என் மின்மினி தொடர்கதை (பாகம் – 59)

முந்தைய பதிவை வாசிக்கஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-59

En minmini thodar kadhai

ம்ம்…இதோ வந்துட்டேன் என்றவாறே அவனருகில் வந்து ஓடி வந்து நின்றாள் ஏஞ்சலின். இங்கே இருக்குற பூக்கடைக்கு போயிட்டு வர இவ்வளவு நேரமா மட சோம்பேறி நீ என்று அவளை பிரஜின் செல்லமாக கோபிக்க…

நீ மட்டும் என்னவாம்.,
நான் பூக்கடைக்கு போன பிறகு என்ன பாத்து சைட் அடிச்சுட்டு தானே இருந்தே…அதான் கொஞ்சம் பார்த்துட்டு போகட்டும்னு நீ கூப்பிடுற வரைக்கும் அங்கேயே நின்னுட்டு இருந்தேன்… கொஞ்சம் நேரத்தில் நீ கூப்பிட்டியா நான் உன்கிட்டே ஓடி வந்துட்டேன் என்றவாறே அவனை பார்த்து இதுவரை இல்லாத அவளுக்கு மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டிருந்தாள் ஏஞ்சலின்…

அப்போ நான் எப்போ இப்படி கூப்பிட்டாலும் என்கிட்டே ஓடிவந்துருவேதானே என்று முகத்தை கொஞ்சம் சோகமாக வைத்துக்கொண்டு கேட்டான் பிரஜின்… ஹே என்ன மூஞ்சி இப்படி தொங்கி போச்சு… இப்படியெல்லாம் என்னை நீ கேட்குற அளவுக்கு நான் உன்னை விட்டு எங்கே போக போகிறேன்.உன்கூடவே உன்னோட காலை சுத்தி சுத்தி தான் வந்துட்டு இருப்பேன்… அதுல என்ன சந்தேகம் வா கோயிலுக்கு உள்ளே போகலாம் என்றாள் ஏஞ்சலின்…

இல்லை, உனக்கு தெரியாது எனக்கு நான் ஆசைப்பட்ட எதுவும் என்கூட நிரந்தரமாக இருந்ததே இல்லை.ஏதோ ஒரு காரணம் சொல்லி பிரிந்து போயிருவாங்க.,அப்படி இல்லையா எங்கேயோ கண்காணாத இடத்துக்கு போயிருவாங்க. எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.அவன் பேரு சந்தோஷ்.ரொம்ப அன்பா இருப்பான்.ஒரு இரண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்து போய்ட்டான்.இன்னும் என் அவன் முகம் என்கண்முன்னே வந்து வந்து போகிறது என்றவாறே கண்கலங்கினான் பிரஜின்…

அவனது கண்களை துடைத்தவாறே ஏஞ்சலின்.,கவலைப்படாதே உன்கூட நான் எப்போதும் இருப்பேன்.நான் உன்னை விட்டு எங்கேயோ போயிருவேன்,இல்லை செத்துப்போயிருவேன்னு பாக்குறீயா.உன்கூட வாழ்ந்து உன்னோட குழந்தையை சுமந்து என்று பேசிக்கொண்டே இருந்தவள் திடீரென அமைதியானாள். ஏதோ மனதில் இனம்புரியாத வலியால் அவள் கண்கள் குளமாக அவனிடமிருந்து விலகி ஓடினாள் ஏஞ்சலின்.. – என் மின்மினி தொடர்கதை பாகம்-59

– அ.மு.பெருமாள்

பாகம் 60-ல் தொடரும்

You may also like...

2 Responses

  1. தி.வள்ளி says:

    அருமை திருப்பங்களுடன் நகர்கிறது கதை …வளரட்டும்

  2. பொன்னி says:

    அருமை.. பல வீடுகளில் அம்மாவை தாண்டி மனைவியை கவனிக்க பல கனவர்களால் முடிவதில்லை..