என் மின்மினி தொடர்கதை (பாகம் – 60)

முந்தைய பதிவை வாசிக்கஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-60

En minmini thodar kadhai

ஹே…இப்போ என்ன ஆச்சு இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசிட்டு இருந்தே.ஓடாதே நில்லு என்று சத்தமிட்டபடியே அவளை பின்தொடர்ந்து ஓடினான் பிரஜின்…

அவளும் நிற்காமல் கண்களிலிருந்து வெளிவரும் கண்ணீரை உள்ளடக்கியவண்ணம் அவனிடம் இருந்து தன் அழுகையை காட்ட விரும்பாமல் முகத்தை கூட திரும்பி பார்க்காமல் ஓடினாள் ஏஞ்சலின்… இப்போ உன்னால நிற்க முடியுமா முடியாதா? உன் பின்னாலே ஓடி ஓடி வரேன்ல அதான் நான் கூப்பிட கூப்பிட கேட்காம மாதிரி பதிலும் சொல்லாமல் போய்ட்டே இருக்கே.இப்போ நீ மட்டும் திரும்பி என்கிட்டே பேசல அப்படினா நான் இனி
உன்னோட மூஞ்சிலே கூட முழிக்க மாட்டேன் என்று மீண்டும் அவளை பின்தொடர்ந்தே ஓடினான் பிரஜின்…

அவன் பேச பேச வேகமாக சென்றவள் ஒரு நிமிஷம் திரும்பி அவனை பார்த்து நின்றாள் ஏஞ்சலின்… கண்கள் முழுவதும் கண்ணீர் நிறைந்து பளிங்கு கன்னங்களை நனைத்து ,சிவந்த ரோஜா இதழ்கள் போன்ற உதடுகளை
ஈரமாக்கி,கழுத்தினை கண்ணீர்த்துளிகள் கடந்து வழிய எதிரினில் ஏதும் புரியாமல் திருதிருவென அவளை பார்த்து வெதும்பி நின்று கொண்டிருந்தான் பிரஜின்…

அமைதியாக ஒருவரையொருவர் கண்களை பார்த்துக்கொண்டபடி சில வினாடிகள் கடக்க மெதுவாக பேச ஆரம்பித்தான் பிரஜின்… ஏன் நீ இப்படி ரியாக்ஷன் பண்ணே.எனக்கு ஒண்ணும் புரியல.திடீர்னு நீ அழுது கிட்டு ஓடும் போது எனக்கு என்ன பண்றதுனு கூட தெரியல என்று கடகடவென உளறி தள்ளினான் பிரஜின்…

அவன் கேள்விக்கான பதிலை எப்படி சொல்வது என்று தெரியாமல் மெதுவாக அவனருகில் வந்து தனது பிஞ்சு கைகளால் அவனது வாயை மூடி.,மூடிய அந்த கைகளின் மீது மெதுவாக முத்தமிட்டாள் ஏஞ்சலின்… – என் மின்மினி தொடர்கதை பாகம்-60

– அ.மு.பெருமாள்

பாகம் 61-ல் தொடரும்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *