வைகாசி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட வைகாசி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – vaikasi maatha ithazh 2021

vaikasi maatha ithazh 2021

நினைவில் நீந்தும் நீரோடைப்பெண்

உறவின் உன்னதம்
உணர்ந்து உயிர்த்து
பிறந்த கவிதை
அதனால் ஒளிவீசும்
வார்த்தை கோர்வையில்
தங்கமும் வைரமும்!
எண்ணத்தின் எழுச்சி
பொங்கி பெருகி
உள்ளத்தை அழுத்தி
பீறிடும் ஊற்றாய்
எத்தனை வேகம்!
தியாகத்தாய் குறித்த
நிந்தன் வரிகள்
“அலுவலகம் முடிந்து
தாமதித்து வீடு திரும்பும்
விநாடிகளை
நெருப்புத் துண்டுகளாக்கி
கரங்களில் பற்றி எண்ணிக்கொண்டு
வீட்டின் முன்னோ
வீதி முற்றத்திலோ
காத்திருக்கும் சீவன்
நீதான் என்னுயிரே!”
என்னவொரு யதார்த்தம்!
தாயின் மனத்துயரை
வார்த்தையில் உருக்கியே
வடித்து செதுக்கிய
சிற்பியே வாழிநீ!
தந்தை குறித்து,
“எதிர்பார்ப்பில்லா ஏணி
சுயம்பு மணற்கேணி
வாழ்வில் விழுந்ததற்கும்
வீழாமலிருப்பதற்கும்,
அகப்புற காயங்களுக்கு மருந்திட்டு
உணர்வில் ஊக்கமளித்த உன்னத
உறவே நீர் தான்”
எழுத்து சாற்றை
உள்ளம் சுவைக்கிறது
திளைத்து மகிழ்கிறது!
கவிதை உந்தன்
தேடல்! தேடிக்
கிடைத்த புதையல்!
“இலக்காய் நீ இருக்கையில்
உயிர்சக்தி கொடுத்து
இந்த எழுத்து பந்தயம்
கற்பனைகள் ஓயவில்லை
காகிதங்கள் மீதமில்லை
உள்ளுணர்வுகளில் உறக்கமில்லை
கனவுகளும் என்னில்
தலை சாய்க்கவில்லை….”
அருமையான ஆழ்ந்த
மணிமணியாய் வரிகள்!
“என் மேகமே
மழையை காரணங்காட்டி
நீர் துகள்களாய் என்னை
பூமிக்கு உதறி தள்ளினாலும்
ஆழியில் விழுந்து
சூரியக் கதிரில் நீராவியாகி
கார்முகிலே உனைச் சேர்வேன்”
காதலின் வண்ணம்
வானவில்லை மிஞ்சும்!
“தவறவிட்ட முந்தைய பிறவிகளின்
இன்பங்கள் யாவும்
இப்பிறவியில்
என்னுடன் வாழத்துடிக்கும்
அன்பே”
ஏழ்யேழு ஜென்மம்
தொடரும் பந்தத்தின்
இதயப் பிணைப்பு!
“என் தாய் தந்த பரிசு நான்
எனக்கு பரிசாய் கிடைத்த தாய்
என் மகள் நீயே”
மகன் யுகனை,
“சகதோழனாய் உடன்நடக்கும்
தந்தையின் சுவாசத்தை
உன்னிலும் உணர்கிறேன்…..
தோள்களில் உனை சுமக்கும்போது….”
வரிகளை எழுதும்
பொழுதே உந்தன்
உணர்ச்சியை மின்சாரமாய்
கடத்தும் அற்புதம்!
என் கண்களில்
ஏனோ கண்ணீர்
தெரியவில்லை!

நீரோடை பெண் நூலுக்கு கவிதை வடிவில் திறனாய்வு வழங்கிய ஜோதி பாய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி


தமிழ் மொழியின் சிறப்பு – ஓர் அறிமுக கட்டுரை

கோமகன் அவர்கள் எழுதும் புதிய தொடர் விரைவில் நமது நீரோடையில் ..

இன்று காணவிருப்பது ஆண்பால், பெண்பால் பெயர்கள் – vaikasi maatha ithazh 2021

 1. அச்சன் அச்சி
 2. அண்ணன் – அண்ணி
 3. அநுசன் – அநுசை
 4. அப்பன் – அம்மை
 5. அமைச்சன் – அமைச்சி
 6. மாமன் – அத்தை
 7. அரசன் – அரசி
 8. நண்டு – பெடை நண்டு
 9. ஆசிரியன் – ஆசிரியை
 10. ஆடவன் – பெண்டு
 11. ஒருவன் – ஒருத்தி
 12. ஆதிரையான் -ஆதிரையாள்
 13. ஆயன் – ஆய்ச்சி
 14. இடையன் – இடைச்சி
 15. இந்திரன் – இந்திராணி
 16. உபாத்தியாயன் – உபாத்தியாயினி
 17. உழவன் – ஓழத்தி
 18. ஊமையன் – ஊமைச்சி
 19. எம்பி – எங்கை
 20. எயினன் – எயிற்றி (எம்பி – என் தம்பி, எங்கை – என் தங்கை)
 21. ஓதுவான் – ஓதுவாள்
 22. கடுவன் – மந்தி
 23. கடா – கிடாரி, மறி
 24. கணக்கன் – கணக்கச்சி
 25. கணவன் – மனைவி
 26. கண்ணன் – கண்ணி
 27. கரியன் – கரியள்
 28. கருவூரான் – கருவூராள்
 29. கலை – பிணை
 30. களிறு – பிடி
 31. கன்னான் – கன்னாத்தி
 32. காதலன் – காதலி
 33. காந்தள் – காத்தை
 34. காளை – பசு
 35. கிழவன் – கிழவி
 36. குட்டையன் – குட்டைச்சி
 37. குறவன் – குறத்தி
 38. குருடன் – குருடி
 39. கூனன் – கூனி
 40. கூகை – போத்து
 41. கொழுந்தன் – கொழுந்தி
 42. சிவம் – சக்தி
 43. சிவன் – சிவை
 44. சிறியன் – சிறியள்
 45. சிறுக்கன் – சிறுக்கி
 46. சிற்றப்பன் – சிற்றன்னை
 47. சீமான் – சீமாட்டி
 48. செட்டி – செட்டிச்சி
 49. செவிடன் – செவிடி
 50. செல்வன் – செல்வி
 51. சேங்கன்று – கிடாரி
 52. சோழியன் – சோழிச்சி
 53. தச்சன் – தச்சச்சி
 54. தட்டான் – தட்டாத்தி
 55. தந்தை – தாய்
 56. தமையன் – தமக்கை
 57. தம்பி – தங்கை
 58. தனயன் – தனயை
 59. தனவான் – தனவந்தி
 60. திருமாள் – திருமகள்

கேரட் கீர் செய்முறை – தி.வள்ளி

தேவையானவை
கேரட் கால் கிலோ
சீனி ஒரு கப்
முந்திரி பருப்பு 10
பாதாம் பருப்பு 10
பால் 150ml – 200ml
ஏலக்காய் பொடி கால் ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் சில துளிகள்

செய்முறை
கேரட்டை பெரிய துண்டுகளாக (மேல் தோலை சீவி விட்டு) நறுக்கி குக்கரில் குழைய வேகவிடவும். முந்திரிப் பருப்பையும் பாதாம் பருப்பையும் (பாதாம்பருப்பை இரவே ஊறவைத்து விடவும்) மிக்ஸியில் தண்ணீர் விடாமல் நன்றாக பொடித்துக்கொண்டு வெந்த கேரட்டையும் போட்டு மைய அரைக்கவும் பின் அதை ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு,அத்துடன் சீனியையும் சேர்த்து தீயில் கொதிக்க விடவும்.அடிபிடிக்காமல் கலந்து விடவும். அதிகம் கொதிக்க வேண்டாம் ,முறை கூட்டி வரும் போது அணைத்து விடலாம் . பின் ஏலக்காய் பொடியையும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கிண்டவும்.சுவையான சத்தான கேரட் கீர் ரெடி. சூடாகவோ… குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.


இளநீர் புட்டிங் – சௌமியா மதுரை

தேவையான பொருட்கள்
இளநீர்,இளநீர் வழு. – 1 கப் ( தலா)
மில்க் மெய்ட். -1 டின்
ஜெலட்டின். -3 ஸ்பூன்
தண்ணீர். -1/4 கப்

செய்முறை
ஒரு பாத்திரத்தில் இளநீர்,இளநீர் வழு,மில்க் மெய்ட் மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் ஜெலடினையும், தண்ணீரையும் கலந்து கொள்ளவும்.பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் கொதிக்கவிட்டு, அதன் நடுவில் இந்த ஜெலட்டின் கலவையை கிண்ணத்துடன் வைத்து,நன்கு கரைந்து கண்ணாடி போல் வந்ததும் வெளியே எடுக்கவும்.ஜெலட்டின் கலவையை, இளநீர் கலவையுடன் சேர்த்து கலக்கவும். பின் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் மாற்றி,பிரிட்ஜில் வைக்கவும் .உரைந்தவுடன் பரிமாறவும்.தேவைப்பட்டால் ரோஜா இதழ்கள் கொண்டு அலங்கரிக்கலாம்.


தெக்கால பூமி

வடக்கே வசவசனு வளர்ந்து,
வளைந்து நிற்கும் நெல்லு வயல்களைப் போல் அல்லாத பூமி..!
பாவம் அதுவே வானம் பார்க்கும் பொல்லாத பூமி..!
உழுக நினைக்கும் உழவனையே
அழுக வைத்து கடமைக்கு கூட கண் துடைக்க வராத கல்நெஞ்ச பூமி..!
மனசு நினைத்தால் மனை போட்டு
காயம் படாமல் கல் நட்டியிருக்கலாம் தான்..
ஆனால் நினைப்பது பெருசுகள் அல்லவா..!
பகலில் பற்றி எரியும் சூரியனை சமாளித்து..
சோர்ந்த ஓய்ந்த நேரத்தில்..
இராவில்
வந்துவிட்டாள் கதிரவனின் சொந்தக்கார பனிக்கிளவி..
கலப்பையின் முத்தம் படாமல் கரிசல் மண்ணில் புதையுண்டு,
மூன்று நாள் கழித்து உதயமிட்டு..
மெல்ல வேரூன்றி பூ வைத்து கருவுற்று கருத்தரித்து நினைத்து பார்க்கவே அடடடா..!
இறுதியாய் அந்த கடலக்காய் தான் காய்ச்சு நிற்பது
வருணனின் கருணையே..!
ஆம் இது எங்கள் தெக்கால பூமி..!
கடலைக்காயை கொரித்தபடியே – மணிகண்டன் சுப்பிரமணியம்


தாலத்தின் ரசனை

கைகளால் தட்டிக் கொள்ளும்
தாலத்தின் எதிரொலி நம்
பாரம்பரியம் !

தமிழக பெண்ணின் கலையம்சம்
தங்கத்தினால் அலங்கரித்திடுமே!

நெத்திசுட்டி பேசும் வார்த்தைகள்
நதிகளின் ஆனந்த சங்கீதமே !

தாலத்தினால் ராகம் பாடுது ! தங்க
காதணி புகட்டுவது அழகான இசை
வெள்ளத்திலே

அடுக்கடுக்கான ஆபரணங்கள்
அகிலமெல்லாம் கவர்ந்திடும்
தமிழ் மொழிகளில்

சலங்கையின் ஒளியை வைத்து
சகலமும் அறிந்திடலாம் எளிதிலே – vaikasi maatha ithazh 2021

தாலத்தின் ரசனை அறிந்திருந்தால்
விமர்சனத்தின் வழியில்
உயர்ந்திடலாம்! – வேல்

You may also like...

1 Response

 1. தி.வள்ளி says:

  வைகாசி மாத சிறப்புகள் அருமை… கவிதைகள் இரண்டும் சிறப்பு ஜோதிபாய் வேல் அவர்களுக்கு தனி பாராட்டுகள்… சமையல் குறிப்புகள் …மொழியின் சிறப்பு என அனைத்துப் பகுதிகளும் அருமை