நரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை

கண் கலங்காமல் படித்து முடிக்க இயலாத ஒரு நிகழ்வு. ஜாதியால் பிரிக்கப்பட்ட காதல், ஆணவக்கொலை, விழியிழந்த வீணை, நினைவில் சொர்க்கம் காணும் நாயகன், நரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் என பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய காவியம் (சிறுகதை) தந்த பிரியா பிரபு அவர்களுக்கு வாழ்த்துக்கள் – tamil thriller stories

tamil thriller stories

அழகான காலைப்பொழுது…. கதிரவன் தன் வெளிச்சப்பூக்களை மலரச் செய்த நேரமது. அலைபேசியின் இனிய குயில் குக்கூ…குக்கூ என்று கூவி தயாவை எழுப்பியது. தயா பெயருக்கேற்றாற் போல கருணையான முகம் மட்டுமல்ல அகமும் உடையவன்.

மெல்ல படுக்கையிலிருந்து அசைந்தவாறே தனது வலது காலை தேடினான். அது படுக்கையிலிருந்து சற்று தள்ளி இருந்தது. மெதுவாக நகர்ந்து அந்த செயற்கைக்காலை எடுத்து முழங்காலுக்கு கீழே வெறுமையாய் இருந்த இடத்தோடு பொருத்தினான். மனம் மௌனமாய் வலித்தது. சட்டென்று தயா… தயா… என்ற ஏக்கமான குரல் செவிக்குள் ஒலித்தது. தவிப்பும் ஏக்கமும் நிறைந்த விழிகள்… கண்ணீர் மல்க நிலைத்து நின்றது மனக் கண்களுக்குள் வந்து போனது. விழிகளை அழுந்த மூடித் திறந்தவாறே எழுந்து சன்னல்வழியே வெளியே பார்த்தான்.

அந்த மருத்துவமனையின் வெளிப்புறங்களிலும் சுற்று மதில் சுவர் ஓரங்களிலும் பூத்திருந்த வண்ண மலர்கள் மலர்ந்து ரம்மியமாய் நறுமணம் வீசிக்கொண்டிருந்தது.
மனதில் இனம்புரியாத வலி.. அந்த வரிசைப்பல் சிரிப்பு… கடவுளே என்ன இது இன்னைக்கு ஏன் சுமியின் ஞாபகமாகவே வருது. காலைக்கடன்களை முடித்துவிட்டு மெதுவாய் கதவைத் திறந்தபடி வெளியில் வந்தான். மருத்துவமனை காலைப்பொழுதிலும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.

நகரத்தின் குறிப்பிட்ட பெரிய மருத்துவமனையில் ஒன்று என்றாலும் வசதி குறைந்தவர்களுக்கென்று தனியாக வளாகம் அமைத்து சிகிச்சை தருவார்கள். ஆயிற்று… தயா அங்கு வந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் முடிந்துவிட்டது. வெட்டுப்பட்ட காலுடன் சுயநினைவு இல்லாமல் குற்றுயிராய்த்தான் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தான். சுயநினைவு திரும்பியவுடன் காதில் விழுந்த செய்தியைக் கேட்டவுடன் மீண்டும் ஒருமுறை மரித்து எழுந்தான் எனலாம். உடல்நலம் தேறி வெட்டுப்பட்ட காலுக்குப் பதிலாக செயற்கைக் கால் பொருத்திய பின்னும் மருத்துவமனையை விட்டு செல்லவில்லை. அங்கேயே தங்கி நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்லவும் மருத்துவமனை கணக்கு வழக்குகளைப் பார்க்கவும் என அங்கேயே தங்கிவிட்டான் – tamil thriller stories.

ரொம்ப சீரியசா இருக்கு

தயாண்ணே… தயாண்ணே…. பின்புறமிருந்து அவசர சிகிச்சைப்பிரிவு அட்டெண்டர் கதிரின் குரல் கேட்டது. என்ன கதிர் ஏன் இவ்வளவு பதட்டமா வர்ற.. தயாண்ணே.. ஒரு முக்கியமான விஷயம்,இப்போதான் உங்க ரூம் வர போய் தேடிட்டு வர்றேன். காலைல ஒரு புது கேஸ் வந்துருக்கு. அவருக்கு கிட்டத்தட்ட 65 வயசு இருக்கும். பைபாஸ் சர்ஜரி பண்ணனும்னு அவரு ஏற்கெனவே ட்ரீட்மெண்ட் பண்ண ஆஸ்பத்திரியிலிருந்து இங்க அனுப்பி வச்சிருக்காங்க.. இப்ப நிலைமை ரொம்ப சீரியசா இருக்கு.. அதான் சீப் டாக்டர் உங்கள கூட்டிட்டு வரச்சொன்னார்.

ஓ நெகட்டிவ் ஸ்டாக் இல்ல

அய்யோ இப்போ ஒண்ணும் பிரச்சனை இல்லையே…என்றவாறே சற்று வேகமாக அவசரசிகிச்சைப் பிரிவை நோக்கி நடந்தான்.. தயா. வாசலில் டாக்டர் அவனை எதிர்கொண்டார். வாங்க தயா… கொஞ்சம்பேசணும்… என்றவாறே தனது அறைக்குள் நுழைந்தார். சொல்லுங்க டாக்டர் என்னாச்சு.. என்றவாறே அவரைப் பின்தொடர்ந்தான் தயா.

வெல் தயா.. இப்ப வந்திருக்கிற பேஷன்ட் ரொம்ப கிரிடிகலா இருக்காரு உடனே சர்ஜரி பண்ணனும் நம்ம பிளட் பேங்க்ல இப்போதைக்கு ஓ நெகட்டிவ் ஸ்டாக் இல்ல நீங்க அந்த குருப் தான .. அதான் உங்களக்கூப்பிட்டேன்.. சார் ஏன் தயங்குறீங்க நான் பண்றேன்.. என் பிளட் ‘ஓ’ நெகட்டிவ் தானே.

நான் வாழறதே மத்தவங்களுக்காகத்தான்

தெரியும் தயா.. ஆனா நீங்க போனமாசம்தான ஆக்சிடெண்ட்ல அடிபட்ட குழந்தைக்கு ப்ளட் டொனேட் பண்ணிங்க அதான் யோசனையா இருக்கு. ஆனா லேட் ஆக ஆக பேஷண்ட் நிலைமை மோசமாயிட்டே வருது,அவருக்கும் அவர் மனைவிய தவிர யாருமில்ல. அந்த அம்மாவும் ஒண்ணும் தெரியாத அப்பாவியா இருக்காங்க….

அய்யோ சார் யோசிக்காதிங்க நான் தெம்பாத்தான் இருக்கேன். அதனால நானே பண்றேன். எனக்கு மனசே கேட்கல.. தயா, ஆனா வேற வழி இல்ல.. சார் இந்த உலகத்துல நான் வாழறதே மத்தவங்களுக்காகத்தான் அதனால யோசிக்காதிங்க. ஓகே தயா…வாங்க டெஸ்ட் ரூம் போலாம்..என்றவாறே எழுந்தார். அவரைப் பின்தொடர்ந்த தயாவை இரு விழிகள் ஆச்சரியத்துடனும் …அதிர்ச்சியுடனும் பார்த்ததை அவன் அறியவில்லை. ப்ளட் டோணேட் பண்ணி முடித்ததும் , வழக்கத்தை விட சற்று அதிகமாக களைப்பாக இருந்தது. சர்ஜரி முடித்து வந்த டாக்டர் ‘நவ் ஹி இஸ் ஆல்ரைட் தயா’ நீங்க எப்படி இருக்கீங்க…

என் கண்மணியை தொலைத்துவிட்டேனே

கொஞ்சம் டயர்டா இருக்கு… ஓகே சார்
ஓகே தயா..யு நீட் ரெஸ்ட்.. அதனால ரூமுக்கு போய்ட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க.. கதிர்…. இங்க வாங்க தயாவ கூட்டிட்டு போய் ரூம்ல விட்டுட்டு தேவையான ஹெல்ப் பண்ணிட்டு வாங்க…
எஸ் சார் என்றவாறே கூடவே வந்தான் கதிர்…

இருதினங்களாக களைப்பாக இருக்கவே .. மருத்துவமனைக்கு செல்லாமல் அறையிலேயே தங்கி விட்டான். உடல் சோர்ந்த நிலையில் தனிமை மேலும் சோர்வடையச் செய்தது. சுமியின் நினைவுகள் மேலும் அவனை வாட்டியது. சுமி… என் சுமி… உன்னைக்காப்பாற்ற முடியாத கோழையாகிப் போனேனே… இப்பொழுது எத்தனை பேரைக்காப்பாற்றினாலும்.. என்னுயிரே… உன்னை என்னால் காப்பாற்ற முடியலையே… என் கண்மணியை தொலைத்துவிட்டேனே.. மனதில் எண்ணங்கள் முட்டி மோதியது.

உங்க சுமியுடைய அம்மா

என்னடா தப்பு பண்ண.. என்மேல அன்பு வைத்த காரணத்துக்காக உயிரையே இழந்து விட்டாயே என் கண்ணே .. கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிந்தது.

தம்பி .. தம்பி .. குரல் கேட்கவும் தலை திரும்பிப் பார்த்தான் தயா . அங்கே நின்றிருந்த பெண்மணியைப் பார்த்ததும் இந்த முகத்தை… இந்த சாயலை… இவர்.. இவர்.. ’நீங்க’.. என்று தடுமாறினான் தயா.

உங்க சுமியுடைய அம்மா…அந்த ‘உங்க ’வில் இருந்தது அழுத்தமா..ஆதங்கமா…பரிதவிப்பா புரியவில்லை. சற்று நேரம் இருவரும் பேசவில்லை. நீங்க எப்படிமா…. இங்க

விம்மலை அடக்கியவாறே..’நீங்க இரத்தம் குடுத்து காப்பாத்தினிங்களே அது வேற யாருமில்ல தம்பி ‘சுமியோட அப்பாவைத்தான். ‘என்னது’… பலவாறான அதிர்ச்சி அலைகள் அவனைத் தாக்கியது. எப்படிமா… ஏன் என்னாச்சு….

பாக்கணும்னு பிரியப்பட்டாரு

எல்லாம் அவர் செஞ்ச பாவம் தான்… தம்பி… அவரோட குற்ற உணர்ச்சியே அவர இந்தளவுக்கு ஆக்கிருச்சு தம்பி.. என் வீட்டுக்காரரு தனக்கு கடைசி நேரத்துல இரத்தம் குடுத்து காப்பாத்துனவர பாக்கணும்னு பிரியப்பட்டாரு அதான் உங்கள கூப்பிட வந்தேன். கண்ணு முழிச்சதிலிருந்து கேட்டுட்டே இருந்தாரு.. நான்தான் அவர் பி.பி நார்மலா ஆகிறவர வெய்ட் பண்ணிட்டு இப்ப வந்தேன். கொஞ்சம் என்கூட வந்து அவர பார்க்கறிங்களா என்றார் மீனாட்சி அம்மாள்.

சரிம்மா ..ஆனா…என்னப் பார்த்தா அவர் உடல்நில ரொம்ப மோசமா ஆயிருமே…எதுக்கு வீணா டென்ஷன். தம்பி அவர் உடல்நில இப்போ பரவாயில்ல.. ஆனா இப்பதான் அவரு உங்கள பார்க்கணும்….அப்போதான் அவர் செஞ்ச தப்பு அவருக்கு முழுசா புரியும். மௌனமாய் எழுந்த தயா..மெதுவாய் தன் செயற்கை காலை சரிபடுத்தியவாறே நடந்தான்.

கண்கள் தயாவின் கால்களில் பதிந்தது

இக்காட்சியை கண்ட மீனாட்சி அம்மாள் அடக்க முடியாமல் கதறி விட்டார். இருவரும் மெதுவாக ராஜலிங்கத்தின் அறையை அடைந்தார்கள். மீனாட்சி அம்மாளைப் பார்த்த அவர் மீனாட்சி….. எங்கம்மா போய்ட்ட உன்னைக் காணாம பயந்து போய்ட்டேன்.ஏன் ஒரு மாதிரியா இருக்க … ஒன்னுமில்லங்க… உங்களுக்கு இரத்தம் குடுத்து காப்பாத்துனவர பாக்கணும்னு சொன்னிங்களே ,அதான் அவரைக் கூப்பிடப் போனேன் – tamil thriller stories.

ஓ.. அப்படியா எங்க அவர்… என்றார். சற்று நகர்ந்து நின்றார் மீனாட்சி அம்மாள். தயாவைப் பார்த்ததும் விழிகள் விரிய விக்கித்துப் போனார் ராஜலிங்கம். பலவாறான உணர்ச்சிக் கலவைகள் அவர் முகத்தில். நீங்க.. நீங்க.. தடுமாறியவரின் கண்கள் தயாவின் கால்களில் பதிந்தது. நானேதான் சார் தயா தான்..

அதிர்ச்சி அகலாமல் அவனையே பார்த்தவாறு இருந்தவர் ….. சட்டென்று குலுங்கி அழ ஆரம்பித்தார்.

நான் பாவிப்பா… பாவி கொலைகாரப் பாவி நான்… இந்த ஜென்மத்துல எனக்கு மன்னிப்பே கிடையாது… பெத்த பொண்ணையே கொன்ன பாவி நான்.. கதறினார் ராஜலிங்கம். கண்ணீர் வழிய அவரையே பார்த்தபடி நின்றிருந்தார் மீனாட்சி அம்மாள்.

இரத்த வெள்ளத்தில்

சாதி.. சாதின்னு வெறியா இருந்தேன்.அதனாலதான் நான் ஆசையா வளர்த்த என் ஒரே பொண்ணு சுமித்ரா அனாதை ஆசிரமத்துல வளர்ந்த உங்கள விரும்பறதா சொன்னப்போ என்னால தாங்கிக்க முடியல..கூடவே எங்க ஆட்களோட தூண்டுதல் வேற அதனால்தான் உங்கள கொல்லப்போறதா அவங்க சொல்லும்போது நான் மறுப்பேதும் சொல்லல… கடைசில அந்த சம்பவத்துல உங்களக் காப்பாத்துறதுக்காக என் மக தன் உயிரையே விட்டுட்டா..

உங்களையும் குத்துயிரும் கொலையுயிருமா ஆக்கிட்டாங்க… ஆனா இரத்த வெள்ளத்துல என் பொண்ணப் பார்த்தப்போ… கடவுளே… அத நினைக்கவே பயங்கரமா இருக்கு. என் மகள அந்த கோலத்துல பார்த்தப்புறம்தான் என்னோட தப்பு புரிஞ்சது. ஐயோ…எங்க மக… எங்க மக… என்று தேம்பினார். அவரின் கைகளை தேறுதலாகப் பிடித்துக்கொண்டார் மீனாட்சி அம்மாள்.

வார்த்தைகளற்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் தயா. கடைசில சொத்து எல்லாம் வித்து போலீஸ் கேஸ் எல்லாம் முடிச்சாச்சு..ஆனா மனசாட்சி குடுக்குற தண்டனைல இருந்து தப்பிக்க முடியல.தினம் தினம் என் மனைவி படுற வேதனைய என்னால பார்க்க முடியல…சாதிப் பெயரால என்ன தூண்டிவிட்ட எல்லாரும் எனக்கொரு பிரட்சனைனவுடனே துணைக்கு வரல…உணர்ச்சிவசப்பட்டு எடுத்த தவறான முடிவால எங்களோட அருமையான மகள இழந்துட்டோம்.ஆனா..

எனக்கு கிடைச்ச பொக்கிஷம் சுமி

இப்போ என் உடம்புல உங்க இரத்தம்தான் ஓடுது. சொல்லப்போனா உங்க இரத்தம்தான் என் உயிரையே காப்பாத்தி இருக்கு.என்னவிட்டா என் மனைவிக்கு இந்த உலகத்துல யாரும் கிடையாது. அதனாலதான் தம்பி இன்னும் உயிரோடவே இருக்கேன்.நான் இப்போ என் தப்ப உணர்ந்துட்டேன். ஆனா… ஆனா… இழந்த என் மகள திரும்பப் பெற முடியாதே… கதறினார் ராஜலிங்கம்.

தன்னை ஒருவாறு சமாளித்துக்கொண்டு மெதுவாக பேசினான் தயா. சரி சார் இப்போதான் உடம்பு தேறி வருது.அதிகமா உணர்ச்சிவசப்படாதிங்க… சட்டென்று கையெடுத்துக் கும்பிட்டார் ராஜலிங்கம். என்னை மன்னிச்சிருங்க தம்பி… மன்னிச்சுருங்க… உங்க கால்… மெதுவாய் கேட்டார். தனது பேண்டை மெதுவாய் உயர்த்திக் காட்டினான் தயா. கடவுளே…கடவுளே…என அரற்றினார் ராஜலிங்கம். தம்பி உங்களுக்கு… குடும்பம் என இழுத்தார் ராஜலிங்கம். வெறுமையாய் புன்னைகைத்தான் தயா. என் வாழ்க்கைல எனக்கு கிடைச்ச பொக்கிஷம் சார் என் சுமி…அவள என் கண் முன்னாலேயே இழந்தப்ப..
நான்.. தடுமாறினான் தயா.

மகனா இருப்பீங்களா

நான் அந்த சம்பவத்துல இருந்து மீண்டு வரவே பல வருசங்களாச்சு..இப்பவும் நான் உயிர் வாழுறதே மத்தவங்களுக்க்காகதான்,என் மனசில எப்பவுமே என் சுமிதான் வாழ்ந்துட்டு இருக்கா.அவளோட நினைவுகளைத் தாண்டி வேற எதுவும் எனக்கு பெரிசில்ல.. அனாதை ஆசிரமத்தில வளந்த எனக்கு அவளோட அன்பும்,உரிமையும் தான் வாழ்க்கையா இருந்துச்சு… மேலும் தொடர முடியாமல் அழுகையை கட்டுப் படுத்தினான்.

தம்பி தயா … நான் உங்ககிட்ட ஒன்னு சொன்னா கோவிக்க மாட்டிங்களே.. என்றார் ராஜலிங்கம். புரியாமல் ஏறிட்டான் தயா. உங்கள மருமகனா ஏத்துக்க முடியாம நிறைய தப்பு பண்ணிட்டேன். இப்ப மனசில இருந்து கேட்கிறேன் எங்க மகனா இருப்பீங்களா… இந்த பாவிய மன்னிச்சு எங்கள ஏத்துக்குவிங்களா….கைகூப்பிக் கதறினார் ராஜலிங்கம்.

அவரருகில் சென்று மெதுவாய் அவரின் கரங்களைப் பற்றிக் கொண்டான் தயா. அங்கே சாதி மதங்களைக் கடந்த.., பழி உணர்ச்சிகளைக் கடந்த அன்பெனும் இசை மெதுவாய் ஒலிக்கத் தொடங்கியது – tamil thriller stories.

– ப்ரியாபிரபு, நெல்லை

You may also like...

20 Responses

 1. Rajakumari says:

  பாவமாக இருக்கிறது

 2. Rajakumari says:

  பாவமாக இருக்கிறது

 3. Balaji says:

  அருமையான கதை…. வாழ்த்துக்கள் அக்கா உங்கள் கதை வளம் மேன்மேலும் வளர….💐💐💐💐👍👍

 4. Mariya says:

  Super 👌👌 வாழ்த்துக்கள்✍️✍️

 5. ரிஷபன் says:

  அற்புதம். மானுடம் கொஞ்சம் தாமதமாகவேனும் வெற்றி பெறுகிறது. அவசர ஆத்திர புத்திக்க்காரர்களுக்கு இக்கதை நல்ல பாடம்.
  எழுத்து சரளம். உணர்வுகள் நெகிழ்ச்சி. வாழ்த்துகள்

 6. Kaleeswari says:

  Superb…. Very Nice Tamil fluencyyyy… I like Thaya character who is very sportive person in this short story..and the way of story is very nice

 7. Kavi devika says:

  கதை அருமை..இன்னும் எத்தனை உயிர்களை வில கொடுத்து சாதியை நிலைநாட்ட போகிறதோ இச்சமுகம்…

 8. Nachiyar says:

  கதை மிகவும் அருமை. வாழ்த்துகள்

 9. Ganga Prabhu says:

  மனித மனமே சாதி மதம் தேவையில்லை.. அன்பு ஒன்றே போதும்….. அழகிய உருக்கமான பதிவு…..

 10. Nirmala says:

  உணர்ச்சி பூர்வமான கதை. வாழ்த்துகள்.

 11. A.Lalitha says:

  கதை வளம் அதை முடித்திருக்கும் விதம் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் பிரியா 👍🏻👍🏻💯💯💯💯👌👌👌👌👌

 12. Mageshbabu N says:

  Good keep it up

  Best wishes

 13. Kasthuri says:

  கதை மற்றும் கதை அமைத்த விதம் நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.. மேலும் வளர வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.

 14. மாலதி நாராயணன் says:

  கதை மிகவும் அருமை நன்றாக இருக்கிறது

 15. ssprabhu ssp. says:

  சிறப்பு…. நன்றி மகேஷ்.

 16. தி.வள்ளி says:

  அருமையான கதை ….மிகவும் நெகழ்ச்சியாக..உணர்ச்சி பூர்வமான நிகழ்வுகள் …சிறப்பான நடை வாழ்த்துக்கள்.. பிரியா

 17. Renu says:

  கதையை கொண்டு போயிருக்கும் விதம் அருமை.
  பாராட்டுக்கள் பிரியா பிரபு👏

 18. Renu says:

  கதையை கொண்டு சென்ற விதம் அருமை. பாராட்டுக்கள் பிரியா பிர. 👏👏👏

 19. Priya prabhu says:

  கதையைப் படித்து வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. 🙏🙏

 20. உமாகாயத்திரி says:

  கதை மிக அருமை ஜாதியை அணிகலனாக்கும் அனைவருக்கும் இது ஒரு சிறந்த சம்பவம்.. மிக்க நன்றி