வார ராசிபலன் புரட்டாசி 25 – ஐப்பசி 01

ராகு கேது பெயர்ச்சி பலன்களை 2020 வாசிக்க இங்கே சொடுக்கவும்.. – rasi palangal oct 11 to oct 17.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பணவரவு நன்றாகவே இருக்கும், குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். வியாபாரம் நன்கு சிறப்படையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல பெயர் எடுப்பார்கள். விவசாயம் மகசூல் அதிகரிக்கும்.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சுக்கிர பகவானே நன்மைகள் பல செய்வார். ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. பணவரவு நன்றாகவே இருக்கும். அண்டை வீட்டார் மத்தியில் நல்ல உறவு நீடிக்கும். உடல்நலம் சுமாரான நிலையே காணப்படும். பணியாளர்கள் பணியில் நல்ல கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்கள் பாராட்டுகளை பெறுவார்கள். மாணவர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற்றம் அடைய வேண்டியிருக்கும். விவசாயத்தில் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். சீதனப் பொருட்கள் வர வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரத்தில் சிறுசிறு தடைகள் வரலாம். கலைஞர்கள் சுமாரான வருவாயே கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் 100 சதம் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் லாபம் கிடைக்கும்.
வழிபாடு: தினமும் காக்கைக்கு சாதம் வைக்கவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். ஏதாவது வகையில் பணவரவு உயரும். அண்டை வீட்டார் மத்தியில் சுமூக உறவு காணப்படும். ஆடை ஆபரணங்கள் வாங்க யோகம் உள்ளது. சகோதரர்கள் வழியில் ஆதரவு காணப்படும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். விவசாயம் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் பாராட்டுகளை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல வெற்றி அடைவார்கள். வியாபாரம் நல்ல வளர்ச்சி அடையும்.
வழிபாடு: திங்கள் வெள்ளி கிழமைகளில் சிவவழிபாடு செய்யவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். வீட்டில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் குழப்பங்கள் நிலவும். சீரான பணவரவு இருக்கும். புத்தாடைகள் வாங்குவீர்கள். பணியாளர்கள் பெண்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல தீவிரம் காட்ட வேண்டும். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் லாபம் உயரும்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும், சில சமயங்களில் தேவையற்ற மனக்கவலை அடைவீர்கள். உறவினர் வருகை நன்மையில் முடியும். பணியாளர்கள் நல்ல செல்வாக்கை பெறுவார்கள். வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் பாராட்டை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல உயர்வை அடைவார்கள். விவசாயம் நஷ்டம் அடைய வாய்ப்புகள் உள்ளன.
வழிபாடு: செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அண்டை வீட்டார்கள் சரண் அடைவார்கள். சகோதரி ஆதரவு கிடைக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.  பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
வழிபாடு: நாக தேவதை வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தில் வருமானம் உயரும். அண்டை வீட்டார்கள் நட்புறவுடன் இருப்பார்கள். வியாபாரம் லாபம் அடையும். கலைஞர்கள் லாபகரமாக செயல்படுவார்கள். மாணவர்கள் இரட்டிப்பு வெற்றியை அடைவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் லாபம் உயரும்.
வழிபாடு: ஏழைகளுக்கு தானம் செய்யவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தில் பெண்கள் உதவிகரமாக செயல்படுவார்கள். நினைத்தது நிறைவேற்றப்படும், உறவினர் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவும். பணியாளர்கள் நன்மை அடைவார்கள். வியாபாரம் லாபமே கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் பாராட்டைப் பெறுவார்கள். விவசாயத்தில் லாபமே கிடைக்கும்.
வழிபாடு: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். தேவைகள் பூர்த்தி செய்யப்படும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். குழந்தை பாக்கியம் பெற வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்கள் எதையுமே எதிர்கொள்வார்கள். மாணவர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். விவசாயம் கீரை வகைகள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
வழிபாடு: குலதெய்வ வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். குழந்தை பாக்கியம் பெற வாய்ப்பு உள்ளது. புதிய வீடு வாங்கும் எண்ணம் கைகூடும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் வரலாம். பணியாளர்கள் வேலைப்பளு குறையலாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாது. கலைஞர்கள் தேவை பூர்த்தியாகும். மாணவர்கள் பாக்கியசாலிகளாக திகழ்வார்கள். விவசாயம் சுமாரான பலனை எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: சிவ வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். நண்பர்கள் வகையில் உதவி பெறுவீர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் நல்ல ஆற்றல் பிறக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். கலைஞர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் பாராட்டுகளை பெறுவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
வழிபாடு: தினம் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யவும் – rasi palangal oct 11 to oct 17.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

2 Responses

  1. Rajakumari says:

    ஐயா அவர்கள் கூறியபடி நடக்கின்றது ராசி பலன்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி வாரம் தோறும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்

  2. தி.வள்ளி says:

    நாளும் கோளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் என வேண்டிக் கொள்வது தான் நமக்குள்ள வழி .. ஐயா அவர்களுக்கு நன்றி