சிவசரன் கவிதை

செங்கோட்டையை சேர்ந்த அன்பர் சிவசரன் அவர்கள் எழுதும் கவிதை புத்தகத்தில் இருந்து சில கவிதைகளை வழங்கியுள்ளோம், விரைவில் அவரது கவிதை புத்தகம் வெளியிடப்படும் – sivas kavithai thoguppu

thanneer kodu thaagam edukkirathu

அகத்துள் நிறைந்து உன்னையும் என்னையும் ஆட்டுவிக்கும் அணுவின் கூட்டாம் உயிரின் நிலைதனை உணர்தல் போன்றதொரு  அற்புதம்…. என் கவியின் சொற்பதம்….

நீர்த்திவலை

ரூபம் கொள்ளும் நீர்த்திவலைகள்; தெறித்த
விரல் விரயத்தின் கதை
ஓவியங்கள்; கழிப்பறை சுவற்றில்
ஒட்டிக்கொள்ளும் ராஜா ராணி கதைகள்;
குருபோதித்த ஆலமரம்;
தலைகீழாய் சீடர்கள்;
உருக்குலைந்த உயிரின தோன்றல்கள்;
தேசங்களாய் சிதறிப்போன மானுடம்;
இரு கூறுகளிலன் உயிரணு;
உதறல்களின் திரவம் சொல்லும்
கதைகளம்;

சிவசரன், செங்கோட்டை.

வெளியில் புலப்பபடாது
அண்ட வெளியில் சுற்றிதிரியும் …. 
ஜீவநதியின் பிம்பம் நான்…..

You may also like...

5 Responses

 1. Kavi devika says:

  அருமையான அகக்கவியின் சொல்லாடல்….மேலும் மேலும் பயணப்பட்டு பல வர்ண ஜாலங்களை கவிதையில் மேற்கொள்ள கவிஞருக்கு வாழ்த்துகள்💐💐💐

 2. உஷாமுத்துராமன் says:

  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சிவா அவர்களின் “நீர்த்திவலை” என்ற இந்த ஒரு கவிதையே அவரின் கவித்திறனை பேசுகிறது. விரைவில் கவிதை தொகுப்பு வெளி வர வாழ்த்துக்கள்.

 3. தி.வள்ளி says:

  அருமையான கவிதை..நீர்திவலைகள் சாரலாய் தெறித்தன..கவிஞர்.ஷிவாஸ் அவர்களுக்கு பாராட்டுகள்.

 4. S. Rajakumari chennai says:

  கவிதை அருமை படிப்பவர்களுக்கு பெருமை

 5. Kasthuri says:

  Experience proveed.. very good lines..