பொது கவிதைகள் தொகுப்பு – 10
இந்த அழகிய காதல் வரிகளின் வாயிலாக கவிஞர் நவீன் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – pothu kavithaigal thoguppu 10
என் மூச்சின் இறுதிநொடிவரை
மீண்டும் ஒரு முறை
நீ வேண்டுமென்று வரம் கேட்டேன்
கிடைத்த ஆனந்தத்தில்
மறந்தே போனேன்
மற்றும் ஒன்றை
நீ என்னுடன் எப்போதும் இருக்க வேண்டுமென்று
கேட்பதற்கு
ஆகையினாலோ என்னவோ
வந்த பொழுதிலேயே
உன் வசமாக்கிக்கொண்டாய் என்னை – pothu kavithaigal thoguppu 10
விழி முன் எப்போதும் நின்று
என்னை (யே) வசந்தமாக்கினாய்
தேடாத பொழுதும் முன் வந்து
தேவைக்கு அதிகமாகவே என்னை சிரிக்க வைத்தாய்
தோள் சாய நீ இருந்ததால்
நீ மட்டுமே போதுமென்று இருந்துவிட்டேன்
ஆதலால்
இன்று நான் மட்டுமே அழுகிறேன்
கண்ணீரை துடைக்க என் கரங்களுன்றி
காற்றாய் நீ வந்தாய்
உன் ஸ்பரிசத்தை சுவாசிப்பதற்குள்
கனவாகவே மறைந்து விட்டாய்
இன்னும் தேடுகிறேன் நான் தொலைத்த உன்னை
இனி இந்த உயிரில் ஏதும் இல்லை
வருவேன் ஒரு முறையேனும்
மீண்டும் ஒரு பிறவி எடுத்து
உன்னோடு மட்டுமே இருக்க வேண்டுமென்ற வரத்தோடு
நான் நடந்த திசைகளின் பாதைகளில் துணையில்லாத
என் தனித்த பயணங்கள்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெறுமை மட்டுமே
என்னை வரவேற்கத் தயாராய் இருந்தது
தோல்விகளை மட்டுமே பரிசாகக் கொடுத்து
விட்டுச் சென்ற காலங்கள்கூட என்
நிலை பார்த்துக் கலங்கியிருக்கும்
கலங்கிய கண்களுடன் உறங்கிய என்
விழிகளுக்கு கடினமான அதிகாலைகள்தான்
இன்னொரு பொழுதினையும்
உயிருடன் பார்க்க வாய்ப்பளித்துப் போயின
சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பு தாங்கொணாது
என் நிழலில் அமர முயன்று தோற்றுப் போனேன்
கொதிக்கும் சூழலில் வெந்து போனது என் பிஞ்சு மனமுந்தான்
என் உடலினை என் கால்களே சுமந்தாலும்
மனதின் சுமைகள் காற்தட வழியோரமாய்
கண் வழி நீரூற்றி ஆறுதல் சொல்லின பணமும் குணமும்
வெகுதூரத்திலுள்ள எதிரிகளாய்த் தெரிய
உறவுகள் எல்லோரும் என்னருகே அன்பாய்
இருப்பதுபோல் வழியனுப்பிய பயணங்களின் இடைவழியில்
அநாதை என்றொரு சொற்பதம் தாண்டிய
வலிகளோடு உண்மையான
ஒரு அன்புக்காய் மட்டும் யாசிக்கின்றேன்…
இது கவிதை சொல்லும் கவிதையல்ல
கற்பனைகளின் கதையுமல்ல
என் தனிமை எனும் கொடுமைக்குள்
எல்லைதாண்டிய சிறைவாசம்
ஒவ்வொரு நாளாய் எண்ணிக்கொண்டிருக்கின்றது
என் தனிமையின் வரிகள் விடுதலைக் கவியெழுத
தொடரட்டும் வலிகள் – என் மூச்சின் இறுதிநொடிவரை…
– நவீன், ஈரோடு
அருமை. வாழ்த்துகள்… தனிமையும் இனிமை பயக்கும் நீங்கா நினைவுகளில்
👌👌👌வாழ்த்துக்கள் கவிஞர் நவீன்
காதல் ,பிரிதலின் வலிசொல்லும் இளமையான, அருமையான வரிகள் …பாராட்டுகள் கவிஞர் நவீன் அவர்களுக்கு
நவீனின் கவிதை நன்றாக இருக்கிறது
கவிதை ரொம்ப நல்ல இருக்கு . உங்களுக்கு உங்கள் வரம் கிடைக்க வேண்டும். நன்றி கவிஞரே நவீன்.
கவிதை ரொம்ப நல்ல இருக்கு வாழ்த்துக்கள் கவிஞர் நவீன்.
கவிதை அருமை அண்ணா
வாழ்த்துக்கள்…