உறவுக்கான தேடலும், உயிரோட்டத்திற்கான தேடலும்

நீரோடை முப்பெரும் இலக்கிய விழா 20-05-2026 காலை 11 மணி முதல் 12:30 வரை நடைபெற்றது. அதில் கவிஞர் திருப்பூர் சகா அவர்களின் 

“அவள் ஒரு அனந்தக் கோடு” நூலை மருத்துவர் கு. சுப்ரமணியம் ஐயா (நிறுவனர் கோவை கம்பன் கலைக்கூடம்) அவர்கள் வெளியிட கவிஞரின் குடும்பத்தார் பெற்றுக்கொண்டனர்.

நமது நீரோடை தொகுப்பு நூலான “உறவுகள் எழுதும் கவிதை” நூலை Rtn திரு. ப. இராஜ்குமார், (தாளாளர், பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளி, தலைவர் அவிநாசி கம்பன் கழகம், அவிநாசி முத்தமிழ் மன்றம் மற்றும் அவிநாசி நகைச்சுவை மன்றம்)  அவர்கள் வெளியிட

செ. சுப்ரமணியம் ஆசிரியர் (ப நி தலைமை ஆசிரியர்) அவர்கள் பெற்றுக்கொண்டார். 

மேலும் நிகழ்வில் 

எங்கள் ஆசான் ப. வெங்கடாசலம் (ப நி தலைமை ஆசிரியர்) ஐயா,

மு. கௌரி சங்கர் (பாரத மாதா நற்பணி அறக்கட்டளை கோவை) ஐயா, 

நண்பர் மெய்ஞான மூர்த்தி 

செயலாளர், அவிநாசி கம்பன் கழகம்,

நண்பர் அவினாசி மலர்மோகன், சதீஷ் களம் அறக்கட்டளை, கனகராஜ் ப (தலைமை ஆசிரியர் M. நாதம்பாளையம்) ஆகியோர் கலந்து கொண்டனர்…

நிகழ்வில் எதிர்பாராத சொந்தங்கள் நிகழ்வை நிறைவாக்கியது பெருமகிழ்ச்சி…

கர்ணன், அவினாசி அட்சயபாத்திரம்,

லீலா ஜெகன் மகிழ்வித்து மகிழ் திருப்பூர்,

கார்த்திக், அறம் அறக்கட்டளை திருப்பூர், 

மு. கௌரி சங்கர், பாரத மாதா நற்பணி அறக்கட்டளை, கோவை,

ஆயிசா கா. மு, அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளை

ஆகியோருக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.

நமது நீரோடை கவிஞர்கள் ஐந்து பேருக்கு “கவியோடை” விருது வழங்கப்பட்டது.

தனது வரவால் நிகழ்வை சிறப்பாக்கிய அனைவருக்கும் நன்றி..

உறவுக்கான தேடலும், உயிரோட்டத்திற்கான தேடலும் ஒரே இடத்தில் நிகழ்ந்த அதிசயம் வாழ்வில் தொடரும் …

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *