சித்திரை மாத சிறப்பு பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு முதல் பிறந்தநாள். ஆதரவு தந்த வாசக சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றி. மங்களகரமான பிலவ வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – sithirai maatha ithazh 2021

sithirai maatha ithazh

நீரோடை முகநூலில் நடத்திய போட்டிகள் 2 மற்றும் 3 க்கு முடிவுகள் மற்றும் “கவியோடை” பட்டம் சித்திரை முதல்வார முடிவில் அறிவிக்கப்படும்.

நீரோடை கவிதை முகநூல் குழுவில் இணைந்து இலக்கியப் பயணத்தை தொடர https://www.facebook.com/groups/2774558349431601/?ref=share


தமிழின் மீது மட்டற்ற அன்பு கொண்டு தமிழுக்கு தொண்டாற்றி வரும் மா கோமகன் அவர்களின் இலக்கியத்தொடர் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி – விளக்கவுரை” நமது நீரோடையை சிறப்பித்து வருகிறது…

மேலும் தொல்காப்பியம், கலிங்கத்துபரணி, முத்தொள்ளாயிரம் போன்ற காப்பியங்களுக்கு விளக்கவுரை எழுதி நீரோடையில் வெளியிடவுள்ளோம்….


கவிஞர்கள் கவிதேவிகா மற்றும் ப்ரியா பிரபு அவர்களின் கவிதை தொகுப்பு,

மெய்யின் உயிரே…

உயிரும் மெய்யும்
ஒன்றாக இணைத்து
வார்த்தை கோர்த்து
கவிதை படைத்தேன்…..
ஏனோ கவிதை
உயிர் பெறாத
ஓவியமாய் நின்றது…..
காரணம் யோசிக்க……
உயிராகிய நான்
உன்னிடத்தில் அல்லவா………. – sithirai maatha ithazh 2021
பிறகெப்படி… – கவி தேவிகா, தென்காசி

அழகியே

நீ நனைந்து
விடாமல் இருக்க
உன்னை நினைந்து
ஒற்றை குடையுடன்
ஓடோடி வந்தேன்…….

நீயோ என்னை
என்னை முழுவதும்
நனைத்து விட்டாயடி.
உன் அன்பு மழையில்.. – கவி தேவிகா, தென்காசி


நினைவின் அலைகள்

கரைதனில் உன் பாதங்கள்
பட்டதுமே..
ஆசையுடன் நுரைப்பூக்களை
அள்ளிக்கொண்டு ஓடிவரும்
அலைகள்..
உன் பாதங்களை தழுவி
முத்தமிட்டு..
இன்னும் தாகம்
தீராமல் மீண்டும்
நுரைப்பூக்களை அள்ளி வர
கடலுக்குள் செல்கிறது..
மனதின் கடலும்
அப்படியே..
உனையே உள்வாங்கி.. உள்வாங்கி..
நினைவின் அலைகளால்
தழுவுகிறது.. – ப்ரியா பிரபு, நெல்லை


அவளாகிய நான்

எல்லை தாண்டி
என்னவளின் பாத சுவடுகளை
எடுத்து சென்றால்
எரித்து விடுவேனடி…….
கடல் அலைகளை….
இருள் மங்கிய
இரவில் நான்
உயிராய் நேசிக்கும்
உன் நிழலை
மின்னொளிகள் விரட்டினால்
விளங்கிடுவேனடி வெளிச்சத்திற்கும்.. – கவி தேவிகா, தென்காசி

வானவில்

ஏழு வண்ண சீலையை
ஏகாந்தமாய் உடுத்தி
ஏழைகள் இன்பம்காண
ஏங்கி தவிக்கும்
எழில் முகம்காட்டும்
எழிலரசி நான்…….

வானில் உன்
வரவை நோக்கி
உற்று பார்த்து
உருகுகிறேன் உயிராகிய
உன்னவள் … நீ
வருவாயென மழையே.. – கவி தேவிகா, தென்காசி


மஷ்ரூம் மல்லி புலாவ்

தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு, புவனேஸ்வரில் வசித்து தமிழ் இலக்கியத்திற்கு பங்காற்றி வரும் ஜோதி பாய் அம்மா அவர்களின் சமையல் குறிப்பு (இவரின் மற்ற படைப்புகள் கூடிய விரைவில் நமது நீரோடையில்) – sithirai maatha ithazh 2021

mushroom pulao tamil

தேவையான பொருட்கள்

மஷ்ரூம் -300 கிராம்
வெங்காயம் – 3 நறுக்கியது
தக்காளி – 3 நறுக்கியது
சீரகசம்பா அரிசி – 11/2 கப்
பால் -1கப்
வெந்நீர் – 2கப்
புதினா -3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
எண்ணெய் -2 மேசைக்கரண்டி
நெய் -1 மேசைக்கரண்டி
உப்பு -தேவைக்கு

தாளிப்பதற்கு

பட்டை -2 துண்டு,கிராம்பு- 2, ஏலக்காய்- 2,அன்னாசிப்பூ-2 இதழ்,
கல்பாசி- 2 சிட்டிகை,மராட்டி மொக்கு – 1 சிட்டிகை

விழுதாய் அரைக்க

இஞ்சி- 11/2 அங்குலம்
பூண்டு- 10பல், காய்ந்த மிளகாய்- 5,
பச்சை மிளகாய்- 5

தாளிக்க

எண்ணெய்- 3டீஸ்பூன்
கொத்துமல்லித்தழை -2 கைப்பிடி மைய அரைத்தது
மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு மூன்றும் ஒவ்வொரு சிட்டிகை

செய்முறை

குக்கரில் எண்ணெய் + நெய் சேர்த்து காயவிடவும்.தாளிக்கும் பொருட்கள் சேர்த்து பொரிய விடவும்.வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இஞ்சி பூண்டு மிளகாய் விழுதைச் சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கவும்.
மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும். மஷ்ரூம் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி ஒரு கப் பாலும், 2 கப் வெந்நீர் சேர்க்கவும்.குக்கரை மூடி ஆவி மேலே வந்ததும் விசில் போட்டு சின்ன பர்னரில் ஸிம்மில் 12 நிமிடம் வேகவிடவும். ஸ்டவ்வை நிறுத்தி 20நிமிடம் கழித்து திறக்கவும்.

வலையொளி காணொளியில் செய்முறை விளக்கத்தை காண https://youtu.be/kG4vmTaPsbE

தாளிக்க

ஒரு வாணலியில் மூன்று டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் 3/4டீஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்த மல்லியை சேர்க்கவும். இதில் தாளிப்பில் உள்ள மற்ற பொருட்களை சேர்த்து தளதளப்பாய் புலாவில் சேர்த்து கிளறவும்.
சுவையான மஷ்ரூம் மல்லி புலாவ் வீடே மணக்கும்! – ஜோதி பாய்


வலையோடை 6 சிறப்பு புத்தாண்டு பதிவு

ஒரு ஆணின் அன்பில் மென்மை இல்லாமல் இருக்கலாம் ஆனால் பொய்யாக இருக்காது.
@THARZIKA

உங்கள் தேவையற்ற
பிடிவாதங்களை
விட்டுப் பாருங்கள்..
உங்களைச் சுற்றி
எத்தனை பிடித்தவர்கள் இருக்கிறார்கள் என்று தெரியும்..!!
@TRAMESH21548526

அன்பை யாசிக்காதீர்கள், அது இயல்பை போன்றது இயல்பாய் கிடைக்கும் போதுதான் அது பேரழகு.
@THARZIKA

இப்படித் தான் வாழ வேண்டும் 
இதைத் தான் செய்ய வேண்டும் என்ற விடை கிடைத்த பிறகு
கேள்வி கேட்பதை நிறுத்தி
விடுங்கள்..!
@sankariofficial

நிஜங்களென்றே
நினைந்து நிழலாககூட இல்லாத உறவுகளே
வாழ்வை உணர்த்தி செல்கின்றனர்…
@deepaakumaran

கையிலிருப்பதை ஏற்காத நாம்தான்
கண்ணிற்கு எட்டாத தொலைவில்
இருப்பதை தேடிக் கொண்டு அலைகிறோம்.
@SaranyaTwtzz

புகழின் உச்சிக்கே போனாலும் புறப்பட்ட இடத்தை மறவாதே..!!
@_SUMI_Twitz_

தாங்கக்கூடிய அளவு உள்ள வலியையும்…தீர்க்கக்கூடிய அளவு உள்ள பிரச்சனையையும் தான்…வாழ்க்கை கொடுக்கும்…எனவே கவலையில்லாமல் முன்னே செல் ..!
@AnjaliTwitz

You may also like...

2 Responses

  1. Kavi devika says:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நீரோடைக்கு

  2. தி.வள்ளி says:

    இனிய முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீரோடைக்கு…அனைத்துப் பகுதிகளும் தேனின் இனிமை …புதிய பகுதிகளும் சுவாரஸ்யமாக இருக்கின்றன ..