கவிதை போட்டி 2022_08
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-08
வெற்றி பெரும் கவிதைகள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.
கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.
வெற்றியாளர்கள் – காயத்ரி,
நா மாரியப்பன்
கவிதை போட்டி 2022_08 அறிவிப்பு
சுதந்திரம் 75
மௌன கீதம்
பசியும் ருசியும்
திருநங்கை திருநம்பி
அடைமழை
சொந்த வீட்டில் விருந்தாளி
கடைசி இரயில் பெட்டி
அல்லது தங்கள் விரும்பிய தலைப்பு
தலைப்புகளில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.
வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்
தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2022-08. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.
குறிப்பு:
1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).
தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது
தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.
சென்ற மாத போட்டி முடிவுகளுடன், வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த ஆசிரியர் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும்
தலைப்பு: இளைஞரணி விழித்தெழுந்தால்
இளைஞரணி விழித்தெழுந்தால் இமைவிழிகள் இமயம்தொடும்!
பகுத்தறிவில் விழித்தெழுந்தால் பகலவனுக்கே பாடம்நடத்தும்!
கல்வியிலே கண்வைத்து கருமமே கண்ணாயிருந்து
கரைத்தொட நீந்துவனாயின் தீச்சுடரில் முத்துக்குளிப்போம்!
விவேகானந்தரின் விழிமியங்களை விழிப்போடு வினையாக்கி
ஆழ்கடலின் அடிமுதல் அகிலம்வரை அளந்துரைப்போம்!
விழிப்புணர்வில் விதைசெய்து விருட்சமாய் விளைந்துநின்று
பழமைக்கு தீவைத்து புதுமைக்கு பூவைப்போம்!
உரிமைக்கு உயிர்க்கொடுத்து ஜல்லிக்கட்டின் யுகப்புரட்சிபோல்
பெண்ஆண் சமத்துவமற்ற சமூகத்தை சரிசெய்வோம்!
முயற்சியின் முளைவைத்து முற்பிறப்பின் பொய்மைதள்ளி
முகில்மீது ஏறிச்சென்று சூரியனில் சூளுரைப்போம்!
வெண்ணிலவின் நீர்ப்பாய்ச்சி வியர்வையின் உப்புக்கொடுத்து
ஏவுகணையில் ஏர்தழுவி உயிர்மூச்சின் உயிர்வளிகொடுத்து
நெஞ்சுறுதியின் அக்கினியில் ஆதவனின் ஒளிகொடுத்து
உணவுப்பயிரை விசாலமாக்கி ஏழ்மையின்பசிக்கு விருந்தளிப்போம்!
அனுபவத்தின் ஆசிரியரை அகத்தில் குருவாக்கி
செய்வாயின் செம்மண்கொண்டு இயற்கைஎழில் பாரதம்வளர்த்து
செயற்கையின் செயலிழப்பின் சோம்பேறியின் சோறுடைத்து
செறிவான எம்பூமியின் ஓசோனின் துளைஅடைப்போம்!
ஆணவக்கொலை சாதிபேசும் மாந்தரை திருத்தியமைத்து
அரசியலை ஆழப்படித்து வல்லரசின் வலிமைதனை
விலையில்லா நற்கல்வியை உலகரங்கில் உறுதிப்படுத்தி
புதுவினை பூப்பொழிவில் புதியதோர் உலகு செய்வோம்!!
அடை மழை
தினமும்
அடைமழை தான்….
அன்னையின் மடியில்
தலை சாய்த்து
ஆனந்திக்கும் பொழுதும்…
அவள் கை பிசைந்த
கூழ் உணவருந்தி
லயித்த பொழுதும்….
நடை பயில முயற்சித்து
தடுமாறி கீழ் சாய
தாவிப் பிடித்து
தலை கோதும்
தந்தையின் பாதுகாப்பும்..
தந்தையின் கைபற்றி
அவர் தடம் பின்பற்றி
நடந்திடும் சமயங்களும்…
உடன்பிறப்போடு
ஓத்துப் போகாத
சிற்சில விளையாட்டு
சண்டைகளும்
என
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு நொடியும்
என்னுள் அடைமழை தான்!
அந்த அழகிய நேரங்கள்
சில சமயங்களில்
சில்லென்ற சிறு தூறலாய்
என்னைத் தாலாட்டி
அழைத்துச் செல்கின்றது
என் கடந்த காலத்தின்
கவினுறு பக்கங்களுக்கு!
அன்பான குடும்பத்தின்
அடைகாப்பில்
கதகதப்பான கால ஓட்டங்களை
எண்ணிடும் பொழுது
சில நேரம் கண்களில்
அடை மழை!
இப்படி அடைமழை
காட்டில் இன்னும்
நவித்து போகாமல்
நான் நடமாடிட
ஒரே காரணம்
அன்பெனும் அகல்விளக்கு!
அந்த விளக்கொளியில்
இன்றும் நான்
கண்டு கொண்டிருக்கிறேன்
என்னுள் பசுமையாய்
படர்ந்து கொண்டிருக்கும்
குடும்பத்தின் நினைவுகளை…..
அப்படி நான் நினைத்திடும்
நேரமெல்லாம்
என்னுள்ளும்
வெளியும்
அடைமழை தான்!
அந்த
அடைமழை
நினைவில்
என் ஆயுள் கரைந்தாலும்
அது சுகமே!
* தொட்டி மீன்கள்*
நான்கு பக்க
கண்ணாடிச் சுவற்றினுள்
நகரும் நனைந்த
வண்ண ஓவியம் நாங்கள்!
எங்களுக்கான உலகம்
மிக சிறியது தான்
ஆனால்,
அதில் மிகப் பெரியது
எங்கள் தனிமைப் போராட்டம்!
எங்கள் வலிகளுக்கு
வார்த்தை இல்லை
கண்ணீருக்கு
சாட்சி இல்லை
இரண்டுமே
தண்ணீரால் கழுவப்பட்டு
எங்களைச் சுற்றியே
ஓடிக் கொண்டிருக்கிறது
எங்களுக்கான வாழிடமாக!
இச் சிறு உலகில்
எங்களுக்கான மொழி
பரிமாறப்படாமலே மௌனமாகிறது!
எங்கள் உரையாடல்
கண்ணாடிக்கு அப்பாலான
முகங்களுக்கு புரிவதில்லை!
இருந்தும்,
எமக்கான இந்த உலகத்தில்
நாங்கள் வாழ்கிறோம்!
சில நேர
வினோத சத்தங்கள்,
பளீர் என பட்டுத்
தெறிக்கும் வெளிச்ச கீற்றுகள்,
விரல் நீட்டி
விளையாடும் சிறுவர்கள்,
வியப்பை விழியில் காட்டி
உதட்டில் மகிழ்வை கூட்டி
சிரிக்கும் குழந்தைகள்,
என பல நேர
வேடிக்கை காட்சிகள்
கண்ணாடிக்கு பின்னாலிருந்து
கற்றுக் கொடுக்கின்றன
எங்களுக்கு புரியாத
வெளி உலகின் சுதந்திரத்தை !
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு யுகமாய் கழிய
தொட்டிச் சூழலில்
தொட்டுப் பார்க்க முடியாத
எம் இனத்திற்காய்
புலம்பி கொண்டிருக்கிறேன்…
உங்கள் பார்வைக்கு அது
வாய் வழி மூச்சு
உற்றுப் பாருங்கள் தெரியும்
அது எங்கள்
சுதந்திரத்தின் புலம்பல் என்று!
என்றாவது ஒரு நாள்
தனிமையை கொஞ்சம்
தொட்டுப் பாருங்கள்….
அது பதித்து செல்வது
ஆறாத ரணங்களையும்
ஆழமான வடுக்களையும் மட்டுமே!
தனிமை ஓர் நெருப்பு,
தண்ணீரில் நான் என்பதால்
கொஞ்சம் தாக்குப்பிடிக்க முடிகிறது!
நாங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம்!
நாங்கள் உங்களுக்கு மகிழ்வு!
நாங்கள் உங்கள்
வரவேற்பறையில் அலங்காரம்!
ஆனால் உங்களால்
அடைபட்ட எங்கள் வாழ்வு
துரதிஷ்டம்,
பேரழிவு,
தீர்வுகள் இல்லா அலங்கோலம்!
இனியாவது உடைபடுமா?
எம் உணர்வுகளையும்
எம் புலம்பல்களையும்
எம் சுதந்திரத்தையும்
சிறைப்படுத்தி வைத்திருக்கும்
இக் கண்ணாடிச் சுவர்கள்!
இப்பொழுதாவது பொடிபடுமா?
வாஸ்து என்றும்
அதிர்ஷ்டம் என்றும்
அலங்கார வண்ண
மீனென்றும் வகைப்படுத்தி
எங்களை வதைபடுத்தி
ஆனந்தம் கொள்ளும்
ஆறறிவு மனிதனின்
மூட மனம்!
அதுவரை
அரை அடி என்றாலும்
ஆயிரம் அடி என்றாலும்
அடைபட்டது கண்ணாடி
கூண்டு என்றாலும்
அதுவே எங்கள் உலகம்
அதிலேயே எங்கள் பயணம்
அங்கேயே எங்கள் மரணம்!
எங்களின் வேண்டுதல்
ஒன்றே ஒன்று தான்,
அது உங்களின் மனமாற்றம்!
அதுவே
எங்கள் போன்ற
சிறு உயிரினங்களின்
சுதந்திரத்திக்கான சிறகுகளாட்டும்!
பரந்த அச் சமுத்திரம்
எங்கள் மௌனத்தையும்
புலம்பலையும்
தன்னுள் தாங்கி கொண்டு
எங்களுக்கான உறவுகளையும்
சுதந்திரத்தையும்
தரும் உலகமாகட்டும்!
அதுவரை
கண்ணாடித்தொட்டியில்
எங்களின் ஒவ்வொரு துள்ளலும்
எங்களுக்கான உலகம் நோக்கி
தாண்டி குதிக்கும்
தன்னம்பிக்கை முயற்சியே!
எமக்கான காலம் வரை
சமுத்திரம் தாண்டும்
எம் முயற்சி தொடரும்…….
என்றாவது ஒரு நாள்
கால சுழற்சியில்
கடவுளின் காதுகளுக்கு
எங்கள் குரல் கேட்கும்
அன்றாவது
உடைபடட்டும்,
எங்கள் கனவுகளையும்
ஆசைகளையும்
பூட்டி வைத்த
கண்ணாடி தொட்டிகளும்
கருணை இல்லா
மூட மனித மனங்களும்!
தலைப்பு: சுதந்திரம் 75
அருமை சுதந்திரமே!
தியாகம் தந்த பரிசே!
உயர் மட்டும் பெற்று
உடல் மறுத்து வந்தாயோ!
கண் முன்னே நிற்கிறாய்!
கண்ணுக்கு ஏனோ தெரியவில்லை!
யாரை பார்க்க நீ வந்தாய்!
கல்வி பயில வந்தாயோ?
அப்படியானால் நீ சாதியை முதலில்
முடிவு செய்!
வேலை வேண்டி வந்தாயோ?
இட ஒதுக்கீடுஉன் சாதிக்குமா?
கவனித்துக்கொள்!
நீதி வேண்டி வந்தாயோ
நிதி திரட்டி வைத்துக்கொள்!
பாதுகாப்பு கேட்டு வந்தாயோ?
மடிந்த பின்பு தான் கிடைக்கும்
புரிந்து கொள்!
சமத்துவம் தேடி வந்தாயோ?
கண்டுபிடித்தால் என்னிடம் காட்டிச்செல்!
பசியால் உணவு தேடி வந்தாயோ?
உற்பத்தி செய்பவனும் உண்ணாவிரதம்
நீ தேர்த்திக்கொள்!
அன்பு தேடி வந்தாயோ?
இதெல்லாம் கிடைக்காத இடத்தில்
அதுமட்டும் எப்படி கிடைக்கும்?
நான் சொன்னதெல்லாம் பொய் என்றால்
நீ என்னுடன் வா!
ஆராவாரமாக வரவேற்கின்றேன்.
பசியும் ருசியும்
ஏழையின்
வயிறு பசிக்கும்.
ஆனா….
ருசி அறியாது…!!
பணம்
படைத்தவனின்
வயிறு பசி அறியாது
ஆனா…ருசி அறியும்…!!
–கோவை சுபா
கவிதை.
சுதந்திரம்75
சுதந்திர காற்றை சுவாசிக்க இந்த மண்ணிலே பிறந்த மாபெரும் சிந்தனையாளர் நம் இந்தியர்.
அடிமைத்தனத்தின் ஆயுதமாக இருந்த நாம் சுதந்திரத்தின் ஆணிவேராக மாரிய தருணம் இது.விடுதலை விழ்சியிலல்ல எழுச்சியின் உருவானதொருஉதயம். எத்தனையோ உயிர்கள் இந்த மண்ணிலே புதைந்தன இந்த சுதந்திர காற்றை நாம் சுவாசிக்க.
தலைப்பு:சுதந்திரம் 75
கொடிகள் பறக்கிறது நமக்கு சுதந்திரம்
கிடைக்கிறது
போராடிய உள்ளங்களை
நினைக்கிறாது
பெண்களின் பங்கு இருக்கிறது
வெள்ளையர்களை எதிர்த்த முதல்
பெண்மணி வேலுநாச்சியார் என
தெரிகிறது
வீரபாண்டிய கட்டபொம்மன் வார்த்தை
ஜொலிக்கிறது மருது சகோதரர்கள்
வீரம் மனம் நினைக்கிறது
போராட்டத்தில் பல உயிர்கள்
இழக்கிறது காந்தியின் அகிம்சை
இருக்கிறது சுபாஷ் சந்திரபோஸ்
ராணுவம் இருக்கிறது பல மக்கள்
வாழ்க்கை சிறக்கிறது இன்று நமக்கு
சுதந்திரம் கிடைத்தது சுதந்திரம்
தியாகம் நெஞ்சம் போற்றுகிறது
கவிதை
சுதந்திரம்75
சுதந்திர காற்றை சுவாசிக்க முற்படுவோம் இந்த தருனத்தில்
அடிமையாக வாழ்ந்த காலம் மறைந்தது ஏற்றங்கள் கண்டிருக்கிறோம் நம்நாட்டில்.
காந்தி பிறந்த மண்ணிலே நாம் வாழ்வதே பெருமை
எண் தேசக்கொடி பாரபட்சம் இல்லாமல் பட்டொளி விசி பார்க்கட்டும் எட்டுதிசைகளுக்கும்
நன்றி
கவிதை
தாயின் மணிக்கொடி
நம் நாட்டு மணிக்கொடியின் வண்ணங்களின் எண்ணிக்கை மூன்று
இந்த மணிக்கொடியை
பெறுவதற்கு
நம் மூதாதையர்கள்
பட்ட துன்பங்கள்
எண்ணிலடங்காது…!!
நம் நாட்டிற்கு
வியாபாரம் செய்ய வந்த
வெள்ளைக்காரன்
நம்மில் சிலரை விலைக்கு வாங்கினான்
பிறகு அவர்களை வைத்து எல்லோரையும்
அடிமையாக்கி
கொடுங்கோல் ஆட்சி செய்தான்
வெள்ளையனின்
ஆட்சியை எதிர்த்து
“சுதந்திரம்
எனது பிறப்பு உரிமை” என்று
பாலகங்காதர திலகரின்
கோஷம் நெருப்பு தீயாக நாடெங்கும் பரவியது
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க உத்தமர்கள்
பலர் தங்களின்
வசந்த காலத்தை
தியாகம் செய்தார்கள்.
நாட்டின் சுதந்திரத்திற்கு
அரும்பாடுப்பட்ட
உத்தமர்களை வணங்கி
நமது நாட்டின்
75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவோம்
பெற்ற சுதந்திரத்தை பேணிகாப்போம்…!!
தாயின் மணிக்கொடியை
தாழ்ந்து வணங்குவோம்
பாரெங்கும் பட்டொளி வீசிப்
பறந்திட செய்வோம் வாரீர்…!!
–கோவை சுபா
உறவுகள்
அன்பின் அடைக்கலம்
அம்மாவின் அரவணைப்பு
அப்பாவின் ஆதரவு
தாத்தாவின் அறிவுரை
பாட்டியின் பண்பு
அண்ணனின்அன்பு
அக்காவின் அக்கறை
தம்பியின் குறும்பு
தங்கையின் கனிவு
பாசத்தின் உன்னதம் உறவு.
சா.மெஹபுப் சானியா
மௌன கீதம்
வலிகள் கடத்தப்படா வரிகளில்
வெறும் வாக்குமூலம் பதிவாயிற்று…
நினைவுகளைக் கொன்று புதைத்த
புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு,
மெல்ல மெல்ல நினைவுத் தடயங்கள்
தோண்டியெடுக்கப்படுகிறது…
கிளறக் கிளற புதிது புதிதாய்
விரியும் நினைவடுக்குகள்…
எங்கேயிருந்தன இவை இவ்வளவு நாளும்?
நீளும் பொழுதெல்லாம்
நினைவில் வராதவை…
இன்று அடுக்டுக்காய் வந்து
உள்ளத்தை அப்பிக்கொள்கின்றன…
நானில்லாமல் நீயில்லை என்று
நாட்டிய அபிநயம் காட்டின…
வேண்டாம் என்று,
கொன்று புதைத்தவை எல்லாம்
மீண்டும் எழுந்து வந்து – சோகமாய்
மௌனகீதம் இசைத்தது…
வலிக்காத நினைவுகளை மட்டும்
வைத்துக்கொண்டு,
மற்றவற்றையெல்லாம் மூட்டை கட்டி
காட்டாற்றின் நடுவில் போட்டேன்
காணாமற் போகுமென்று.
சுதந்திரம் 75
சுதந்திரத்தை மீட்டெடுபோம்…..!!
சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைத்துவிடவில்லை…….!
சுதந்திரம் கிடைத்தது மந்திரத்தாலும் அல்ல
தந்திரத்தாலும் அல்ல…………..?
ஒற்றுமையாய் ஒட்டி உறவாடிய அரசுகளுக்கிடையே
வேற்றுமையை வளர்த்து அந்த
ஒற்றுமையின்மையை பயன்படுத்தி
ஆடை, ஆபரணங்களை வணிகம் செய்தவன்
ஆட்சி கட்டிலில் ஏறினான்.
அந்நிய நாட்டை சேர்ந்தவன்
மண்ணின் மைந்தர்களை
கொத்தடிமையாக்கி
கொடுங்கோல் ஆட்சி செய்தான் ….!
அடிமை தளையை அகற்ற
அந்நியனை எதிர்த்து
விடுதலை உணர்வை முதன்முதலில்
விதைத்தவன் மாவீரன் பூலித்தேவன்,
வெள்ளையனின் வரிவிதிப்பை எற்றுகொள்ளாத
பாளையகாரர்களான கட்டபொம்மனும், மருதுசகோதரரும்
தன உயிரை துச்சமாக எண்ணி
தூக்கு மேடையையும் துணிவாக ஏற்றுகொண்டனர்
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றவர் திலகர்
சுதந்திரத்திற்காக சூல்கொண்டு
கிளர்ச்சி செய்தவர் சுபாஷ்
கிளர்ச்சிக்கு வித்திட்டவர் பகத்சிங்,
சுதந்திர காற்றை சுவாசிக்க
சுதேசி கப்பலை செலுத்தியவர் வ. வு. சி,
சுதந்திரம், சுதந்திரம் என்றே உயிவிட்டவர்
சுப்ரமணிய சிவா….,
உள்ளத்தில் சுதந்திர உணர்வை பாடலின் மூலம்
ஊட்டியவர் மகாக்கவி பாரதி,
உயிர் பிரிந்தாலும் பாரதக்கொடியை
உயிராய் மதித்து காத்தவர் திருப்பூர் குமரன்,
தீவிரமாய் போராடிய தீரன் சின்னமலை ,
வீரன் திப்புசுல்தான் போன்ற
வீரர்களுக்கு நிகராக களத்தில் இறங்கிய
வீரமங்கை வேலுநாட்சியார்,
வீராங்கனை ஜான்சிராணி,
வீரதீரமிக்க கேப்டன் லட்சுமி என…..
விடுதலை வேட்கைகாக வெகுண்டெழுந்த
வீறுகொண்ட நெஞ்சங்களின்
வீரமுழக்கத்தாலும், தியாகத்தினாலும் கிடைத்த
வெற்றிதான் சுதந்திரம்…….!
அந்நியனை விரட்ட சுபாஷ், பகத் போன்றோர்
வந்தேமாதரம் என்பதை தாரக மந்திரமாக கொண்டு
உயிர் கொடுத்து, உதிரம் சிந்தி, பெற்ற
உயர்சுதந்திரத்தை உயிராய் மதிப்போம்…..!
சூழ்ச்சியால் நாட்டை கைபற்றியவனை
வீழ்ச்சியடைய செய்து
பெற்ற சுதந்திரத்தை
பேணி பாதுகாப்போம்…….!!
வெள்ளையனிடம் பெற்ற சுதந்திரத்தை
வேடமணிந்து தலைவர்களாய் உலவும்
கொள்ளையனிடம் சிக்கி தவிக்கும்
சுதந்திர நாட்டை மீட்டெடுபோம்…..!
ஜெய்ஹிந்த்
சுந்தரசுதர்சன்
கனவு!
இருள் திரையின் பின்..
ஒளிர்கிறது…
நட்சத்திர மின்னல்!
சினேகமோ இல்லையோ..
ஏதோ எதையோ..
துரத்திப் பிடிக்கிறது!
பல நேரம் பழமை..
சில நேரம் புதுமை..
என வகைகள் கடந்து…
நிழலிலும் விரிகிறது…
பெருங்குடை!
நிஜத்தின் பிம்பங்கள்…
இடைவெளியின்றி…
இணைந்து வழங்கும்…
இசையின் தீற்றலில்..
மென்சோகம் பூக்கிறது!
சிலநேரம்…
தோன்றினர்…
என்னைப்புதைத்தவர்கள்…
சலனமின்றி!
சிறு மழையும்…
பறவைகளும்..
ஆங்காங்கே…
ஆணியடித்து நிற்கும்…
அசையாத சுவடுகளின்…
சிறுகதைகள்!
மீண்டுமொரு .
கனவுத் தொடர்கதைக்கு..
ஆயத்தமாகிறது…
வண்ணமயமான..
உறக்கம்!
தலைப்பு:அடை மழை
#அடை மழை
பூமியின் சேலை விலகலை
மேகம் விலக்கிப் பார்க்கிறது
வானம்
நீ மழை விரும்பி
மழை உன் விரும்பி
இடையில் பாவம்
குடை தத்தளிக்கிறது;
அடைமழையில் நனைகிறாய்
“மழையும் மழை சார்ந்த இடமுமாய்” ஆறாம் திணையாகிறது
உன் வீட்டு முற்றம்
உன்னுடல் கழுவி
உன்னை அழகாக்கும்
அதே மழை
என்னை மட்டும் ஏன் அழுக்காக்கிறது?
அடைமழையின் பேரிரைச்சலை
மிஞ்சவே செய்கிறது
இடைமடிப்புகளில்
நீ ஒளித்து வைத்த மௌனம்;
மழை நனைத்த உனதாடைகளை
இரகசிய அறைக்குள் ஒளித்து வை தேனீக்கள் உன் வீடு தேடி வரக்கூடும்;
உன் கன்னத்தில் விழுந்து
என்னுயிரில் சிதறுவதற்காகவே
பொழிகிறது வெட்கமழை..!
நான் முத்திய பின்பு மழையும்
மழை முத்திய பின்பு நானும் என கன்னப்பரப்பில் சிந்துகிறது
முத்தமழை..!
சூடான உணவு பதார்த்தங்களால் இரைப்பையும்
சூடான உதட்டு முத்தங்களால்
கன்னமும் என
ஒவ்வொரு முறையும்
காதலால் நிரப்பப்படுகிறது
அடர்மழைக்கால வெற்றிடம்
– நா.மாரியப்பன்
நட்பு
சோகத்தில் இருக்கும் போது ஆறுதல் சொல்லி
மகிழ்ச்சியில் இருக்கும் போது சிரிப்பை பகிர்ந்து
கள்ளும் முல்லும் இல்லாமல் பழகி
மேடு பள்ளத்தைத் தாண்டி
சிரிப்புடுன் வருவது நட்பு.
சா.மெஹபுப் சானியா
தண்ணீர்
உணவுக்கு முன் தண்ணீர்
உயிர்கவளுக்கும் தேவை தண்ணீர்
மழையிலும் தண்ணீர் கடலிலும் தண்ணீர்
சில உயிரினங்கள் வாழ்வதோ தண்ணீர்
நாம் வாழ்வது தண்ணீரில் அல்ல
ஆனால் நாம் வாழ்வதற்க்கு தேவை தண்ணீர்.
சா.மெஹபுப் சானியா
முதியோர்கள்
அன்பையும் அறனையும் ஊட்டி
வாழ்க்கை முழுவதும் சிரிப்பை பகிர்ந்து
அவர்கள் கற்ற பாடத்தை நமக்கு கற்பித்து
பல அனுபவங்களை சந்தித்து
பல கதைகளை சொல்லி
நம்மிடம் அன்பாய் இருக்கும் முதியோர்களை நாம் என்றும் மதிக்க வேண்டும்.
சா.மெஹபுப் சானியா
தோழி
குழந்தையில் மலர்ந்தது நம் நட்பு
இடையில் பிரிந்தோம்
நீ என்னை மறந்தாய்
நான் உன்னை மறந்தேன்
பின் இருவரும் சேர்ந்தோம்
ஆனால் உன்னை போல் ஒரு தோழி இன்று இல்லை எனக்கு
நாம் பிரிந்தாலும் சேர்ந்தாலும்
என்னுடைன் நீ உன்னுடன் நான்.
சா.மெஹபுப் சானியா
நம்பிக்கை
மனிதனின் இயல்பு வெற்றி தோல்வி
நம்பிக்கை கொண்டால் வெற்றி
நம்பிக்கை இழந்தால் தோல்வி
தன்நபிக்கையில் ஓடினால் அவன் முதல்வன்
மூடநம்பிக்கையில் ஓடினால் அவன் இறுதியாளன்
இரவோ பகலோ
வெற்றியோ தோல்வியோ
தன்நபிக்கையில் ஒடுங்கள்
இலக்கை அடையும் வரை முயற்சிப்போம் வெற்றி நமதே.
சா.மெஹபுப் சானியா
அப்துல் கலாம்
மனிதர்களிடையே ஒரு ரத்தினம்
ஊக்கத்தின் உன்னதம்
மாணவர்களின் உத்வேகம்
ஒரு உறுதியான மனிதன்
வெற்றியின் சின்னம்
உத்வேகத்தின் பெயர் அப்துல் கலாம் அவர்கள்.
மலாலா
தெரிந்த பலருக்கு
தெரியாத சிலருக்கு
புரிந்த பலருக்கு
புரியாத சிலருக்கு
அவளின் மேற்கோள்கள்
பெண்களின் சுதந்திரம் கல்வி
அது அவரகளுக்கு இல்லை என்றால்?…
அதற்காக போராடினாள்
சிறுவயதிலேயே அந்த துணிவு
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவள்
உங்கள் உத்வேகத்துடன்,
சா.மெஹபுப் சானியா
காதல்
காதல் காவியம் கண்டெடுத்த முத்துச்சரம்.
காதலித்துபார் உன்வாழ்கையில்
புதியதோர் மாற்றம் புதுப்பிறப்பெடுக்கும்.
ஆயிரம் ஆயிரம் மலர்கள் அழகழகாய்
அடிமனதில் பூத்துக்குலுங்கும்
உன்புன்னகை புதிதாகும் கண்ணிமைக்குள் ஆயிரம் எண்ணங்கள் அழகாய் ஆட்சிசெய்யும் .
காதலின் எண்ணங்களை மனதிற்குள் சுமந்த உனக்கு கடவுளே கண்முன் தோன்றினாலும் அவளின் நினைவுகள்
மட்டும் வாழ்கையின் தத்துவத்தை சொல்லும்.
வாழ்கை
வாழ்கை வசந்தம் வாழதெரிந்தவனுக்கு.
வாழ்கை இன்பம் வாழ்கையை நேசிக்க த் தெரிந்தவனுக்கு. தினம் தினம் உதிக்கும் சூரியன் போல் ஒவ்வொரு நாளும் புதியது. இந்த புண்ணிய பூமியில் புது பிறப்பெடுத்தவன் நீ மட்டும் தான். இந்த மண்ணுலகை ஆளப்பிறந்தவன் நீ ஒருவன் தானடா.
இன்பத்தையும் துன்பத்தையும் சகித்துக்கொள்ள கற்றுக்கொள் வாழ்கை வளமாகும்.
உன் வாழ்கையை வாழ தகுதியுடையவன் நீ மட்டும் தானடா.
வாழ்வை நேசித்து வாழ்ந்துபார் வாழ்கை சுவாரஸ்யமானது.
நட்பு
எங்கோ பிறந்து,எங்கோ வளர்ந்து
எதிர்பாராமல் சந்தித்து வந்த புதியதோர்உறவு நட்பு.
நல்ல நண்பன் சிறந்த நூலகம் …
சிறந்த நட்பு தினம் தினம்நாம் பயிலும் புத்தகம்….
உண்மையான நட்பு உயர்ந்தால் வாழ்வுக்கு வழிகாட்டும்…
வாழ்கை பாதையை மாற்றும்…
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
தோல் கொடுத்து தாங்கும் எதிர்பாராத சொந்தம் நண்பன் ஒருவன் தானடா…..!
தாய்மை
அம்மா உன் விரல் கோர்த்து நான்
நடந்தால் வீதியெல்லாம் சந்தோசம்…
உன் சேலை முந்தானையை பிடித்தபடி
விடவில்லை இந்நேரம் வரையிலும்…
தள்ளாடும் வயதிலும் தலைகோதும்
விரல்கள் தாய்மையின் விரல்கள்…
துன்பங்கள் வரும்போது துணிந்து நிற்க கற்றுத்தந்தவள் நீயம்மா…
எழுச்சிதரும் எண்ணங்களை எனக்குள்
விதைத்தவள் நீயம்மா…
இறைவனை காண்கிறேன் உன் உருவில் தினம் தினம்…
ஏழெழுபிறவிக்கும் உன்னோடு வாழ
இறைவனை வேண்டுகிறேன் அனுதினமும்…
அடை மழை
பூமியின் சேலை விலகலை
மேகம் விலக்கிப் பார்க்கிறது
வானம்
நீ மழை விரும்பி
மழை உன் விரும்பி
இடையில் பாவம்
குடை தத்தளிக்கிறது;
அடைமழையில் நனைகிறாய்
“மழையும் மழை சார்ந்த இடமுமாய்” ஆறாம் திணையாகிறது
உன் வீட்டு முற்றம்
உன்னுடல் கழுவி
உன்னை அழகாக்கும்
அதே மழை
என்னை மட்டும் ஏன் அழுக்காக்கிறது?
அடைமழையின் பேரிரைச்சலை
மிஞ்சவே செய்கிறது
இடைமடிப்புகளில்
நீ ஒளித்து வைத்த மௌனம்;
மழை நனைத்த உனதாடைகளை
இரகசிய அறைக்குள் ஒளித்து வை தேனீக்கள் உன் வீடு தேடி வரக்கூடும்;
உன் கன்னத்தில் விழுந்து
என்னுயிரில் சிதறுவதற்காகவே
பொழிகிறது வெட்கமழை..!
நான் முத்திய பின்பு மழையும்
மழை முத்திய பின்பு நானும் என கன்னப்பரப்பில் சிந்துகிறது
முத்தமழை..!
சூடான உணவு பதார்த்தங்களால் இரைப்பையும்
சூடான உதட்டு முத்தங்களால்
கன்னமும் என
ஒவ்வொரு முறையும்
காதலால் நிரப்பப்படுகிறது
அடர்மழைக்கால வெற்றிடம்
மழை
பயிர்கள் நனைய செடிகள் அசைய
மரங்கள் ஆட மெல்லிசை காற்று வீச
இடியின் சத்தம் மின்னலின் ஒளி
கடலின் சீற்றம் மண்ணின் மகிழ்ச்சியே மழை.
சா.மெஹபூப் சானியா
இராணுவ வீரர்கள்
அந்த வார்த்தை நம்பிக்கை அளித்து
மூச்சில் வீரம்
பேச்சில் துணிவு
தேசத்தின் காவலர்கள்
மக்களின் ஊன்றுகோல்
ஊக்கத்தின் உன்னதம்
உத்வேகத்தின் சின்னம்
நாங்கள் எங்களுக்காக வாழவில்லை மக்களுக்காக
வாழ்கின்றோம் என்ற அவர்களின் சொல்
உயிரைக் கொடுப்போம் உயிரை காப்போம் என்ற அவர்களின் வார்த்தை
இத்தகைய பெருமையுள்ள இராணுவ வீரர்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை போதுமானது இல்லை
உயிரைக் கொடுத்து உயிரைக் காக்கும் இராணுவ வீரர்களுக்கு மரியாதையும், நன்றியும், பெருமையும் உள்ள ஒரு அன்பு வணக்கம்.
சா.மெஹபூப் சானியா
கடைசி இரயில் பெட்டி
வாழ்க்கை என்பது இரயில் போன்று
பல பெட்டிகளை உள்ளடக்கியது
ஒவ்வொரு பெட்டிகளும் ஒவ்வொரு வாய்ப்புகள்
நாம் எந்த பெட்டியை பிடிப்போம் என்பது நம் கையில்
கடைசி நேரத்தில் பிடிப்பது கடைசி வாய்ப்பு அது கடைசி இரயில் பெட்டி போன்று.
சா.மெஹபூப் சானியா
ஆஹா மாம்பழம்……
பழங்களின் அரசன்
தங்க நிழல்
பச்சை இலைகளுடன்
நான் சாப்பிட ஆசையாக வைத்திருந்த முதல் பழம்
நான் எப்படி இந்த சுவையை வெளிப்படுத்த முடியும்??
இனிப்பான பழம் எனக்கு பிடித்த பழம் தேசிய பழமான மாம்பழம்.
சா.மெஹபுப் சானியா
தலைப்பு: அன்பு அதன் மதிப்பை இழக்கும் போது
அம்மாவின் அன்பு எதிர்ப்பாராதது
அப்பாவின் அன்பு நம்மகூடியது
ஆசிரியர்களின் அன்பு மென்மையானது
நண்பர்களின் அன்பு நம்பிக்கையநம்பிக்கையானது
கடவுளின் அன்பு எங்கள் ஆசீர்வாதம்
ஒரு கோபத்தின் உடைமையில் நாம் வரும்போது, உண்மையான அன்பை நாம் உணராதபோது அன்பு அதன் மதிப்பை இழக்கிறது
இயந்திர ஆசிரியர்கள்
ஒரு சிறந்த ஆசிரியர் போற்றத்தக்கவர்
மேலும் அவர் பரிபூரணமானவர்
இன்று நமக்கு வியக்க வைக்கும் ஆசிரியர்கள் உள்ளனர்
நாளை இயந்திர ஆசிரியர்கள் இருக்கலாம்
நமது வழக்கமான நடைமுறையில் பல மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன
தற்போது நாங்கள் மகிழ்ச்சியான ஆசிரியர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறோம்
நம் வாழ்க்கையில் நம் ஆசிரியர்கள் ஒரு அங்கம், ஆனால் இயந்திர ஆசிரியர் அவர்களின் இடத்தைப் பூர்த்தி செய்யமுடியாது .
நான் மன அழுத்தத்தை வென்றேன்
மன அழுத்தம் அது வார்த்தை அல்ல அது ஒரு உணர்ச்சி
அந்த காலகட்டத்தில் நான் மிகவும் கடினமாக உணர்ந்தேன்
நான் என் பொறுமையை இழந்தோன் ஆனால் அதை வெல்வது எளிதல்ல
என் மனம் தான் அதர்க்கு காரணம்
நான் மீண்டும் மீண்டும் நினைக்கிறேன் ஆனால் அது குழப்பமாகிவிட்டது
நான் அதிலிருந்து வெளியேற முயற்சித்தேன்
நான் நினனத்தோன் மற்றும் எழுதினேன் நான் எழுதுவதன் மூலம் என் மன அழுத்தத்தை வென்றேன்
அப்பா
அன்பையும் இரக்கத்தையும் விதைத்தார்
நான் சோகமாக இருந்தபோது அவர் எனக்கு ஆறுதல் கூறினார்
நான் மகிழ்ச்சியாக இருந்தபோது அவர் சிரிப்பை பகிர்ந்தார்
ஆனால் இன்று நான் வாடிவிட்டேன்
மற்றும் நான் அவரை பார்க்க ஏங்கினேன்
ஆம் அவர் இப்போது இல்லை
நான் என் அப்பாவின் அன்பிற்காக ஏங்கினேன்
எனக்கு உன் மேல் உணர்வுகள் இருக்கிறது அப்பா நீங்கள் இல்லாமல் என் வாழ்க்கை அர்த்தமற்றதாக இருக்கிறது அப்பா….
சா.மெஹபுப் சானியா
தலைப்பு: திட்டங்கள் அனைத்தும் தோல்வியடையும் போது
திட்டமிடல் ஒரு நல்ல வழக்கம்
தினசரி திட்டமிடல் அதிக ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தருகிறது
எனக்கு சிறுவயதில் இருந்தே திட்டமிடும் வழக்கம் இருந்தது
நான் பல திட்டங்களைத் தீட்டினேன்
நான் திட்டத்தை சரியாகப் பின்பற்றினேன்
ஆம் ஆனால் சில நேரங்களில் இல்லை..
எப்போதாவது நீண்ட நேரம் தூங்கும்போது எனது திட்டங்கள் அனைத்தும் தோல்வியடையும்.
சா.மெஹபுப் சானியா
தாமரை
தேசிய மலர்
அதற்கு ஒரு சக்தி உண்டு
தேசத்தின் சின்னம்
அது அதிக புகழ் பெற்றது
அது வலிமையைக் குறிக்கிறது
மற்றும் இந்திய கலாச்சாரத்தின் சின்னம்
அது மிகவும் அழகாக இருக்கிறது
இது மிகவும் மகிழ்ச்சிகரமாக பூக்கிறது நாமும் அந்த அழகான தாமரை போல வாழவேண்டும்.
சா.மெஹபுப் சானியா
தேசிய விலங்கு
புலி,அது ஒரு சிறந்த போராளி
அதற்கு நிறைய தைரியம் இருக்கிறது
மற்றும் தைரியத்தின் சின்னம்
அதற்கு பயம் இல்லை
அது தனியாக வாழ விரும்பும்
அது எப்போதும் சக்தி மற்றும் வலிமையை வெளிப்படுத்துகிறது
அது அதிக உத்வேகத்தை அளிக்கிறது
அது நம் தேசத்தின் விலங்கு….
சா.மெஹபுப் சானியா
தேசிய பறவை, மயில்
அற்புதமான இறகுகள்
வண்ணமயமான தோற்றம்
மகிழ்ச்சியான பார்வை
மழையில் அதன் நடனம்
அதன் அழகை விவரிக்க வார்த்தைகள் இல்லை
அவை உயரமாக பறக்கவில்லை, ஆனால் அது அனைவரையும் ஈர்க்கிறது
சா.மெஹபுப் சானியா
தேசபக்தி
தேசபக்தி என்பது ஒரு வார்த்தையல்ல, நமது நாட்டின் மீதுள்ள அன்பும் மரியாதையும் மற்றும் நமது பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு கூடுதல்
நம் கடமை
சம உரிமை, சம முன்னுரிமை மற்றும் சமமான கல்வி நமது இந்தியாவிற்கு நமது கடமையாகும்.
சா.மெஹபுப் சானியா
வாழ்க்கை என்றால் என்ன??
மகிழ்ச்சி அல்லது சோகம்
கடினம் அல்லது எளிது
வெற்றி அல்லது தோல்வி
வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் பாதுகாப்பாக கையாள வேண்டும் , இல்லையெனில் அது உடைந்து விடும்.
சா.மெஹபுப் சானியா
சுதந்திரம் 75
அன்னையவள் அனைவருக்கும் அன்னையவள் – உயர்
ஆன்மீகத்திலும் பெண்ணிடத்தை தந்தவள்..!
இழிவு பேசும் மாந்தரையும் ஏற்பவள் – அவர்க்கும்
ஈகை காட்டி மன்னிக்கும் மாண்பைக் கொண்டவள்..!
உலக மொழியில் மூத்த மொழியைப் பெற்றவள் – அதனால்
ஊர் முழுதும் தன்னை வியக்க வைத்தவள்..!
எண்ணற்ற மதங்கள் பல கொண்டவள் – எனினும்
ஏற்றத்தாழ்வு இன்றி ஞானம் அளிப்பவள்..!
ஒரு எண்ணம் பழமொழிக்குள் புகுத்தினள் – அதனை
ஓதும் மறை வேதம் மூலம் உணர்த்தினள்..!
பண்பு தேடும் பகைவர்க்கொரு விவேகானந்தா – அவர்தம்
பழிதீர்க்கும் தன்மைக்கொரு விக்ராந்தா..!
அன்புக்கு அடிமை என்ற கொள்கை – அதனால்
அயல்நாட்டு தெரசா இங்கு வருகை..!
இனவெறிக்கு எதிரான பாதை – எனவே
இந்நாட்டு காந்தி அங்கு சேவை..!
ஞானம் வளர்க்க பெற்றுக்கொண்டாள் கீதை – உயர்
அன்பு காட்ட ஏற்றுக்கொண்டாள் பைபிள்..!
படைத்த இறைவனுக்கே புகழ் சொல்லும் குர்ஆன் – மனிதப்
பிறவிக்கெல்லாம் வழிகாட்டும் குறள்..!
இப்படி எந்த நாடு ? எந்த மதம் ? என்றினும்
உலகின் நன்மை ஒன்றே தனதாகக் கொள்பவள்..!
அனைத்துயிரிலும் அன்பென்றால் தாயினம் – அதுபோல்
அனைவருக்கும் தாயென்றால் என் நிலம்..!
அனைத்துலகும் பெருமை கொள்ளும் பெண்ணவள்- என்றும்
அழியாத “பாரத தாயவள்”…!!!
அடைமழை!
பூமியை
குத்திக் கிழிக்க
முனைகிறது
அடைமழை!
வெள்ள நீரை
நீர்
முந்திச் சென்று
விழுங்குகிறது
எதிர்ப்பட்டவைகளை!
சாளரக்கண்ணாடிகள்
காற்றோடு ஏந்தும்
திரண்ட சாரலை!
தாங்கிகளின்…
சுமை கூட்டிப்…
பெயர்க்கிறது
எதை எதையோ…
பெரும் இடி!
வெட்டுப்படும் வானம்..
நீளமாய்…
வெண் மின்னல்!
அடைமழையில்
நனைந்து எரிகிறது
பெருந்தீ!
மழையின் பயணம்
இடறி வழிகிறது
குடை சாய்ந்த
வண்டிகளில்!
உயிரின் மிச்சங்கள்
தேங்கும்
வெள்ள நீரில்
மிதக்கும் பூக்களில்!
உரசிப்போன
பெருங்கனவுகளில்
வழிந்தோடிய வானம்
இணைக்கிறது கோலமாய்
ஏதேதோ
புதுப்புள்ளிகளை!
… . . .
தலைப்பு: அடைமழை
அடை மழை வருகிறது
வாழ்ந்த வீடு அடையாளம் இல்லாமல்
போகிறது
கண்களில் கண்ணீர் ததும்புகிறாது
குடும்பம் தவிக்கிறது பெற்றவளின்
வலி தெரிகிறது
மண் மழையை ரசிக்கிறது
அதன் பின்னால் கரைந்து போகிறது
குழந்தையின் முகம் வடுகிறது
தாங்க இடம் தேடி கால்கள் போகிறது
ஊரே வெள்ளக்காடாக மாறி விட்டது
வீட்டில் மழை நீர் வாசிக்கிறாது
ஆகாயத்தில் இருந்து வரும் அடை
மழை
நான் பார்த்த முதல் மழை