வார ராசிபலன் வைகாசி 02 – வைகாசி 08
சித்திரை மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal may-16 to may-22.
மேஷம் (Aries):
இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். உடல்நிலை ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். எதிலும் நன்மை கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சினை முடிவுக்கு வரும். பணியாளர்கள் கூடுதல் பணி செய்ய நேரிடும். வியாபார சிக்கல்கள் வரலாம். கலைஞர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் செலவுகள் கூடும். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
ரிஷபம் (Taurus):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். உங்கள் முயற்சியில் வெற்றி சாதகமாக அமையும். பணியாளருக்கு சுமை குறையும். வியாபாரத்தில் லாபம் உயரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். விவசாயத்தில் லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: புதன்கிழமை குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.
மிதுனம் (GEMINI):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வரவேண்டிய பணம் வசூல் ஆகும். இருந்து வந்த கவலை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணியாளர்கள் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் நன்மை கிடைக்கும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
கடகம் (Cancer):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். தொலைதூரத் தகவல் நன்மைபயக்கும். பூர்வீக பிரச்சனைகள் நீங்கும். பணவரவு நன்றாகவே அமையும். பிள்ளைகள் மூலம் நன்மை கிடைக்கும். பணியாளர்கள் வீண் அலைச்சல் எதிர்கொள்வார்கள். வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடுவார்கள்.கலைஞர்கள் அரசாங்க உதவி பெறுவார்கள். மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தில் சேர்வார்கள். விவசாயம் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்து வந்தால் நன்மை கிடைக்கும்.
சிம்மம் (LEO):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெறும். பணியாளர்களுக்கு வேலை அதிகரிக்கும். வியாபாரிகள் சிரமத்தை எதிர்கொள்வார்கள். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்களுக்கு கடின உழைப்பு தேவை. விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.
கன்னி (Virgo):
இந்த வாரம் சுக்ரபகவான் நன்மையே செய்வார். எடுத்த காரியங்களை சாதிப்பீர்கள். பணவரவு நன்றாக அமையும். உடல்நலம் ஆரோக்கியமாக காணப்படும். நல்ல ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் திறமையாக செயல்படுவார்கள். வியாபாரிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைஞர்கள் தேவை பூர்த்தி ஆகும். மாணவர்களுக்கு தடை நீங்கும். விவசாயம் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: சரஸ்வதி வழிபாடு செய்து வரவும்.
துலாம் (Libra):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். நீங்கள் நினைப்பது நடக்கும். பணவரவு நன்றாக அமையும். ஆன்மிகத்தில் நாட்டம் காட்டுவீர்கள். தேவை பூர்த்தி அடையும். பணியாளர்கள் நேர்மை கடைபிடிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். கலைஞர்கள் சிரமப்படுவார்கள். மாணவர்களுக்கு இருந்த தடை நீங்கும். விவசாயிகள் சிறப்பாக திகழ்வார்கள்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
விருச்சிகம் (Scorpio):
இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். காரிய வெற்றி அடைவீர்கள். பணவரவு சுமாராகவே இருக்கும். எதிலும் நிதானம் கடைபிடிக்கவும். பணியாளர்கள் சக ஊழியர்களிடம் ஒத்துப்போகவும்.கலைஞர்கள் ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். வியாபாரிகள் சுமூகமாக செயல்படவும். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி அடைவார்கள். விவசாயிகள் நஷ்டம் அடைவார்கள்.
பரிகாரம்: ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.
தனுசு (Sagittarius):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். எதிலும் நேர்மை கடைபிடிக்கவும். மன நிம்மதி அடைவீர்கள். உங்களுக்கு புதிய சிந்தனை பிறக்கும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கலாம். பணியாளர்கள் புதிய பொறுப்பை அடைவார்கள். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் அதிக கவனம் செலுத்தவும். விவசாயம் கீரை சம்பந்தப்பட்டவை நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: துர்க்கை வழிபாடு சாலச்சிறந்தது.
மகரம் (Capricorn):`
இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். உங்கள் ஆயுள் பலம் நீடிக்கும். எதிலும் கவனமாக செயல்படவும். யாரிடமும் வீண் பேச்சு வேண்டாம். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணியாளர்கள் பாராட்டைப் பெறுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். கலைஞர்கள் முழு வெற்றி அடைவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயத்தில் பல பிரச்சினைகள் வரலாம்.
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
கும்பம் (Aquarius):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். இருந்து வந்த தடைகள் குறையலாம். நல்ல தகவல் எதிர்பார்க்கலாம். புதிய உறவுகள் மேம்படும். பணியாளர்கள் தலைமை பொறுப்பு அடைவார்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் தெளிவு அடைவார்கள். விவசாயம் மானாவாரி முறையில் நன்மை பயக்கும்.
பரிகாரம்: நடராஜர் வழிபாடு செய்து வரவும்.
மீனம் (Pisces):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும். செலவுகள் சற்று அதிகரிக்கும். எதிலும் கவனமாக செயல்படவும். கணவன் மனைவி உறவுகள் மேம்படும். பணியாளர்கள் அலைச்சலை சந்திப்பார்கள் வியாபாரத்தில் போட்டிகள் உருவாகும். கலைஞர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். மாணவர்கள் நன்மை அடைவார்கள். விவசாயத்தில் சுமாரான வருமானம் கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும் – rasi-palangal may-16 to may-22
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)
நற்பதிவு.. அனைவரும் நற்பலன் பெற வாழ்த்துகள்
பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் எல்லோர் மனநிலையும் ஒருவித சோர்வில் இருப்பதால் ராசிபலன் அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஐயா அவர்கள் சொன்னது போல இறைவழிபாடு நிச்சயம் அந்தந்த ராசிக்காரர்களுக்கு பலன் கொடுக்கும்