

  “விநாயகனே போற்றி”
  *************************

  முழுமுதற்கடவுளே மூத்தோனே
  உனைத்தொழுதே செய்கிறேன்
  செய்யும் இவ்வினையாவும்
  வெற்றியடைய காப்பாய் கணேசா…!

  ஈசன்மகனே என்மனவாசனே
  வருவாய் வருக வருகயென
  இருகரம் கூப்பி உன்னை
  வணங்குகிறோம் ஐயனே…!

  உன்னருளாலே ஆகுதே அனைத்தும்
  அருள் செய்வாய் ஆண்டவனே
  கைதொழும் அனைவரையும்
  காப்பாய் ‌ கருணை உருவே கணேசா…!

  வரம் கேட்டு வேண்டி நிற்கிறோம்
  வேதனையை தீர்த்து வைப்பாய்
  வளம் சேர்ப்பாய் வக்ரதுண்டனே
  நலம் தருவாய் நர்த்தன கணபதியே…!

  போற்றி போற்றியென போற்றுகிறோம்
  வினைதீர்க்கும் விநாயகனே போற்றி
  தூயர் துடைக்கும் தூமணியே போற்றி…!!!

  -வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
  ************************************

 12. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

  கண்ணதனைப் போற்றுவோம்
  பாவலர் கருமலைத்தமிழாழன்

  பூத்திட்ட புதுநிலவாய் வந்து
  —-பூரிக்கும் கவிதைகளைத் தந்து
  மாத்தமிழின் மணமாக நின்றான் – எல்லா
  —-மக்கள்தம் மனமெல்லாம் வென்றான் !

  சங்கத்துப் பாக்களினைப் படித்துச்
  —-சாறெல்லாம் எளிமையாக வடித்துப்
  பொங்குகவி சிந்துகளாய் ஆக்கினான் – கல்லாப்
  —-பாமரர்க்கும் புரியுமாறு தேக்கினான் !

  திரைப்படத்துத் துறையினிலே நுழைந்து
  —-தித்திக்கும் இசையினிலே குழைந்து
  புரைநீக்கும் கருத்துகளைக் குவித்தான் – பழம்
  —-மூடத்தை அகற்றும்பா விரித்தான் !

  தென்றலெனும் ஏடுதனைத் துவக்கிச்
  —-செந்தமிழின் பாத்துறையைப் புதுக்கிக்
  கன்னலெனும் கவிவாணர் பெருக்கினான் – நெஞ்சுள்
  —-கனல்கின்ற கவிசொட்ட முடுக்கினான் !

  நாளுமொரு அரசியலைப் பேசி
  —-நாட்டிலுள்ள கட்சிகளை ஏசி
  கூடிநிற்கும் கவித்துவத்தால் தோழனானான் – எல்லாக்
  —-கூட்டத்தார் மதிக்கின்ற கவிஞனானான் !

  பிறமொழியின் கவிதைகளைத் தமிழாக்கித்
  —-திறனாய்வுத் துறைதன்னைச் செயலாக்கிச்
  சிறுகதையைப் புதுப்பார்வை தனிலளித்தான் – கண்ண
  —-தாசனெனும் இதழ்தன்னை அதற்களித்தான் !

  பகுத்தறிவில் தன்கருத்தைத் தொடங்கிப்
  —-பக்குவத்தில் ஆத்திகனாய் அடங்கிப்
  பாட்டாலே பாரதிக்கு நேசனானான் – பக்திப்
  —-பரவசத்தால் கண்ணனுக்குத் தாசனானான் !

  கல்லக்குடி சிறைதனிலே படுத்துக்
  —-கற்கண்டு மாங்கனியைப் பறித்துப்
  பொங்கலிலே தைப்பாவை கையளித்தான் – தமிழ்ப்
  —-பொறையனுக்குக் காதலியை வாழ்த்தளித்தான் !

  நூற்றுக்கும் மேலாக நூலெழுதி
  —-நுவல்கின்ற தமிழுக்குச் சீரெழுதி
  போற்றும்பல் லாயிரமாய்ப் பாதந்தான் – காலம்
  —-போனாலும் நிலைக்கின்ற படிவேய்ந்தான் !

  வாழ்கின்ற போதேநல் பாராட்டு
  —-வளம்பெற்ற கவிஞரெனச் சீராட்டு
  வாழ்வெல்லாம் தமிழென்றே வாழ்ந்தான் – தமிழ்
  —-வாழ்கின்ற காலமெலலாம் வாழ்வான் !

 13. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

  முற்போக்கு முனைவன் தான் பாரதி
  பாவலர் கருமலைத்தமிழாழன்

  யாரிந்த பாரதியார் அறிவீ ராநீர்
  —யாமறிந்த மொழிகளிலே தமிழைப் போல
  வேறெங்கும் உள்ளதுவோ என்றே கேட்டு
  —வெளியுலகம் ஏற்றிடவே முழக்கம் செய்தோன் !
  யாரிந்த பாரதியார் அறிவீ ராநீர்
  —யாம்வாழும் தாய்நாட்டைத் தந்தை யென்றே
  வேறெந்தப் புலவனுமே சொல்லாச் சொல்லில்
  —வெறியேற்றி வெள்ளையனை விரட்டச் செய்தோன் !

  அனல்கக்கி வான்நோக்கிச் சீறிப் பாயும்
  —அடுக்கேவுக் கணையாக மக்கள் நெஞ்சுள்
  கனல்கின்ற விடுதலையின் உணர்வை ஏற்றும்
  —கவிதைகளை எளியசொல்லில் ஏவி விட்டே
  மனவெழுச்சி இல்லாத மனங்கள் ஊடே
  —மாவெழுச்சி கொப்பளிக்கப் பாடல் பாடிக்
  கனவான சுதந்திரத்தை நனவாய்ச் செய்த
  —கருமீசை வீரன்தான் பாரதிக் கவிஞன் !

  சிந்துகளைச் சந்துமுனைப் பாம ரர்தம்
  —சிந்தனையில் ஏற்றிவைத்துக் கங்கை யோடு
  சிந்துதனைக் காவிரியில் கலக்க வைத்துச்
  —சிதறிருந்த பாரதத்தை ஒன்றாய்ச் சேர்த்துச்
  செந்தமிழைத் தெருவெல்லாம் முழக்க ளைவத்துச்
  —செழிப்பான தமிழ்நாட்டைக் காண்ப தற்கே
  முந்தையர்தம் பழைமையொடு புதுமை சேர்த்த
  —முற்போக்கு முனைவன்தான் பாரதிக் கவிஞன் !

 14. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

  ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்
  பாவலர் கருமலைத்தமிழாழன்

  நடுகல்லில் நிற்கின்றார் எதிர்த்த போரில்
  —நாட்டிற்காய்த் தன்னுயிரை ஈந்த வீரர்
  கொடுத்திட்ட ஈகையாலே அதிகன் பாரி
  —கொல்லிமலை ஓரியுமே நிற்கின் றார்கள்
  விடுதலைக்காய் செக்கிழுத்தும் தொழுநோய் பெற்றும்
  —வீழாமல் நின்றதாலே நிற்கின் றார்கள்
  அடுத்தவர்க்கே உதவுகின்ற ஆக்கம் சேர்க்கும்
  —ஆன்றோரை ஞாலமென்றும் மறப்ப தில்லை !

  தூய்மையான சீதையினைத் தூக்கிச் சென்றோன்
  —துடிதுடிக்கப் பாஞ்சாலி துகிலு ரிந்தோன்
  ஆய்ந்துநீதி வழங்காத மதுரை மன்னன்
  —அந்நியர்க்கு விலைபோன கொடும்எட் டப்பன்
  சேய்முதலாய் முதிதமிழர் ஈறாய்க் கொன்று
  —செழித்திருந்த இனமழித்த இராச பக்சே
  மாய்ந்தாலும் அவர்செய்த கேட்டி னாலே
  —மறக்காமல் பழிதூற்றி நினைக்கும் ஞாலம் !

  கேடுகெட்ட வாழ்க்கைக்குக் காட்டாய் சொல்ல
  —கேடுசெய்தோன் முகந்தன்னை மறவா ஞாலம்
  நாடுதனில் நல்லவனாய் வாழ்வ தற்கு
  —நற்செயல்கள் புரிந்தோரை நினைவில் வைக்கும்
  ஏடுதனில் வரலாற்றில் தூற்று மாறு
  —ஏதமில்லா செயல்செய்து வாழ்ந்தி டாமல்
  கூடிநின்று மக்களெல்லாம் போற்று மாறு
  —குவலயத்தின் நினைவுதனில் நிலைக்க வாழ்வோம் !

  ( ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
  காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு )

 15. தமயந்தி இரத்தினம் says:

  “செப்டம்பர் பூக்கள்”

  ஊதும் வண்டு உன்னோடு குலவிச் சிரிக்க../
  ஊதி பிறக்கும் மொட்டுகள் மெளனம் கலைய../
  ஊதைக் காற்று மென்மையாய் வருடிச் செல்ல../
  ஊதா பூவாய் செப்டம்பரின் இழ்கள் திறக்க../
  ஊர்க்குருவியாய் புன்னகையில் பூத்து நிற்கையில்../
  ஊறும் இனிய உணர்வுகள் நெஞ்சுக்கூட்டுகள் சொல்லென ஊற்றெடுத்தன!/

 16. லோகநாயகி.சு says:

  பெண்ணே உனக்காக:

  மாற்றத்தை அடைய விரும்பும் பெண்…
  மாற்றத்தை ஏற்காத சமுதாயம்…!
  உரிமைகளுக்காக போராடும் பெண்,
  உரிமைகளுக்குத் தடையாக சமுதாயம்….!!
  பாவப்பட்டது பெண்ணின் பிறப்பு…
  பிறப்பிப்பது பெண்ணின் சிறப்பு!!!
  சாவிக்கொண்ட பொம்மைபோல பெண்
  தனக்காக வாழாமல் வாழ்கிறாள்,….!!
  அடுப்படியில் எரியும் அவளின் கனவுகள்…
  குப்பைகளாக மாறும் அவளின் ஆசைகள்….!!!
  ஒரு கேளிச்சித்திரம் போல அவளின் வாழ்க்கை
  பிறரின் சந்தோஷத்திற்காக மட்டும்தான்….
  எதற்காக இந்த பிறப்பு ?
  ஏன் இந்த தண்டனை ?
  ஏன் இத்தனை துன்பங்கள் ?
  தியாகச் சிற்பியாய் வாழும் பெண்ணுக்கு
  தியாகமே அவளின் வாழ்க்கை…..
  அறிவியலின் விதிகளை விட
  பெண்களுக்கான விதிகள் அதிகம்!!!!

  எப்போது மாறும் இந்த நிலை???

  நியூடனின் மூன்றாம் விதியை
  கையில் எடு பெண்ணே!!!!
  அக்னி நட்சத்திரம் போல எழு!!!!
  அடக்க முடியா சக்தியாய் மாறு….. வெற்றி உனக்கே…

  லோகநாயகிசுரேஷ்….

 17. தமயந்தி இரத்தினம் says:

  “மெளனத்தின் மொழி”

  மலரிலிருக்கும் திகட்டாத தித்திக்கும் தேன்களிலே../
  கறைந்திடும் அழகில் அவளது வதனம்./

  மயங்கியீர்க்கும் மங்கையின் கூந்தலின் நிழலிலே../
  தொடர்ந்திடும் அயராமல் எனது பாதங்கள்./

  ஒருவருக்கும் இசையாத அவளன்பின் வரத்திலே../
  தினந்தோறும் சுவாசிக்கும் இதயத்தின் ஆவல்./

  நிலைத்திருக்கும் உடையாத மனதின் ஆடிப்பாவையிலே../
  உயிர்தரும் உருவமாய் வருபவள் அப்பாவையே./

  காத்திருக்கும் காதல் கரத்துக்கு விழியிலே../
  விடைத்தரும் என்னவளின் மெளனத்தின் மொழியே./

 18. தமயந்தி இரத்தினம் says:

  *உன்னாலும் முடியுமே உறுதியோடு போராட*

  உருவமில்லா சோகம் உதிரத்தில் உருக்கினாலும்../
  உறுதியாய் உள்ளத்தில் உருவம் எடு./

  உணரும் வரையிலும் ஆதவனாய் உதயமாக./
  உருகும் நொடிகளிலும் சிந்தனை செய்./

  உரமாய் துணையிருக்கும் உறவுகள் இருக்க../
  உரக்கம் கொண்ட உணர்வுகள் வேண்டாம்./

  உண்மையான முயற்சியில் வெற்றி மலர்ந்து../
  உலகம் வாழ்த்தும் முகம் கண்டு./

  உச்சி சிகரம் விழிகளிக்குத் தெரியாது../
  உழைத்து பார் உயரம் தெரியும்./

  உடைகின்ற நேரத்திலும் விரைவாக நட./
  உன்னாலும் முடியுமே உறுதியோடு போராட./

 19. D.luvia vincy. says:

  கவிதைப் போட்டி:2021_9

  பாரதியின் நூற்றாண்டு!!

  பாரதியின் நூற்றாண்டோ,
  நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதியாய்!!

  எட்டயபுரத்தில் பிறந்து,
  பல ஏடுகள் பேசும் அளவுக்கு,
  பாரதி உம் மூச்சுக்காற்று வீசுகிறது….
  என எண்ணுகிறேன்!!

  பெண்ணுக்கு, கண்ணுக்கெட்டா கல்வியை,
  வாழ்க்கையின் ஆயுதமாய்…
  கைகளில் ஏந்த வைத்தும்,
  கடைக்கோடி பெண்களையும்,
  கல்வியின் கருவுக்குள் புகுத்திய,
  உம் புகழ் மணம் 100 ஆண்டு கடந்தும்
  வீசாமல் போகுமோ??

  தனக்கென்று தங்கமும் இல்லை…
  வைர, வைடூரியங்களும் இல்லை….
  வைராக்கியத்தைக் கொடுத்த,
  கவிதை ஆயுதம் ஒன்றே போதுமென்று…
  ஓயாது ஓடுகின்ற காலங்களோடு,
  உம் கால்களும் ஓயாது ஓடினவே…
  அதனைக்கூற 100 ஆண்டோ போதுமோ??

  கால் காசு இல்லை…
  ஆனால், காலம் யாவும் வரை
  வாழ்ந்துகொண்டிருக்கும் உம் புகழுக்கு,
  வேறு யாவரும் ஈடேறுவார்களா…
  இக்காலத்தில்??

  அதுவும், 100 ஆண்டு கடந்தும்,
  கடல் ஆழத்தில் கூட கொடி கட்டிப் பறக்கும் உம் புகழ்,
  இவ்வுலகினருக்கு உணர்த்தட்டும் பாரதி…
  இங்கு, காசு காலாக செயல்படாது…
  காலூன்றி நிற்கும் திருப்பெயரே…
  திருப்பெயரே என்று உணர்த்தட்டும் பாரதி!!

  முண்டாசிடம்,
  எட்டாணவைப் பற்றிய எதிர்பார்ப்பு இல்லை…
  எழுதுகோலில் கவி கரைசலை ஊற்றி,
  காகிதத்தை கவிக்கரைசலால் ஏற்றி,
  ஏடுகளால் எப்போது ஏணியில் ஏற்றப்போகிறேனோ??
  என்ற ஏக்கமே, முண்டாசு என்ற விதை முளைத்த பொழுதிலிருந்து….

  இவ்வணையா தீபத்தை,
  எத்தனை ஆண்டுகளானாலும் அணைக்கலாகுமோ??

  ஒருதாய் வயிற்றுப் பிள்ளையானால்,
  ஓங்கல், ஒடுங்கல்
  என இருக்கலாகுமோ??
  என்பதற்கு எடுத்துக்காட்டு நம் முண்டாசுக்கவியே!!
  நம் கவிஞனின் காவியச்சிறகுகள்
  100 ஆண்டு கடந்தும் எப்படி சிறகடிக்காமல் போகும்!!!

  பெண்கள் புதுயுகம் காண,
  புத்தம் புது கவிக்காவியங்களை
  காலம் யாவும் ஈடேற்றி,
  இயற்கை வனம் போல் ஆற்றிய,
  உம் மனம்….
  மறைந்து போகலாகுமோ??

  கூறினால் கூறிக்கொண்டே போகலாம்….
  கூர்மையான உந்தன் பொற்சிந்தனைகளை!!
  100 ஆண்டு மட்டுமா??
  100 ஆண்டு கடந்தாலும்…
  ஏடுகள் பேசும் பெயர் போன,
  உம் பெருமைகளை!!!

  அதே, பாரதியின் பயணம்,
  இன்றிருந்தால்….
  இகழ்ந்து போகும் பெண்ணின் கற்பு,
  கண்தெரியா கிருமி தான்….
  ஆனால், மிரள வைக்கிறது இவ்வுலகை…..
  எனப் பறிபோகும் இவ்வுலகை…
  கவிவரிகளால் கரைத்து,
  இவ்வுலகின் இருள்களை,
  கலைத்துவிடுவார்….
  நம் முண்டாசுக்கவி கலைத்துவிடுவார்!!!

  எழுத்தாணி கொண்டு,
  ஜகத்தாணிகளை உணாடாக்கிய,
  முண்டாசுக்கவியின் மூச்சு,
  இவ்வுலக மூச்சாய் ஓங்குக!!!
  – தே.லூவியா வின்சி

 20. Ragavan says:

  வாழ்க பாரதி
  வளர்க உன் புகழ்
  பார் அதிர நலம் புரிய

  ராமனின் காலடி பட்டு‌ அகலிகை உயிர்த்தெழுதாள்.
  பாரதி கைபட்டு கவிதைகள் உயர்தெழுந்தன.

  தர்மத்தை நிலை நாட்டியது சாரதிச்சங்கு
  தூங்கும் தேசத்தை தட்டி எழுப்பியது *பாரதி கவிச்சங்கு*

  கோபத்தில் பொங்கினால் மாகாளி
  பெண் விடுதலைக்காக *மகாகவி*

  பறவையில் குயில் குரல் இனிமை
  பாரதி குயில் குரல் பெருமை

  சிந்து நதிக்கு பாலம் போட சொன்னான்
  இன்று காவிரி நீர் தர பிரச்சினை

  ஜாதி இரண்டொழிய சாடினான்
  இன்னும் மாறாமல்‌ வாடினான்

  மாலை முழுதும் விளையாட்டு என்றான்
  கொரோனா வீட்டில் முக்கியமாய் கலங்கினான்

  தடுமாறிய நேரத்தில் நீ வழிகாட்டி
  உன் கவிதைகள் பெறுமானம் பலகோடி.

  வாழ்க பல்லாண்டு
  பணிகிறேன் உன் பாதம்

  எஸ் வீ ராகவன் சென்னை

 21. Jeyabala Murugan says:

  நான்(நீ) உ(எ)ன் கண்ணாடி!

  என்னையே பார்த்து பார்த்து
  உன்முகம் மறந்து நான்தான்
  நீ என நினைத்து கொள்கிறாய்!

  எனக்கு பிடித்த யாவையும் நான்
  கண்டு அறியும் முன்னே உனக்கும்
  பிடித்ததாய் மாற்றிக் கொள்கிறாய்!

  என் கண்கள் பார்த்தே என்
  மனதில் உள்ள விருப்புகளை
  வெறுப்புகளை படித்து விடுகிறாய்!

  என்னுடைய முகம் பார்த்தே நான்
  பேச வந்த வார்த்தைகள்
  யாவையும் பேசி விடுகிறாய்!

  நான் தோற்று விட்டதாய் இந்த
  உலகம் சொன்ன போதெல்லாம்
  உன் தோளில் என் முகம் சாத்தி
  புதுசக்தியை என்னுள் தருகிறாய்!

  வருத்தத்துடன் உன் அருகில் வந்த
  போதெல்லாம் உன் புடவை வாசனையால்
  இந்த மனதுக்கு வசந்தம் தருகிறாய்!

  தாயே! நீ கொடுத்த முத்தத்தில்
  இருந்த எச்சிலின் ஈரம் இன்றும் உள்
  நின்று உயிரைத் தொட்டு வருவதால்தான்
  இன்னும் நல்ல மனிதனாக வாழ்கிறேன்!

 22. லோகநாயகி.சு says:

  கவிதை போட்டி:9

  திருக்குறள் போற்றுவோம்

  தெய்வப்புலவன் தந்த
  இருவரி திருக்குறள்
  வாழும் முறை சொல்லும்
  நெறி கொண்ட வரம்,
  தமிழரின் தலையை அலங்கரிக்கும்
  வைரங்கள் பதித்த கிரீடம் இது
  உலகமுழுதும் ஆவலாய் தேடும்
  தமிழரின் பொக்கிஷ படைப்பும் இது ….
  பள்ளி படிக்கும் நாள் முதல்
  கல்லூரி முடித்த காலம் வரை
  படித்துணர்ந்த பாடம் இது
  பகுத்துணர்வு கொண்ட படைப்பு இது ……….
  சிந்தை சிதறும் மனிதனை
  சீர்படுத்தும் இரு வரிகள்
  ஒழுக்கம் தவறும் மனிதனை
  ஒழுங்குபடுத்தும் திரு வரிகள் ………
  வாழ்வியல் நூல் இது
  அகவாழ்வையும்
  புறவாழ்வையும்
  அலசும் நூல் இது….
  முப்பாலும் இதன் உள்ளே
  தப்பாமல் சொல்லும் வரிகள்
  எக்காலமும் தேடும் பதில்
  இதன் உள்ளே குவிந்து கிடக்கு …
  வாழ்க்கைக்கு தேவையான
  வரிகள் சொல்லும் அறிவுரைகள்
  வாழ்வை கற்பித்து
  ஒழுக்கம் சொல்லும் பல குறள்கள்…
  நீதி சொல்லும் அநீதி சொல்லும்
  கல்வி சொல்லும் காமம் சொல்லும்
  நன்றி சொல்லும் நட்பு சொல்லும்
  மொத்த வாழ்வையே விளக்கி சொல்லும் ….
  அறம் சொல்லும் நூல் இது
  அபூர்வமான நூல் இது
  புனிதம் கொண்ட படைப்பு இது
  புகழ் போற்றும் படைப்பு இது…
  ஓலைசுவடியே முதல் பதிப்பு
  இன்று கிடைக்குது பல பதிப்பு…
  கல்கியும் குமுதமும் படிக்கும் மனிதன்
  குறளை படிக்க ஏனோ மறுத்து விடுகிறான் …..
  சினிமா தேடும் உலகம் இது
  சிந்தையை நிரப்ப மறுக்குது…!!!
  அறிவை தேட மறந்த உலகம்
  அழிவை தேடி அலையுது ….!!!!!

  வாழ்வை விளக்கும் குறளை
  வரமாய் கிடைத்த திருக்குறளை
  தெய்வ மகன் தந்த பெரும் பொருளை
  மதித்து போற்றி படித்து பயன்பெறுவோம்……

  லோகநாயகிசுரேஷ்….

 23. D.luvia vincy. says:

  கவிதைப் போட்டி: 2021_9

  தங்களுக்கு விருப்பமான ஒரு தலைப்பு:

  மனித நேயம்!!

  மானுடத்தின் மாண்பு….
  மனிதநேயம்!!
  மங்காமல் காத்த,
  தலைவர்களின் வாழ்வுக்குப் பின்,
  வாடிப்போயிற்று வரியோரின்,
  மனிதநேயம்!!

  மனிதநேய மாலையை,
  மலரவைக்க மனிதன் இல்லை…
  மலரவேண்டிய மனிதனுள்,
  வேதனையே விறகானது!!

  ‘சமத்துவம்’ என்ற சொல்லில் மட்டுமே,
  மாலை உள்ளது…
  “சமம்” என்ற சரிபத மாலை உள்ளது!!

  உலகினுள் இல்லை…
  உலகினோருக்கு இல்லை….
  மானிட மாண்பு….
  மனிதநேயமெனும் மானுட மாண்பு!!

  சமுதாய தோட்டத்தில்,
  சோதனையான சவால்கள்….
  ரகரகமாய்!!
  ரகத்தைக் குறைக்க ராட்சியம் இல்லை…
  ரணத்தைக் கொடுக்கும்,
  கொடுமையான கொடுங்கோல்களே!!

  வரியோருக்கு வறுமைப் போராட்டம்,
  ஒருபுறம்!!
  முதியோரின் முதுமைப் போராட்டத்தில்,
  அறிந்த முகத்தை அனுகமுடியா தருணம்
  ஒருபுறம்!!
  இங்கு, மனிதநேய மனது மறைந்து போனதா??

  விழி பிதுங்க, வியர்வை சொட்ட,
  வழி மறுங்கும் கண்களோடு,
  கற்பைக் காப்பாற்றும் வலியோடு….
  உயிர் உலகு விட்டு நீங்காமல் இருக்க,
  எப்படி நீங்கி ஓடுவது என்று,
  ஓயாது ஓடும் மனதை,
  மெளனமாய்க் காக்க,
  இந்தப் பித்துப்பிடித்தவனிடம்,
  வாஞ்சையான மனிதநேயம் எங்கே??

  மனிதனுக்கு மனிதனுடன்,
  மனிதநேயம் நோஞ்சலானது….
  இதேபோல், இயற்கையும் இருந்தால்,
  இன்னல் தானே??

  மனதை, மனிதனுக்கு கொடுத்த இறைவன்,
  இயற்கைக்கு அளித்திருக்கலாமோ??
  என அறியத் தோன்றுகிறது…
  தோரணையான, நேயமில்லா
  நெகிழ்ச்சியாளனிடம்!!

  சமயசார்பற்ற சமூகத்திற்கு,
  மானம் காத்த மனதுடனான மனிதநேயம்…
  வெறும் மணமாய்ப் போனதோ??

  மனிதநேயம் மன்னவனுடனா??
  கோடி வைத்தவனிடமா??
  கோவேந்தரனிடமா??
  இவர்களுக்கு காட்டுவது,
  மனிதநேயமா??
  ஆஸ்திக்கேற்ற அந்தஸ்தா….
  மீதமுள்ள அப்பாவி ஜீவனுக்கு??
  நடுத்தரவாதிக்கு குரல் கொடுக்கும்,
  மனிதநேயம் எங்கே….
  ஏமாற்றிப் போனதோ??
  – தே.லூவியா வின்சி.

 24. ஜெயபாலமுருகன் says:

  4. தங்களுக்கு விருப்பமான ஒரு தலைப்பு

  தலைப்பு: எது இந்த வாழ்வு!

  Ø இருப்பதுபோலக் காட்டி
  அதைநோக்கி பயணிக்க வைத்து
  இறுதியில் இல்லாமல் போகின்ற
  கானல்நீர்தான் இந்த வாழ்வா!

  Ø மிகுதியாய் ஏதோஒன்று இருந்தபோதும்
  பெருமளவில் பயன்படுத்த முடியாத
  பயன்படுத்திக் கொள்ள வழிகள் பெறாத
  கடல்நீர்தான் இந்த வாழ்வா!

  Ø தகுதிகள் இங்கு இருந்தபோதும்
  வாய்ப்புகளுக்கு கடைசிவரை காத்திருந்து
  முடிவில் ஏமாற்றங்களைப் பெறுகின்ற
  சாபம்தான் இந்த வாழ்வா!

  Ø நல்வினை செய்ய மனமிருந்தும்
  விதியின் விளையாட்டால் திசைமாறி
  செய்யும் தீவினைகளால் நீள்கின்ற
  பாவக் கணக்குதான் இந்த வாழ்வா!

  Ø சுகமான பக்கங்களை மட்டும்
  இடம்பெற செய்யும் விருப்பமது
  சோகமான பக்கங்களிடம் தோற்கின்ற
  கண்ணீர் கதைதான் இந்த வாழ்வா!

  Ø முப்பிறப்பில் இளைத்த வினைகளுக்கு
  இப்பிறப்பில் தீர்க்கப் படுகின்ற இப்பிறப்புக்கு
  மறுபிறப்பில் நிலுவையில் நிற்கின்ற
  பிறவிக் கடன்தான் இந்த வாழ்வா!

  Ø காலம் நிர்ணயித்த விதிமுறைகளால்
  உடலும் உள்ளமும் போராடிப் படாத
  பாடுபட்டும் உண்டான காயங்கள்
  தருகின்ற வாதைதான் இந்த வாழ்வா!

  Ø இந்த வினாக்களுக்கு எல்லாம்
  விடை பெறும் முன்னரே
  விடைபெறும் விதியில் இந்த உயிர்!

 25. லோகநாயகி.சு says:

  கவிதை போட்டி:9

  *செப்டம்பர் பூக்கள்:*

  பச்சை இலை மாளிகையில் பதுங்கி இருந்தாய் மொட்டாக…🌷
  பகலிலும் நிலா உலா போகும் இரவில் காணாத உன் அழகை காண…..
  காதலை சொல்லிட கணிதமும் நீதானே….
  மங்கையின் கூந்தலுக்கு கிரீடமும் நீதான் பூவே…..!!
  பனித்துளியும் ஆசைகொண்டு உன்மேல் பகல் தூக்கம் போடுமே….
  அழகுக்கு அழகாகிறாய் பெண்ணின் கூந்தல் உன்னை ஏற்கும்போது…. வண்ணத்துப்பூச்சியாய் வசியம் செய்கிறாய் …. செங்கதிரவனின் உதிரத்தை குடிக்கிறாய், சேர்த்து வைத்த உதிரத்தை வண்டுக்கு கொடுக்கிறாய் ……
  பல வண்ண முகம் காட்டி பஞ்சவர்ண இதழ்கள் விரித்து பஞ்சமின்றி சிரிக்கின்றாய்..! நெஞ்சமெல்லாம் இனிகின்றாய்!..
  மனித இறப்பிலும் மலர் மாலையாய் அழகு சேர்ப்பது நீதான் பூவே…..
  காற்று வந்து உன் முகம் வருட சற்று நாணம் கொண்டாயோ??? அங்கும் இங்கும் அசைந்து அழகு நடனம் புரிந்தாயோ???
  பார்த்து ரசிக்கும் அழகு உன்னை பரித்து ரசிப்பது முறையோ?? காலையில் மலர்ந்த முகம் மாலையில் மயங்குதல் ஏனோ????
  மகரந்த மதுரம் உண்டு மது சிந்தும் போதை கொண்டு பூமகளே உன் முகம் கண்டு புது சிந்து பாடுது வண்டு!🐞🐞
  பூவே இளம் பூவே பூமியில் நானும் உன்னை போல் ஒரு நாள் மட்டும் வாழ்ந்தாலும் பாசமாய் சிரித்திட வேண்டும், நேசமாய் வாழ்ந்திட வேண்டும் மண்ணிலே மனமாக மனதளவில் நல்ல குணமாக…..

  லோகநாயகிசுரேஷ்…

 26. - வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி. says:

  “பாரதியார் நூற்றாண்டு”

  தமிழன் என்று சொல்லடா/
  தலை நிமிர்ந்து நில்லடா/
  முழக்கமிட்ட முத்தமிழ்பாரதி/
  முண்டாசுகட்டிய தமிழ்சாரதி.

  மனதில் உறுதி வேண்டும்/
  மடிந்தாலும் வாழ வேண்டும்/
  என்று வாழ்ந்துகாட்டிய /
  எட்டையபுரத்து நாயகன்.

  எங்குந்தமிழ் எதிலுந்தமிழ்/
  எனக்கெல்லாம் தமிழென்றவர்/
  எழுத்தால் தலைநிமிர வைத்தவர்/
  எட்டாத உயரம் நின்றவர்.

  தமிழை தேன்சொட்ட கொடுத்தவர்/ தன்னிகரில்லா தமிழ்த்தலைவன்/
  பார்போற்றும் பாரதக்கவி/
  பன்மொழி அறிந்த வித்தகக்கவி.

  அல்லலுற்ற காலத்தில்/
  ஆண்டவனாய் அவதரித்தவர்/
  அன்னியர்புகுதல் அநீதியென்றவர்/
  அவர்களை நடுநடுங்கவைத்தவர்.

  சாதி மத பேதமற்ற/
  சமுதாயம் வேண்டுமென்றவர்/
  செப்புமொழி பதினெட்டில்/
  சிறந்தது தமிழென்றவர்.

  எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும்/
  எண்ணத்தில் விதைத்த விதையவன்/
  விருட்சமாக வளர்ந்துக்கொண்டே போகும்/
  வானத்தைப்போல உயர்ந்தே வாழும்.

  -வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.
  *************************************

 27. கோ.சிவகுமார் says:

  காலத்தின் கட்டாயம்

  இரு மண வீட்டார்
  சொந்தங்கள்.
  ஒரு சிலர் மட்டும்.
  அய்யரோடு மணமக்களையும் சேர்த்து
  ஆக மோத்தம்
  பத்து பேர்
  திருமண மேடையில்!

  அலங்கார வளைவுகளும்
  ஆடம்பர காட்சிகளும்
  “ஆப்சென்ட’!

  முகம் தெரியாத
  உறவினர்கள்
  முகக் கவசம் அணிந்ததால்!

  அரங்கத்தில்
  ஆங்காங்கே
  சமூக இடைவெளி விட்டு
  ஆளில்லா நாற்காலிகள்!

  குழந்தைகளின் ஓட்டமும்
  குமரிகளின் ஆட்டமும்
  கேலிப் பேச்சுகளும்
  கிண்டல்களும்
  இன்றி
  அமைதியாகக் கிடந்த அரங்கம்!

  காண்கின்ற
  கல்யாண மண்டபக்
  காட்சிகள்,
  காலத்தின் கட்டாயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *