வார ராசிபலன் மாசி 2 – மாசி 8

மாசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal feb-14 to feb-20.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே இருக்கும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமையும். கணவன் மனைவி உறவுகள் முன்னேற்றமடையும். பணியாளர்கள் உயர் பதவி அடைவார்கள். வியாபாரம் லாபத்தில் நகரும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் நன்மை பயக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை தினத்தில் நவகிரக வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். ஏதாவது வகையில் பணவரவு அமையும். வீட்டில் குழந்தை பாக்கியம் உருவாகலாம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகவும். பணியாளர்கள் நன்கு சிறப்படைவார்கள். வியாபாரம் பூஜைபொருள் சம்பந்தப்பட்ட வியாபாரம் லாபத்தில் நடக்கும். கலைஞர்கள் சிறப்பாக திகழ்வார்கள். மாணவர்கள் புதிய உச்சம் அடைவார்கள். விவசாயம் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: லட்சுமி வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினை அதிகரிக்கும், மற்றபடி குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். செலவுகள் சற்று உயரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். வியாபாரிகள் கவனமாக செயல்படவும். கலைஞர்கள் நஷ்டமே அடைவார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் அதிக லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். வீட்டில் பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. உடல்நலம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் வீட்டில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: சண்டிகேஸ்வரர் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். புதிய மனை வாங்கும் யோகம் உள்ளது. தாய்க்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஏதாவது வகையில் பணவரவு இருக்கும். பணியாளர்கள் உயர் பதவியை அடைவார்கள். வியாபாரம் கீரை சம்பந்தப்பட்ட வியாபாரம் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிரிகள் பயம் இருக்கும். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயம் லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்தவாரம் கேது பகவான் நன்மையே செய்வார். சகோதர வழியில் ஒற்றுமை நிலவும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமையும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீர தாமதமாகலாம். பணவரவு நன்றாகவே இருக்கும். பணியாளர்கள் ஊழியர் மத்தியில் செல்வாக்கு அடைவார்கள். வியாபாரம் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்கள் வெற்றி அடைவார்கள். விவசாயம் நஷ்டம் எதிர்கொள்ளும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வரவுக்கேற்ற செலவு இருக்கும். வாகன மாற்றம் ஏற்படலாம். யாரிடமும் வீண் வாக்குவாதம் வேண்டாம். பணியாளர்கள் நன்கு சிறப்படைவார்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். கலைஞர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். விவசாய தேவை பூர்த்தி அடையும்.
பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். ஆயுள்பலம் நன்கு அமையும், சேமிப்பு சற்று உயரம். வாகன ஆதாயம் கிடைக்கும். சுப நிகழ்வு நடைபெற வாய்ப்புள்ளது. பணியாளர்கள் பதவி ஆணை மற்றும் உயர்வு பெறுவார்கள். வியாபாரம் லாபம் அடையும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் நவீன விவசாயத்தின் மூலம் ஆதாயம் பெருகும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தினத்தில் பைரவர் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராகவே காணப்படும். வீண் பிரச்சனைகள் உருவாகலாம், புதிய நட்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகன ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் உயர் பதவியை அடைவார்கள். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். விவசாயம் லாபம் அடையும் .
பரிகாரம்: திங்கட்கிழமை தெய்வ வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். வீண் செலவுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகன ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரிகள் கடுமையாக உழைக்க நேரிடும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் வெற்றி காண்பார்கள். விவசாயம் லாபம் அதிகரிக்கும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும் புதிய பழக்கவழக்கத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். உடல்நலம் சில சமயத்தில் பாதிப்புகள் வரலாம். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் சுமாரான லாபமே கிடைக்கும். கலைஞர் சிரமம் அடைவார்கள். மாணவர்கள் எதிலும் கவனமாக இருக்கவும். விவசாயத்தில் நல்ல வருவாய் எதிர்பார்க்கலாம் .
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பூமி மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். உடல்நலனில் சற்று கவனம் தேவை. வாகனச் செலவுகள் அதிகரிக்கலாம். பணியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். வியாபாரம் கூட்டுத் தொழில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் நல்ல ஆதாயம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல பாராட்டை பெறுவார்கள். விவசாயம் புதிய விதைகளின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும் – rasi-palangal feb-14 to feb-20

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...