வார ராசிபலன் ஐப்பசி 09 – ஐப்பசி 15

ஐப்பசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi palangal oct 25 to oct 31.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எப்போதும் குடும்பம் மகிழ்ச்சிகரமாக தென்படும், குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும், கணவன் மனைவி உறவுகள் மேம்படும் . பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரம் லாபகரமாக செயல்படும். கலைஞர்கள் மத்தியில் பகைமை உருவாகலாம்.   மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயரை எடுப்பார்கள். விவசாயம் லாபத்தில் முடியும்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. குடும்பத்தில் சில நேரத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கலாம். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரம நஷ்டம் அடையும் வாய்ப்பு உள்ளது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் சுமாரான பலனை பெறுவார்கள். விவசாயம் விரயத்தை எதிர்கொள்ளும்.
வழிபாடு: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் பணவரவு நன்றாகவே அமையும். குடும்ப ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சில சமயங்களில் சங்கடங்கள் உருவாகலாம். நீண்ட நாள் தடை பட்டுக் கிடந்த பணி நிறைவேறும். பணியாளர்களின் கோரிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் ஆகலாம். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் முழு வெற்றி அடைவார்கள். விவசாயம் லாபகரமாக செயல்படும்.
வழிபாடு:நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு தேவைக்கேற்ப இருக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். மறைமுக எதிரிகள் இருக்கலாம். உடன்பிறப்புகள் உதவி செய்வார்கள். பணியாளர்கள் உச்சம் பெறுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் செல்வாக்கு உயரும். மாணவர்கள் போட்டியில் வெற்றி அடைவார்கள். விவசாயிகளுக்கு காய்கறி வியாபாரம் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
வழிபாடு: திங்கட்கிழமை தினத்தில் சிவ வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. பணவரவு போதிய அளவு இருக்கும். தாங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.  பணியாளர்களுக்கு ஏதாவது வகையில் வருவாய் உயரும். வியாபாரத்தில் பூஜை பொருள் வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் புது புது ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் சுமாரான பலனே  எதிர்பார்க்கலாம். விவசாயிகள் பாக்கியசாலியாக திகழ்வார்கள்.
வழிபாடு: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். வரவு செலவுகளில் கவனமாக செயல்படவும். பணியாளர்கள் சம்பள உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் நல்ல வருவாய் ஈட்டுவார்கள்.  மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் கீரை வகைகள் மூலம் நல்ல வருவாய் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். சில சமயங்களில் நண்பர் கூட எதிரிகளாக மாறுவார்கள். உடன்பிறப்புகள் நன்மையே செய்வார்கள். பணியாளர்கள் நிதானமாக செயல்படவும். வியாபாரத்தில் குறைந்த லாபமே கிடைக்கும். கலைஞர்கள் விரயத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் 100 சதம் வெற்றி அடைவார்கள். விவசாயத்தில் தேவை பூர்த்தி அடையும்.
வழிபாடு: அனுமன் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். நினைத்ததை முடிப்பீர்கள், பகைவர்களும் நண்பர்கள் ஆகலாம். பணியாளர்கள் வரவு செலவை சரியாக வைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் இரட்டிப்பு வருவாய் அடைவார்கள். மாணவர்கள்  நன்மை அடைவார்கள். விவசாயம் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளது.
வழிபாடு: பைரவர் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். எதிலும் நிதானம் கடைபிடிக்கவும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். மனைவியுடன் கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் சக ஊழியரின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் அரசாங்க உதவியை பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி அடைவார்கள். விவசாயம் லாபமே கிடைக்கும்.
வழிபாடு: சனி பகவான் வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் சிறப்படையும். கலைஞர்கள் இரட்டிப்பு வருவாய் பெறுவார்கள். மாணவர்கள் எழுச்சியை அடைவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: அம்மன் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். தடையில்லா வெற்றி கிடைக்கும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். நண்பர்கள் ஊக்கம் தருவார்கள். பணியாளர்கள் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள். வியாபாரத்தில்  பழ வகைகள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் தோல்வியே எதிர்கொள்வார்கள். மாணவர்கள் பாக்கியசாலிகளாக திகழ்வார்கள். விவசாயம் சுமாரான லாபமே கிடைக்கும்.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பணவரவு நன்றாகவே இருக்கும். உடன்பிறப்புகள் சரண் அடைவார்கள். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் அதிக உழைப்பை சமர்ப்பிக்க வேண்டும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் சிரமம் அடைவார்கள். விவசாயத்தில் அதிக லாபம் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும் – rasi palangal oct 25 to oct 31.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

2 Responses

  1. Rajakumari says:

    ராசி பலன்கள் நல்லதே நடக்கின்றது நன்றி

  2. Kavi devika says:

    நன்மை அருளட்டும் அனைவருக்கும்…