வார ராசிபலன் ஐப்பசி 02 – ஐப்பசி 08

ஐப்பசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi palangal oct 18 to oct 24.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் செவ்வாய் பகவான் பல நன்மைகளை செய்வார். எதிலும் அவசர தன்மை காட்ட வேண்டாம். உடன்பிறந்தோர் வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பெண்கள் உடல் நல குறைவால் அவதிப்பட நேரிடும். வீடு வாங்கும் எண்ணம் தாமதம் ஆகலாம். பணியாளர்கள் குறைந்த பலனை பெறுவார்கள். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கலைஞர்கள் நல்ல ஆதாயம் பெறுவார்கள். மாணவர்கள் மிகவும் நிதானமாக செயல்படவும். விவசாயம் சுமாரான பலனை எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சுக்கிர பகவானே நன்மைகள் பல செய்வார். குடும்பத்தில் ஒரு போராட்டமான சூழல் நிலவும். உடன்பிறப்புகள் வகைகள் உதவியை எதிர்பார்க்கலாம். நீண்ட நாளைய முடியாத பணி இப்போது நிறைவேறும். உடல்நிலையில் அவ்வப்போது அக்கறை கொள்ளவும். பணியாளர்கள் பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேற கால தாமதம் ஆகும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் நல்ல முன்னேற்றம்  அடைவார்கள். விவசாயத்தில் விரையம் அடைய வாய்ப்பு உள்ளது.
வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். நினைத்தது நிறைவேற வாய்ப்புகள் உள்ளன, குடும்பம் அமைதியாக காணப்படும், அண்டை வீட்டார் மத்தியில் நட்புறவு காணப்படும் நீண்ட நாளைய சொத்துப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும். பணியாளர்கள் பணியில் சாதனை படைப்பார்கள். வியாபாரத்தில் வியாபாரிகள் நற்பெயர் எடுப்பார்கள். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் உற்சாகமாக தென்படுவார்கள். விவசாயம் நல்ல லாபம் அடையும்.
வழிபாடு: குருபகவான் வழிபாடு சாலச்சிறந்தது.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சுக்ரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். கொடுக்கல் வாங்கல் நிதானமாக செயல்படவும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், கவனம் தேவை. பணியாளர்கள் தன் பணியை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகள் வியாபாரத்தில் கவனமாக செயல்படவும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் வெற்றி அடைவார்கள். விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். சிலர் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. வீட்டில் குழந்தை பாக்கியம் அமையும்  வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் பதவி உயர்வு கிடைக்கப்பெறுவார்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயம் செஸ்த்திக்கும். 
வழிபாடு: நரசிம்மர் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் புதன் பகவானே நன்மைகள் செய்வார். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அவ்வப்போது வீண் செலவுகள் வரலாம். உறவினர் வருகை பிரச்சனையை உருவாக்கலாம். பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறுவார்கள். வியாபாரத்தில் யாரையும் நம்ப வேண்டாம். கலைஞர்கள் விரயமே எதிர்கொள்வார்கள். மாணவர்கள் பாராட்டுகளை பெறுவார்கள்.  விவசாயம் விரயத்தை எதிர்கொள்ளும்.
வழிபாடு: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் செவ்வாய் பகவானே நன்மைகள் பல செய்வார். ஒரு நம்பிக்கை துரோகத்தினால் சிக்கல் வர வாய்ப்பு உள்ளது. எந்த செயலும் தாமதமாகவே நிறைவேறும். குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பொருளாதாரம் சிறப்படையும். பணியாளர்கள் மற்ற பணியாளர்களை அனுசரித்து போகவும். வியாபாரத்தில் உற்சாகம் காணப்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் மகிழ்ச்சிகரமாக தென்படுவார்கள். விவசாயத்தில் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு எதிர்பார்ப்பு நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் உயரும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் சிரமத்தை எதிர்நோக்க வேண்டும். விவசாயத்தில் வீண் பிரச்னைகள் வரலாம்.
வழிபாடு: ஞாயிறு அன்று பைரவர் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். வாழ்வில் அதிக அலைச்சல் ஏற்படலாம். எதிர்பார்ப்புகள் இழுபறியாகவே அமையும். உடன்பிறப்புகள் வகையில் உதவி வழங்கும். பணவரவுகள் தேவைக்கேற்ப அமையும். பணியாளர்கள் இடமாற்றம் நடக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல கவனம் செலுத்தவும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி அடைவார்கள். விவசாயம் நல்ல லாபம் அடையும்.
வழிபாடு: சிவ வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எடுத்த செயல் இழுபறி நிலையை அடையலாம். பணவரவு நன்றாகவே இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். பணியாளர்கள் பணியில் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். கலைஞர்கள் வருமானமின்றி தவிர்ப்பார்கள். மாணவர்கள் நல்ல உயர்வை எதிர்கொள்வார்கள். விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் குரு பகவானே பல நன்மைகள் செய்வார். பணவரவு எதிர்பார்த்த அளவு அமையும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். நல்ல வெற்றி எதிர்பார்க்கலாம். வீடு அழகுபடுத்தும் வேலை நடைபெற வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் சிறந்த பாக்கியசாலிகளாக திகழ்வார்கள். விவசாயிகள் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் குருபகவானே நன்மைகள் பல செய்வார். எதிலும் வெற்றியே அடைவீர்கள், மற்றவர் அறிவுரையை கேட்காமல் நீங்கள் சொந்தமாக செயல்படவும். இந்த வாரம் வாகன யோகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உடல்நலனில் சற்று கவனம் தேவை. பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும். கலைஞர்கள்  விரையம் அடைவார்கள். மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படவும். விவசாயம் நல்ல முன்னேற்றம் அடையும்.
வழிபாடு: துளசி செடிக்கு தினம் காலை தண்ணீர் ஊற்றி வரவும் – rasi palangal oct 18 to oct 24.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

2 Responses

  1. Rajakumari says:

    ராசிபலன் எப்போதும் கரெக்டா நடக்குது ஐயா அவர்களுக்கு நன்றி

  2. Kavi devika says:

    இந்த மாதம் முழுதும் இனிமை பயக்கட்டும்