என் மின்மினி (கதை பாகம் – 18)

சென்ற வாரம் முதலில் காஃபி ஷாப் போகலாமா என்று அவன் கேட்க,வேண்டாம் ஜூஸ் ஷாப் போவோம் என்று இவள் சொல்ல இருவரின் பயணம் இனிதே தொடங்கியது… – en minmini thodar kadhai-18.

en minmini kathai paagam serial

ஓகே உன்னோட இஷ்டம்.நீ எங்க போக சொல்றீயோ அங்கேயே போகலாம் என்று அரட்டை அடித்தபடியே சென்ற இனிய பயணம் டூவீலர் பழுதாகவே இடையினில் தடைப்பட்டு நின்றது…

ச்சே இது வேற என்று எரிச்சலுடன் கொஞ்சம் கீழே இறங்கு,என்ன ஆச்சுனு பாக்குறே என்று ஏஞ்சலினிடம் சொல்ல., அவளும் அமைதியாக கீழே இறங்கி ஒரு ஓரமாக நின்றுகொண்டு அவனையே வெறித்து பார்த்துகொண்டிருந்தாள்.
எதையும் பொருட்படுத்தாமல் அவனும் வண்டியினை விட்டு இறங்கி ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான் பிரஜின்.

ஒரு சின்ன ஏமாற்றம்

சற்றுநேரத்திற்கு பிறகு ஏதேதோ செய்து ஒரு வழியாக ஸ்டார்ட் செய்த மகிழ்ச்சியில் வா போகலாம் என்றவனுக்கு ஒரு சின்ன ஏமாற்றம் அருகில் அவள் இல்லை. இங்கே தான ஒரு ஓரமா நின்னுகிட்டு இருந்தா.இப்போ எங்கே போயிருப்பா, இவளை நான் எங்க போயி தேடுவேன் என்று அவன் புலம்ப ஆரம்பிக்கவும்.,

ஹே இங்கே பாரு என்று அவள் குரல் மட்டும் எங்கிருந்தோ ஒலிக்க அவன் சுற்றிமுற்றி பார்த்து அவளை காணாமல் எரிச்சலடைந்தான் பிரஜின்.
ஹே இங்கே பாருடா…. இங்கேதான் இருக்கேன்,மேலே பாரு என்று மரத்தின் கிளையில் மீது அமர்ந்து சத்தமிட்டபடியே அவனை பார்த்து சிரித்தாள் ஏஞ்சலின்.

மீண்டும் அவள் குரல் கேட்டு மேலே பார்த்தவனுக்கு அவள் மேலே இருந்த எரிச்சல் அறவே இல்லாமல் போனது. நெல்லிமரத்தின் கிளையின் மீது ஏறி அமர்ந்தபடி அவள் கைக்குட்டையினை எடுத்து அதில் நெல்லிக்காய்களை பறித்து கொண்டு கிட்டதட்ட ஒரு குழந்தை போலே சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் ஏஞ்சலின்.

ஹே கீழே இறங்கு போகலாம் நேரமாச்சு.வண்டியும் ஸ்டார்ட் ஆகியாச்சு வா சீக்கிரம் என்றான் பிரஜின். ப்ளீஸ் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு.இன்னும் கொஞ்சம் பறிச்சிக்கிட்டு கீழே வரேன் என்றவள்., இல்லையென்றால் நான்
பறிச்சு போடுறேன், அதை எல்லாம் நீ எடுக்குறீயா என்றாள் ஏஞ்சலின்.
இப்போ மட்டும் நீ கீழே இறங்கி வரல நான் விட்டுட்டு போயிடுவேன் என்று தன் டூவீலரை வேண்டுமென்றே ஸ்டார்ட் செய்து அவளை பயமுறுத்தினான் பிரஜின்.

ஹே தடியா. கூட்டிட்டு வந்துட்டு இப்படி தனியாக விட்டுட்டு போகபாக்குறீயே.. இதுதான் என்கூட கடைசி வரனேனு சொன்ன லட்சணமா என்ற பயந்தபடியே மரத்தில் இருந்து குதித்து ஓடிவந்து வண்டியில் ஏறி அமர்ந்தபடி ம்ம்ம்ம் இப்போ போகலாம் என்று சிரித்தாள் ஏஞ்சலின்.
பதிலுக்கு அவனும்,

அந்த பயம் இருக்கட்டும் என்று செல்லமாக கிண்டல் செய்ய இடையில் தடைப்பட்ட பயணம் மீண்டும் தொடங்கியது… – en minmini thodar kadhai-18

– அ.மு.பெருமாள்

பாகம் 19-ல் தொடரும்

You may also like...

2 Responses

  1. Rajakumari says:

    கதை மிகவும் விறுவிறுப்பாக போகிறது மகிழ்ச்சி

  2. தி.வள்ளி says:

    இனிய அனுபவங்கள் தொடரட்டும்…