காயத்ரியைப்போல் மந்திரமில்லை ஏன் ?

விசுவாமித்திரர் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்போம். சத்ரியரான அவரே காயத்ரி மந்திரத்தின் படைப்பாளி. உலக நன்மைக்காக தனது தவவலிமையால் அவர் உருவாக்கிய மந்திரம் தான் காயத்ரி மந்திரம். இன்று பலரும் உலக நன்மைக்காக இந்த மந்திரத்தை உச்சரிக்கிறார்கள் gayathri manthram.

விசுவாமித்திரர்

விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன். விசுவாமித்திரன் என்றால் உலகத்தின் நண்பன், உலக நன்மைக்காக பாடுபடுபவன் என்று அர்த்தம். அவரது இயற்பெயர் கௌசிகன், உலக நன்மைக்காக எப்போதும் தவம் புரிவது, நல்லதை நினைப்பது என இதையே அவர் தொழிலாக கொண்டிருந்ததால் விசுவாமித்திரர் என்று பெயர் பெற்றார்.

காயத்ரி என்பதற்கு காயம் + திரி என்று பொருள். அதாவது விசுவாமித்திரர் தனது உடலை திரியாக்கி இந்த மந்திரத்தை உருவாக்கியதால் காயத்திரி என பெயர் பெற்றது. 

விசுவாமித்திரர் ஏன் உடலை திரியாக்கினார்

ஒரு முறை சத்ரியரான கௌசிக மன்னனுடைய நாட்டில் கடும்பஞ்சம் நிலவியது. இதனை போக்க மகரிஷி வசிஷ்டரிடம் இருக்கும் காமதேனு பசுவின் பெண்வயிற்று பிள்ளையான நந்தினி என்ற பசுவை தன நாட்டின் பஞ்சம் போக்க வேண்டி இரவல் கேட்கிறார். வசிஷ்டர் இவரது கோரிக்கையை நிராகரிக்கிறார். கோபமுற்ற கௌசிகன் அவர் மேல் போர் தொடுத்து தோல்வி அடைகிறார். 

தோல்வியுற்ற கௌசிக மன்னனிடம் வசிஷ்டர் பிரம்மரிஷிகளுக்கு மட்டுமே காமதேனு, மந்திரி என்ற பசுக்கள் கட்டுப்படும் எனவே நீர் பிரம்மரிஷியானால் நந்தினி பசுவை தருகிறேன் என்கிறார். மேலும் தவம் இயற்றினாலும் சத்ரியனால் எளிதில் பிரம்மரிஷி பட்டம் வாங்க முடியாது என்று உரைக்க, கௌசிகனும் அந்த பிரம்மரிஷி பட்டத்தை வாங்கி காட்டுவதாக சவால் விடுத்து ஒரு கள்ளி செடியின் முனையில் மேல் நின்று கடும் தவம் புரிகிறார். இதை கண்டா அன்னை சக்தி கௌசிகன் மம் தோன்றி தன கோவிலில் உள்ள விளக்கில் பஞ்சமுகமாக திரி போட்டு தீபம் ஏற்றினால் உன் தவம் சித்தியாகும் என்று அறிவித்து மறைகிறாள். 

gayathri manthram

சக்தியின் வாக்கை ஏற்று நான்கு வேதங்களின் பிறந்தநாள் (அன்று பௌர்ணமி) அன்று அவளது ஆலயம் சென்று பஞ்சமுகமாக திரிவைத்து விளக்கேற்ற முனைகிறார் ஆனால் எவ்வளவு முயன்றும் அந்த திரிகள் எரியவில்லை. உடனே அந்த விளக்கில் தன் தலை இரண்டு கை மற்றும் கால்கள் இவை ஐந்தையும் வைத்து அந்த விளக்கை ஒரு மந்திரம் ஓதி எரிய வைக்கிறார். தனது உடலையே திரியாக்கி ஒரு நாள் முழுவதும் தனது நாட்டு மக்களுக்காக போராடுவதை கண்ட சக்தி அவரை விசுவாமித்திரர் என்று அழைத்து பிரம்மரிஷி பட்டத்தையும் வழங்குகிறார். 

காயத்ரி

தனது உடலை திரியாக்கி ஜோதியை மையமாக வைத்து தன் தவத்தின் போது கௌசிக மன்னன் தான் அறிந்த நன்கு வேதத்தின் சாரமாக ஒரு மந்திரம் இயற்றி உச்சாண்டம் செய்ததால் அதுவும் மந்திரத்திற்காக தன் உடலையே (காயத்தை)  திரியாக்கி உச்சாண்டம் செய்து வரம் பெற்றதால் அந்த மந்திரம் காயத்ரி மந்திரம் என்று அழைக்கப்படும் என்றும் பெருமைப்பேறு தருகிறாள்.மேலும் கௌசிகன் கூறிய இம்மந்திரம் நான்கு வேதங்களின் சாரம் என்பதால் இனி வேதியர்கள் ஜோதி சொரூபமாக என்னை நினைத்து உலக நன்மைக்கு பிராத்தனை செய்யலாம் என அருளியதால் அன்று முதல் இன்று வரை நாம் உச்சாண்டம் செய்து பலன் பெறுகிறோம்.காயத்ரி மந்திரத்திற்கு கட்டுப்பட்டு மனம் இறங்கிய சக்தியை அந்த மந்திரத்தை கொண்டே காயத்ரி தேவி என்று அழைக்கிறோம்.

சிரவண மாத பௌர்ணமிக்கு மறுநாள் அவர் வரமும் பட்டமும் பெற்றதால் நாமும் அதே நாளில் கதாத்ரி மந்திரத்தை உச்சாண்டம் செய்து வணங்குகிறோம்.  அந்நாளில் இயன்றவரை நாம் பூஜிக்கிறோமோ அவ்வளவு பூர்வஜென்ம பாவங்கள் தொலைந்து போகும் என்பது ஊர்ஜிதம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *