கவிதை போட்டி 2023_07

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2023-07

kavithai potti

வெற்றி பெரும் கவிஞர்களின் பெயர்கள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.

கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.

கவிதை போட்டி அறிவிப்பு

  • கர்மவீரர் காமராஜர்
  • விரும்பிய தலைப்பு

கல்விக்கண் திறந்த மகான் பிறந்தநாள் சிறப்பாக இந்த மாத போட்டி அறிவிக்கப்படுகிறது

மேற்கண்ட தலைப்புகளில் 15 வரிகளுக்குள் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வாட்சாப் அல்லது மின்னஞ்சலில் நேரடியாக அனுப்பப்படும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2023-06. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அடுத்த மாத மாத மின்னிதழில்) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

10 Responses

  1. ஜனாதன் says:

    பிரசாதத்திற்க்காக மட்டுமே கோவிலுக்கு வந்தவன் அருள் பெற்று சென்றான்,
    பசியைப் போக்க பள்ளிக்கு வந்தவன் கல்விப் பெற்றுச் சென்றான்.
    வயிற்றை உணவால் நிறைத்ததும் அவரே..!!!!
    மூளையை அறிவால் நிறைத்ததும்
    அவரே..!!!
    பஞ்சத்தோடு உறவாடிய புஞ்சை நிலங்களும்,
    பயிர் கொண்டு சிரித்தன,
    அணை நீர் தீண்டியபோது.
    அணைகளை எழுப்பியதும் அவரே..!!!
    பஞ்சத்தை போக்கியதும் அவரே..!!!
    கோடி வாழ்வுகளைக் கண்டுள்ளது உலகம்,
    சில வாழ்வுகளே ஆகின சகாப்தம்..!!!
    அதில் அவர் வாழ்வும் இருப்பதே எதார்த்தம்..!!!
    அரசியல்வாதி ஆகினும்,
    அவருக்கு இருந்தது ஒரு முகமே..!!!
    சிகையில்லாத் தலைக்கொண்ட சிந்தனைகளே,
    மிகையில்லா வளர்ச்சியைத் தந்தன தமிழனுக்கு..!!!
    என் தாத்தா மீதுப் பொறாமைக் கொண்டேன்,
    அவர் ஆட்சியில் வாழ்ந்ததற்க்கு..!!!
    அவர் நினைவகம் கடந்தபோதெல்லாம்,
    இத்தமிழன் நெஞ்சில் மிஞ்சியது
    நன்றி மட்டுமே…!!!

  2. க.சிவசங்கர் says:

    வலிகளில் இருந்து வரிகளுக்கு

    மீ.ராவும் கி.ராவும் எழுதாது விட்ட மிச்சம்,
    எழுதி விட்டால் போதும்
    நானும் ஓர் கவி என்பது என் எண்ணத்துக்கே உச்சம்!

    எதுகையும் மோனையும் சேர்ந்து இருந்தால் போதுமா? எங்கே நான் எழுதுவது எல்லாம் கவியா என்றோர் அச்சம்!

    ஏட்டிலும் , பாட்டிலும்
    எழுதிய கவிதை தானே சிறப்புறும்
    எங்கே இந்த இணையதள உலகில் முகப்புத்தகத்திலும்,
    புலனம் என்றதோர் புது பக்கத்திலும் எழுதி வைத்த என் எழுத்தெல்லாம் எங்கே உருப்பெரும்!

    தேடல் பொறியில் தேடி பார்த்தேன் கண்டேன் என்
    எழுத்து பித்து நீங்க
    ஓர் நீரோடை!.

    எழுதுவது எல்லாம் கவியல்ல
    எண்ணமெல்லாம் விரிவது கவி என்ற எண்ணம் கொண்டு திரிந்த என் சாரீரம் ,
    அதற்கு இந்த தளம் தந்தது சட்டை என்ற சாதகமான மேலாடை!

  3. கரும வீரர் காமராஜர்

    விருதுநகரின் எளிய தொட்டில் ஒன்றில்
    துளிர்த்து வந்தது
    நல்லதோர் வீணை ஒன்று

    தன்னை மீட்டிவிட்டு
    புழுதியில் எறிவார் என்று
    அப்போது அறிந்திருக்கவில்லை
    அந்த வீணை

    பொய்களுக்கு ஆயிரம் அலங்காரம்..
    உண்மைகளுக்கு அலங்காரம்
    தேவை இல்லை..
    நீ உண்மை.

    ஞானிகள் துறவைத்
    தோற்றுவிப்பார்கள்
    நீ துறவு பூண்வதில்
    ஞானிகளையே தோற்கடித்தவன்.

    அடிமை தேசத்தில்
    பாேராளியாய் உலவினாய்
    9 ஆண்டு சிறை பெற்றாய்
    விடுதலை தேசத்தில்
    தலைவனாய் உருவெடுத்தாய்
    9 ஆண்டு ஆளப்பெற்றோம்.

    நதி கண்ட இடமெல்லாம்
    அணை தந்தாய்
    அறியாமை கொண்டோர்க்குக்
    கல்வி தந்தாய்.
    கைவீசி நடந்த மனிதர்க்குத்
    தொழில் தந்தாய்.
    விளக்கை அணைத்து விட்டு
    விடைபெற்றாய்.

    நீ மட்டும் விடைபெற வில்லை
    நீதி நேர்மை
    உண்மை எளிமை எல்லாமும்
    உன்னாேடு விடைபெற்று
    உன்னையும் காணாமல்
    எங்களுக்கும் கிடைக்காமல்
    பறந்தோடிப் போயிற்று..

    இனியொரு காமராஜரை
    காண்பது கடினம்..
    காமராஜரின் பண்புகளில்
    ஒன்றையேனும் பின்பற்றி
    வாழ்வது எளிது..

    வாழ்வோம்.

    இளந்தென்றல் திரவியம்

  4. பி.ஆனந்தி says:

    இந்துவாக இருங்கள், கிறிஸ்தவராக இருங்கள், இஸ்லாமியராக இருங்கள் -ஆனால் முதலில் ஒரு மனிதராக இருங்கள்!

  5. கலையரசன்.ம says:

    தலைப்பு–அவளின் மீது ஒரு கணக்கு

    ஆல்பா வின் அதிகாரமே நீ

    கணித சுழற்சியின் கவர்ச்சியே நீ

    காண கிடைக்காத கோட்பாடு நீ

    என் கருத்துகளில் மீண்ட  பொய் கணக்கு நீ

    சேர கூடாத துன்பங்களின் முக்கோணம் நீ

    ஏக்கங்களை பெருக்க துடிக்கிறாய்

    நோக்கங்களை கூட்ட பார்க்கிறாய்

    கடினமான சூழ்நிலைகளை கழிக்க வழி தேடுகிறாய்  ஏன்?

    இவையாவும் நடக்க வேண்டும் என்று
    நான் அல்ஜிபிராவிடம் ஆலோசனை கேட்கிறேன்

    ஸ்கொயர் என்ற சிந்தனைக்குள் சிக்கிவிடாமல் இருக்க!!!

    (=)சமத்துடன்  சமாதானம் ஆகிவிடுகின்றன

    உந்தன் முக அசைவுகளை கொண்டு அறிவியலின் அளவுகள் இங்கே தான் கணிக்கப்படுகிறது

           இப்படிக்கு
                       — பூஜ்யம் (ஓவ்வொரு முறையும் ஏக்கத்தோடு)

  6. திசைசங்கர் திருநெல்வேலி says:

    நீ இப்பிரபஞ்சத்தையே இணைக்கும் கடவுள் துகளாகவெல்லாம்
    வர வேண்டாம்..
    காலையில் குடிக்கும்
    கஞ்சிக்குத் தொட்டுக்க
    பக்கோடாத் துகளாக வா!

    வீட்டில் டீ யைக் குடித்தே பழக்கப்பட்ட கிராமத்துப் பட்டதாரிகள்
    வேலை தேடி,
    சென்னை வந்தபின்புதான் புரிந்து கொள்கிறார்கள்
    டீ சாப்பிடுவதன் பொருளை..

    வாழ்க்கையில் மண் அள்ளிப் போடுவதையே
    வேலையாகக் கொண்டதனால்
    முன்னுக்கு வராமலே இருக்கிறார்கள் சித்தாள்கள்..

  7. திசைசங்கர் திருநெல்வேலி says:

    முன்னிருக்கையில் இருந்தபடி
    பின் இருக்கையில் இருக்கும்
    என்னைப் பார்த்துச்
    சிரித்தபடியே

    அம்மாவின் சேலைக்குள்
    ஒளிந்து கொள்கிறது குழந்தை
    இந்தப் பயணம் இப்படியே தொடர்ந்து விடாதா!

  8. திசைசங்கர் திருநெல்வேலி says:

    கடமைக்கு வணங்குபவனிடம் வணக்கமாகவும்
    கண்மூடி வணங்குபவனிடம்
    இணக்கமாகவும்
    கண்டுகொள்ளாதவனிடம்
    அனக்கமாகவும் இருக்கிறார் கடவுள்.

  9. ஓர் உருவம் கூட
    என்னிடம் இல்லை
    உன்னை இவ்வுலகிற்கு காட்ட..

    உன்னை எழுதுகையில்
    காகிதங்களில்
    எவ்வளவு கண்ணீர்..

    தோளில் சுமந்த உன்னை
    என்றும் நினைவில்
    சுமக்கிறேன்,

    தனிமை பாடத்தை எளிதில்
    கற்றுத் தெரிந்தேன்,

    உன்னால் இன்னும்
    காதலித்து வருகிறேன்
    கலைகளை,

    பழி சொல்லும்
    இம் மூடர்கள் மத்தியில்
    வழி சொல்ல
    நீ இல்லை,

    என் எண்ணங்களை
    எட்டிப் பிடிக்க
    என்னவோ நீ
    இருந்திருக்கலாம்..

    பெருமையாய் என் பையன்
    என சொல்ல…

    உன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது

    -அப்பா

  10. யாரோ அவள்

    முதல் கடிதம் யாருக்கு எழுத…
    முகவரி தெரிந்த
    முகங்கள் 100 உண்டு
    முக நூலில், இருந்தும்..
    முழு முதலாய்
    கற்பனையற்ற
    காதல் செய்திட..
    கவிதைகளில்
    கண்ணீர் இல்லா..
    காத்திருந்து
    கரம் பிடிக்க.. முதல்
    கடிதம் யாருக்கு எழுத…

    உன்னை காயப் படுத்ததா
    காதல் வரிகளாய்..
    சில நேர கண்ணிய கனவானாக
    பல நேர காதல் கெஞ்சும் காதலானாக
    தூரம் குறைக்கும் துணையாக
    காலம் முன்
    காணமல் போனது…
    காதலும்…
    உங்கான கவிதைகளும்

    உன் மனத்தில்
    நான் இருப்பதாக இருந்தால்
    தயங்காமல் சொல்லிவிடு…

    மலை மேகமும்

    மண்ணிலிரங்கும்
    மலைத்துளியும்

    மணில் செரும் முன்
    உன் மனத்தில் சேர்த்திருப்பேன்