என் மின்மினி தொடர்கதை (பாகம் – 56)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-56
En minmini thodar kadhai
ஹே கொஞ்சம் கேள்வியாய் கேட்பதை நிறுத்திவிட்டு இயற்கையை ரசிக்கலாம் இல்லையா., இந்த மாதிரி இடம் மனசுக்கு எவ்வளவு அமைதியை தருது என்றான் பிரஜின்… அவன் சொல்வதை கேட்டவாறே ஒன்றுமே பேசாமல் அந்த இடத்தை சுற்றி முற்றி பார்த்து கொண்டே அவனை பார்த்து மெதுவாக புன்முறுவல் பூத்தாள் ஏஞ்சலின்…
ஏன் இப்போ இந்த இனிய புன்முறுவல்…இந்த சிரிப்பின் உட்பொருளை நான் தெரிஞ்சுகலாமா என்றான் அவன்… ஒண்ணுமில்லை எனக்கு எங்க அம்மா அப்பா நியாபகம் வந்துச்சு… எனக்கு இந்த மாதிரி இடங்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும்னு அவர்களாகவே தெரிஞ்சுகிட்டு என்கிட்டே சொல்லாம கொள்ளாம சுத்தி பார்க்க கூட்டிட்டு போயி ஆச்சர்யபட வைப்பாங்க…
நானும் தம்பியும் ரொம்பவே சந்தோசமா இருந்தோம்… அவங்க எல்லோரும் இறந்து போன பிறகு அதை நினைச்சு நான் நிறைய முறை தனிமையில்அழுது இருக்கேன். ஆனால் அவங்க என் கூட இல்லாத குறையை நீ இன்னிக்கு மறக்க வச்சுட்டே.என் வாழ்க்கையில் உன்னை எப்போதும் நான் கைவிட மாட்டேன்…
ஐ லவ் யூ டா என்றவாறே அவன் கைகளை இறுக பற்றி முத்தமிட்டாள் ஏஞ்சலின்… அவள் பேச பேச அவளது கண்களையே பார்த்தபடி நானும் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன் என்றபடி இறுக்கமாக கட்டி
கொண்டே ஐ லவ் யூ டி என்றான் பிரஜின்… இருவரும் ஒருவரையொருவர் கண்களை பார்த்தபடி கட்டிக்கொண்டிருக்க தூரத்தில் ஏதோ ஒரு கோவிலின் மணியோசை அவர்கள்
காதில் விழ., எங்கே இருந்து இந்த மணிசத்தம் வருகிறது என்றாள் ஏஞ்சலின்… – என் மின்மினி தொடர்கதை பாகம்-56
– அ.மு.பெருமாள்
பாகம் 57-ல் தொடரும்