இலக்கிய நிகழ்வு 13 ஒரு பார்வை
நீரோடை இலக்கிய குழுவில் இரண்டு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நீரோடை கவிஞர் பெருமக்களுக்கும் உறவுகள் எழுதும் கவிதை என்ற நூலை வெளியிட்ட அம்சபிரியா ஐயா அவர்களுக்கும் காலத்தின் சுவாசம் என்ற நூலை வெளியிட்ட மணிவண்ணன் ஐயா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீரோடை இலக்கிய அமைப்பை எனக்கு அறிமுகம் செய்து வைத்த என்னுடைய பால்ய காலத்து நண்பர் மா கோமகன் அவர்களுக்கும் நன்றி.

நீரோடையில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக பயணித்து வருகிறேன். ஒவ்வொரு இலக்கிய அமைப்பும் ஒவ்வொரு நோக்கத்தை கொண்டதாக இருக்கும். நீரோடை இலக்கிய அமைப்பின் முக்கிய நோக்கமே கவிஞர்களுடைய திறமையை அடையாளப்படுத்தி அதை இந்த உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆழமான நோக்கம் கொண்டதாகும். அதை மனதார வரவேற்கிறேன் கவிஞர்களுக்கு ஒரு பயிற்சி பட்டறையை கொடுத்து மாதந்தோறும் கவிதைகளை எழுத வைத்து அதை மின்னிதழில் வெளியிடுவது மற்றும் கவிநீரோடை என்ற அடையாளத்தை கொடுத்து அவர்களுடைய கவிதையை அச்சில் ஏற்றி அவர்களை பெருமைப்படுத்தும் நீரோடை இலக்கிய அமைப்புக்கும், நீரோடை மகேஷ் என்ற ஒற்றை மனிதனின் பின்னால் 16 வருட உழைப்பிற்கும் தலைவணங்குகிறேன். மனதார பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிதை நீரோடை என்ற குழுவில் பயணித்து வந்த கவிஞர் பெருமக்களின் கவிதைகளை தொகுத்து உறவுகள் எழுதும் கவிதை என்று அழகான தலைப்போடு நூலை தொகுத்திருக்கும் நீரோடை மகேஷ் அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களையும் பணிவான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூலினை வெளியிட்ட க. அம்சபிரியா ஐயா அவர்களுக்கும் நன்றி. அவர் ஒவ்வொரு கவிஞரின் கவிதைக்குள் இருக்கும் முக்கியமான பாடுபொருளின் அம்சத்தை உள்ளார உணர்ந்து வெளிப்படுத்திய விதம் நெகிழ்வை ஏற்படுத்தியது எனக்கு மட்டுமல்ல விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு கவிஞர்களுக்கும் அந்த நெகிழ்வை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.
காலத்தின் சுவாசம் என்ற நூலினை எழுதிய நண்பர் சித்திரப்பாவை என்கிற தியாகராஜன் அவர்களுடைய கவிதைகளும் மிகச் சிறப்பாக இருப்பதாக போ மணிவண்ணன் ஐயா குறிப்பிட்டு இருந்தார். அவர் மிகவும் சிலாகித்து கவிதைக்குள் இருக்கிற காதல் அன்பு உறவுகள் அவர் பார்க்கின்ற பார்வை எப்படி இருக்கிறது என்று அவருக்கு பிடித்த முக்கியமான பாடு பொருள்களை அடங்கியுள்ள கவிதைகளை வாசித்து உள்ளார மகிழ்வை வெளிப்படுத்தி இருந்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பன்முகத் திறமையாளர், போ மணிவண்ணன் ஐயாவுக்கும் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீரோடை குழுவிற்கு என்றென்றும் நன்றி கடன் பட்டிருக்கிறோம்.
வானம் பார்த்த பூமியாக இருந்தவர்களின் கவிதைகளை அச்சில் ஏற்றி நீரோடையால் நனைய வைத்துள்ளீர்கள்.
தங்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் உழைப்பிற்கும் என்றும் தலை வணங்குகிறோம்.
பேரன்புடன்
ல.ச.பா, பெங்களூரு


