என் மின்மினி தொடர்கதை (பாகம் – 58)

முந்தைய பதிவை வாசிக்கஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-58

En minmini thodar kadhai

அந்த இடத்தினை சுற்றிலும் சந்தனத்தை காற்றில் கரைத்து தெளித்து போலே ஒரு நறுமணம் இதமாக தென்றலுடன் கலந்து வீச வியப்பின் உச்சத்தில் இருந்து மீண்டு தொடர்ந்து கோவில் கோபுரத்தை நோக்கி நடக்க தொடங்கினர்…

கோவிலை நெருங்க நெருங்க அர்ச்சகர்களின் அர்ச்சனை ஒலிகளும், பக்தி இன்னிசை ஒலிகளும் அந்த இடத்தை மட்டுமன்றி இருவரின் மனசையும் பக்தியால் குளிர வைக்க கோவிலின் வாசலை இருவரும் அடைந்தனர்…
சொல்லில் அடங்கா பிரமிப்பையும், அளவில்லாத மன நிம்மதியையும் கோவிலின் உள்ளே நுழையும் முன்னமே இந்த கோவில் தருகிறதே… இது என்ன கோவில் என்றாள் ஏஞ்சலின்…

ஆக்க பொறுத்தவள் ஆற பொறுக்க மாட்டியா., உள்ளே போகத்தானே போறோம், அங்க வந்து சொல்லுறேன் என்றான் பிரஜின்…
சரி சரி வா போகலாம் என்றவள் திரும்பி கொஞ்சம் நில்லு அர்ச்சனை தட்டு வாங்கிட்டு வரேன் என்று வேகமாக ஓடினாள் ஏஞ்சலின்… ஹே ஹே மெதுவாக போ., ஏன் இவ்வளவு அவசரம். கீழே எங்கேயாச்சும் விழுந்துற போறே. பார்த்து பத்திரமா போ என்று அவளை சுதாரித்தான் பிரஜின்…

ம்ம் அதெல்லாம் விழமாட்டேன். இப்போ வரேன் என்று அவனை பார்த்து சிரித்தபடியே ஓடினாள் ஏஞ்சலின்… அவள் துள்ளி துள்ளி மெதுவாக ஓட…,
மெதுவாக தனக்குள்ளே சிரித்தபடி
இவள் என்ன மானினமோ
இவள் கண்கள் என்ன
மீனினமோ என்று கவிதையே வடித்து விட்டான் பிரஜின்…

அவன் தனக்கு தானே சிரிப்பதை தூரத்தில் இருந்தே பார்த்தவள்…அங்கிருந்தபடியே ஹோய் மச்சா என்ன கனவா… பகலிலே கனவு காண ஆரம்பிச்சுடீயா என்று சத்தமிட திடுக் என்று விழித்தவன்.,ஹே இவ்வளவு நேரமா சீக்கிரம் வா என்று அவளை வேகப்படுத்தினான் பிரஜின்… – என் மின்மினி தொடர்கதை பாகம்-58

– அ.மு.பெருமாள்

பாகம் 59-ல் தொடரும்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *