ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

இந்த ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன. அவற்றின் கடகம், சிம்மம், மீனம் முதல் வகையை சார்ந்தது, அவர்கள் முழு (95%) மதிப்பெண்கள் பெறுகின்றனர். அடுத்து கன்னி, விருச்சிகம், கும்பம், தனுசு இரண்டாம் இடத்தை (70%) பெறுகின்றன.மேஷம், ரிஷபம், மிதுனம், துலாம், மகரம் மூன்றாம் வகையை தருகின்றன (60 %) பெறுகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் – ragu kethu peyarchi 2020

Ragu Kethu Peyarchi Palangal 2020

மேஷம் (Aries):ராசிக்கு இரண்டில் வரும் ராகு நல்ல பணவரவை கொடுப்பார், அதேசமயம் எட்டாம் இடம் விருச்சிகத்துக்கு வரும் கேது நஷ்டத்தையே தர முயல்வார். வாக்கு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் கடுஞ்சொல் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் அது அப்படியே  பழிக்கும்.  சகோதரர் வழியில் இருந்துவந்த பகைமை விலகும். உறவினர்கள் நல்ல நட்புறவுடன் இருப்பார்கள். மாணவர்கள் நல்ல வளர்ச்சி அடைவார்கள். ஏற்றுமதியாளர்கள் நல்ல எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசுப்பணியாளர்கள் இடம் மாற வாய்ப்புகள் உள்ளன. மொத்தத்தில் சேமிப்பு நன்கு உயர வாய்ப்புகள் உள்ளன..
வழிபாடு: ஏழைகளுக்கு உணவு உடை தானம் செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

ராகு ஜென்மத்துக்கு வருவதால் எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். ராசியில் அமரும் ராகு குறுக்கு வழியை கையாள்வார், பொருள் ஈட்டுவதில் கவனம் தேவை. ஜென்மத்தில் ராகுவும் 7ல் கேதுவும் அமர்வதால் வாழ்க்கை துணைக்கு உடல் உபாதைகள் வரலாம், கவனம் தேவை. பணியாளர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து போகவும், இருப்பினும் சம்பள உயர்வு பதவி உயர்வு ஆகியவை வழக்கம்போல நடக்கும். பெண்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்பதை தவிர்த்து வீட்டில் ஆலோசனை செய்து முடிவு செய்யவும். முயற்சி செய்தால் மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றி காணலாம். உடல் நலத்தில் மிகுந்த அக்கறை காட்டவும்.
வழிபாடு: சிவ வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

ஜென்மத்தில் இருந்த ராகு 12-ம் இடத்திற்கு வருகின்றது. எதற்கும் எதிலும் நிதானமாக செயல்படவும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். 6-ஆம் இடத்தில் கேது நன்மை தருவார், எதிரிகள் பயம் அறவே நீங்கும். விரயத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ளதால், கவனமாக செயல்படவும். சகோதர உறவில்  இணக்கம் தோன்றும். மாணவர்கள் நிதானமாக செயல்படவும். பணியாளர்கள் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரிகள் நிதானமாக செயல்படவும். உடல்நலம் பாதிப்புகள் வரலாம் அவ்வப்போது  வைத்தியம் செய்து கொள்ளவும்.
வழிபாடு: பெருமாள் வழிபாடு சாலச்சிறந்தது.


கடகம் (Cancer):

லாப ஸ்தானத்தில் அமரும் ராகு பல நன்மைகளை செய்வார். நீண்ட நாளைய வழக்கு பிரச்சினை முடிவுக்கு வரும். ஆனால் கேது ஐந்தில் அமர்ந்து தினம் மன பயத்தை உருவாக்குவார். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். குடும்பத்தில் விடா முயற்சி காரணமாக எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். பணியாளர்கள் அயல்நாடு செல்ல வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் எதை செய்தாலும் லாபமே கிடைக்கும். மாணவர்கள் போட்டியில் வெற்றி பெறுவார்கள்.
வழிபாடு: பிரதோஷ தினத்தில் நந்தீஸ்வரர் வழிபாடு செய்து வரவும்


சிம்மம் (LEO):

லாப ஸ்தானத்தில் இருந்த ராகு ஜீவன ஸ்தானத்திற்கு வந்துள்ளார். கேது நான்காம் இடத்தில் உள்ளார் அதன் காரணமாக பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது ஆனால் அதற்கேற்ப வருமானம் உயரும். எதிரிகள் மத்தியில் கவனம் தேவை, வாய்வழி பேச்சில் யாரையும் நம்ப வேண்டாம். பணியாளர்கள் வருமானம் உயரும். வியாபாரத்தில் புதிய யுத்தியால் லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றி அடையலாம். உடல்நலனில் நல்லா அக்கறை செலுத்தி தேவையான உணவு பழக்கவழக்கங்களை மேற்கொள்ளவும்.
வழிபாடு: புண்ணிய தலத்தில் அன்னதானம் செய்து வரவும்.


கன்னி (Virgo):

இப்போது ராசிக்கு ஒன்பதாம் இடமான லாப தானத்திற்கு ராகு வருவதால் பொது சேவைகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவு உயரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும், நிதிநிலை நன்றாகவே இருக்கும். சகோதர வழியில் துரோகம் நடக்க வாய்ப்புகள் உள்ளன, கவனம் தேவை. பணியாளர்கள் அடிக்கடி இடம் பெயர வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் வேலை அதிகமாக இருப்பினும் லாபம் சற்று உயரும். மாணவர்கள் நிச்சயம் நல்ல வெற்றி அடையலாம். உடல்நலத்தில் நன்கு கவனம் செலுத்தவும், சர்க்கரை உஷ்ணம் போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன.
வழிபாடு: அமாவாசை தினம் கடைபிடித்து வரவும்.


துலாம் (Libra):

இந்த ராகு கேது பெயர்ச்சி பலன் துலா ராசியினருக்கு சுமாராகவே அமையும். கேது 2-இல் ராகு 8-ம் இடத்தில் உள்ளன. எந்த செயலும் பிரச்சனையாகவே முடியலாம். உறவினர் கூட பகைவர் ஆகலாம். நிதிநிலை மோசமான நிலையை அடையும். குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் வரலாம், கவனம் தேவை. விடாமுயற்சி செய்தால் பணியாளர்கள் உயர்வை சந்திக்கலாம். வியாபாரத்தில் நஷ்டம் அடைய வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் வரலாம், எல்லா சமயங்களிலும் கவனம் தேவை.
வழிபாடு: வெள்ளி அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

ஜென்மத்தில் கேதுவும் 7-ல் ராகுவும் உள்ளன. நண்பர்கள் பகைவர் ஆகலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலைக்காது. எந்த ஒரு பெரிய முயற்சியும் செய்ய வேண்டாம், வரவும் செலவும் சமமாகவே இருக்கும், கடன் கொடுத்தால் வந்து சேராது. குடும்பத்தில் குழப்பங்கள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பெரியோர்கள் வசம் எதிலும் விட்டுக்கொடுத்து போகவும். பணியாளர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உள்ளன. இரும்பு சம்பந்தமான தொழில் முன்னேற்றம் அடையும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி அடையலாம். உடல்நலம் அவ்வப்போது பேணி காத்து வரவும்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமையன்று முருகப்பெருமானை வழிபாடு செய்யவும்.


தனுசு (Sagittarius):

ராகு ஆறாம் இடத்திலும் கேது 12ஆம் இடத்திலும் உள்ளன. இதன் மூலம் கனவுகள் நனவாக வாய்ப்புகள் உள்ளன. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதை பெரும்பாலும் தவிர்க்கவும். புதிய நபர்களால் ஏமாற்றம் அடைவீர்கள். நிதிநிலை வளர்ச்சிப் பாதையில் செல்லும். கடன் தொல்லைகள் இருக்காது. குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் கூடுதல் வருமானம் கிடைக்கும். அரசு வேலைக்கு சாதகமான நேரம் வந்துள்ளது. மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். நீண்ட நாளைய உடல்நலப் பிரச்சினை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. தீய எண்ணங்களை குறைப்பது மிகவும் நல்லது.
வழிபாடு: தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

ராசிக்கு  கேது 11ம் இடத்திலும் ராகு ஐந்தாம் இடத்தில் உள்ளது. கனவுகள் நனவாக வாய்ப்புகள் உள்ளன. ஒரு தீராத பிரச்சினை எளிதில் தீரும். நிலையான சொத்து சேர்க்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தை விட்டு இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது. தொழில் செய்பவர்கள் வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். பணியாளர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். மாணவர்கள் ஏற்ற இறக்கமாக தென்படுவார்கள். உடல்நலம் சீராக இருக்காது அவ்வப்போது சில தொல்லைகள் வரலாம். வைத்தியம் செய்து கொள்ளவும்.
வழிபாடு: ஏழைகளுக்கு அமாவாசை தினத்தில் அன்னதானம் செய்தல் நல்லது.


கும்பம் (Aquarius):

ராகு 4ம் இடத்திலும் கேது ஜீவன ஸ்தானம் இருப்பது சிறப்பு. புதிய சொத்து வாங்க வாய்ப்புகள் உள்ளன. எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். ராகுவால் பணவரவு நன்றாக அமையும், அதன் பலனாக அசையா சொத்து வாங்கலாம். குடும்ப பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சிகரமாக காணப்படுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். பணியாளர்கள் நல்ல செல்வாக்கை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். உடல் நலக்குறைவால் இருப்பவர்கள் உடனே மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளவும்.
வழிபாடு: கார்த்திகை தினத்தில் ஏழைகளுக்கு உதவி செய்யவும்.


மீனம் (Pisces):

ராகு 3-ஆம் இடத்திலும் கேது 9-ஆம் இடத்திலும் அமைந்துள்ளது. இது ஒரு சிறப்பான இடமாகும், முடிக்க நினைக்கும் வேலைகள் மிகப் பெரிய வெற்றியாக அமையும். பிள்ளைகளுக்காக புதிய திட்டத்தை வகுத்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிரிவு வரலாம் அது நன்மைக்காகவே முடியும். பணியாளர்கள் பணியில் இடமாற்றம் வர வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே இணைந்து செயல்படவும். மாணவர்கள் அடிக்கடி படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண் பெறலாம். உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும், சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யவும் வாய்ப்புகள் உள்ளன.வழிபாடு: விநாயகர் வழிபாடு செய்து வருவது சாலச்சிறந்தது – ragu kethu peyarchi 2020.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

Sharing is caring!

You may also like...

6 Responses

 1. Rajakumari says:

  நாளைய பெயர்ச்சி க்கு இன்றே பலன்கள் கூறியது மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி

 2. தி.வள்ளி says:

  ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் அறிய தந்த முத்துசாமி ஐயா அவர்களுக்கு நன்றி! பரிகாரம் கூறியது கூடுதல் சிறப்பு

 3. Kasthuri says:

  பயனுள்ள ராகு கேது பெயர்ச்சி வழிபாட்டு முறைகள்.. நன்றி

 4. Pavithra says:

  Useful ah irukku thanks

 5. Kavi devika says:

  அருமையான பதிவு. நலம் பயக்கட்டும் இப்பெயர்ச்சி… அனைவருக்கும் அகிலத்துக்கும்…

 6. malarmohan says:

  மிகவும் சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares