வார ராசிபலன் கார்த்திகை 28 – மார்கழி 04


கார்த்திகை மாத மின்னிதழை வாசிக்க
இங்கே சொடுக்கவும் – rasi-palangal dec-13 to dec-19.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் ஒரு சில சங்கடங்கள் இருக்கலாம், வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, பிரயாணத்தின் போது கவனமாக செல்லவும். உடல் நலத்தில் நல்ல கவனம் செலுத்தவும். பணியாளர்கள் முழு வெற்றி அடைவார்கள். வியாபாரம் லாபகரமாக செயல்படும். கலைஞர்கள்  நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் குழப்பமான சூழ்நிலையில் இருப்பார்கள். விவசாயம் நஷ்டமே அடையும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. பணவரவு நன்றாகவே இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும், புதிய வீடு வாங்க யோகம் உள்ளது. பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல லாபம் பெறும். கலைஞர்களுக்கு தேவைகள் பூர்த்தி அடையும். மாணவர்கள் இரட்டிப்பு வெற்றி அடைவார்கள். விவசாயத்தில் லாபம் உயரும்.
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பிரயாணத்தில் கவனமாக இருக்கவும். பணவரவு சுமாராகவே இருக்கும். அண்டை வீட்டார் மத்தியில் போட்டிகள் உருவாகலாம். பணியாளர்கள் எந்த இடத்திலும் நற்பெயர் எடுப்பார்கள். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தப்பட்ட வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞருக்கு நஷ்டத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்தல் நன்மை பயக்கும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்பு உள்ளது. குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். புதிய வகையில்  பணவரவு இருக்கும்.  திருமணம் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றம் ஏற்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தின் மூலம் நிம்மதி அடைவார்கள். விவசாயத்தில் கால்நடை வளர்ப்பின் மூலம் போதிய வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உறவினர் வருகை நன்மையில் முடியும். சுப நிகழ்வு ஒன்று நடைபெற வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மருத்துவச் செலவு ஏற்படும். இந்த வாரம் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பணியாளர்கள் அதிக பணிச்சுமையை சந்திப்பீர்கள். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்களுக்கு நடுத்தர வருமானமே கிடைக்கும். மாணவர்கள் நல்ல கவனத்துடன் செயல்படவும். விவசாயம் சுமாரான பலனை எதிர்பார்க்கலாம். 
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். வீட்டில் சேமிப்பு உயரும், நீண்ட நாளைய பிரச்சனை நிறைவேற வாய்ப்பு உள்ளது.  பணியாளர்கள் அதிக பணிச்சுமை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல லாபம் பெறும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி அடைவார்கள். விவசாயிகளுக்கு குடும்ப தேவைகள் பூர்த்தி அடையும். 
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணவரவு நன்றாகவே இருக்கும். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் கூடுதல் பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கலைஞர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பார்கள். மாணவர்கள் குடும்பத்தில் மதிப்பு உயரும். விவசாயம் நஷ்டமே அடையும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். சகோதரி வகையில் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பணியாளர்கள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். வியாபாரம் பழவகை சம்பந்தப்பட்ட வியாபாரம் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் முழு வெற்றி அடைவார்கள். விவசாயத் தேவைகள் பூர்த்தி அடையும்.
பரிகாரம்: சனிக்கிழமை தினத்தில் நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படலாம். பணவரவு நன்கு அமையும். வெளியூர் பிரயாணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். பணியாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வியாபாரம் நன்மை பயக்கும். கலைஞர்கள் நஷ்டமே அடைவார்கள். மாணவர்கள் குழப்பத்தில் இருப்பார்கள். விவசாயம் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். ஆயுள்பலம் நன்கு அமையும், பணவரவு எதிர்பார்ப்பு நிறைவேறும், வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் பணியில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் நஷ்டம் அடைய வாய்ப்பு இல்லை. கலைஞர்கள் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகலாம். மாணவர்கள் சிரமப்பட்டே முன்னேற்றம் காண்பார்கள். விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். 
பரிகாரம்: சிவ வழிபாடு செய்தல் நன்மை பயக்கும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். அண்டை வீட்டார்கள் சரண் அடைவார்கள். பணவரவு சுமாராகவே இருக்கும். பணியாளர்கள் புதிய பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருமானம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் ஆரோக்கியமாக காணப்படுவார்கள். மாணவர்கள் புதிய திருப்பம் அடைவார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும்.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். நீண்ட நாளைய சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். ஒரு சிலர் வாகனயோகம் அடைவார்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். உறவினர் வருகை நன்மையில் முடியும். பணியாளர்கள் லாபகரமாக செயல்படுவார்கள். வியாபாரிகள் நல்ல வருவாய் ஈட்டுவார்கள் . கலைஞர்கள் பாக்கியசாலிகள் ஆக திகழ்வார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். 
பரிகாரம்: திங்கள் வெள்ளி கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வரவும் – rasi-palangal dec-13 to dec-19.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...