வார ராசிபலன் சித்திரை 12 – சித்திரை 18

சித்திரை மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal apr-25 to may-01.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். நீங்கள் நினைத்த காரியம் தாமதம் ஆகலாம், எதையும் சற்று யோசித்து செயல்படவும், பணவரவு சுமாராகவே இருக்கும், வீண் அலைச்சல் இருக்கலாம். பணியாளர்கள் இடமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் சற்று கவனமாக செயல்படவும். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். எதையும் திறமையாக செயல்படுத்துவீர்கள். எதிர்ப்புகள் குறையும், பணவரவு நன்றாகவே அமையும். சுபகாரியங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. பணியாளர்கள் சிரமத்தை எதிர்கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். கலைஞர்கள் மத்தியில் போட்டி ஏதும் இருக்காது. மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயத் தேவைகள் பூர்த்தியடையும்.
பரிகாரம்: ஐயப்பன் வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். உங்கள் வாழ்வில் எதிலும் நன்மை கிடைக்கும். பணவரவு நன்றாகவே அமையும். சேமிப்பு சற்று உயரும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணியாளர்கள் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரம் விரிவுபடுத்தப்படும். கலைஞர்கள் சக கலைஞர்கள் மத்தியில போட்டி இருக்காது. மாணவர்கள் துணிச்சலாக செயல்படுவார்கள். விவசாயம் கால்நடை சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமை தினத்தில் சிவ வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். எதிலும் வெற்றி காண்பீர்கள். சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உள்ளன. கடின உழைப்பு முன்னேற்றம் பெற்றுத்தரும். சற்று பொறுப்புகள் அதிகரிக்கும். பணியாளர்கள் சுமை உயரும். வியாபாரிகள் பரபரப்பாக காணப்படுவார்கள். கலைஞர்களுக்கு எதிலும் காலதாமதம் ஏற்படும். மாணவர்கள் நன்கு படிக்க வாய்ப்புள்ளது. விவசாயம் நஷ்டம் அடையும். 
பரிகாரம்: நாக தேவதை வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பேச்சை சற்று குறைக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குடும்பத்தை அனுசரித்து போகவும். பெண்கள் எதிலும் நிதானமாக செயல்படவும். பணியாளர்கள் துன்பம் அடைவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூல் செய்யப்படும். கலைஞர்கள் அதிஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் நல்ல லாபம் அடையும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். உங்கள் வாழ்வில் நன்மைகள் அதிகம் இருக்காது. யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சுப செலவுகள் அதிகரிக்கும். சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் அதிகமாக உழைக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுப்பார்கள். விவசாயம் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: லட்சுமி வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. பணியாளர்களுக்கு சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கலைஞர்கள் அரசாங்க உதவி பெறுவார்கள். மாணவர்கள் ஒற்றுமையாக செயல்படவும். விவசாயம் நன்மை பயக்கும்.
பரிகாரம்: விஷ்ணு வழிபாடு செய்து வரவும்


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். வீட்டில் குழந்தை பாக்கியம் அமையும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். உங்கள் கடன் வசூல் செய்யப்படும். பிரயாணம் செல்ல வாய்ப்புகள் உள்ளது. பணியாளர்களுக்கு வேலை குறையும். வியாபாரம் சிறப்படையும். கலைஞர்கள் வருமானம் உயரும். மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயம் நஷ்டமே அடையும். 
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்தவாரம் குருபகவான் நன்மையே செய்வார். உங்கள் தொழில் லாபம் எதிர்பார்க்கலாம். பணவரவு நன்றாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு ஒரு நல்ல தகவல் கிடைக்கும். பணியாளர்கள் லாபம் அடைவார்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கலைஞர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயம் குடும்ப தேவைகள் பூர்த்தியடையும்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்தல் நல்லது.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராக அமையும். எதிலும் வெற்றி காண்பீர்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். புதிய வீடு கட்ட யோகம் உள்ளது. பணியாளர்கள் திறமை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் நிம்மதியடைவார்கள். மாணவர்கள் செலவை குறைக்கவும். விவசாயம் சுமாராக காணப்படும்.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். பிறருக்கு உதவி ஏதும் செய்ய வேண்டாம். வீண் வாக்குவாதம் வேண்டாம். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். கலைஞர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றுவார்கள். மாணவர்கள் மெத்தனம் காட்டுவார்கள். விவசாயிகள் புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். 
பரிகாரம்: விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். செலவுகள் சற்று அதிகரிக்கும். சொத்து வாங்கும்போது கவனமாக செயல்படவும். அனைவரையும் அனுசரித்து போகவும். பணியாளர்கள் கூடுதல் பணி எதிர்கொள்வார்கள். வியாபாரிகளுக்கு செலவுகள் அதிகரிக்கும். கலைஞர்கள் நல்ல வெற்றி அடைவார்கள். மாணவர்கள் தேவை பூர்த்தி அடையும். விவசாயம் மானாவாரி விவசாயம் ஆதாயம் கிடைக்கும். 
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்து வரவும் rasi-palangal apr-25 to may-01

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...