வார ராசிபலன் வைகாசி 11 – வைகாசி 17

சார்வரி வருடம் பற்றி வாசிக்க மற்றும் முக்கிய தினங்கள் பற்றி அறிந்துகொள்ள சொடுக்கவும் – rasi palangal may 24 – may 30.

மேஷம் (Aries):

aries mesam


செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். புதிய சொத்து வாங்க யோகமுண்டு, சகோதரர் வகையில் நல்லுறவு நீடிக்கும். பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரம் லாபத்தில் நடக்கும். கலைஞர்கள் சுமாரான பலனை பெறுவார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயம் நல்ல லாபம் கிடைக்கும். நவக்கிரக வழிபாடு செய்யவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

சுக்கிர பகவான் நன்மையே செய்வார். நல்ல பணவரவு இருக்கும், வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகமுண்டு, சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். பணியாளர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள். தொழில் வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். கலைஞர்கள் தேவையை பூர்த்தி அடையும் மாணவர்கள். குடும்ப உறுப்பினர்களின் பாராட்டைப் பெறுவார்கள். விவசாயம் சுமாரான பலனையே ஈட்டித்தரும். முருகப் பெருமான் வழிபாடு செய்யவும்


மிதுனம் (GEMINI):

gemini mithunam

புதன் பகவான் நன்மை செய்வார். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, அண்டைவீட்டார் மத்தியில் கவனம் தேவை.. குடும்பத்தில் பிரச்சினைகள் உருவாகலாம். பணியாளர்கள் கூடுதல் வேலை பொறுப்பு சேரும். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். கலைஞர்களின் தேவை பூர்த்தியாகும். மாணவர்கள் முழு வெற்றி காண்பார்கள். விவசாயம் சிறப்பாக இருக்கும். சிவ வழிபாடு செய்யவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

சூரிய பகவான் நன்மை செய்வார். உடல்நலம் நன்றாக இருக்கும், பண வரவு செலவு சமமாக இருக்கும். உறவினர் வருகை நன்மையாக முடியும். பணியாளர்கள் பணி சிரமத்தில் நடந்து முடியும். வியாபாரத்தில் விழிப்புடன் இருக்கவும். கலைஞர்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டும். மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். விவசாயத்தில் செலவுகள் அதிகரிக்கும். முருகப் பெருமான் வழிபாடு செய்யவும்.


சிம்மம் (LEO):

leo simmam

சுக்கிர பகவான் நன்மையே செய்வார்.  வீட்டின் தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். ஆயுள் பலம் நன்றாக இருக்கும். பணியாளர்கள் வெற்றி அடைவார்கள். வியாபாரம் காய்கறி மூலம் சிறப்பாக இருக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். விவசாயம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். விநாயகர் வழிபாடு செய்யவும்.


கன்னி (Virgo):

virgo kanni

குருபகவான் நன்மை செய்வார், பணவரவு நன்றாக இருக்கும், குடும்பத்தின் தேவைகள் பூர்த்தி ஆகும், சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. பணியாளர்கள் ஆதாயம் பெறுவார்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தியாகும். மாணவர்கள் போட்டியில் வெற்றி பெறுவார்கள். விவசாயம் சுமாரான வருவாயைப் பெற்றுத் தரும். சிவ வழிபாடு செய்யவும்.


துலாம் (Libra):

libra thulam

செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பழைய சொத்துப் பிரச்சனைகள் நீங்கும், பணவரவு அதிகரிக்கும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள். .வியாபாரிகள் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தினமும் காலை சூரிய வழிபாடு செய்யவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

சூரிய பகவான் நன்மை செய்வார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உறவினர் வருகை தீமையாக முடிய வாய்ப்புள்ளது. பணியாளர்கள் உயர் அதிகாரிகளை பின்பற்ற வேண்டும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். கலைஞர்கள் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயத்தில் அதிக விளைச்சல் பெறலாம். நவக்கிரக வழிபாடு செய்யவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

குரு பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும், பணவரவு சமமாக இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பணியாளர்கள் பாராட்டைப் பெறுவார்கள். வியாபாரம் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். கலைஞர்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள் மாணவர்கள் எழுச்சி அடைவார்கள். விவசாயம் சுமாரான பலனை பெற்று தரும். முருகப் பெருமான் வழிபாடு செய்யவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

சூரிய பகவான் நன்மை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வீட்டின் தேவைகள் பூர்த்தி ஆகும். அண்டை வீட்டார் மத்தியில் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. பணியாளர்கள் சிரமப்பட்டு முன்னேற வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் சூடு பிடிக்கும். கலைஞர்கள் நஷ்டத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். விவசாயம் தேவை பூர்த்தியாகும். குலதெய்வ வழிபாடு செய்யவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

சனி பகவான் நன்மை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாக இருக்கும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமையும். பணியாளர்கள் கடின உழைப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரம் பழைய பாக்கி வசூலாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் பாராட்டைப் பெறுவார்கள். விவசாயம் சீராக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.


மீனம் (Pisces):

pisces meenam

குரு பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாக இருக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தி ஆகும். கணவன் மனைவி உறவுகள் இனிதே இருக்கும், சகோதர உறவுகள் பலப்படும். பணியாளர்கள் பாராட்டுப் பெறுபவர்கள். தொழில் வியாபாரம் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தியாகும், மாணவர்கள் முன்னேற்றம் உச்சத்தை எட்டும். விவசாயம் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. அம்மன் வழிபாடு செய்யவும் – rasi palangal may 24 – may 30.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...