சிறுகை அளாவிய கூழ் – நூல் விமர்சனம்

பிறை வளர வளர பிரகாசம் அதிகரிக்கும்.. சக்தி வேலாயுதத்தின் கவிதைகளும் பிரகாசிக்கிறது.. நெருப்பு விழிகள் சக்தி வேலாயுதம் அவர்களின் “சிறுகை அளாவிய கூழ்” புத்தகத்திற்கு அறிமுக கட்டுரை (vimarsanam) எழுதியுள்ளார் ப்ரியா பிரபு அவர்கள் – sirukai alaviya koozh puthaga vimarsanam

sirukai-alaviya-koozh-puthaga-vimarsanam

மலர்ந்திருக்கும் கவிதைப் பூக்களில் வாசம் அதிகமாய்..
கதம்பப் பூக்களாய்..
உங்களின் கவிதைப் பூக்கள்..
காதல்., ஏக்கம்., கோபம்., சோகம்., ஆற்றாமை., வலிகள்.. அரசியல்.. சாதிச் சாடல்.. தன்னம்பிக்கை என ஏராளமாய்.. மலர்ந்திருக்கிறது.

எப்போதாவது
மழையில் நனைவது
உனக்கு பிடிக்கும்..
எப்போதும்
மழையில் நனைவதே
எனக்கு பிடிக்கும்..

அருமையான வரிகள்..
மழை நீரோடு கண்ணீரும்.. கவிதைகளாய் கரைகிறது..

கொஞ்சி நனைத்திட
கொஞ்சம் மழையாய்
வந்துவிடச் சொல்லி
கெஞ்சிக் கேட்கிறது
பறவையுடன் மனமும்..
அருமை.. அருமை..

புதிய இலைகள் மலர்வதற்காகவே நான் சருகாய் வீழ்கின்றேன்..
யதார்த்த வாழ்வின் உண்மை வரிகள்..

பட்டாம்பூச்சியின் சிறகுகள் படபடவென
விரித்த இடமெல்லாம்
எனக்கு பிடித்த
அடர் வண்ணங்கள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன..

அழகு.. அழகு.. இரசனையான வரிகள்

சகிப்புத் தன்மையோடு
சாளரத்தின் வழி நுழையும்
இந்த ஒளியும்.. அந்த காற்றும்..
மிக அழகு..

புறவியர்வையை
குளித்துக் கழிக்கிறேன்..
அக வியர்வையை..

இதயம் துளையிடப்படுவதும்
துடிதுடிப்பதும்..
சில இதயங்களால் தானே..

ஓராயிரம் இலைகளை
உதிர்த்த மரம்..
ஓராயிரம் உணர்வுகளை
உதிர்த்த மனம்…

உண்மையான..உணர்வு பூர்வமான வரிகள்..

பதக்கத்திற்கான ஓட்டமல்ல..
பதற்றத்தில் என் வாழ்க்கைக்காக
எடுத்த ஓட்டமே..

நிஜங்களின் பகிர்வுகள் இங்கே நிழல்களாய்…

தடம் மாற்றங்கள்.. தடு மாற்றங்கள்
இந்நதியை இச்சமூகம்
பெண்ணாய் பார்ப்பதாலோ
இப்பாடு படுத்துகிறது..

நல்லதொரு சமூகச் சாடல்

யார் மனம் என்று தெரியவில்லை..
அதன் மெல்லிய சிறகுகள்
உதிர்ந்தது மட்டுமில்லாமல்
காற்றோடு அங்குமிங்கும்
கூடுகட்ட அலையும்
பறவையாய் பறக்கிறது..
அந்த பறவையின்
சிறகு வண்ணங்கள்
தென்றலோடு கலந்து
எமை தீண்டித்தீண்டி
அதன் வண்ணங்களால்
தற்போது நிரம்பி
வழிகிறேன் நான்..
இப்போது நானும்
அந்த மனமாய்
மாறிமாறி பறந்து பறந்து
என் இறகுகளை
கொஞ்ச நிமிடங்களில் உதிர..
நீங்களும் என் வண்ணங்களால்
நிரம்பப் போகிறீர்கள்..
இறகுதிர் காலம் போல
இது நானுதிர்காலம் ! – sirukai alaviya koozh puthaga vimarsanam

அருமை.. அருமை
வண்ணங்களால் நிறைந்து எங்கள் எண்ணங்களில் உறைந்து இருக்கிறது உங்களின் கவிதை..
உதிர்ந்த இறகுகள்
ஒவ்வொன்றும் பூக்களாய்..
பூக்களின் வாசம்.. நேசமாய் நம் சுவாசத்தில் நிறைகிறது..

இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்..
மதக்களிறுகளும்..
மதில் பூனைகளும்..
சிறு எறும்புகளும் கூட இதில்… வாசம் செய்திரு க்கிறார்கள்..

நல்லதொரு கவிதை தொகுப்பு.. அருமை அருமை – சிறக்கட்டும் நின் பணி..

– ப்ரியா பிரபு

You may also like...

5 Responses

  1. Kavi devika says:

    விமர்சனம் அருமை… படிக்க படிக்க திகட்டாத கூழ்…

  2. தி.வள்ளி says:

    கவிஞர் அவர்களின் கவிதைத் தொகுப்பு கேட்கவா வேண்டும் தேன்கூடு …பிரியா பிரபு அவர்கள் மேற்கோள் காட்டியிருந்த
    வரிகளேஅற்புதம் .நூல் விமர்சனம் …கவிதை தொகுப்பு.. இரண்டுமே அருமை வாழ்த்துக்கள் சகோதரர்களே

  3. Rajakumari says:

    நூல் விமர்சனம் நன்றாக இருக்கிறது

  4. ரிஷபன் says:

    கவிதைகள் மிக அழகு.
    விமர்சனம் வாசிக்கத் தூண்டுகிறது.

  5. ssprabhu ssp. says:

    super….very good commends