வார ராசிபலன் மாசி 9 – மாசி 15

மாசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal feb-21 to feb-27.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். சகோதரிக்கு உதவி செய்ய வேண்டிய நிலை உருவாகும். உடல் நலம் சீராக காணப்படும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் உருவாகலாம். பணியாளர்கள் நல்ல உயர்வை அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் நன்மை அடைவார்கள். மாணவர்கள் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். திடீர் செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. வாகன ஆதாயம் கிடைக்கும். நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் உயரிய லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். தினமும் அதிக வேலை செய்ய நேரிடும். கையிருப்பு குறைய வாய்ப்பு உள்ளது. உறவினர் வருகை  சங்கடத்தை உருவாக்கும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரம் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளது. கலைஞர்கள் நல்ல ஊக்கம் அடைவார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயம் நஷ்டம் அடையலாம்.
பரிகாரம்: திங்கட்கிழமை தினத்தில் சிவ வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் வரவு-செலவு சமமாக அமையும். புதிய முயற்சி ஏதும் செய்ய வேண்டாம். பணியாளர்கள் லாபம் அடைவார்கள். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தப்பட்ட வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். குடும்ப தேவைகள் பூர்த்தி செய்யப்படும். கடன் கொடுக்கல் வாங்கல் வேண்டாம், யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டாம். பிரயாணம் செய்வதை குறைக்கவும். பணியாளர்களுக்கு வரவு அதிகரிக்கும். வியாபாரம் லாபம் எதிர்பார்க்கலாம். மாணவர்கள் கவனமாக இருக்கவும். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: காமாட்சி அம்மன் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். நீங்கள் நினைத்தது நடக்காமல் போகலாம். குடும்பம் மகிழ்ச்சியாக காணப்படும். உறவினர் வருகை நன்மை ஏற்படாது. தனிப்பட்ட முடிவு எடுப்பீர்கள். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் லாபம் அடையும். கலைஞர்கள் பயத்துடன் செயல்படுவார்கள். மாணவர்கள் முழு வெற்றி அடைவார்கள். விவசாயிகள் பாக்கியசாலிகள் ஆவார்கள்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். யாருக்கும் கடன் உதவி செய்ய வேண்டாம். வீடு கட்ட நல்ல நேரம் இதுவாகும். பணியாளர்கள் நல்ல செல்வாக்கு அடைவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் 100 சதம் வெற்றி காண்பார்கள். விவசாயம் நஷ்டமே எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: வெள்ளி கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். குடியிருப்பு மாற்றம் ஏற்படலாம். சேமிப்பு உயரும். பணியாளர்கள் முழு வெற்றி அடைவார்கள். வியாபாரம் ஆபரணம் சம்பந்தப்பட்ட வியாபாரம் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயத்தில் குடும்பத் தேவை பூர்த்தியாகும்.
பரிகாரம்: திங்கட்கிழமை தினத்தில் சிவ வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராக அமையும். சீரான வாழ்வு நிலைக்கும். வாகன பயணம் ஆதாயம் கிடைக்கலாம். யாரையும் நேரடியாக நம்ப வேண்டாம். பணியாளர்கள் சிறப்பு அடைவார்கள். வியாபாரம் சீராக நடைபெறும். கலைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். விவசாயம் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு சீராக இருக்கும். குடும்பம் சலசலப்பை எதிர்கொள்ளும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரயாணத்தில் கவனமாக இருக்கவும். பணியாளர்கள் ஊக்கம் அடைவார்கள். வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும். கலைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் புதிய சிந்தனை அடைவார்கள்.  விவசாயத்தின் தேவைகள் பூர்த்தியடையும்.
பரிகாரம்: ராகு பகவான் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

சுக்கிர பகவான் நன்மையே செய்வார். எதையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். பணவரவு நன்றாக அமையும். குடும்பம் பிரகாசமாக காணப்படும். எதிர்கால திட்டம் வெற்றி அடையும். பணியாளர்கள் லாபம் அடைவார்கள். விவசாயத்தில் நஷ்டம் அடையாது. கலைஞர்கள் சிறப்படைவார்கள். மாணவர்கள்  சிக்கல் அடைவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை தினத்தில் நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பெண்கள் மூலம் உதவி பெறுவீர்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியடையும். குடியிருப்பு மாற்றம் நடைபெறும். பணியாளர்கள் நன்மை அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் நல்ல உயர்வை சந்திப்பார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும் rasi-palangal feb-21 to feb-27

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...