மாசி மாத இதழ்
மாசி மாத இதழில் பப்பாளியின் மருத்துவ குணங்கள், நீரோடை கவிதை போட்டி பற்றிய குறிப்புகள், ப்ரியா பிரபு அவர்களின் கவிதை மற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் வழங்கிய வாழைப்பூ கேப்பை ரொட்டி ஆகியன இடம்பெற்றுள்ளன – masi matha ithal
நீரோடை கவிதை போட்டி 2 தலைப்புகள்,
- காதலர் தினம்
- அம்மாவுக்கு என்ன பரிசு
- நாட்டுப்புற கலைஞன்
- வாசிப்பும் நேசிப்பும்
- சிட்டுக்குருவிகள்
- அப்துல்கலாம்
- உண்டியல் காசு
- கோரோனாவிற்கு பிறகு
- கவிதை நடையில் சிறுகதை
- வீரத் தமிழச்சி
கலந்து கொள்ள மற்றும் போட்டி பற்றிய விளக்கம் அறிய இங்கே சொடுக்கவும் – போட்டி இரண்டு ..
நீரோடை முகநூலில் நடத்தப்பட்ட கவிதை போட்டி ஒன்று முடிவுகள் நீரோடை முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும்.
வாழைப்பூ கேப்பை ரொட்டி
இது ஒரு சத்தான ருசியான ஒரு மாலை நேர சிற்றுண்டி. பெரியவர்கள் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணலாம். உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைவரும் இதனை உண்ணலாம்.
தேவையான பொருட்கள்
கேப்பை மாவு – 1 கப்.
வாழைப்பூ – 1 கை அளவு (நரம்பு நீக்கி)
தேங்காய் – 2 சில்லு
சீரகம் – தேவையான அளவு
வெங்காயம் – 1 (பெரியது)
இஞ்சி – ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
செய்முறை
கேப்பை மாவுடன் உப்பு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசறிக் கொள்ளவும். கலவை இயந்திரத்தில் வெங்காயம்,இஞ்சி, வாழைப்பூ பச்சை மிளகாய் தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சுற்று மட்டும் சுற்றி (துருவினாற் போல) ஆக்கி மாவுடன் கலக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி மாவுக் கலவையுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பிறகு அடுப்பில் தோசைக் கல்லை வைத்து,சூடேறியப் பின் மாவை தட்டி ரொட்டி போல் தயார் செய்யவும்.இரண்டு பக்கமும் நன்கு வேக எண்ணெய் விட்டு அவ்வப்போது திருப்பிப் போடவும் – masi matha ithal.
உள்ள சத்துக்கள்
கேப்பையில் இரும்புச் சத்தும் கால்சியம் சத்தும் நார்ச் சத்தும் அதிகம் இருப்பதால் உடலுக்கு உரம் ஊட்டும். எடை குறையும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. வாழைப்பூவில் வைட்டமின் A மற்றும் B,C ஆகியவை நிரம்ப
உள்ளன. பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் சத்துகள் உள்ளதால் உடல் நலம் பெறும்.
– ஏஞ்சலின் கமலா
என்றென்றும் காதல்
கனவுகளின் சஞ்சாரத்தில்
களவு போனவர்களும் உண்டு..
கைதியானவர்களும் உண்டு..
விடுதலையை வேண்டாத
விருப்பச்சிறையே காதல்..
வீழ்த்த நினைப்போரும்
வீழ்ந்து போகும் வினோதம்
இங்கே மட்டுமே
நிகழக்கூடும்..
ஒற்றைப் பார்வையில்
உயிரைக் கடத்தும் வலிமை
காதலுக்கு மட்டுமே உண்டு..
தனக்குப் பிடித்ததை ஒதுக்கி
இணைக்குப் பிடித்ததை ஏற்கும்..
உன்னத மனோநிலை
இப்போது மட்டுமே உண்டாகும்..
ஊடலின் பெரும்பொழுதுகளில்
மௌனமெனும் ஆயுதம்
பெரிதாய் யுத்தம் செய்யும்..
நிமிடங்கள் நீளமாகும்..
உயிரைத் தாங்கும்
வலிமை குறைந்து போகும்..
இரவின் தனிமையில்
சிதறிக் கிடக்கும்
நட்சத்திரங்களைச் சேகரித்து
நினைவெனும் சிறகுகளால்
நிலவில் உலா போகும்..
கூடலின் பொழுதுகளிலோ
காலமெனும் தேர்
விரைவாய் செல்லும்..
தாபங்களின் தவிப்புகள்
காணாமல் போகும்..
மூச்சுக்காற்றில் நறுமணம் கூடும்..
சிறு ஸ்பரிசமும் சிலிர்ப்பு தரும்.. உலகம் சிறியதாகி
உள்ளங்கைக்குள் வசப்படும்..
காதல் அழகானது..
காதல் உணர்வானது..
என்றென்றும் உயிரானது..
– ப்ரியா பிரபு, நெல்லை
பப்பாளியின் மருத்துவப் பண்புகள்
- நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து……
- பித்தத்தைப் போக்கும்……
- உடலுக்குத் தென்பூட்டும்……
- இதயத்திற்கு நல்லது……
- மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்……
- கல்லீரலுக்கும் ஏற்றது……
- கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்……
- சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்…..
- கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்…..
- முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்……
- இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்……
- மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது……
- பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்…..
- பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது……
- பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது……
- இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்……
- உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது……
- இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்……
- நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
- பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது……! – masi matha ithal
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்……
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்……
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை…
பிரியா பிரபு அவர்களின் கவிதை அருமை..ஏஞ்சலின் கமலா அவர்களின் வாழைப்பூ கேப்பை ரொட்டி சத்துள்ள சுவையான சிற்றுண்டி..பப்பாளியின் பயன்கள் என அனைத்துப் பகுதிகளும் அருமை ..பயனுள்ளவை வாழ்த்துக்கள்