வார ராசிபலன் சித்திரை 19 – சித்திரை 25
சித்திரை மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal may-02 to may-08.
மேஷம் (Aries):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், செலவுகள் சற்று குறையும், வீண் அலைச்சல்கள் வரலாம், மன நிம்மதி இருக்காது.பணியாளர்கள் அதிகாரிகளை அனுசரித்து போகவும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். கலைஞர்கள் நல்ல ஊக்கம் பெறுவார்கள். மாணவர்கள் சிறப்படைவார்கள். விவசாயத்தில் லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருக வழிபாடு செய்து வரவும்.
ரிஷபம் (Taurus):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். எந்த செயலும் சுலபமாக முடிவடையும். எந்த நேரமும் பரபரப்பாக காணப்படுவீர்கள். நண்பர்களை அனுசரித்து போகவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் காய்கறி தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்து வருதல் சாலச்சிறந்தது.
மிதுனம் (GEMINI):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். புதிய நட்புறவு உங்களுக்கு கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் கவனம் தேவை. வாகனயோகம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியாளர்கள் ஊழியர் மத்தியில் செல்வாக்கு அடைவார்கள்.பிவியாபாரத்தில் புதிய யுக்தியை கையாள்வார்கள். கலைஞர்கள் லாபம் அடைவார்கள். மாணவர்கள் 100 சதவீதம் பெறுவார்கள். விவசாயத்தில் நன்மை பயக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.
கடகம் (Cancer):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். எதை செய்தாலும் சற்று எச்சரிக்கையாக செய்யவும். பெரியோர் ஆசி உங்களுக்கு கிடைக்கப்பெறும். எதிரிகள் உங்கள் வசம் சரண் அடைவார்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். பணியாளர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூல் செய்யப்படும். கலைஞர்கள் அரசாங்க உதவி பெறுவார்கள். மாணவர்கள் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயத்தில் நஷ்டமே எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
சிம்மம் (LEO):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். செலவுகள் சற்று குறையும். எதிலும் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகள் உயர்வடைவார்கள். உங்களுக்கு நவீன யோகம் கிடைக்கும். பணியாளர்கள் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள். வியாபாரத்தில் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் பாக்கியசாலிகளாக திகழ்வார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: துர்க்கை வழிபாடு செய்து வரவும்.
கன்னி (Virgo):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். வெற்றிகளை குவிப்பீர்கள். புதிய மாற்றங்கள் உருவாகும். எதிரிகள் வசம் சரண் அடைவார்கள். நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் தங்கம் வெள்ளி வியாபாரிகள் நல்ல ஆதாயம் பெறுவார்கள். கலைஞர்கள் நஷ்டம் எதிர்கொள்வார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் செழிப்படையும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று காமாட்சி வழிபாடு செய்து வரவும்.
துலாம் (Libra):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் பிறக்கும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். உறவினர் வகையில் பகை உருவாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பணியாளர்கள் புதிய உற்சாகம் அடைவார்கள். மாணவர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயிகள் பாக்கியவான்கள் ஆக திகழ்வார்கள்.
பரிகாரம்: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
விருச்சிகம் (Scorpio):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். தூரத்து நன்மை ஒன்று உங்களுக்கு கிடைக்கும். சேமிப்பு உயரும், மனநிம்மதி அடைவீர்கள், உடல்நலம் சீரடையும். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரம் லாப நஷ்டம் இன்றி நடைபெறும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் ஆக்கம் பெறுவார்கள். விவசாயத்தில்ப கை உருவாகலாம்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்து வரவும்.
தனுசு (Sagittarius):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்ப ஆரோக்கியம் நன்றாக அமையும்./எதிலும் கவனமாக செயல்படவும். புதிய அனுபவம் பிறக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணியாளர்கள் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் சேமிப்பு பழக்கம் பெறுவார்கள். விவசாயத்தில் குடும்ப தேவைகள் பூர்த்தியடையும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்து வரவும்
மகரம் (Capricorn):`
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். கெட்ட நண்பர்கள் பழக்கத்தை கைவிடவும். சான்றோர் ஆசி கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். பணியாளர்கள் அதிகாரிகளிடம் பகையை வளர்க்க வேண்டாம். வியாபாரத்தில் வரவு செலவு சமமாக அமையும். கலைஞர்கள் ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். விவசாயம் நஷ்டமே அடையும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.
கும்பம் (Aquarius):
இந்த வாரம்குருபகவான் நன்மையே செய்வார்./எதிலும் சற்று கவனமாக செயல்படவும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். பணவரவு நன்றாகவே இருக்கும். பணியாளர்கள் சக பணியாளர்களை அனுசரித்து போகவும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கனிவாக செயல்படவும். கலைஞர்கள் பெண் கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.
மீனம் (Pisces):
இந்த வாரம் சூரியபகவான் நன்மையே செய்வார். புதிய வீடு கட்டும் யோகம் உள்ளது. நண்பர்களுக்கு உதவி செய்ய வாய்ப்புள்ளது. உங்கள் மனதில் இருந்த கவலை நீங்கும். தாயின் நலம் பேணி காக்கவும். பணியாளர்கள் ஊக்கம் அடைவார்கள். வியாபாரம் சுமாராகவே நடக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும் – rasi-palangal may-02 to may-08
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)