கவிதை போட்டி 2022_07

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-07

kavithai potti

கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.


கவிதை போட்டி 2022_07 அறிவிப்பு

ஏட்டுச் சுரைக்காய்
ஆயுத எழுத்து
முதிர் கன்னி
அம்மா ஓர் பொக்கிசம்
முதல் நாள் நிலவு
ஆறாம் தினை
அறம் செய்ய விரும்பு
தமிழ் கடவுள்
வான் புகழ்
அல்லது தங்கள் விரும்பிய தலைப்பு

தலைப்புகளில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2022-07. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.


நடுவரின் வாழ்த்து செய்தி – நன்றி செந்தமிழ் அவர்களுக்கு

நடந்த கவிதைப்போட்டியில் என்னைநடுவர் பணிசெய்யப் பணித்தைமைக்கு நீரோடைக் குழுமத்திற்கு நன்றிகள்…
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கதை கவிதை கட்டுரை ஆன்மிகம் போன்ற இலக்கியம்சார்ந்த கலைப்பணிகளில், மிகுந்த பணிச்சுமைகள் பல இருந்தும்,  சிறந்த சேவையாற்றிவருகிறது நமது நீரோடைக்குழுமம் என்பதை கவிஞர்பெருமக்களும் புதிய எழுத்தாளுமைகளும் நன்கு அறிவார்கள்.எனவே முதற்கன் நீரோடைக் குழுமத்திற்கும் கவிஞர் நீரோடை மகேஸ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து 

அன்பிற்கினிய கவிதை ஆர்வலர்களேகவிதையின் தளம் எதுவென்றால்கண்டு,கேட்டு,உய்த்து,உணரும் அனைத்தும் கவிதையின் தளமேயாகும்.

எனவே நமது கவிஞர்பெருமக்கள்தாம்காணும் அன்றாடநிகழ்வுகளின் நிறைகுறைகளை இயற்கை அழகைகவிதையாய் மாற்றுகையில் பருத்தபொருளை சிறுத்த குடுவையில் அடைக்கும் செயலேகவிதையின் அழகாகும்…

எதுகையும் மோனையும் இருந்திட்டநிலைமாற்றிகருத்தையும் அதைக்கூறிடும்விதத்தையும் கொண்டு புதுக்கவிதையைபெருமக்கள் படைத்திட்டார்அதைக் கருத்தில் கொண்டுஇனிவரும் பிறக்க இருக்கும்கவிதைகளை பிரசவிப்போம்..

You may also like...

15 Responses

  1. Venkatesan says:

    பெண்

    அவள் பிறந்துவிட்டாள் ,
    சிறு சிறு பூக்கள்,
    பல பல வாழ்த்து
    பலகோடி புன்னகை
    இவைகளோடு,
    அவள் வந்துவிட்டாள் …..
    இருபாலர் நட்பு
    தெரு-முனை பள்ளி
    இருக்கும் இடமும்
    அவள் கண்டுவிட்டாள்….
    பூவென்று தூக்கும் பெரியோரையும் ,
    பூப்பெய்தால் என நகரும் சிரியோரையும்,
    வலியோடு நகைத்தே
    அவள் நன்கறிந்தாள்..
    வலியோடு சிரிக்கும் அவளையும்,
    அவள் எண்ணங்களையும் ,
    யார் அறிவார்?
    தேவைக்கு வரும் சிலரையும்
    மாதம் மாதம்,
    விரும்பி வரும் விருந்தாளியையும்
    அவள் முணங்கியபடி வரவேற்றாள்….
    தீட்டேன சொல்லையும்,
    தீயோர் பார்வையையும்,
    தீயிட்டு கொழுத்த
    அவள் வேண்டிவிட்டாள்…
    மாதம் ,
    அந்த ஏழு நாட்கள் முடிவில்
    பிறக்கும்,
    அந்த ஏழு ஜென்ம கனவை
    அடியோடு,
    அவள் மறுத்துவிட்டாள்…
    வாயற்ற செந்நாயும் ,
    அவன் கற்க ,
    கற்பழிக்கப்பட்டதை கண்டு
    அவள் நடுங்கிவிட்டாள்….
    நட்போடு நகைத்து
    பேசிய நண்பனையும்
    அவள் பயத்தோடு உதறிவிட்டாள்…
    வலியோடு வழியற்று தவிக்கும்
    வழியில்லா வாழ்க்கையை
    அவள் நிராகரித்தாள் ,
    ஒற்றை வரியோடு,
    *பெண்கள் பாவம் என்று*
    மண்ணை தன்வசபடுத்தினாள்…

  2. பிழை எனும் மழை

    பிறந்த கருவறையும் வளர்ந்த வீடும்
    புரண்ட காடும் ஒன்றாய்த்தானே இருந்தது

    காட்டையும் வீட்டையும்
    ஆளுக்கொண்ணா பிரிச்சதும் தான்
    தீராப் பகையாச்சி அண்ணனுக்கும் தம்பிக்கும்

    இருவருக்கும் மையப்புள்ளியா இருந்த அப்பாவும் அம்மாவும் இறந்த பிறகு
    அந்தப் புள்ளியும் மாய்ந்து போச்சி

    தூரத்து ஊரில் வாக்கப்பட்டு
    திருவிழாவுக்கு வரும் தங்கச்சிக்கு
    வேறு வேறு நாளில் விருந்து தந்தனர்
    சின்ன அண்ணனும் பெரிய அண்ணனும்

    ஊர்த்திருவிழாக் கூட்டத்தில் உரசி சென்றபோதும்
    வயக்காட்டில் இறவை முறை சொல்லும் போதும்
    நடுவீட்டில் புகுந்த பாம்பை சேர்ந்து அடித்த போதும்
    கழிவுநீரை வாசல் விட்டு வாசல் கடத்தும்போதும்
    முகம் பார்க்காமலேயே தான் நகர்த்திப்போனது காலம்

    யாரோ ஒரு தூரத்து உறவுப் பெரியவர்
    இவன் பெயர் ஞாபகத்துக்கு வராமல்
    அண்ணன் பெயரைச் சொல்லி அழைக்கிறார்..
    வாடிக்கொண்டிருக்கும் கிளைக்கு உயிரூட்ட
    வான் போல் ஈரம் தெளிக்கிறது
    அந்தப் பெரியவரின் பிழை.

    இளந்தென்றல் திரவியம்

  3. Kovai Subha says:

    யாரோ எழுதிய கவிதை

    யாரோ இருவர்
    இணைந்து எழுதிய
    “கவிதை” தான் அவள்..!!
    நான் அவளை மிகவும் நேசித்தேன்…!!

    யாசித்தேன் அவளிடம்
    இருவரும் இணைந்து
    “புது கவிதை”
    ஒன்றை படைத்திட
    “பதிப்புரிமை” வேண்டுமென்று…!!

    யோசித்தாள் அவள்
    சிறிது நேரம் கழித்து
    சம்மதம் தெரிவித்தாள்
    “புது கவிதை” படைத்திட..!!

    நீங்கள் வாசிப்பது
    யாரோ எழுதிய
    “கவிதை” அல்ல
    நாங்கள் இருவரும்
    இணைந்து எழுதிய
    “புது கவிதை” தான்…!!
    –கோவை சுபா

  4. Rajeshkannan Rajendran says:

    அம்மா ஓர் பொக்கிசம்

    பெத்தமகன் சொல்லியிருக்க
    நடுச்சாமம் ஊரும் அடங்கியிருக்க
    வெளுத்துத்தேச்ச வெள்ளச்சட்டக்காரக
    கெழவி கருத்தமேலுக்கு ஊசிபோட
    கொட்டாங்கொளவி கொட்டும்வெசம்
    கொண்டுவந்ததில்ல வருத்தமில்ல
    அதக்கொட்டிவிட்டுட்டோட எனக்குத்தெம்புமில்ல.

    நெல்லச்சொமந்து
    நெறமரக்கா சேத்தபின்னால
    அடித்தாளுக்கு வேலையில்ல
    ஆத்தாளும் இப்ப அதுபோல.

    தொத்தஉசுரு போகுமுன்னே
    ஒத்தச்சேதி கேளுமகனே

    தலைக்கும் காலுக்கும்
    தாருக்கம்புகொண்டு குத்தும்வலி
    பெருக்கெடுத்து உருக்கொலைக்க
    பெத்தெடுத்தேன் ஒன்னநானும்

    பச்சமேலு நடுநடுங்கும்
    எச்சிமுழுங்க பொடனி வலிக்கும்
    ஏம்மகன் ஒறங்கட்டும்னு
    ஒருக்களிச்சே படுத்திருப்பேன்
    ஒருகைய தலைக்குவச்சு
    நான் ஒறங்காம பாத்திருப்பேன்

    கால்நடந்து எட்டுவச்ச
    கடகடனு ஓடப்படிச்ச
    ஓடையில ஓடியாடி வெளையாடி
    ஒருகால ஒடிச்சுக்கிட்ட
    காலுக்குக் கட்டுப்போட்டு
    கதறியழுகிற மகனத்தேத்த
    எட்டுமொழ வேட்டியில
    தொட்டிகட்டி ஆட்டுனவ
    வெளக்கெண்ண ஊத்திவச்ச
    வெளக்குகூட ஒறங்கிருச்சு
    வேதனையில் ஆத்தஇவ
    ஒருபொட்டு அசரலடா
    ஒன்னவிட்டு நகரலடா.

    வயித்துல சொமந்து
    கையில ஏந்தி
    நெஞ்சில ஊட்டி
    மடியில அமத்தி
    கண்ணுக்குள்ளவச்சு வளத்தவள
    கஞ்சிஊத்த கடுசுபட்டு
    கருணக்கொலசெய்ய சொன்னமகனே
    கடசீமூச்ச பேச்சாமாத்தி
    கடவுள வேண்டிக்கிறேன்
    நான்பெத்த மகராசன் நல்லாயிருக்கனும்.

    ராஜேஸ்கண்ணன் ரா……

  5. Mahesh. S says:

    கலைதல்!

    இஸ்திரி போட்டு…
    அழகாய் கலையாமல்
    மடித்து வருகின்றன…
    உடைகள்!
    அவன் கலைந்தவாறே…
    தென்படுகிறான்!

    மழை வருவதாய்…
    எத்தனித்துக்….
    கலைகிற மேகங்கள்…
    புழுக்கம் புரப்புகின்றன…
    மனமெங்கும்!

    கலைந்த கூடுகளின்…
    காரணமாய் வளர்ந்த…
    முதியோர் இல்லங்கள்…
    உடைத்துப்போடுகின்றன…
    வாழ்வின்…
    உண்மை அர்த்தங்களை!

    கலைந்து போன கனவுகளில்….
    ஏதும் மிச்சமில்லை….
    எனப் புரியாமல்……
    கடந்து போகிறது….
    எப்போதும்..
    உணர்வு கலந்த…
    பெருமழை!

    நனைதலும் கலைதலும்…
    ஒரு சேர..
    நிகழ்ந்து போகின்றன….
    என்றும் நிரந்தரமாய்!
    …………

  6. Kovai subha says:

    ஆயுத எழுத்து

    உயிர் எழுத்துக்கள்
    மெய் எழுத்துக்கள்
    உயிர் மெய் எழுத்துக்கள்
    என்று தமிழ் மொழியில்
    மொத்தம் 247 எழுத்துக்கள்..!!

    ஆனால்… அதில்
    ஆய்த எழுத்து என்பது
    ஒன்றே ஒன்று தான்…!!

    எல்லா தமிழ் எழுத்துக்களையும்
    ஆயுத எழுத்துக்களாக
    மாற்றும் சக்தி
    எழுத்தாளனின்
    படைப்பில் தான்
    மறைந்து இருக்கிறது….!!
    –கோவை சுபா

  7. தாரா says:

    தலைப்பு: பெண்

    புதுமை பெண் சுதந்திர பெண்

    சக்தி இல்லாமல் சிவன் இல்லை

    பெண்கள் இல்லாத உலகம்

    இல்லை

    பிறந்தேன் ஒரு பேதையின்

    மகளாக

    நான் வாழ்கிறேன் போராடும்

    உலகில் பெண்ணாக

    எல்லை இல்ல கனவுகள் முன்பாக

    முன்னேற்றம் தேடும் ஒரு

    பெண்ணாக

    சிறகு விரித்து பறக்கிறேன்

    தனியாக

    சிந்தனையும் செயல்படும் ஒன்றாக

    நீ யாருக்கும் அடிமை இல்லை ஒரு

    பெண்ணாக

    தீயிலே இட்ட புழுவாக

    புதைத்தாலும் வருவேன் புதிய

    புயலாக

    அச்சம் , மடம் , நாணத்தின்

    உருவாமாக

    அகிம்சையில் நிற்பேன்

    துணிச்சலாக

    ஆணும் பெண்ணும் சமமாக

    வாழ்க்கையே ஒரு மேடையாக

    அதில் நடிக்கும் பத்திரம்

    பெண்ணாக பல வில்லன்களை

    பார்க்கிறேன் நேர்ராக என்

    நேர்மையே எனக்கு துணையாக

    பேசும் வார்த்தைகள் பல விதமாக

    பார்க்கும் பார்வைகள் சில தவறாக

    மனமே நீ எதற்கும் கலங்காதே

    மற்றவர்காக‌ வாழதே

    உன்னை பெற்றதும் ஒரு

    பெண்தான் அதை நீ மறக்காதே

    பெண் என்றால் கேவலம் என்று

    நினைக்காதே அவள்

    இல்லை என்றால் இந்த உலகமே

    இயங்கதே கோபம் வந்தால் உலகம்

    தாங்கதே அதற்கு நாம் நாட்டின்

    கண்ணாகியே வரலாரே

    கணவன் குடும்பம் என்று மட்டும்

    வாழதே உன் கனவை என்றும்

    மறக்காதே ஆசை வார்த்தைக்கு

    அடிமையாகதே உன் அம்மா

    அப்பாவை ஒரு போதும் மறக்காதே

    உன் மனசாட்சிக்கு துரோகம்

    செய்யதே

    வாழ்க்கையை நீ வெறுகாதே

    நீ வாழபிறந்தவள் என்றும் அதை நீ

    மறக்காதே கல்வி இல்லை என்றால்

    உலகம் மதிக்காதே கனவிலும்

    அதை நீ மறக்காதே நீ யார் என்று

    என்னை கேட்காதே நானும் ஒரு

    பெண்தான் அதை நீ மறக்காதே

    பெருமையின் சிகரம் பெண்தான்

    அவளே நாட்டின் கண் தான் ‌

  8. UMA KISHORE says:

    மாண்புமிகு மகளிர்! மங்கையரும் மாறிவிட்டாள்!
    *****************************************
    கண்ணே கணியமுதே என்பர், கனிந்து விடாதே!
    வாடா மலரன்றோ என்பர், வதங்கி விடாதே!
    முத்துப் பற்கள் என்பர், முறுவலித்து விடாதே!
    பவளச் செவ்விதழ் என்பர், பயந்து விடாதே!
    வேள்விழியால் என்பர், கேள்விக் கணைகளைத் தொடு!
    ‘ஞானம்’ எதற்க்கு என்பர், நாணி விடாதே!
    சங்குக் கழுத்து என்பர், சரிந்து விடாதே!
    ‘சொற்கள்’ கொண்டு சிறையிட்டால், பின்
    நான் என் செய்வேன்? என்கின்றாயா? – உன்
    அலைஅலையாய் கூந்தலில் அண்டத்தையே முடிந்து விடு!
    மின்னும் மூக்குத்தியை நிலவிலே நட்டுவிடு!
    காந்தப் பார்வைக் கொண்டு காமுகர்களை எரித்து விடு!
    உன்னதக் கரங்களால் உலகத்தை உனக்காக்கு!
    நம்பிக்கைக் கொடியை வானுயுர பறக்கவிடு! – பின்
    தன்மானச் சிங்கம் சிம்மாசனம் ஏறும்!
    கவலையும் கலக்கமும் காணாமல் போகும்!
    ‘வெற்றித் தேவதை’ வாசலிலே காத்திருப்பாள்!
    ‘விரக்தியும் தோல்வியும்’ விடைப்பெற்றுச் செல்வார்கள்!
    பரணித் தோறும் உனக்கு பூமாலை சூட்டப்படும்!
    விதியும் இல்லை, சதியும் இல்லை – உன்
    மதியினைக் கொண்டு மானுடம் தழைக்கச் செய்!
    மங்கையரின் மாற்றத்தால் பார் எங்கும் மார்க்கமே!
    வெற்றிக் கொடிக் கட்டு! பெண்ணே! மாண்புமிகு மகளிராய்!!

    MRS UMA KISHORE

  9. Mahesh.S says:

    வேகம்!

    அதீத வேகங்களில்….
    ஆர்ப்பாட்டமாய்..
    அர்த்தமின்றிப்…
    பயணித்துப் போகிறான்…
    அதிசய மனிதன்!

    குழப்ப மனங்கள்….
    வெளிறிப்போய்…
    வேகமெடுத்து ஓடுகின்றன..
    விகாரமாய் வீதியெங்கும்!

    புன்னகைக்கு வழியின்றி….
    பறந்து கொண்டிருக்கிறது….
    பேருலகு…
    காரணங்கள் போதாமல்!

    வேகமோகங்களில்…
    களையிழந்த மனிதனை…
    கரைசேர்க்க இவ்விடம்
    எவருமில்லை!

    வழியறியாப் பயணங்களில்…
    விடைபுரியாக் கேள்விகளினூடே…
    அரங்கேறுகிறது வேகநர்த்தனம்!

    நிதானங்கள் தோல்வியடைந்த…
    நிதர்சனத் தீர்மானங்கள்…
    வெறித்து நிற்கையில்…
    பலியிட்டு விரைகின்றன….
    பெருவேக நிஜங்கள்!

    முடிவில்லாதவை ஏதுமில்லை…
    எனில் முடிவுக்கு வருமெனும்….
    எதிர்பார்ப்புகளில்….
    வேகமில்லா விவேகம்….
    குடிகொண்டு எட்டிப்பார்க்கிறது…
    இறுதிக்கணங்களில்…
    இனி பயனுண்டா என!
    …………

  10. நாகரத்ன கிருத்திகா says:

    சட்டென சூழ்ந்த குளிரும் இருளும் வேகம் கொண்ட காற்றும் மனதில் இதம் கூட்டிச் செல்கிறதே…

    சிறுதுளி சாரல் உடல் மேல் பட்டதும் சிலிர்த்துகொண்டு தேகம் இல்லாத சிறகை விரிக்கிறதே…

    சடசடவென்று சாரல் வழுத்து பெருந்துளிகளாய் மாறி மழையென பெய்கையில் குழந்தையின் குதூகலம் என்னோடு ஒட்டிக்கொண்டதே…

    முகம் நிமிர்த்தி கைகள் விரித்து உனை ஏந்திக் கொள்கிறேன் எனை தழுவிச் செல்கிறாய்…

    பாரபட்சமில்ல கடவுளாய் எனையும் நனைத்து வழிந்து கடந்து செல்கிறாய் நீ…

    பற்றற்ற ஞனியாய் நினைவு மறந்து சிந்தனை கடந்து கரைகிறேன் சில நிமிடங்கள் உன்னுள் நான்…

    உடலெங்கும் தீண்டிச் சென்று முழுதும் குளிர வைத்தாய்….

    நொடி நொடியாய் என் பாவங்கள் கழுவிச்சென்று
    உள்ளமும் குளிர வைத்தாய்…

    யார் சொன்னார் நல்லவர்கள் இடத்தில் மட்டும் மழை பெய்யும் என்று…

    நீ எங்கு பெய்கிறாயோ
    அந்த பொழுதுகளில் அந்த நிமிடங்களில் நனைகின்ற யாவரும் நல்லவை தானே உணர்கிறார்கள்…

    பல சமயங்களில் பூலோகத்தில் சொர்கத்தை மீட்டெடுக்க பொழிந்து செல்கிறாய்…

    சில சமயங்களில் அத்துமீறலை கண்டிக்க முகிற்பேழ் மழையாய் அடித்து செல்கிறாய்…

    உன்னத மாமழையாய் பொழிந்து உயிர்கள் வாழ வழிவகை செய்கிறாய்…

    நீரின்றி ஏதும் இல்லை
    நின் வரவின்றி சுபிட்சம் இல்லை…

    மாமழை போற்றுதும்!!!

  11. நித்யாநரேஷ் says:

    தலைப்பு: பராசக்தி
    அன்னை வடிவான ஆதிசக்தியே!
    அன்பின் உருவான ஆதிசக்தியே!
    மதிகெட்ட மாந்தரின் விழி திறக்கவே
    மனசாட்சியின் உருவெடுத்து ஓடிவா!
    புனித பூமியில் சுயநலம் போக்கவே!
    மனித இனம் காக்கவே பிறந்துவா!
    பிஞ்செல்லாம் நஞ்சானதே!
    விடம் முறிக்க பாடிவா!
    ஒழுக்கம் கெட்ட ஓநாய்களை
    ஒடுக்கி வைக்க ஆடிவா!
    சிகரம் தொட சித்திர பாவைக்கு
    சிறகுதர பறந்து வா!
    பண்பை புகட்டவே
    பந்தபாசம் வளர்க்கவே
    நீ வா!வா!

  12. ஜா.பிரவின் முத்துராஜ் says:

    பல வேடிக்கை மனிதர்களைப் போல நானும்…

    அவன் கொஞ்சம் வித்தியாசம் தான்

    தொள தொள சட்டைக்குள்ளே
    அவன் எழும்புக்கறியை
    எங்கு பிடித்தாலும் தெரியாது

    உச்சி வெயில்பட்டு
    உருகி மூளை வழிய

    ஊதுபத்தி பத்து ரூவா சார்
    நாளு ஊதுபத்தி பத்து ரூவா மா…
    சாமி ஊதுபத்தி
    சந்தன ஊதுபத்தி
    சவ்வாது ஊதுபத்தி
    நாளு பத்து ரூவா… நாளு பத்து ரூவா…

    தோடி ராகம் மிஞ்சும்
    தொண்டை ராகங்கேட்டு
    சில்லரை சிதறவிடும்
    செமீன்தார் இல்லாத
    சில்லண்டி பேருந்து நிலையமிது

    தொண்டை வற்றியும்
    தொலையவில்லை அவன் பாட்டு
    ஈயக்காதுகளெதுவும் – அவன்
    இரைப்பைக்கு இரக்கங்காட்டவில்லை

    அடிநாக்கில் ஊற்றெடுக்கும்
    நாலுச்சொட்டு எச்சிலுக்கு
    அடி உதட்டு வெடிப்பு ஏங்க

    கடவாப் பல் தெரியும்
    கன்னத்து குழி பிறந்த
    கால்சொட்டு வியர்வைபட்டு

    பெணங்கண்ட சுடுகாடா
    உதடிரண்டும் சிலிர்க்க

    ஆயில் நிரப்பாத
    அவன் வயிற்றிஞ்சினில்
    எங்கிருந்தோ வந்த அலறல் சத்தம்

    அரசுப் பேருந்தின்
    அதிர்ந்த சன்னல் கம்பியின் வழி
    அல்பமாய் கேட்கிறது எனக்கும்

    இத்த வீட்டின்
    கடைசி விரிசலில்
    கச்சிதமாய் நுழையும் கடியெறும்பாய்
    நிற்க இடமில்லாத
    இந்த மெட்டல் மாட்டுவண்டியில்
    அவன் கட்டைவிரல் நுனி நுழைகிறது

    முன்சீட்டுக்காரன் மூச்சை
    மூனாவது சீட்டுக்காரன் நுரையீரல்
    வெறுக்கவுமில்லை தடுக்கவுமில்லை

    ஒவ்வொரு சாதிக்கும்
    இங்கு நிறமுண்டு குணமுண்டு
    மணமுண்டா…

    மூச்சுக்காற்றை எந்த நாசியும்
    முகர்ந்து பார்ப்பதில்லையே…

    மூக்கில் பஞ்சு வைத்த
    எந்த மானஸ்தனும் பேருந்திலில்லை
    திரும்பிய பக்கமெல்லாம் மனிதர்களே

    ஊதுபத்தி பத்து ரூவா சார்
    நாளு ஊதுபத்தி பத்து ரூவா மா…

    அந்த வெஜிட்டேரியன் அங்கிள்
    லெதர் ப்பர்சை திறக்குஞ் சத்தம்
    அவன் காதுமடலிரண்டையும் கவ்வியிழுக்க

    அந்த நரைத்த தலையை
    நங்கூரமிடுகிறது அவன் பார்வை

    பின்பாக்கெட்டிலிருந்து ப்பர்சை எடுத்து
    உள்ஜோப்பில் வைத்துவிட்டார் அவர்

    களவாணி என நினைத்திருக்கலாம்
    அல்லது கஞ்சணாயிருக்கும்

    தொப்பை மலைகளுக்கு இடையில்
    தொலைந்துவிட்ட அவனை
    துரத்தி பிடித்தது கண்கள்

    காட்சியில் எந்தமாற்றமும் இல்லை
    அதே
    ஊதுபத்தி பத்து ரூவா சார்
    நாளு ஊதுபத்தி பத்து ரூவா மா…

    ஓர விழி புருவமேறி
    எளக்காரமாய் ஒரு பார்வை
    உச்சுக்கொட்டி சிலரும்
    உர்ரென்று சிலருமாய்

    எல்லோர் கண்களிலும் அவன் நிறைந்திருந்தான்

    கல்நெஞ்சங்களில் எங்கிருந்தோ
    கசிவு தொடங்க

    சம்சா.. சம்சா.. சம்சா..
    மூனு பத்து ரூவா… மூனு பத்து ரூவா…
    சம்சே… சம்சே…

    மாங்கா கீத்து , இஞ்சி மொரப்பா, சிப்சே…

    அரை டிக்கட்டுகள் அனத்துஞ் சத்தம்
    பேருந்து எங்கும் பிரசவிக்கிறது

    விற்று தீராத ஊதுபத்திகளில்
    அவன் உப்பு கண்ணீர் உறைந்திருந்தது
    சந்தனமும் சவ்வாதும்
    மணந்த அவன் கைகள்
    கண்ணீரை ஏந்தி நிற்கிறது

    பிச்சை எடுக்கவோ
    பிடுங்கி திங்கவோ
    தெரியவில்லை என்கிறது
    என் எண்ண ஓட்டங்கள்

    விருப்பமில்லை என்கிறது
    அவன் விலா எழும்புகள்

    தார் சாலை முக்கால்வாசி
    முழுங்கிவிட்டது போக
    அவன் பாத வெடிப்பில்
    பதுங்கியிருந்த செருப்போடு

    பேருந்தின் கடைசி படியிலிருந்து
    அவன் இறங்கியதில்
    குலுங்கி சிரித்தது பேருந்து

    இத்தனையையும் பார்த்து
    ஒரு பத்து ரூபாய் கொடுக்க
    மனமில்லாத நான்
    பரிதாபப்படுவதென்பது
    பச்சை அயோக்கியத்தனம்…

    ஜா.பிரவின் முத்துராஜ்

  13. M.Manoj Kumar says:

    கவிதையின் பெயர் :-மழையில் காதல் எழுத்தாளர் :-M.மனோஜ் குமார்

    சொட்டு சொட்டாய் சிந்தும் தண்ணீர் தீயோடு சேரட்டும் தண்ணீர் தீ கலந்தபின் என் நெஞ்சில் உன் ஞாபகம் வந்தது இதமான உணர்ச்சி மற்றும் சுகம் தந்தது உன் ஞாபகம் வந்தவுடன் என் ஈரமான உடலை தூக்கி சுமப்பாய் என் அன்பே என்னை குழந்தைப்போல் கொஞ்சி தாலாட்டுவாய் என் அன்பே நான் என்ன செய்வது? நீயே சொல் என் அன்பே ஆருயிரே……………. என் அன்பே உன் பெயர் என் உதடுகளில் வந்தது சாக்குபோக்கு சொல்லி பல முறை உன்னை அழைக்க நேர்ந்தது சுற்றி சுற்றி மழைக்காலம் வந்தது ஓடியது நான் என்ன செய்வது? நீயே சொல் என் அன்பே நான் மூழ்கிய நதிப்போல கடற்கரையில் நின்றுகொண்டிருந்தேன் காற்று வாங்கி கொண்டிருந்தேன் நீ மின்னலாய் நுழைந்தாய் என் நெஞ்சில் காற்றும் இதமாக ஓடியது சுகம் தந்தது என் நெஞ்சில் நான் என்ன செய்வது? நீயே சொல் என் அன்பே சொட்டு சொட்டாய் சிந்தும் தண்ணீர் தீயோடு சேரட்டும் தண்ணீர்

  14. E.BALASUBRAMANIYAN says:

    … பெண்கள் …

    அனுபவத்தை கதை மூலம் விளக்கி – அளவில்லா பாசம் காட்டுகின்ற போது
    பாட்டியாகவும்….

    பத்துமாதம் வயிற்றில் சுமந்து – தோளிலும் மடியிலும் வைத்து வளர்க்கின்ற போது
    தாயாகவும்…..

    இன்னொரு தாயாய் இருந்து – எனக்கு நற்பாடம் புகட்டி நல்வழி படுத்திய போது
    சகோதரியாகவும்….

    கவலையில் இருக்கின்ற போது – புன்முருவல்
    காட்டி சிரிக்க வைக்கின்ற போது
    தங்கையாகவும்….

    அழுகின்ற போது ஆறுதல் கூறி – துன்பத்தில்
    தோள் கொடுத்து உதவுகின்ற போது
    தோழியாகவும்…..

    என் சுக துக்கங்களை பகிர்ந்து ,
    வாழ்நாள் முழுவதும் உடன் வந்து – என்னை நெஞ்சில் சுமக்கின்ற போது
    மனைவியாகவும்…..

    தந்தை ஸ்தானம் அளித்து –
    குட்டி குட்டிச் சேட்டைகளால்
    மனம் நெகிழ வைக்கின்ற போது
    மகளாகவும் …..

    இவ்வாறு பல பருவங்களிலும் ,
    உருவங்களிலும் நம் வாழ்வில்
    நிறைந்திருக்கும் பெண்களைப்
    போற்றுவோம் ……..

    -இ.பாலசுப்பிரமணியன்

    ………………………………………………………………………..

  15. G SIVAKUMAR says:

    முதிர் கன்னி…

    தனிமைதான் இவளது தனிப்பட்ட நீரோடை…

    கூட்டம் கூடி நின்ற இடங்களில் எல்லாம் கூனிக்

    குறுகி நிற்பதற்கு தன்னையே தனிப்படுத்திக்

    கொண்டால் நாரதர்களின் நர்த்தனத்திற்கு

    பதில் அளித்திடத் தேவையில்லை…

    எதிர்காலம் முளைப்பதற்குள் இளமையின்

    முதிர்காலம் ஆரம்பித்துவிட்டது…

    ஆண் வாசனை அறியாத அருந்ததிகளாய் …

    அழகிற்கு அர்த்தம் தெரியாத ஏதிலிகளாய்…

    வெளிச்சத்திற்கு வாராத இருட்டுகளாய் எங்கள்

    இரவுகள் ஏக்கத்தோடு கழிகிறது…

    திருமணம் இரு மனம் சேர்ந்த ஈடில்லாப்

    பந்தம்…ஆனால் நாங்களோ மணம்.வீசத்

    தகுதியில்லாத மறத்துப்போன மலர்கள்…

    ஏக்கங்களே எங்கள் நீங்காத இரவுகள்…

    காலங்கள் உருண்டோடுகின்றன…சபலங்களும்

    அபிலாசைகளும் என் உள்ளே அடக்கமாகின்றன…

    வரிசையாக நிற்கின்றன அடுத்தடுத்த

    கனவுகள் ..

    ஆயினும் சீர்வரிசை சீர்செனத்தி இல்லாத

    ஒரு மனம் எங்காயினும் உண்டென்றால்

    அவற்றின் முகவரி தந்துதவுங்கள்….