வார ராசிபலன் மார்கழி 12 – மார்கழி 18


மார்கழி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal dec-27 to jan-02.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. பணவரவு நன்றாகவே அமையும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். அண்டை வீட்டார்கள் நட்பாகவே இருப்பார்கள். பணியாளர்கள் நல்ல உயர்வை அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் உச்சம் அடைவார்கள். மாணவர்கள் நல்ல உயர்வை பெறுவார்கள். விவசாயத்தில் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளது. 
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் உறவினர் வருகை நன்மையில் முடியும். வீட்டில் சிறு குழப்பம் வர வாய்ப்புகள் உள்ளன. பணவரவு சுமாராகவே இருக்கும். புதிய மனை கட்டும் யோகம் உள்ளது. பணியாளர்கள் பணியில் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் நஷ்டமே எதிர்கொள்வார்கள். மாணவர்கள் போட்டியில் நல்ல வெற்றி காண்பார்கள். விவசாயம் நல்ல லாபம் அடையும். 
பரிகாரம்: நவகிரக வழிபாடு செய்து வரவும்


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். சொத்து சம்பந்தமான பிரச்சனை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் ஆதரவு நன்கு அமையும். பணியாளர்கள் நல்ல செல்வாக்கை பெறுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருமானம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் தடுமாற்றத்துடன் காணப்படுவார்கள். விவசாயம் கால்நடை சம்பந்தப்பட்ட நன்கு ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தினத்தில் பைரவர் வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு சுமாராகவே அமையும். அண்டை வீட்டார்கள் நட்புறவுடன் இருப்பார்கள். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரிகள் புதிய நடைமுறையை கடைபிடிப்பார்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தின் மூலம் வெற்றி காண்பார்கள். விவசாயிகள் பாக்கியசாலிகள் ஆக திகழ்வார்கள். 
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உறவினர் வருகை நன்மையில் முடியும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் வருமானம் உயரும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். கலைஞர்கள் புது புது ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். விவசாயம் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளது. 
பரிகாரம்: செவ்வாய் கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு எதிர்பார்ப்பு நிறைவேறும். வீட்டில் சேமிப்பு உயரும். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டில் நபர்களுக்கு உடல்நல பாதிப்பு வர வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வியாபாரம் லாபம் அடையும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். விவசாயத்தில் குடும்ப தேவைகள் பூர்த்தி அடையும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். சகோதரிகள் ஆதரவு பெருகும். குடும்பத்தில் சிறு குழப்பம் வர வாய்ப்புள்ளது. திருமண தடையும் ஏற்படலாம். பணியாளர்கள் சற்று கவனமாக இருக்கவும். வியாபாரம் லாபம் அடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் சுமாராகவே செயல்படுவார்கள். விவசாயத்தில் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளது.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தியடையும், புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும், சகோதர சகோதரிகள் இடையே ஒற்றுமை நிலவும், வீட்டில் பெரியோர் சொற்படி நடந்தால் நன்மை கிட்டும். பணியாளர்கள் இடமாற்றம் பெறுவார்கள். வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவார்கள். மாணவர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். விவசாயம் நல்ல வருவாய் ஈட்டும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டின் தேவைகள் நிறைவேற்றப்படும். பணியில் ஒரு முன் உதாரணமாக திகழ்வீர்கள். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும், சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். பணியாளர்கள் மன நிம்மதி அடைவார்கள். வியாபாரம் ஆபரணம் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். மாணவர்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பார்கள். விவசாயம் மானாவாரி விவசாயம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு திருப்திகரமாக அமையும். அவ்வப்போது சிறுசிறு குழப்பங்கள் வர வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் மிகவும் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் நடுத்தர லாபமே அடைவார்கள். கலைஞர்கள் வருவாய் இழப்பு அடைய வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் நன்கு பயன் பெறுவார்கள். விவசாயம் லாபம் அடையும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்து வருவது நன்மை பயக்கும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். சொத்துப் பிரச்சினை நல்ல தீர்வு அடையும். பணவரவு நன்றாகவே இருக்கும். வீடு மனை வாங்க யோகம் உள்ளது. எதிலும் வெற்றியே காணப்படும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரிகள் சுமாராகவே காணப்படுவார்கள். கலைஞர்கள் நல்ல லாபம் அடைவார்கள். மாணவர்கள் தோல்வியே சந்திப்பார்கள். விவசாயத்தின் குடும்பத் தேவை பூர்த்தி அடையும். 
பரிகாரம்: சனிக்கிழமை தினத்தில் நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும், பணவரவு சீராக இருக்கும். சகோதரர் ஆதரவு கிடைக்கும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் நிம்மதி அடைவார்கள். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நன்மை அடைவார்கள். விவசாயத்தில் காய்கறி சம்பந்தப்பட்ட வியாபாரம் நல்ல ஆதாயம் கிடைக்கும். 
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும் – rasi-palangal dec-27 to jan-02.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

1 Response

  1. surendran sambandam says:

    ராசி பலன்கள் அமர்க்களம் ஆண்டின் இறுதியில் ஆண்டின் தொடக்கத்தில் நன்றி