நிகழ்கால காதலி

இவள் nigazh kaala kaadhali kaathal kavithai
விரல் சிவக்க
போர்வை மறைவில் விளையாடுவாள்
டிவிட்டர் குருவிகளையே தூதுவிடுகிறாள்
முகம் காட்ட மறுத்துவிட்டு
முகநூலிலோ படம் வரைகிறாள்..
கேள்விகள் அனைத்தும் பகிரியிலே பறக்கவிடுகிறாள்..

இவள்
எம்மனத்தை காப்பெடுத்து கொண்டு
அதையவள் காதல் கோப்பாக சேமித்து கொள்கிறாள்.

nigazh kaala kaadhali

இவள்
காதல், மகிழ்ச்சி
பாசம், அன்பு, கருணை
வருத்தம், எதார்த்தம், கோபம்
எல்லாவற்றையும்
சுழியம், ஒன்றாக டிஜிட்டல் மொழியிலே
வார்த்தெடுக்கிறாள்..

என்னதான்
உலகமிங்கே விரல் நுனியில் நின்றாலும்,
இவ்உலக புலம்பலுக்கு மத்தியிலும்
இவள் காதல் உலகம் மட்டும் சுருங்கவில்லையே!

இவள்
காலங்கள் மாறினாலும்
காதல்வடிவம் மாறவில்லை..
இன்னுமிவள்
வெட்கத்தை மறைத்துவிட்டு
முகம் உயர்த்தி பேசவில்லை..

இவள்
பருவத்திற்கு ஏற்ப பயிர்செய்தே
காதல் பயிரையே அறுவடை செய்கிறாள்

அந்தியூரான்
(ஸ்ரீ ராம் பழனிசாமி)

ஒரு வரி கவிதை

எனது மகனும்
போர்வீரனானான்
கொசு மட்டையுடன் வீடெங்கும் ஓர் உலா…
-அந்தியூரான்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *