கவிதைகள் தொகுப்பு – 24

கவிஞர் கவி தேவிகா, உங்கள் நீரோடை மகேஷ் மற்றும் ஈரோடு நவீன் ஆகியோர் எழுதிய கவிதைகளின் சங்கமம் இந்த வார கவிதை வெள்ளியில்.. – kaathal kavithaigal thoguppu.

kaathal kavithaigal thoguppu

அகமாயன்

என்னவன்
என்றும் எனதானவன்…..

எனக்கானவன்…..
என் அகமானவன்
என்னுயிரானவன்…..
எண்ணும் எண்ணமானவன்….

என்னை ஆளும்
எசமானனவன்…..

என்னுடலின் எசம்(ஆ)னவன்….
எள்ளளவும் விலகாத

எம்பிரானவன்……
எனதாசைகளின் எண்சுவடியவன்….

எண்குணாளனவன்…..
என்கவியின் எதுகையவன்…..
என்காலையின் உதயமானவன்…..
என்னிரவின் இன்பக்கனவானவன்….
எனக்குள் ஒன்றானவன்….
என்னுள் அனைத்துமானவன்…. – kaathal kavithaigal thoguppu

– கவி தேவிகா, தென்காசி


வாழ்வின் மிச்சங்களை தொலைத்த இடம்

எத்தனை முறை ரசித்து
மறைத்து வைத்தாலும்
அடுத்த முறை பார்த்து ரசிக்க
தூண்டும் அவளின் புகைப்படம் !
பிரம்மனின் படைப்பில்
அதுவும் ஓர்
அதிசயம் தான்..

வருணித்த வார்த்தைகளை
பொய் என்றாள் !
பிரபஞ்சம் வென்ற அழகும் நாணம்
மிஞ்சும் அவள் அரும்பு
புன்னகை முன்னே
பொய்கள் எதற்கு ! – kaathal kavithaigal thoguppu

கண்ணாடி முன்னே அவள் கரையும்
நேரம் !
அவள் பிம்பம் சொன்னது….
அழகை இன்னொரு அழகு
வருணிப்பது இயற்கையின் நியதி என்று !

கவிதை எழுத வைத்த
கண்ணுக்கும்
பெண்ணுக்கும் நன்றி
சொல்லாதவன் ஒரு கலைஞனா
கவிஞனா ?

ஒரு ஆடவன் வாழ்வின்
மிச்சங்களை தொலைத்த இடம்
அவனின் கண்கள்…

– நீரோடை மகேஷ்


உன் நினைவுகளோடு

உன் கால்களின் கொலுசு சத்தமும்
உன் முகத்தின் முத்து சிரிப்பும்
என் காதுகளில் ஒளித்திருக்க..
கண்ணயர்ந்து நான் எப்படி உறங்குவேன் கண்மணியே
இளையராஜாவின் காதல் பாடல்களை
எத்தனையோ கேட்டுவிட்டேன்
ஆனால் இன்னும் உன்னிடமிருந்து
செய்திகள் வந்த பாடில்லை
செய்திகள் உன்கண்டால் தான்
என் கண்களுக்குள் வெளிச்சம் பிறக்கும்
ஒவ்வொரு நொடியும் ஒரு கோடி
யூகங்களை மாற.. உன் நினைவுகளோடு
செய்திகளை நோக்கி காத்திருக்கிறேன்…

– ஈரோடு, நவீன்

You may also like...

5 Responses

 1. தி.வள்ளி says:

  மூன்று கவிதைகளும் முக்கனியின் சுவை. அருமையான எழுத்தாளுமை…. மனதைத்தொடும் வரிகள்…கவிகளுக்கு என் வாழ்த்துக்கள்

 2. Priyaprabhu says:

  கவிதைகள் அருமை.. 👌👌

 3. Kavi devika says:

  கவிதைக்கும் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

 4. Rajakumari says:

  3.கவிதைகளுமே அருமை

 5. Rangarajan says:

  நன்றாக இருக்கிறது கவிதை கள்