பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 3

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் பாரதியாரின் புதிய ஆத்திசூடி பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 3

bharathiyar puthiya aathichudi

கைத்தொழில் போற்று

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்
கொள்வதாயின்
கை கொடுக்குமது இடர்
வருகாலத்தே கடமையை
தொடர என்பதால் கைத் தொழில்
ஒன்றைக் கற்றுக்
கொள் கவலைஉனக்கிலை

கொடுமையை எதிர்த்து நில்

அநீதி என்றும் ஆர்பரிக்க
கூடாதென தெள்ளென
தெளி பின் அநீதி எதிர்த்து
செயல்பட ஆயத்த பணிகள்
முனைந்து முன்னெடுத்து
அநீதியின் விளைவுகளை
அடியோடு களைதல் எளிது

கோல்கைக் கொண்டு வாழ்

கோல் கை எடுத்தால்
குரங்கு ஆடும் என்பதன்
பொருளென கோல்கைக்
கொண்டு குற்றங்களை
தட்டிக் கேட்டு எதிர்த்து
நிற்றல் என்றும் அவசியம்
தான்னென்பேன்

கவ்வியதை விடேல்

நம் வாழ்க்கை பயணத்தே
கவ்வியது எதுவென்றே
சிந்தித்தால் நாம் கற்றதும்
பெற்றதும் தானென்பேன் எனில்
அவற்றை எதன் பொருட்டும்
கைவிடல்
ஏற்பதற்கில்லைதானே

சரித்திர தேர்ச்சி கொள்

நமது சரித்திரம் என்பது
நற்சான்று பலவும் பயிலும் உயர்
பெட்டகம் என்பேன்
என்பதாயின் இதுவே தான்
எம் பின்புல சரித்திரமென
உரிமையொடு உரக்க கூற
வலியுறுத்தினேனே

சாவதற்கு அஞ்சேல்

பிறவி எனும் பெருங்கடல்
பயணத்தின் இறுதி நிலை
சாக்காடு என்றேதான் நாம்
எல்லோரும் அறிந்திருக்க
பின் ஏன் பெரும் அச்சம்
கொள்வதாம் சாவெனும்
இறுதி கண்டு

சிதையா நெஞ்சு கொள்

உண்ணும் சுவை உணவு
மலம் என மாறுதல் தின
இயல்பேயாயின் எதற்கும்
சிதையா எண்ணத்தேவை
என்பதனை உணர்ந்தே நீ
இளமையில் முதுமையை
பழகிக் கொள் – bharathiyar puthiya aathichudi 3

சீறுவோர்ச் சீறு

சீற்றம் என்ற குணமதுவே
சிறுத்தைக்கு மட்டுமன்று
சீரிய மானுடருக்கும் ஏற்பே சீறும்
இடனறிந்து சீறுதல் வாழ்வின்
ஒரு நல்ல நெறி
என்பதை ஏற்று கொண்டு
சீற்றத்தை கை கொள்

சுமையினுக்கு இளைத்திடேல்

சுமையென கருதுவனவே
யாவும் நம் கடமையினது
இறுதி நிலை என அறிந்த
நீ சுமப்பதிலொரு சுகம்
உண்டென்பதை உணர்ந்து
நாம் சுமப்பதெல்லாம் நம்
கடமையென கண்டு கொள்

சூரரைப் போற்று

செயற்கரிய செயல்களை
செய்து முடித்து இறுதியில்
வெற்றி தழுவும் வீரமகன்
சூரன் இவனென பெயர்
எடுத்திடல் எல்லோருக்கும்
எளிதல்ல என்பதனையும்
உணருதல் உண்மையாம்

– மா கோமகன்

You may also like...