வார ராசிபலன் பங்குனி 29 – சித்திரை 04

பாரதியாரின் புதிய ஆத்திசூடி வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal apr-11 to apr-17.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். ஆடம்பர பொருட்கள் வீட்டில் வாங்குவீர்கள். அண்டை வீட்டார் மத்தியில் போட்டிகள் இருக்காது. பணியாளர்கள் உயர் பதவியை அடைவார்கள். வியாபாரம் லாபத்தில் முடியும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் மனதில் பதட்டம் நிலவும். விவசாயத்தில் குடும்பத் தேவை பூர்த்தி அடையும்.
பரிகாரம்: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். வீட்டில் சுப செலவுகள் வரலாம், எங்கேயும் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், பணவரவு எதிர்பார்ப்பு நிறைவேறும். பணியாளர்கள் சற்று கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கிடைக்கலாம். கலைஞர் செலவு அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயத்தில் நல்ல மகசூல் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். நீங்கள் எதற்கும் முன்-கோபத்தை குறைக்கவும், மற்றவர்கள் தொல்லையை பெரிதுபடுத்த வேண்டாம். பணவரவு சுமாராகவே காணப்படும், உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. பணியாளர்கள் நல்ல செல்வாக்கு அடைவார்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் பின்னடைவை சந்திப்பார்கள். விவசாயத்தில் நஷ்டம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய பகவான் வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எதையும் சற்று யோசித்து முடிவு எடுக்கவும். பெண்கள் சற்று நிதானமாக செயல்படவும். சரியான உணவு வகைகள் சாப்பிடவும். பணி சக ஊழியர்கள் ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். வியாபாரத்தில் புதிய யுக்தியை பயன்படுத்துவீர்கள். கலைஞர்கள் அரசாங்க ஆதரவை பெறுவார்கள். மாணவர்களுக்கு கடின உழைப்பு தேவைப்படும். விவசாயத்தில் நஷ்டமே எதிர்கொள்ளும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும். சகோதரர் வழியில் ஒற்றுமை நிலவும், சுபச் செலவுகள் வரலாம். சேமிப்பு உயரும். பணியாளர்கள் இடமாற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் சற்று கவனமாக செயல்படவும். விவசாயத்தில் நல்ல லாபம் அடையும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாரான நிலை அடையும், எனினும் நற்பலன் எதிர்பார்க்கலாம். செலவுகள் சற்று உயரும், உடல்நிலை ஆரோக்கியமாக காணப்படும். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பு சம்பந்தப்பட்டவை நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். செலவுகள் சற்று குறையும். வீட்டில் சுமூகமான நிலை காணப்படும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். கலைஞர்கள் மன உறுதி அடைவார்கள். மாணவர்கள் நல்ல புகழ் பெறுவார்கள். விவசாயிகள் பாக்கியசாலிகள் ஆக திகழ்வார்கள்.
பரிகாரம்: மாரியம்மன் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். வீடு மாற்றம் நடைபெறும். உங்கள் தேவைகள் பூர்த்தியடையும். அண்டை வீட்டாரின் ஆதரவு பெருகும். பணியாளர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும். கலைஞர்கள் செல்வாக்கும் அடைவார்கள். மாணவர்கள் நல்ல ஊக்கம் பெறுவார்கள். விவசாயம் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: அன்னதானம் செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு தேவைக்கேற்ப அமையும். உடல்நிலை ஆரோக்கியமாக காணப்படும். சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெறும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் சற்று கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் லாபம் உயரும். கலைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் எதிலும் திட்டமிட்டு செயல்படுவார்கள். விவசாயத்தில் தேவைகள் பூர்த்தியடையும்.
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். பணவரவு நன்மை பயக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியடையும். பணியாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். கலைஞர்கள் கவலை அடைவார்கள். மாணவர்கள் ஆரியர் பாடங்களில் தேர்ச்சி பெறுவார்கள். விவசாயம் கால்நடைகள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமை தினத்தில் சிவ வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எதையும் சமாளிப்பீர்கள். பிரயாணத்தின் மூலம் நன்மை கிடைக்கும். உங்கள் அந்தஸ்து உயரும். பணியாளர்கள் செல்வாக்கு அடைவார்கள். வியாபாரம் சுமாராக காணப்படும். கலைஞர்கள் தேக்கநிலை அடைவார்கள். மாணவர்கள் விடா முயற்சி செய்ய வேண்டும். விவசாயத்தில் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். பிறர் உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. செலவுகள் உயரும், எதிலும் கவனம் தேவை. பணியாளர்கள் திறமையுடன் செயல்படுவார்கள். வியாபாரம் நன்கு சிறப்படையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயத்தில் நஷ்டம் ஏற்படாது.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவர் வழிபாடு செய்து வரவும் rasi-palangal apr-11 to apr-17

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...